அச்சச்சோ!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
ண்ணின் விழித்திரை எனப்படும் ரெடினாவின் வேலை, வெளியிலிருந்து வரும் ஒளியை வாங்கி, கண்ணில் உள்ள லென்ஸில் பிரதிபலிப்பது. ரெடினாவில் படும் இந்த ஒளியானது அதில் உள்ள அனைத்து மரபணுக்களுக்கும் ஊடுருவக் கூடியது. அளவில் மிகச் சிறியதாக உள்ள LED விளக்கு பிரகாசமான ஒளியை உமிழும் தன்மை உடையது. ஓர் இடத்தில் குவிந்து இருக்கும் அதிகப்படியான ஒளியை தொடர்ந்து கண்கள் பார்க்கும்போது, ரெடினாவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது’ என்று அதிர வைக்கிறது, இணையதளத்தில் வெளியாகி உள்ள ஓர் ஆய்வுக் கட்டுரை.
கம்ப்யூட்டர், டி.வி., தெரு விளக்குகள் என்று அனைத்திலும் தற்போது LED விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அலுவலக வேலை, வங்கிப் பரிவர்த்தனை, ஷாப்பிங் என சகலத்திற்கும் கம்ப்யூட்டரையே பயன்படுத்தும் வாழ்க்கைச் சூழலில் இருக்கும் நாம், பல மணி நேரம் தொடர்ந்து அதைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. தவிர, பொழுதுபோக்குச் சாதனமான டி.வி.யிலும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத விஷயமாகிவிட்ட மொபைல் போனிலும் LED விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன.
‘இப்படித் தொடர்ந்து LED விளக்கு வெளிச்சத்தையே பார்ப்பதனால் ஏற்படும் மரபணுக் கோளாறுகளை சரி செய்ய இயலாது. நிரந்தரப் பாதிப்புடனேயே இருக்க வேண்டியதுதான்.

ஓர் ஆண்டிற்கு ஆறாயிரம் மணி நேரங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்கிறோம். இதில் பெரும்பாலான நேரங்கள், இதுபோன்ற செயற்கையான அதிக வெளிச்சத்தை கண்கள் பார்க்கின்றன. இதிலிருந்து கண்களைப் பாதுகாக்க ஒரே வழி, எப்போதெல்லாம் முடிக்கிறதோ அப்போதெல்லாம் ஓய்வாக இருப்பதுதான்’ என்கிறது, அந்த ஆய்வுச் செய்தி.

இதுபோன்ற வெளிச்சத்தை வெறும் கண்களால் பார்க்காமல், புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் குளிர்க் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதும், வைட்டமின்-ஏ அதிகம் உள்ள உணவை தினமும் சாப்பிடுவதும் கண்களைப் பாதுகாக்க எளிமையான வழிகள்" என்கிறார், இந்த ஆய்வைச் செய்திருக்கும் டாக்டர். செலியா ரேமோஸ்.

பொதுவாக அறிவியல் ஆய்வுகள் நடைமுறையில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை உடனடியாக சொல்ல முடியாது. சில ஆண்டுகள் காத்திருந்து பார்க்க வேண்டும். சாதாரணமான 100 வாட்ஸ் பல்ப்பிலிருந்து வெளிவரும் வெளிச்சம், அதைவிட அளவில் மிகச் சிறியதாக உள்ள LED பல்புகளிலிருந்து வெளிவருகிறது. இந்த விளக்குகள் என்றில்லை, அதிக வெளிச்சத்தை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல. ஆய்வில் LED விளக்குகளில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் கண்களை பாதிக்கும் என்று உள்ளது. இயற்கையிலேயே நம் கண்கள் அதிகபட்சமாக புற ஊதாக் கதிர்களை filter செய்யும் திறன் கொண்டது. அதனால், பயப்படத் தேவை இல்லை. அடிப்படையான எளிமையான சில பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது நல்லது" என்கிறார்.
- nandri;கீதா/puthiyathalaimurai
 

mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#3
kesavan anna

appo entha light use pannuvathu.....
pazhaya kalam mathiri kundu bulpukku maridalama........

kundu bulb thaan ippo expensive, because old is gold
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#4
kesavan anna

appo entha light use pannuvathu.....
pazhaya kalam mathiri kundu bulpukku maridalama........
இயற்கையிலேயே நம் கண்கள் அதிகபட்சமாக புற ஊதாக் கதிர்களை filter செய்யும் திறன் கொண்டது.
அதனால், பயப்படத் தேவை இல்லை. அடிப்படையான எளிமையான சில பாதுகாப்பு முறைகளைப் பின்
பற்றுவது நல்லது


 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,942
Location
Atlanta, U.S
#5
kundu bulb thaan ippo expensive, because old is gold

Athu ennavo unmaithan....


இயற்கையிலேயே நம் கண்கள் அதிகபட்சமாக புற ஊதாக் கதிர்களை filter செய்யும் திறன் கொண்டது.
அதனால், பயப்படத் தேவை இல்லை. அடிப்படையான எளிமையான சில பாதுகாப்பு முறைகளைப் பின்
பற்றுவது நல்லது

ok..ok..ok.....
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#7
இயற்கையிலேயே நம் கண்கள் அதிகபட்சமாக புற ஊதாக் கதிர்களை filter செய்யும் திறன் கொண்டது.
அதனால், பயப்படத் தேவை இல்லை. அடிப்படையான எளிமையான சில பாதுகாப்பு முறைகளைப் பின்
பற்றுவது நல்லது


useful information.thnx for sharing it.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.