அட! உடம்புக்குள்ளேயே ஓர் ஏர் கண்டிஷனர்....!

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
அட! உடம்புக்குள்ளேயே ஓர் ஏர் கண்டிஷனர்....!


இன்றைய மனித நாகரிக வாழ்வில் பல புதிய தேவைகள் மனிதனைப் பற்றிக் கொண்டுள்ளன.
அவற்றில் ஒன்றுதான் ஏர்கண்டிஷனர். ஆனால் மனித உடலுக்குள்ளேயே ஓர் ஏர்கண்டிஷனர் இயந்திரத்தை இயற்கை வைத்து இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியம்தான்.
மனித உடம்புக்குள்ளே இருக்கும் ஏர்கண்டிஷனர் நாம் கண்டுபிடித்து இருக்கும் இயந்திரம் போன்றதல்ல. விசேஷத்தன்மை வாய்ந்தது.
நாம் பயன்படுத்தும் ஏர்கண்டிஷனர் குளுமையை மட்டும்தான் அளிக்கும். இதனால் ரொம்ப பலவீனமானவர்களுக்கும், சளித் தொல்லை உடையவர்களுக்கும் இது ஒத்துக் கொள்வதில்லை.
ஆனால் உடம்புக்குள்ளே, இருக்கின்ற ஏர்கண்டிஷனர் இயந்திரமோ, வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால் குளிர்ச்சியைத் தரும். வெளியில் குளிர் அதிகமாக இருந்தால் உடம்புக்குச் சூட்டைத் தரும். இப்படிப்பட்ட ஒரு எந்திரத்தை மனிதன் இனிமேல் கண்டுபிடித்துத்தான் ஆகவேண்டும்.
வெளியே வெய்யில் கடுமையாக உள்ளது. அரைமணி நேரம் வெயிலில் அலைய வேண்டிய கட்டாய சூழ்நிலை, அலைந்து முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் “அப்பாடா’ என்று பெருமூச்சு விடுகிறீர்கள். அதுவரை சூடாக இருந்த உடம்பு, சட்டென்று குளிர்ந்து வியர்க்க ஆரம்பிக்கிறது.
சட்டை சூடாக இருக்கிறது... சட்டைப்பையில் இருக்கும் பேனா சூடாக இருக்கிறது... ஆனால் உடம்பு மட்டும் திடீரென்று குளிர்ந்து வியர்க்க ஆரம்பிக்கிறதே, இது எப்படி? இந்த அதிசயத்தை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
சாதாரணமாகத் தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் தங்கிவிடுகிறது. ஆனால் வெயிலில் அலைந்து விட்டு வந்து தண்ணீர் குடித்தால் மட்டும் உடனே எப்படி வியர்வையாகி வெளியே வருகிறது? இந்த அற்புதத்தைச் செய்யக்கூடிய இயந்திரம் உடம்பில்தான் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?
சூடான காபியை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்தால் ஆறிப்போவதற்குக் கொஞ்ச நேரம் ஆகிறது. ஆனால் சூடான காபி வயிற்றுக்குள் போனதும் எப்படி உடனே ஆறிப்போகிறது?
ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். வாயில் வைத்தவுடன் குளிர்ச்சி “ஜில்’ என்று இருக்கிறது. ஆனால் வயிற்றுக்குள் போனதும் இயல்பான நிலைக்கு வந்து விடுகிறது. இது எப்படி?
பனிக்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கிறது. அப்போது பனியில் எல்லாப்பொருள்களுமே குளிர்ச்சியாகத்தான் இருக்கும். உடம்பைத் தொட்டுப் பாருங்கள். அது சூடாக இருக்கும்.
கொட்டும் பனியில் பிளாட்பாரத்தில் சிலர் அயர்ந்து உறங்கிக் கொண்டு இரப்பதைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஒரே ஆச்சரியமாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து பஸ் நிலையம் போவதற்குள் உடம்பு குளிரில் ஆடிப்போய்விடுகிறது. ஆனால் கொட்டும் பனியில் இரவு முழுக்க உறங்குவதற்கு அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? நமக்குத் தெரிந்த விசயம். “இவர்கள் ஏழைகள். இருக்க இடம் இல்லாதவர்கள். இயலாமை, இவரகளை இந்தக் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதற்குப் பழக்கி விட்டது. எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிப் பழகிப் போனவர்களால் இதையும் தாங்கிக் கொள்ள முடிகிறது’ என்பது தான். உண்மைதான் இது. ஆயினும் உடலின் இயற்கை இயக்கம் அதற்க ஒத்துழைக்கிறது.
பனியில் நடக்கும்போது கையைக் கட்டிக்கொண்டு நடக்கிறீர்களே, “அது ஏன்? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?’
