அதிகமாக ஆசைப்பட்டால் இப்படி தான் !

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
கடவுளிடம் பெற்ற வரம் !ஒருவன் பல ஆண்டுகளாக இறைவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்யும் கடும் தவத்தைக் கண்ட இறைவன் மனம் மகிழ்ந்து அவன் முன் தோன்றினார். இறைவன் அவனிடம் உன் தவத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். ஆகையால் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன் என்றார். அதற்கு அவன் இறைவனிடம் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு இறைவன், நீ கேட்ட வரத்தைத் தருகிறேன். ஆனால், நீ அவனுக்குத் தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் உன்னை விழுங்கி விடுவான் என்றார். அவனும் சரியென்று சம்மதித்தான். உடனே இறைவன் அவனுடன் ஒரு பு+தத்தை அனுப்பி வைத்தார். பேராசை கொண்ட அவன், அந்தப் பு+தத்திடம், எனக்கு அழகான ஒரு பெரிய அரண்மனை ஒன்று வேண்டும் என்று கேட்டான். உடனே அந்த பு+தம் ஒரு அழகான அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது.

அடுத்தடுத்து அவன் மனதில் என்ன என்ன ஆசைகள் எல்லாம் இருந்தனவோ அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக அப்பு+தத்திடம் சொல்லிக் கொண்டே இருந்தான். பு+தமும் அவன் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தது. அவன் ஆசைப்பட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டு, வேலை கொடு.. வேலை கொடு... இல்லையென்றால் உன்னை விழுங்கி விடுவேன் என்று பு+தம் அவனை மிரட்ட ஆரம்பித்தது.

பு+தத்துக்கு அடுத்து என்ன வேலை கொடுப்பது என்பது பற்றி சிந்தித்து சிந்தித்து வேலை கொடுப்பதே அவனுக்கு வேலையாகிப் போனது. பு+தத்திற்கு வேலை கொடுக்க முடியாமல் மிகவும் சோர்வடைந்தான். பு+தம் அவனை விரட்ட ஆரம்பித்தது.

என்ன செய்வது என்று புரியாத அவன் மீண்டும் இறைவா என்னைக் காப்பாற்று... இறைவா என்னைக் காப்பாற்று... என்று இறைவனிடம் ஓடினான். அவனின் நிலைமையை அறிந்து மனமிறங்கிய இறைவன், அவனை விரட்டி வந்த பு+தத்திடம், நான் சொல்லும் வரை இந்தப் படிகளில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டு இருக்கும்படி கட்டளையிட்டார்.

பு+தமும் இறைவன் சொன்னபடி, படிகளில் விடாமல் ஏறி, இறங்கிக் கொண்டேயிருந்தது. எப்படியோ பு+தத்திடம் இருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். அதிக ஆசை நம்மையே அழிக்கும் என்பதை அறிந்து கொண்ட அவன் இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டி பு+தத்தை இறைவனிடமே ஒப்படைத்துவிட்டு சென்றான்.

நீதி :

அதிக ஆசை தீமையை தரும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.