அச்சச்சோ புன்னகை - Achchacho Punnagai By Nesha

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,091
Likes
76,887
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our 'Penmai' family. Pls. join with me in welcoming our friend nesha.

Below goes her story 'அச்சச்சோ புன்னகை' & her introduction. We wish her all the very best and to have a long & fruitful association with 'Penmai'. Enjoy by reading her story & do support with your valuable feedback / comments.

பெண்மை தோழிகளுக்கு வணக்கம்,

நான் நிஷா , எனது பதிநான்கு வயதில் இருந்து நாவல்கள் படிப்பது தான் எனக்கு பிடித்த மூச்சு பயிற்சி. நான் ரமணி அம்மா , முத்துலட்சுமி அம்மா , நிவேதா ஜெயநந்தன் , இன்பா ஆலோசியஸ் , கார்த்திகா கார்த்திகேயன் இன்னும் பலரின் நாவல்களின் விசிறி எனக்குள் கதை எழுதும் ஆவலை அறிந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர், ஊக்குவிக்கும் என் நண்பன் விஜய், உதவும் தம்பி வைரவேல் , நான் நாவல் படிக்க வழிகாட்டிய என் அக்கா காஞ்சனா செந்தில் , மற்றும் என் குழந்தைகளுக்கும், என் பெற்றோர் உடன் பிறந்தோர்க்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்.

அச்சச்சோ புன்னகை
காதல் - இந்த பூமி இயங்குவது காதலால் தான் இந்த கதையின் கருவும் காதல் தான். என் முதல் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் கதையின் நாயகன் விஜய அஷ்வின். அழகு ஆண்மையுடைய கம்பீரம் , பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வசீகரம். தன் விசீகரப்பேச்சால் மயக்கும் வாலிபன். மென்மையை கலந்த கோபம் கொண்டவன். கோபப்பேச்சால் ரணம் தருபவன். ஆனால் தான் பார்த்த முயலுக்கு இரண்டே கால் என்று நம்பும் நல்லவன் அதுதாங்க ஜுட்ஜ்மென்டைல் னு ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அப்படி ஓர் குணம் கொண்டவன்.

நம் கதையின் நாயகி நிஷிகா மலர் மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் நிறம், அழகு சிலை என்று சொல்லும் அழகி, அப்பா செல்லம், நம்பிகளின் தலைவி, குறும்புகள் முடிசூடா ராணி, யாரையும் சீக்கிரமே மன்னிக்கும் இளகிய மனம், எதையும் ரொம்பவும் எளிதாக என்றுக்கொள்ளும் சுபாவம் ஆங்கிலத்தில் ஈஸி கோயி என்று சொல்லுவார்களே அப்படி ஓர் குணம்.

இவர்கள் இடையில் காதல் மலர்ந்ததா என்பது தான் இந்த கதை பயணம். இவர்களோடு நிருபா , வருண் பிரகாஷ், சாய் சரண் , மற்றும் பலர் பயணிக்கிறார்கள் வாருங்கள் நாமும் சேர்ந்து பயணிப்போம்.

இந்த முத்தான வாய்ப்பு தந்த சுமி அக்கா அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். கதையின் பாதிப்புகளை படித்து விட்டு உங்களின் கருத்து மொட்டுகளை எனக்கு கொடுத்து கதை ஆகிய மலர் செண்டை தொடுக்க ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி!

அன்புடன்,
Nesha
 
Joined
Jun 26, 2017
Messages
11
Likes
18
Location
salem
#3
ஹாய் மக்களே, இது என்னுடைய முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னித்து என்னுடைய கதையின் குறை நிறையை எனக்கு தெரியப்படுத்தி ஊக்குவிக்குமாருக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

அன்புடன்,
nesha



































ஹாய் மக்களே என்னுடைய முதல் ud உடன் வந்துவிட்டேன் படித்து உங்கள் கருத்துக்களை தவறாமல் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளவும் நன்றி.

அன்புடன்,

நிஷா

புன்னகை மொட்டு 1

இளங்காலை பொழுதில் ஆதவன் தன் கதிர்களால் பூமியை ஆரத்தழுவி உதயமாகி கொண்டு இருந்தான். இருட்டு போர்வையை விளக்கி எழுந்த பறவைகளின் கணமும், பூக்களின் மனமும், பனி துளிகளில் பட்டு தெறிக்கும் கதிர் ஒளிகளும், விடியலை பறைசாற்றி கொண்டு இருந்த பொழுதில், கோவை ரேஸ் கோர்ஸ் யில் இருக்கும் அந்த பங்களா வில் தன் அறையில் வசீகரா பாடலின் ப்ளூட் இன்ஸ்ட்ருமெண்டல் இசையை ஒலிக்க விட்டு பல்கணி யில் காபியுடன் செய்திதாள் படித்துக்கொண்டு இருந்தான் நம் நாயகன் அஷ்வின். தன் அலைபேசி அலறிய சத்தத்தில் பேப்பரை விட்டு அலைபேசியை கையில் எடுத்தான் அதில் தெரிந்த நண்பன் சாய் சரண் என்னை பார்த்து சிறு வெகு சிறு முறுவல் பூத்த இதழ்களால் சொல்லு டா என்று பேச ஆரம்பித்தான். நண்பன் சொன்னதை கேட்ட அஷ்வின் இன்னும் அரைமணி நேரத்தில் ஆஃபிஸில் இருப்பேன் என்று கூறி லைனை துண்டித்தான். மீதி காபி யையும் அருந்தி விட்டு குளியல் அறைக்கு சென்றான். அவன் குளித்து தயார் ஆவதற்குள் நாம் அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் பார்த்துவிவோம் மக்களே வாருங்கள். விஜய அஷ்வின் வயது 29 புகழ் பெற்ற இளம் தொழிலதிபன். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனி, எஸ்ப்போர்ட் பிஸ்னஸ், இன்னும் பல தொழில்களை செய்துவருகிறான். நல்ல பாடகன். அப்பா – வேலுசாமி, அம்மா – கற்பகலக்ஷ்மி, தங்கை - திவ்யா ஹர்ஷிதா வயது 23. வேலுசாமி பரம்பரை செல்வந்தர்கள் கற்பகலக்ஷ்மியின் கும்பமும் செல்வந்தர்களே ஆனாலும் பண்பும், பாசமும், பிறர் வாழ உதவும் நல்ல குணங்களை கொண்ட மென்மையான தம்பதியர். வேலுசாமியின் குடும்ப தொழில் விவசாயமும், பஞ்சாலையும் தான் வேலுசாமிக்கு தொழில் பொறுப்பு கொடுக்க பட்ட பின்பு அதை அவர் விரிவு படுத்தி சொந்தமாக அரிசி ஆலை, ஜவுளி கடை என்று பெருக்கி பெரிய தொழில் அதிபர் ஆனார். AS சில்க்ஸ் அண்ட் ரெடிமெட்ஸ், AS தங்கமாளிகை, AS மில்ஸ் என்று புகழ் பெற்ற நிறுவனங்களை கொண்டவர். திவ்யா ஹர்ஷிதா MBA படித்து முடித்து விட்டாள். இனி பொழுது தொடரும்.



