அடியிறக்கம்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அடியிறக்கம்?

பல வருடங்களாக மலச்சிக்கலால் அவதிப்படுகிறேன். இது தொடர்ந்தால் அடியிறக்கம் வரும் எனக் கேள்விப்பட்டேன். உண்மையா?ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் திவ்யா சிவராமன்...மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிக்கும் போது ஏற்படும் சிக்கல் ஆகியவற்றையே மலச்சிக்கல் என்கிறோம். அதாவது, மலம் கழிப்பது இலகுவாக இல்லாமல் கடினமாக இருப்பது. சிலருக்கு ரத்தத்துடன் கூடிய வலியும் இருக்கும். நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது.

மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்படுவார்கள். மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள். இது தொடரும் போது இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதியில் அடித்தளத் தசைகள் தளர்ந்து போகும். இதனால் அடியிறக்கம் ஏற்படும். கர்ப்பப்பையோடு சிறுநீர்ப்பையும் மலக்குடலும் சேர்ந்து இறங்குவதை
அடியிறக்கம் என்போம்.

பொதுவாக பெண்களுக்கு 45 வயதுக்கு மேல் மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு நின்று விடுவதால் இடுப்பு எலும்பைச் சுற்றி இருக்கும் தசைகளில் இருக்கும் கொலாஜன் திசுக்கள் வலுவிழந்து அந்தத் தசைகள் தளர ஆரம்பித்து, அடியிறக்கத்துக்கு வழி வகுக்கலாம். சிலருக்குப் பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கூட அடியிறக்கம் ஏற்படலாம். முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளாலும் ஏற்படலாம்.

சுகப்பிரசவத்தில் நீண்ட நேரம் வலியுடன் கஷ்டப்பட்டு, முக்கி, குழந்தையை வெளித்தள்ளுவதால் தசைகள் தளர்ந்து போயிருக்கும். பிரசவத்துக்குப் பிறகு ஓய்வெடுக்காமல் கடும் வேலைகள் செய்வது, அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற காரணங்களால் ஏற்கனவே தளர்ந்து போயிருக்கும் தசைகள் இன்னும் பலமிழந்து அடியிறக்கம் ஏற்படும். அதீத பருமன், பல ஆண்டுகளாக தொடர் இருமல் காரணமாகவும் அடியிறக்கம் ஏற்படலாம். கர்ப்பப்பை நீக்கம் காரணமாகவும் ஏற்படலாம்.

அடியிறக்கத்தால் நடப்பது சிரமமாகும். அடியில் கனமாக இருப்பது போல இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வும், இருமினாலோ, தும்மினாலோ கூட சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத தன்மை, அடிக்கடி முதுகுவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். கவனிக்காமல் விடும் போது அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். இதை சிலர் விரல்களால் உள்ளே தள்ளுவார்கள். ஒரு கட்டத்தில் தள்ள முடியாத அளவுக்கு நிலைமை போகும். அந்த இடத்தில் வலி அதிகரிக்கும்.

ஆரம்ப கட்டத்தில் இதைக் கண்டறிந்து சரி செய்வது சுலபம். சிலருக்கு ஆபரேஷன் மூலம் இப்பிரச்னையை சரி செய்வார்கள். சிலருக்கு தேவைப்பட்டால் கர்ப்பப்பையை நீக்குவார்கள். சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்னை இருப்பவர்களுக்கு யூரோடைனமிக்ஸ் ஸ்டடி என்ற பரிசோதனை செய்வார்கள். அதன் பிறகு ஆபரேஷன் செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். ரொம்ப வயதானவர்களுக்கு ‘ஸ்லிங்’ என்ற முறையை பயன்படுத்துவோம். மலச்சிக்கல் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்படும்போது, உடனடியாக அதைச் சரிசெய்ய வேண்டும்.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
good sharing..
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#3
useful info.....thank u......
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#4
Very good info, Latchmy.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
useful info.....thank u......
thank you friend
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.