அடிக்கடி 'அணைப்பு'

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
[h=1]அடிக்கடி 'அணைப்பு'-அளவில்லா மகிழ்ச்சி![/h]
புதிதாக கல்யாணமானவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதைப் பார்த்து பலரும் கிண்டலடிப்பது சகஜம். ஆனால் உண்மையில் புதிதாக கல்யாணம் செய்தவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கிறார்கள்.

அதை விட முக்கியமாக இதில் ஒரு விஞ்ஞான விஷயமும் புதைந்திருக்கிறது. அதாவது நியூராட்டிசம் என்ற பிரச்சினையை அடியோடு குறைக்க இந்த அடிக்கடி செக்ஸ் உதவுகிறதாம்.

நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், சள்புள் என்று எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், செக்ஸும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு.

புதிதாக மணமாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் டாக்டர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. முடிந்தவரை உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பதும் டாக்டர்கள் தரும் அட்வைஸ்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதே காரணம். ஒரு ஆண்டு கழித்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவு வைத்துக் கொண்டதால்.

4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் செக்ஸ் உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, செக்ஸ் உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட டாக்டர்கள்.

இதை நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே (ஆய்வு எதுவும் செய்யாமலேயே) உணர்ந்திருக்கிறார்கள் போல. அதனால்தான் முரட்டுத்தனமாக, யார் பேச்சையும் கேட்காமல், வம்பிழுத்துக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மூக்கணாங்கயிறு போட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கல்யாணத்தை செய்து வைத்து சாந்தப்படுத்தும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர்.

எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்ஸ் ஆகும் குணமுடையவர்கள், பேசாமல் காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொண்டு செக்ஸ் வாழ்க்கையில் செட்டிலானால், எல்லாம் ஃபிக்ஸ் செய்யப்படும் சாத்தியம் உண்டு.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.