ஸ்ரீ விக்னேஷ்வர் சுப்ரபாதம்

ஸ்ரீ கெளரி நந்தன தேவா

சித்தி புத்தி ப்ரதாயகா

உத்திஷ்ட ப்ரமதா தீஷா

உத்திஷ்ட கன நாயகா

ஸ்ரீ கெளரி நந்தன தேவா

சித்தி புத்தி ப்ரதாயகா

உத்திஷ்ட ப்ரமதா தீஷா

உத்திஷ்ட கன நாயகா

உதிஷ்டோ திஷ்ட விக்னேஷா

உத்திஷ்ட ஷுப தாயகா

உத்திஷ்ட ப்ரதம ராத்யா

உத்திஷ்ட கன நாயகா

உதிஷ்டோ திஷ்ட விக்னேஷா

உத்திஷ்ட ஷுப தாயகா

உத்திஷ்ட ப்ரதம ராத்யா

உத்திஷ்ட கன நாயகா

என்று மங்கள சுப ஒலி சுப்ரபாதம் வீடு முழுவதும் ஒளிர்ந்துக்கொண்டு இருந்தது. விஜய அஷ்வின் குளித்து உடை மாற்றி கீழே வந்தான். கற்பகலக்ஷ்மி பூஜை அறையில் இருந்து வந்தார். மகனை பார்த்து புன்னகை உடன் அவனை நெருங்கி விபூதி இட்டார். இது அவரின் தினசரி பழக்கம் தான். ஒரு சிறு முறுவலுடன் அதை பெற்று கொண்டு, என்ன மா அப்படி பார்க்குறீங்க என்று கேட்டான். எனக்கு வேற என்ன ஆசை பா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணா போதும் நீ தான் இன்னும் பிடிக்குடுக்க மாட்டேங்கிற என்றார். அதை கேட்ட அவன் அம்மா எனக்கு பிடிச்ச மாதிரி இன்னும் நான் யாரையும் பாக்கல. பொண்ணு பார்த்து பேசி பிடிச்சா தான் கல்யாணம் அதுவரைக்கும் ஒன்னும் கேக்காதீங்க மா ப்ளீஸ் என்றான். அப்படி இல்ல அஷ்வின் நீ பிஸினஸ் தான் கட்டிக்கிட்டு சுத்துற நீ எப்போ பொண்ணு பார்த்து பேசி பிடிச்சு கல்யாணம் பண்ணுறது உனக்கும் வயசாகுது இன்னும் நம்ம திவ்யா இருக்க இல்ல அதுக்கு தான் சொல்லுறேன் பா. சரி அப்போ முதல்ல அவ கல்யாணத்த முடிப்போம் அப்புறம் என்ன பத்தி யோசிக்கலாம் என்றான். இதை கேட்ட கற்பகம் முகம் வாட பூஜை அறைக்கு சென்றார். தாயின் வடிய முகம் கண்டு தன்னை கடிந்து கொண்டு பூஜை அறை வாசலுக்கு திரும்பிக் கொண்டு வந்த தாயின் கையை பிடித்துக் கொண்டு மென்மையாக கேட்டான் அம்மா நீங்க சந்தோஷமா இருந்தாதான் எனக்கு குட் டே நீங்க இப்படி இருந்தா ஐ பீல் வெரி பேட் ப்ளீஸ் மா கொஞ்சம் சிரிங்க என்றான். தாயின் முகம் இன்னும் சரியாய் இல்லை என்று உணர்ந்து கொஞ்சம் மனமிழகினான் சரி மா நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க எனக்கு சரி என்று பட்டால் தான் செய்வேன் அப்பறம் டிஸ்டர்ப் பண்ண கூடாது ஓகே யா என்றான். மகன் சொன்னதே போதும் என்று நான் பொண்ணு பார்க்கிறேன் அஷ்வின் உனக்கு பிடிச்ச கல்யாணம் பன்னு இல்ல னா விட்டுடுவோம் ஓகே யா என்றார். தாயை அறிந்த மகனாய் புன்னகையுடன் தலை அசைத்தான் உள்ளம் பூரிக்க மகன் நெற்றியில் முத்தம் இட்டார் கற்பகம். தாயின் புன்னகையில் தானும் மலர்ந்து மகிழ்ச்சியில் ஒரு பாடலை பாடினான்.

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா

மெல் பெர்ன் மலர் போல் மெல்லிய மகளா.

டிஜிட்டலில் செதுக்கிய குரலா

எலிசபெத் டெய்லரின் மகளா

சாகிர் ஹுசைன் தபலா இவள் தானா.

என்று பாடி தாயை வம்பிழுத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு சென்று அமர்ந்தான். அவனுக்கு பிடித்த இடியாப்பமும் வெஜிடபிள் கோர்மா வும் சூடாக பரிமாற பட்டன. உண்டு முடித்து எழுந்தவன் கை கழுவி விட்டு தந்தையின் அறைக்கு சென்று கதவை தட்டி குட் மார்னிங் டேட் என்றான். வேலுவும் வா பா அஷ்வின் குட் மார்னிங் என்றார். அனுமதி பெற்றுக் கொண்டு அங்குள்ள சோபாவில் சென்று அமர்ந்தான். அப்பா இன்னைக்கு தான் அந்த பாரின் ப்ராஜெக்ட் எஸ்ப்போர்ட் விஷயமா மீட்டிங் இருக்கு நீங்க வரிங்கதானே என்று கேட்டான். ஆமா அஷ்வின் நான் 11 மணிக்கு வரேன் ஒரு சைன் போட தானே வரணும் என்று சிரித்தார். தன்னை விட மகன் நன்றாக நிர்வாகம் செய்வதால் அணைத்து பொறுப்புகளையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு மேற்பார்வையும், ஆலோசனையும் வழங்கிக் கொண்டு தன் போண்டர் (founder) வேலையை சரியாக செய்துவருகிறார். ஓகே டேட் இட்ஸ் கெட்டிங் லேட் என்று கூறிக் கொண்டு தந்தை யிடம் விடை பெற்று பை (bye) டேட் , பை (bye) மா, வாலு இன்னும் ஏழலையா என்று கேட்டு அதற்கு இல்லை என்ற பதிலையும் பெற்றுக் கொண்டு தனது BMW காரை எடுத்துக்கொண்டு ஆஃபீஸிற்கு கிளம்பிச் சென்றான்.