மனித உடம்புக்குள்ளே இரண்டு அடுப்புகள் இருக்கின்றன. அந்த அடுப்புகள் எப்போதும் “கண கண’ என்று எரிந்து கொண்டே இருக்கின்றன. நெருப்பு அணையாத அடுப்பு இவை. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் கோடைக் காலத்தில் சற்றுத் தணிந்து, குளிர்காலத்தில் தீவிரமாக எரிகின்றன என்பதுதான். அட! வித்தியாசமான அடுப்புகள்தாம்.
உடம்பிலே இரண்டு அக்குள் பகுதிகள் இருக்கின்றன. கைகளுக்கு இடையிலும், கால்களுக்கு இடையிலும் (தொடைப்பகுதி) அவை இருக்கின்றன. அந்த அக்குள் பகுதிகள்தாம் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் அடுப்புகள். இந்த அடுப்புகளுக்கு எரிசக்தி உடம்புக்குள்ளே இருக்கின்ற ஏர்கண்டிஷனர் இயந்திரத்தில் இருந்துதான் கிடைக்கிறது.
இந்த அடுப்புகளில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறத. பனியில் நடக்கும் பாது உங்களை அறியாமல் கைகளைக் கட்டிக் கொள்கிறீர்கள். முழங்காலும், முழங்கையும் துணை அடுப்புளாகும்.
பிளாட்பாரத்தில் தூங்கிறவனைக் கவனித்துப் பாருங்கள். அவன் கைகள் இரண்டும் தொடைப் பகுதியான சப்பைக்குள் பொதிந்து கொண்டிருக்கும்.
கைகள் மின்சார ஒயர்போன்று செயல்படுகின்றன. அக்குளில் இருந்து வரும் சூட்டை வாங்கி உடம்பு முழுவதும் ஏற்றுகிறது. கை பிளாட்பாரத்தில் அயர்ந்து உறங்குகின்றவனின் கையை வெளியே எடுத்துவிட்டுப் பாருங்கள். உடனே விழித்துவிடுவான். என்றாவது ஒருநாள் பனியில் படுக்க நேர்ந்தால் கைகளை அக்குளில் பதித்துக் கொள்வது அநாகரிகம் என்று வீட்டில் படுப்பதுபோல் படுத்துத் தூங்கினால் உடம்பும் படுத்துவிடும்.
உடம்புக்குள் உள்ள இந்த அடுப்புக்கு நெருப்பு எங்கே இருந்து கிடைக்கிறது என்ற ரகசியத்தை நாம் தெரிந்து கொண்டுவிட்டால், பெரும்பாலான நோய்களிலிருந்து நமக்கு நாமே உடலைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
மழையில் நனைவதால் காய்ச்சல் வருகிறது என்பது ஒரு மூடநம்பிக்கையே... மழையில் நனைந்துவிட்டால் உடனே துணியை வைத்தத் துவட்டி விடக்கூடாது. அப்படியே விட்டு விட்டால் கொஞ்ச நேரத்தில் சூடு பிறந்து உடம்பின் உஷ்ணநிலை சமநிலைக்கு வந்துவிடும்.
மழையில் அதிக நேரம் நனைந்தால் காய்ச்சல் வரும் என்பதும் சரியல்ல. சில சமயங்களில் இது போல் அதிக நேரம் நனைந்தால் உடம்பின் சீதோஷ்ண நிலை அதிர்ச்சியாவதால் நாட்பட்ட நோய்கூடச் சரியாகிவிடுவது உண்டு.
என் நண்பரின் மகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். இந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை அமைந்தது. மாப்பிள்ளை இருப்பது குளிர்பிரதேசம்... அதனால் சீரியசாகி விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஒரு பக்கம். இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டால் பிறகு விசயம் தெரிந்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று உள்ளுக்குள் அச்சம், வேறு. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, எதுவும் சொல்லாமலே திருமணத்தை முடித்துப் பெண்ணை அனுப்பி வைத்தார், என் நண்பர். என்ன ஆச்சரியம் பாருங்கள். பெண்ணுக்கு இருந்த நோய் முற்றிலும் சரியாகி விட்டது.
நெருப்பை உற்பத்தி பண்ணும் அக்குள் பகுதிகள் அதிரடி சிகிச்சை மேற்கொள்வதுதான் இத்தகைய மாற்றத்திற்குக் காரணம்.
காய்ச்சல் அடிக்கும்போது உடம்பு நெருப்பாகக் கொதிக்கிறது அல்லவா? இந்த அக்குள் பகுதியாகிய அடுப்புகள்தாம் உஷ்ணத்தை அப்போது சப்ளை செய்கின்றன.

[/font]
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#2
Excellent Info. Thanks for sharing Yuvaraj.
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#3
Thanks..welcome..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.