கோவை சரவணப்பட்டியில் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட நடுத்தர மேல்வர்க்கம் வசிக்கும் பகுதியின் ஒரு வீட்டு மாடி அறையில் கேட்கும் சத்தம் தான் இது வாங்க அங்க யார் இருக்கானு பார்ப்போம். மலர் எழுந்திரு அப்பறம் லேட் ஆயிடுச்சுன்னு சாப்பிட மாட்ட எழுந்திறுடி மணி ஏழாச்சு என்று கத்திக் கொண்டு இருந்தார் சரஸ். அம்மா இன்னும் அஞ்சு நிமிஷம்மா ப்ளீஸ் மா என்றாள் அந்த குட்டி மான். நீ சொன்ன கேட்க மட்ட என்று சொன்னவர் பக்கத்தில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அவள் முகத்தில் சிறிது தெளித்தார். அம்மா என்று சிணுங்கி கொண்டு எழுந்தவளை இழுத்துச் சென்று குளியல் அறையில் தள்ளி சீக்கிரம் குளித்துக் கிளம்புடி என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி சமையல் அறைக்கு சென்றார் சரஸ். சரஸ்வதி கொஞ்சம் காபி கொடுமா என்று குரல் கொடுத்தார் விஸ்வநாதன் நம் நாயகியின் தந்தை அரசு வங்கியில் மேனேஜர் ஆக பணிபுரிகிறார். இதோ வரேங்க என்று காபியுடன் வந்தார் சரஸ்வதி நம் நாயகியின் தாய் அரசு பள்ளி ஆசிரியராக இருந்து விஆர்ஸ் வாங்கி ஓய்வு பெற்றவர். மலர் எழுந்துட்டாளா என்று கேட்டார் விசு அவ எப்போ பா தானா எழுந்தா என்று ஒரு நக்கல் உடன் சொன்னவாறே வந்து அமர்ந்தான் கார் முகிலன் நம் நாயகியின் தம்பி புகழ் பெற்ற பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறான். டேய் அவளை வம்புக்கு இழுக்குளைன்னா உனக்கு தூக்கம் வராதே என்று சிரித்தார் விசு. ஆமா அப்பா அவ பெரிய திருவாரூர் தெரு நாங்க இழுத்துட்டாலும் போங்க பா நேத்து என்னோட ரெகார்ட் நோட்டை ஒளிச்சிவிச்சுட்டா பா நல்ல வேலை அந்த சப்ஜெக்ட் மிஸ் நேத்து வரல தப்பிச்சேன் இல்லன்னா நல்ல பனிஷ்மென்ட் வாங்கி இருப்பேன். நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ற தைரியத்துல தான் இப்படி எல்லாம் வம்பு பண்ணுறா பா என்றான் அந்த இளம்புலி. பின்ன அழகு பெயரான கார் முகிலனை டேய் தார் னு கூப்பிட்ட அவனும் தான் என்ன செய்வான். (முகிலன் - நான் கொஞ்சமே கொஞ்சம் லைட்டா கருப்பு அவளை விட அது நான் அம்மா மாதிரி அதுக்காக தார் னு கூப்பிடுவாளா - இது ஒன்னும் இல்லைங்க அவன் மைண்டு வாய்ஸ்சாம் இது முகிலோட தொட்டில் பழக்கம்). இதை கேட்டுக்கொண்டு இருந்த சரஸ் ஆமாங்க நாளைக்கு இன்னொரு வீட்டுல வாழப்போற பொண்ணு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல சமையல் கத்துக்கோ னு சொன்னா, என்னை ஏன் சரஸ் தொல்லை பண்ணுற னு சொல்லிட்டு, நீ வர வர இப்படியே தான் டார்ச்சர் பண்ணுற அப்புறம் விசு கிட்ட சொல்லி உன்னை டைவோர்ஸ் பண்ண சொல்லிடுவேன் ஜாக்கரதைன்னு என்னையே மிரட்டுறாங்க என்றார். இதை கேட்ட விசு என்னால தான் சொல்ல முடியல ஆனா என் பொண்ணு ரொம்ப தைரியசாலி தான் பலே பலே என்று மெச்சிக் கொண்டு மனைவியின் முறைப்பையும் பெற்றுக் கொண்டார்.

குட் மார்னிங் பா என்று பளிச் புன்னகையுடன் (அவளின் ஸ்பெஷலே இந்த பளிச் புன்னகை தான்) வந்தாள் நம் நாயகி நிஷிகா மலர். அழகிய இளச் சிவப்பு நிற எம்போராய்டரி காட்டன் சல்வாரில் பெயருக்கு ஏற்றார் போல் புது மலராக வந்தாள் அந்த இளம் மான். அவளை பார்த்த நம்ம தார் சாரி கார் முகிலன் ஏய் சோம்பேறி மரியாதையா என்னோட ரெகார்ட் நோட்டை கொடுடி இன்னைக்கு தான் கடைசி நாள் சப்மிட் பண்ணியே ஆகணும் அப்படி இல்லனா பனிஷ்மென்ட் கொடுக்கும் அந்த ஹிட்லர் என்றான். டேய் கரும்மை நிற கண்ணா என் கிட்ட சாரி கேட்டா கொடுக்குறேன்னு நேத்தே சொன்னேன்ல அப்புறம் என்ன சாரி கேட்டுட்டு வாங்கிக்கோ என்றாள். அம்மா பாருங்க மா என்னோட நோட்டை தரமாட்டேங்கறா என்று தாயை துணைக்கு அழைத்தான் அந்த தார் இல்ல இல்ல கார் (எப்போதும்போல்). ஏய் மலர் எதுல விளையாடுறதுனு இல்ல ஒழுங்கா அவன் கிட்ட நோட்டை கொடுடி என்றார் சரஸ். சரஸ் அவன் என்ன செய்த்தான் னு தெரியுமா என்றாள் கோபத்தோடு. அப்படியென்னதாண்டி செய்தான் சொன்ன தானே தெரியும் என்றார் சரஸ். என்னோட ஐஸ் கிரீமையும் அவனே சாப்பிட்டான் மா ஏன்டா சாப்பிட்டனு கேட்டதுக்கு நீ தானே பாட்டு தான் முக்கியம்னு சன் மியூசிக் பார்க்க போன அதனால்தான் நல்ல சான்ஸ மிஸ் பண்ண கூடாதுன்னு சுவாஹா பண்ணிட்டேன் னு நக்கலா வேற பதில் சொல்கிறான் தெரியுமா ஸோ அவன் சாரி கேட்டாதான் நோட்டை தருவேன் என்றாள் மலர். பிறகு அங்கிருந்து உணவு மேஜைக்கு சென்று அமர்ந்தவள் சுட சுட இட்லிகளை விழுங்க ஆரம்பித்தாள் இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த விசு கண் ஜாடையில் மண்ணிப்பு கேக்குமாறு கூறினார். வேறு வழி இல்லாமல் மன்னிப்பு கேட்டு நோட்டை பெற்றுக் கொண்டான் கார் முகிலன். (பின்ன வேற வழி அவ சொத்தை கொடு னு கேட்டா கூட கொடுப்பா ஐஸ் கிரீம விட்டுத் தருவாளா என்ன. நாமளும் கொஞ்சம் ஓவராதான் போறோமோ சரி சரி முகில் அவகிட்ட கெத்தை மென்டேன் பண்ணுடா..... அதே மைண்டு வாய்ஸ்) உணவை முடித்துக் கொண்டு பெற்றோரிடம் விடை பெற்று ஸ்கூட்டி யை நோக்கி விரைந்தாள் நிஷிகா மலர். அடடே இந்த கலவரத்தில் மலரை அறிமுகம் செய்ய மறந்துட்டேன். கொஞ்சம் நமக்கு பழசுதான் பட் பழசை மறப்பது தமிழன் பண்பாடு இல்லை அதனால் அறிமுகம் தொடரும்.

நாயகி நிஷிகா மலர் வயது 23 MBA படித்து முடித்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன. பூக்கும் மலர்கள் அழகு என்றால் அவள் அழகு தாமரையா அல்லியா ஷெண்பகமா என்று விவரிக்க முடியாது. மாநிறத்தை விட சற்று கூடுதல் நிறம், வில்லாக வளையும் புருவங்கள், மீன் போன்ற கோலி குண்டு கண்கள், கூர் நாசி, இயற்கையான பளபளப்பு உடைய மென்மையான உதடுகள், அவள் இடை வரை நீண்டு இருக்கும் கார் கூந்தல், சற்று பூசினாற்போல் இருக்கும் உடல் வாகு, நடுநிலை உயரம் ஆனால் இதுவே அவள் அழகின் கூடுதல் போனஸ், எப்போதும் குறும்பு குறும்பு குறும்பு மட்டும் தான், அவளின் ஸ்பெஷல் குணமும் அதுவே. சிரித்த முகமும் கலகலப்பான சூழ்நிலையுடன் தான் வலய வருவாள், அமைத்தும் கொள்வாள். ஆனால் ஒன்று எல்லவற்றையும் ரொம்ப ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொள்வாள் இது ஒன்று தான் அவள் பலனும் பலவீனமும் கூட, இப்பொழுது அவள் ஒரு நிறுவனத்தின் நேர்முக தேர்வுக்கு சென்றுக்கொண்டு இருக்கிறாள். சரி வாருங்கள் இதே போன்று நாயகனின் அறிமுகத்தையும் பார்த்து விடுவோம்.

ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போல இருப்பானே என்று பாடாத் தூண்டும் அழகன். நல்ல நிறம், கூர் வாழ் கண்கள் நொடியில் மற்றவர்களை எடை போட்டுவிடும் குணம் கொண்டவை. நல்ல கட்டுமஸ்த்தான் உடல்வாகு, நேர் நாசி, சிவந்த உதடுகள் (எந்த கேட்ட பழக்கமும் இல்லாததால்). ஆண்மை நிறைந்த மீசை, அடர்ந்த கருமையான கேசம், பார்க்கும் யாவரையும் சைட் அடிக்கவைக்கும் சாக்லட் பாய் தான். ரொம்ப பொறுப்பும் மரியாதையும் உடையவன், சற்று முன்கோபி, பார்க்கும் காட்சியையே நம்பும் குணம் கொண்டவன் இதுவே அவன் பாடு படுத்தும், படப் போகும் சம்பவங்களுக்கு வித்தாக அமைய போகிறது என்று அவன் அறியான்.
புன்னகை பூக்கும் .........
 
Joined
Jun 26, 2017
Messages
11
Likes
18
Location
salem
#5
ஹாய் மக்களே!!!! எனது 2 வது ud உடன் வந்துட்டேன் பிழை இருந்தால் மன்னித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துமாறுக் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

உங்கள்,

Nesha



புன்னகை மொட்டு 2



அஷ்வின் தன் பி யம் டபுள்யூ காரில் சிக்னலில் நின்றுக் கொண்டு இருந்தான். காரின் ப்ளயரில் என்னமோ ஏதோ பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்..
சிந்திச் சிதறுது விழியில்!!

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்..
விட்டுப் பறக்குது தொலைவில்!!


தனக்கு பிடித்த வரிகளான

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

கேட்டுக்கொண்டு சாலையில் பார்வையிட்டான் அஷ்வின். அப்போது அவன் கண்டக்காட்சியில் முகம் சுனுங்க ச்ச டீசென்ஸியே தெரியாத ஜென்மங்க என்று திட்டிக்கொண்டு பார்வையை திருப்ப பச்சையும் விழுந்தது. அதே கோபத்தோடு அவன் கையில் கார் சீறிப்பாய்ந்து. தன் முதலாளியின் கார் சாலையில் வரும்போதே கவனித்துவிட்ட காவலாளி அதன் வேகத்தை வைத்தே முதலாளியின் மனநிலையை அறிந்துக்கொண்டார். பிறகு அவன் தந்தையின் விசுவாசி அல்லவா. பின்ன இவனின் குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணம் அவரல்லவோ. பெரிய மகனை படிக்க வைத்து பெங்குலுருவில் தனது கம்பெனியில் வேலையும் போட்டுக்கொடுத்து, மகளின் திருமணத்தையும் முடித்து, தருதலையாக சுற்றி திரிந்த இளயமகனுக்கும் வாட்ச் மேன் வேலைக்கொடுத்து தான் செய்ய வேண்டிய செய்ய முடியாத குடும்ப பொறுப்புகளை நல்ல உள்ளத்தோடும் கருணையோடும் செய்தவர் அல்லவா. டேய் கொமாரு ஐயா கோபமா வராரு சீக்கிரம் கதவ தொறப்போம் வா என்று அழைத்தார் அந்த விசுவாசி குழந்தையப்பன். கார் கம்பெனியின் வாயிலில் படு வேகமாக நுழைந்தது. காரை விட்டு இறங்கி புயல் வேகத்தில் லிப்ட்டில் புகுந்தான். வேகமாக பத்து என்ற பொத்தானை அழுத்திவிட்டு பொறுமையின்றி நின்றுக்கொண்டான். லிப்ட் பத்தாம் தலத்தில் நின்றவுடன் கோபமாக வெளியே வந்து நடக்க ஒருவர் மேல் மோதி நின்றான். ஹே ஹே பார்த்து டா என்ன இவ்வளவு அவசரம் என்ற குரலில் சற்று பொறுமையானான். தன் நண்பன் சாய் சரண் குரலில் சற்று நிதானித்து ஒன்னும் இல்ல டா ஜஸ்ட் ஸம் அன்வான்டெட் டென்ஷன் என்றான் அஷ்வின். நீயே அன்வான்டெட் னு சொல்லுற தன் ஒய் டென்ஷன் மேன் ச்சியர் அப் என்றான் சரண். ம்ம்ம் எப், கம் டா லெட்ஸ் கோ என்று சொல்லிக்கொண்டு தனது அறைக்கு சென்றான் அஷ்வின். விஜய அஸ்வின் எம்பிஏ சேர்மன்/எம்டி வாசகம் அவனை வரவேற்றது கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான். அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தன் உயிர் நண்பனுக்குக் கொடுத்தான் சரண். தன் நண்பன் நீட்டிய பாட்டிலைப் பெற்றுக்கொண்டு தேங்க்ஸ் டா ஐ நீடெட் திஸ் என்று சிறு முறுவலித்துவிட்டு நீரைக் குடித்தான் அஷ்வின். நண்பனின் சிறு தேவையைக்கூட அறிந்து நடக்கும் நண்பன் அமையவும் கொடுத்துவைக்க வேண்டும் அப்படி ஒரு கொடுப்பினை அஷ்வினுக்கு கடவுள் தாராளமாக வழங்கியிருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் அஷ்வின் கோபம் கொண்டாலும். அவனிடம் தன்மையும், மென்மையையும், பாசத்தையும், நட்பையையும், மட்டும் தருவான் சரண். அவனுடனான நட்பின் ஆழம் அவ்வாறானதாகும். அது மட்டும் இல்லாமல் அவனின் பாசம் கோபமாகவும் கொடுஞ்சொலாகவும் தான் அதிகம் வெளிப்படும் என்ற உண்மையை அறிந்தவன் சரண் மட்டுமே. இந்த உண்மையை தெரிந்தும் சொல்லாமல் விட்டதினால் தன் நண்பனின் வாழ்வில் தன்னையும் அறியாமல் பிழை செய்ய போகிறான் என்று அவன் அறியான்.

அட இந்த கலவரத்தில் சரணை பற்றி சொல்ல மறந்துட்டேன் மன்னிக்கவேண்டுகிறேன் மக்களே. இதோ… சாய் சரண் 29 வயது பள்ளிப்பருவத்திலிருந்தே அஷ்வினின் நண்பன் சிறுவயதினிலேயே பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தவன். தன் தந்தை வழி தாத்தா சுப்ரமணியனால் வளர்க்கப்பட்டவன். சற்று வசதியுடையவன் தான். கோவை கணபதி புதூரில் வீடும், தாத்தாவின் சில சொத்துக்களும் உள்ளன. கல்லூரி இறுதியாண்டில் தாத்தாவும் காலமாக அஷ்வின் அவனை தனித்துவிடாமல் தன்னுடனே இருத்திக்கொண்டான். அதன்படி மேற்படிப்புக்கும், படித்து முடித்தவுடன் தான் துடங்கிய வேளையிலும் தன்னுடனே இருத்திக்கொண்டான். நண்பனே ஆனாலும் தன் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் வெறும் ஒர்கிங் பாட்னராக இருக்க மட்டும் செய்துக்கொண்டு அதற்கு நியாயமான லாபப்பங்கை மட்டும் பிரித்து ஒப்பந்தம்மிட்டுக் கொண்டான் இந்த ஏயஸ் நிர்வனத்தின் செகரட்டரி/அட்வைஸர் சரண். நண்பனின் துணையுடனும் தனது நேர்மையான கடின உழைப்பாலும் இன்று மேலும் நல்ல நிலையில் இருக்கிறான். ரொம்ப நல்லவன் எதிலும் தெளிவான பார்வையும் அறிந்து ஆராந்து செய்யும் குணம் கொண்டவன். கலகலப்பும் மிக்கவன்.

தேங்க்ஸ் டா என்று சொல்லிக்கொண்டு பாட்டிலை டேபிள் மேல் வைத்துவிட்டு சிறு முறுவலுடன் குட் மார்னிங் டா மச்சி என்றான் அஷ்வின். சரண் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏன்டா என்றான். அஷ்வின் - என்ன டா. சரண் - இல்ல இவ்ளோ சீக்கிரம் சொல்லிட்டாயே நாளைக்கு சொல்லி இருந்தா இந்த குட் மார்னிங்க சேவ் பண்ணி இருக்கலாம்னு யோசித்தேன். அதுக்கு தான் ஆஸ் எ அட்வைஸரா சொல்லலாமானு பார்த்தேன் என்றான். தனது தவறை உணர்ந்தாளும் ஸாரி கேட்க மாட்டானே நாம் அஷ்வின் சோ விடு டா அதுவா முக்கியம் க்லைன்ட்ஸ் வந்துட்டாங்களா அப்பா ஷார்ப் லவன் க்கு வந்துடுவார் பபெர்ஸ் எல்லாம் ரெடி தானே என்றுக் கேட்டான். நண்பனின் குணம் தெரிந்ததால் அவனும் தன் பேச்சை மீட்டிங் தொடர்பாக மாற்றினான். சரி டா ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் ரெடி டா ஒரு முறை நீ எல்லாம் பார்த்துட்டாய் என்றால் ஓகே ஏன்னா மீட்டிங் ல எந்த கன்பியூசனும் வரக்கூடாது பாரு அதனால் தான் சொல்றேன் என்றான் சரண். ஓகேடா ஐ ஆல்ரெடி டன் இட் பட் ஸ்டில் ஃபார் யுவர் சாடிஸ்பாக்ஷன் ஐ வில் கோ த்ரௌ இட் அகைன் என்று முறுவலுடன் கூறினான் அஷ்வின். சரி டா ஐ அம் மூவிங் டோன்ட் போர்கேட் டு செக் தி டாக்குமெண்ட்ஸ் டூ என்றான் சரண்.

அம்மா டைம் ஆயிடுச்சுமா சீக்கிரம் மா என்று உணவு மேஜையில் ஆர்ப்பாட்டம் செய்தவள் சூடான இட்லிகளை சுவாஹா செய்துக்கொண்டு இருந்தால். அதில் தாயின் அர்ச்சனையும் சேர்ந்தது. எத்தனை தடவை சொன்னாலும் நேரத்திற்கு எழுவதில்லை அப்புறம் டைம் ஆயிடுச்சுனு என்னை படுத்த வேண்டியது என்றார் தாய் கற்பகம். லக்ஷு நான் எழுந்து ரெடி ஆனேன் தான் பட் அப்புறம் தான் தெரிஞ்சுது அது கனவு னு என்றாள் அந்த வீடு சுட்டி திவ்யா ஹர்ஷிதா. மகளின் பேச்சைக் கேட்டு, போதும் சிரிப்பே வரல போ போயி இன்டர்வியூ ற்கு கிளம்பு டைம் ஆகுது என்று சொல்லி பெண்ணை கிளப்பினார் பொறுப்பான தாய் கற்பகம். லட்சுமி அவ சின்ன பொண்ணு தானே மா ஏன் திட்டுற விடு வேலை விஷயமா வேற போற பாரு அவளை வாழ்த்தித்தான் அனுப்பேன் மா என்றார் தந்தை வேலுசாமி அப்படி சொல்லுங்க வேலு என்று துள்ளி தந்தையின் அருகில் அமர்ந்து செல்லம் கொஞ்சினாள் திவ்யா தாய் தந்தையிடம் விடைபெற்று தன் காரில் பயணமானாள். என்ன நீங்க அவ என்ன சின்ன பொண்ணா இன்னும் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க. நீக்க செல்லம் கொடுத்துதான் அவளை இப்படி கெடுத்து வெச்சியிருக்கிங்க. நான் சொல்லுறதை அவ கேட்ட்குறதே இல்ல என்று முறைத்துக்கொண்டார் லட்சுமி. அதை கேட்டு சிரித்த வேலு அவ எப்பொழுதும் எனக்கு சின்னபொண்ணுதான் என்றார். சரி மா நான் ஆபீஸ் கு கெளம்புறேன் லட்சுமி லுன்ச்சுக்கு வீட்டுக்கு வந்துருவேன் என்று எழுந்து சென்றார்.

ஈசிஆர் ரோட்டில் இருக்கும் பெரிய மென்பொருள் நிறுவனம் பார்க்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்தினாள் மலர். பின்பக்கத்திலிருந்து இறங்கிய நிருபா என்னடி அவள இன்னும் காணொம் என்றாள். அது தாண்டி நானும் யோசிக்கிறேன். இருடி அவளுக்கு போன் பண்ணி கேக்குறேன் என்றாள் மலர். சீக்கிரம் கேளுடி டைம் ஆகுது என்றாள் நிருபா. மலர் கேட்ப்பதுக்குள் நாம் நிருபாவை பற்றி பார்த்து விடுவோம் வாங்க.

நிருபா 23 வயது MBA படித்து முடித்து 2 மாதம் ஆகிறது. அப்பா ராமகிருஷ்ணன், அம்மா அம்பிகா, அண்ணண் ப்ரணவ்கிரி, அப்பா – தாசில்தார், அம்மா – ஹௌஸ்வைப், அண்ணண் எம்பிஏ முடித்துவிட்டு ஹோம் ஆஃப்லையன்சஸ் கடையை சொந்தமாக வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறான். அப்பர் மிடில் கிளாஸ் வர்கத்தை சேர்ந்த குடும்பம். நிருபா எதையும் எளிதாக நம்பும் குணம் கொண்டவள் இக்குணமே தோழிகளின் வாழ்க்கையில் சிக்கல் உண்டாக்க போகிறது என்று அவள் அறியாள். ப்ரணவ்கிரி அழகும் அறிவும் கொண்டவன். மிகவும் நல்லவன். தன் பேச்சின் பலம் கொண்டே எளிதில் மற்றவர்களை கையாளுபவன். மலர், நிருபா, திவ்யா, மூவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல இணைபிரியாத தோழிகள். ஒரே கல்லூரியில் பீஈ படித்துவிட்ட மூவருக்கும் வெவ்வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்தும் செல்லாமல் மூவரும் வேறு ஒரு கல்லூரியை தேர்ந்து எடுத்து படித்து முடித்தனர். இன்று ஒரே கம்பனிக்கு இன்டெர்வியூற்கு வந்துள்ளனர் வெவ்வேறு பணியிடங்களுக்காக. சரி வாருங்கள் உங்களுடன் நானும் வருகிறேன் நடப்பிற்கு செல்வோம். திவ்யாவும் உள்ளே வந்ததை பார்த்து கையசைத்த நிருபா, மலர்யிடம் இதைக்கூறினாள். அதை கண்ட மலர் கைபேசியை பையில் வைத்துவிட்டு தானும் கையசைத்தாள். இவர்ளை நோக்கி வந்த திவ்யா. தானும் கையசைத்து, சாரிடி லேட் ஆயிடுச்சு என்றாள். சரி டைம் ஆயிடுச்சு வாங்கடி போகலாம் என்றாள் மலர். மூவரும் தங்கள் வழியில் சென்றனர் (வாழ்க்கையிலும்).

காலை 12.30 வெற்றிகரமாக மீட்டிங்கை முடித்துவிட்டு தந்தையின் ஆசியும் நண்பனின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்தான் அஷ்வின். தன் வெற்றியின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் காலையில் கண்ட காட்சி அவன் மனதில் ஒரு கவலையை ஆழ்த்தியது. அவன் இன்னும் மாறவில்லையா ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது யாரை நான் பார்க்கக் கூடாது என்று இருந்தேனோ அவனையே பார்த்தேனே என்று கோபத்தோடு சிந்தித்துக்கொண்டு இருந்தான். அவனை நினைத்தாலே கண்ணென்று தோன்றும் கோபத்தை கட்டுக்குள் வைக்க முடியவில்லையே என்று தவித்தான். நான் இன்னும் அவனை நினைத்து நொடியொரு பொழுது தவிக்கிறேனே அவன் என்னை நினைத்துக்கூட பார்ப்பானா என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். எதற்கும் இனி அவனை நினைக்க கூடாது அஷ்வின், நீ அஷ்வின் என்று அவன் உணரும்படி செய் என்று தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டான். அதன் பிறகு அவன் சற்று தேறி வேளையில் மூழிகிப்போனான்.

புன்னகை பூக்கும்…………











 
Joined
Jun 26, 2017
Messages
11
Likes
18
Location
salem
#7
ஹாய் மக்களே!!! என் 3 வது ud உடன் வந்துவிட்டேன். பிழை இருந்தால் மன்னித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உங்கள்,

nesha







புன்னகை மொட்டு 3



மலர், காரியதர்சிக்கான பணியின் நேர்முகத்தேர்விற்கு சென்றாள். கம்பனியின் எம்டி நாராயசாமி நெக்ஸ்ட் கேண்டிடேட் யை அழைக்க தன் செயலாளரை ஏவ செய்ய மலர் உள்ளே அழைக்கப்பட்டாள். மே ஐ கம் இன் சார் என்றாள் மலர். எஸ் யூ கேன் என்றார் நாராயணசாமி. ப்ளீஸ் பீ சீட்டேட் என்றார் முன் இருக்கையைச் சுட்டி காட்டி. தேங் யூ சார் என்று அமர்ந்து தன் பைலை நீட்டினாள் மலர். பைலை பார்வையிட்டவர் சில கேள்விகளை கேட்டார் நாராயணசாமி. நல்ல திறனுடனும் தெளிவாகவும் உடனுக்குடன் பதில் அளித்தாள் மலர். அதில் திருப்தியடைந்தவர் மலரை மூன்று வருடம் கட்டாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை தருவதாகவும் விருப்பம் இருப்பின் நாளை காலை வந்து கையெழுத்திட்டு பணியில் சேரலாம் என்று தன் முடிவை தெரிவித்து விட்டார் நாராயணசாமி. நம் மலர் தன் கைதேர்ந்த துடுக்குத்தனத்தினாலும் எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் குணத்தின் பிறப்பரசியாயிற்றுரே!! பின் விளைவுகளை பற்றி யோசியாமல், நோ ப்ரோப்ளேம் சார் ஐ அம் ரெடி டூ அக்ஸ்ப்ட் யுவர் ஆபர் சார், தேங் யூ சார் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு மணி நேரத்தில் பணியில் சேர அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டருடன் வெளியே வந்தாள். தான் தன் மனதில் எண்ணிக்கொண்டு திட்டத்தின்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மிகுந்த களிப்புக் கொண்டாள் மலர். (விதி யாரை விட்டது மலர்) இனி விதியின் விளையாட்டு ஆரம்பம்.

திவ்யா டெபுடி மேனேஜர் பணியின் நேர்முகத் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தாள் அதன்படி அதற்கு தயாராக வந்திருந்தாள். தன் தந்தையின் தொழில் துறை நண்பனான நாராயசாமி யிடம் தன் பெண்ணின் ஆசைக்காகவும் பயிற்சிக்காகவும் சிபாரிசு செய்து உதவியும் வேண்டிக்கொண்டார். அதன் படி தோழிகள் மூவரையும் இந்த கம்பனிக்கு அனுப்பியிருந்தார் வேலு. (நம் பெண்களுக்கு தெரியாமல் தான்) ஆனால் இதை அறியாத திவ்யா தன் சிறந்த முயற்சியால் மட்டுமே நேர்முகத்தேர்வை எதிர்க்கொண்டாள். அதில் வெற்றியும் கண்டாள். அவளும் தன் அப்பாய்ண்ட்மென்ட் ஆடருடன் வெளிவந்தாள். தன் மனதின் கனவின் முதல் சுவடை பதித்துவிட்டு சந்தோஷத்திலும் கண்களில் கனவுகளையும் ஆசைகளையும் நிரப்பிக் கொண்டு வெளியே வந்தாள் திவ்யா. பிறகு தான் விட்ட முதல் சவாலில் வெற்றிக்கண்ட களிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் தன்னை மறந்து நடந்து சென்றாள் திவ்யா. தன்னை பாராமல் கடந்து சென்ற தோழியை இழுத்து நிறுத்தினாள் மலர். ஏய் திவ்யா என்னடி கண்டுக்காம போற என்னடி செலக்ட் ஆகிவிட்டாயா என்று கேட்டாள் மலர். ம்ம் ஆமா டி ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி மலர் என்றாள் திவ்யா. நீ செலக்ட் ஆகிவிட்டாயா டி என்ன ஆச்சு என்றாள் திவ்யா. நானும் செலக்ட் ஆகிவிட்டேன் என்றாள் கவனமாக ஒப்பந்தத்தை தவிர்த்து உண்மையான சந்தோஷத்துடன் தான் பகிர்ந்துக் கொண்டாள் மலர். பின்னால் ஏற்பட போகும் சிக்கலை பற்றி யோசியாமல் தோழிகள் இருவரும் சந்தோஷத்துடன் நிருபாவிற்காக காத்திருந்தனர்.

சில பேருடன் தானும் இருக்கையில் அமர்ந்து காத்துக்கொண்டு இருந்தாள் நிருபா. வெளியில் பஸ்சர் சத்தம் கேட்டது. கதவின் அருகே அமர்ந்துதிருந்த பியூன் நிருபாவின் பெயரை அழைக்க நிருபா எழுந்து சென்றாள். மே ஐ கம் இன் சார் என்றாள் உள்ளே வர அனுமதி கேட்டு. எஸ் கம் இன் என்று ஒரு ஆணின் குரல் அழகாக ஒலித்தது. குரலின் சொந்தக்காரனின் பெயர் சந்தோஷ் முரளி. நல்ல நிறம் அழகு கண்கள் வில் புருவம் கன்னம் உதடுகள் என்று அவன் பார்வை நிருபவை மொய்த்துக்கொண்டிருந்தது. பதட்டத்தில் இருந்த நிருபா அதை கவனிக்க வில்லை. குட் மார்னிங் சார் ஐ அம் நிருபா என்றாள். எஸ் டேக் யுவர் சீட் என்றான் சந்தோஷ். தேங் யூ சார் என்று அமர்ந்துக்கொண்டாள் நிருபா. ஐ அம் சந்தோஷ் முரளி ஹெட் ஒப் தி டீம் என்றான். மூன்று சுற்று முடிந்து கடைசிக் கட்ட நேர்முகத்தேர்விற்கு வந்திருந்தால் நிருபா. சில பல கேள்வி பதில்கள் நடந்தேறின பின் முப்பது நிமிடங்கள் காத்திருக்கும்மாறு சொல்லி அனுப்பினான் சந்தோஷ். சரி என்ற பதிலுடன் வெளியே காத்திருந்தாள் நிருபா. ஒரு மணி நேர காத்திருப்பின் பிறகு நிருபா உள்ளே அழைக்கப்பட்டாள். யெஸ்க்யூஸ் மீ சார் என்றாள் நிருபா. எஸ் மிஸ் நிருபா வாங்க என்றான் சந்தோஷ். டேக் யுவர் சீட் என்றான். நிருபா அமர்ந்த உடன் வெல் மிஸ் நிருபா யூ ஆர் அப்பொய்ன்டெட் என்றான் முறுவலுடன். தேங் யூ சோ மச் சார் என்றாள் நிருபா. வெல் குட் லக் என்று தன் கையை நீட்டினான் சந்தோஷ். சற்று தயங்கினாலும் தேங் யூ சார் என்று அவன் கையை பற்றி ஷேக்கன் செய்தாள் நிருபா. அவளின் தீண்டலில் உள்ளுக்குள் ஒரு மின்சார பாய்ச்சல் ஏற்பட்டது சந்தோஷிற்கு தேங் யூ சார் என்று தன் அப்பாய்ண்ட்மென்ட் ஆடருடன் எழுந்து துள்ளலுடன் வெளியே சென்றாள் நிருபா. அதை ஒரு ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தன சந்தோஷின் கண்கள்.

வெளியே வந்த நிருபா உற்சாகமாக தன் தோழிகளுடன் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொண்டாள். மூன்று பேரும் ஹுர்ரே ஹுர்ரே என்று வெளியே பார்க்கிங் இடத்தில் ஆட்டம் போட்டனர்.

நாங்க ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஹேய்!!!

நாங்க மூணு பேரும் ஒரே கம்பெனியில்

செலக்ட் ஆயிட்டோம் ஆயிட்டோம் ஆயிட்டோம் ஹேய்!!!

ஹேய் ஜாலி ஜாலி என்று டோரா எஸ்ப்ளோரர் பாணியில் பாடினர்.

இந்த சந்தோசம் நிலைக்குமா இவர்களுக்கு?? பொறுத்திருந்து பார்ப்போம். தங்கள் ஆட்டத்தை முடித்த முப்பெரும் தேவிகளும் பார்க்கிங்கில் தங்கள் வண்டிகளின் அருகே செல்ல மலரின் அலைப்பேசி அலறியது அதை எடுத்து பார்த்த மலர் தந்தையின் எண் என்றதும் சந்தோஷத்துடன் தன் மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டாள் மகிழ்ச்சியில் தந்தை சரியான நேரத்தில் அழைத்ததை கவனிக்க தவறிவிட்டாள் மலர் அலைபேசியை அணைத்துவிட்டு பாக்கினுள் வைத்துவிட்டு தோழிகளிடம் சென்றாள் தன் தாய்க்கு வீட்டிற்கு சென்று தெரிவித்துவிடுவோம் என்று முடிவெடுத்தாள் மலர் தோழிகள் மூவரும் ஐஸ் கிரீம் பார்லர் சென்று தங்கள் சந்தோஷத்தை கொண்டாட முடிவெடுத்தனர் அதன் படி தாங்கள் வழக்கம்மாக செல்லும் ஐஸ் கிரீம் பார்லர் செல்வதாக சொல்லி மலர் நிருபாவை அழைத்துக்கொண்டு முதலில் கிளம்பினாள் தானும் தன் காரில் ஏறி அதை இயக்க அவளின் அலைப்பேசியை இயக்கி காதுக்கு கொடுத்தாள்.

எதிர் திசையில் தன் அண்ணன் அஷ்வின் ஹலோ டா குட்டிமா என்னடா இன்டர்வியூ என்ன ஆச்சு என்றான். (விபரம் தெரிந்ததும்) ஹலோ அண்ணா சூப்பராக முடிந்தது. உன் தங்கச்சியா கொக்கா அப்பாயின் மெண்ட் லெட்டருடன் உன்னை மீட் பன்னதான் வருகிறேன் என்றாள் திவ்யா. வாவ் தட்ஸ் கிரேட் ஐ நோ யூ மை ஸ்வீட் சிஸ்டர் கங்கராட்ஸ் டா குட்டிமா என்றான் அஷ்வின். ஆமாம் அண்ணா நான் ரொம்ப சந்தோஷ்மாக இருக்கிறேன் எங்க மூன்று பேருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்து விட்டு அண்ணா. ஐ ஆம் ரியலி ஹப்பி அண்ணா ஹப்பி சோ மச். என்று ஆர்பரித்தாள் திவ்யா. தன் தங்கையில் மகிழ்சியில் தன்னையும் சேர்த்து கொண்டு ஐ ஆம் ஹப்பி டூ டா குட்டிமா என்றான் அஷ்வின். பிறகு சில நொடிகள் பேச்சின் பின்பு தங்கையின் வருகையை உறுதி செய்து கொண்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான் அஷ்வின். அதற்கு முன் தான் செய்ய வேண்டிய வேலைகளை அலைபேசியின் உதவியுடன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டு சரணிடம் மற்ற பொருப்புகளை ஒப்படைத்து விட்டு கிளம்பினான் அஷ்வின்.

தோழிகள் மூவரும் ஒரு புகழ்பெற்ற ஐஸ்கிரீம் கடைக்கு சென்று அமர்ந்தனர். ஏய் நான் சென்று ஐஸ்கிரீம் மெனுவை பார்த்து ஆர்டர் கொடுக்கிறேன் உங்களுங்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றாள் மலர். நிருபா எனக்கு ஸ்ட்ராபெரி என்றாள். ஓகே டீ எனக்கு சாக்லட் என்றாள் மலர். தென் சம் மில்க் சேக் டூ டி என்றாள் திவ்யா. கேன் வீ கொ வித் மேங்கோ ஸ்பிளாஷ் என்று கேட்டாள் மலர். ம்ம் ஓகே டீ ஆஸ் யூ விஷ் என்றனர் தோழிகள் இருவரும். அதன் பின் மலர் சென்று ஆர்டர் கொடுத்து சிறிது காத்திருப்பின் பிறகு ஒரு டிரேயில் வாங்கி வந்தாள். தோழிகள் சந்தோஷத்துடன் சுவைக்க ஆரம்பித்தனர். சற்று அளவளாவிக்கொண்டு இருந்தவேளையில் திவ்யா தன் வீட்டிற்கு வரும்மாறு இருவரையும் அழைக்க நிருபா சரியென்றும் மலர் தயங்கி மற்றோரு நாள் வருவதாகவும் கூற திவ்யா அவளை கட்டயப்படுத்தினாள். மலர் தன் தாய் காத்திருப்பார் என்று மறுத்தாள் உடனே திவ்யா தன் கைபேசியை இயக்கி மலர் யின் தாய்க்கு அழைத்து சம்மதம் பெற்று மாலையில் கொண்டு வந்து விடுவதாகவும் கூறி கைபேசியை அணைத்தாள். இதை சற்றும் எதிர் பார்க்காத மலர் திகைத்து அரை மனதாக சம்மதித்தாள். நிருபா தன் வீட்டிற்கு அலைபேசியில் அழைத்து சம்மதம் பெற்று கிளம்பினாள். மூவரின் வீட்டிலும் மூவரின் நட்பின் புரிதலும், மூவரின் வீட்டின் மேல் இருந்த நம்பிக்கையும் பாசமும் தோழமையும் இவர்களின் நட்பின் வேர் என்ற சொல்லலாம். அதனால் தோழிகள் எங்கு சென்றாலும் பெரியவர்களின் சம்மதம் எளிதாக கிடைக்க பெரும். (பெண்களுக்கு இப்படியோர் புரிதல் நட்பு வரம் அல்லவோ). ஐஸ் கிரீமை சுவைத்து முடித்து விட்டு முப்பெரும் தேவிகளும் திவ்யா வின் வீட்டிற்கு கிளம்பினர். (வாருங்கள் நாமும் பயணிப்போம்.)

திவ்யா வின் வீட்டின் போர்ட்டிகோவில் வண்டியை நிறுத்திவிட்டு மூவரும் வீட்டிற்குள் செல்ல மலர் சற்று தயங்கி நினைவுகளில் தேங்க வாங்கம்மா என்று கற்பகம் வரவேற்றார். அதில் சற்று தெளிந்த மலர் ஹாய் அத்தை எப்படி இருக்கீங்க என்று ஓடி சென்று அணைத்துக்கொண்டாள். தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாய் அவள் நெற்றியில் முத்தம் பதித்து நலமாயிருக்கின்றாயா ராசாத்தி என்றார் அவரும் கட்டிக்கொண்டு. அம்மா போதும் நானும் இங்கேதான் இருக்கிறேன் என்றாள் திவ்யா. ஆமா அத்தை நானும் இங்கயே தான் இருக்கிறேன் தங்கள் தரிசனம் எனக்கும் கிட்டும் வரம் தாரும் என்று பவ்வியம் போல் நடித்தாள் நிருபா. ஆமா லட்சுமி நானும் இங்கயே தான் இருக்கிறேன் என்று வேலுசாமியும் கூறிக்கொண்டு அங்கு வந்தார். அவரை பார்த்து போதுமே ரொம்ப தான் கொஞ்சுவதுப்ப்போல் நடிப்பீர்களே ம்க்கும் என்று தாடையை தோளில் இடித்தார் கற்பகம். வாங்க டா செல்லங்களா வந்து உட்காருங்கள் என்று அழைத்துச் சென்றார் கற்பகம். அவர்கள் அமர்ந்தபின் ஜூஸ் கொடுத்து அவர்களின் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தனர் கற்பகமும் வேலுசாமியும். இன்முகத்துடனும் கலகலப்பாகவும் பேச்சுக்கள் அங்கே அரங்கேறியது. அவர்களின் பேச்சு சத்தத்தில் வீடே கலைக்கட்டியது என்ன மாமா அன்னிவெர்சரி வர போகிறது நீங்கள் அத்தைக்கு என்ன பரிசு தரப்போகிறீர்கள் என்று கேட்டாள் மலர். நானே உன் அத்தைக்கு பெரிய பரிசு டா மலர் கண்ணா நானே ஒரு சொக்க தங்கம் இதைவிட உன் அத்தைக்கு வேறுயென்ன பாக்கியம் வேண்ட போகிறது என்றார் வேலுசாமி பெருமையாய். யாரு நீங்க சொக்க தங்கமா பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க வேலுசாமியாரே என்றார் கற்பகம். இதை கேட்டு இவர்களின் அன்னோன்னியத்தை ரசித்தும் சிரித்தும் தாங்களும் மனம் மகிழ்ந்தனர் பெண்கள் மூவரும். அதை எல்லாம் இருவிழிகள் மடியில் நின்று ரசித்துக்கொண்டு இருந்தன. அவ்விழிகளின் சொந்தக்காரன் படிகளில் இறங்கி வந்து அவர்களின் முன் நின்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தான் அஷ்வின். அவனை சற்றும் எதிர் பார்க்காத மலர் ஒரு கணம் திகைத்து தெளிந்தாள் இதை அஷ்வினின் விழிகள் படம் எடுத்தன. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது காங்ட்ராட்ஸ் டு யூ ஆல் என்றான். என்ன அண்ணா காங்ட்ராட்ஸ் மட்டும் தானா பரிசு எங்கே என்றாள் திவ்யா. அவர்களுக்கு வாங்கி வந்த பரிசை திவ்யா மற்றும் நிருபா விடம் தந்தான் அஷ்வின் அதை ஆசையுடன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர் இருவரும். எங்க டா அஷ்வின் என் மலருக்கு என்றார் கற்பகம் வேகமாக. பிறகு கற்பகத்திற்கு மலர் என்றாள் திவ்யா அஷ்வின் விடவும் ஒரு படி மேல் இல்லையா அதுவும் அவர் வீட்டின் செல்ல மருமகள் ஆயிற்றே என் மனைவிக்கு இல்லாமலா அம்மா அவளுக்கு ஸ்பெஷல் என்று கூறிக்கொண்டு தன் புருவங்களை உயர்த்தி என்ன என்பதுபோல் செய்தான் அஷ்வின். அதில் சற்று வெட்கம் கொண்டாலும் வெளியில் காட்டாமல் தலைகுனிந்தாள் மலர். சரி வாங்க டா சாப்பிட போகலாம் மலருக்கு பிடித்த பிரியாணி தான் இன்று மெனு என்றார் கற்பகம். இல்ல அத்தை நான் இப்போ தான் ஐஸ் கிரீம் ஜூஸ் எல்லாம் சாப்பிட்டேன் கொஞ்சம் நேரம் பொறுத்து சாப்பிடுகிறேன் என்றாள் மலர். அதற்க்கு நிருபா அத்தை நீங்க வாங்க எனக்கு ரொம்ப பசி அதுவும் பிரியாணி வேற வாங்க வாங்க என்றாள். அடி பாவி நிரு சொதப்பிடியே அவன் சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடலாம் என்று தான் சொன்னேன் இல்லையென்றால் பிரியாணி கண்முன் வைத்துக்கொண்டு விரதமா இருப்பேன் ஐயோ இப்போது என்ன செய்வேன் என்றாள் மலர் மனதிற்குள் தான். இல்லை அத்தை என்று இழுத்தவளை, விடுங்க மா நானும் மலரும் பிறகு சாப்பிடுகிறோம் நீங்கள் அப்பாவிற்கும் குட்டிமாக்களுக்கும் எடுத்துவைங்க. நான் பரிசு தர என் ரூமிற்க்கு மலரை அழைத்துக்கொண்டு செல்கிறேன் என்றான் அஷ்வின். இதை கேட்ட மலர் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவாறு நின்றாள்.

புன்னகை பூக்கும்…………..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.