அதிக தாகம்- ஒரு பிரச்சினையா?

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1
[h=3]அதிக தாகம்- ஒரு பிரச்சினையா?[/h]


தாகவிடாய், அடங்காதாகம் ஆயுர்வேதத்தில் திருஷ்ணா எனப்படுகிறது. வழக்கமாக ஏற்படும் தாகத்திற்கும் இதற்க்கும் வித்தியாசம் உண்டு. அசாதாரணமான அடங்காததாகம் ஒரு நோய்


தாகம் என்ற உணர்வு மூளையால தூண்டப்படுகிறது. இந்த உணர்வு உடலில் நீர் தேவை ஏற்ப்பட்டால் உண்டாகும் உடலில் நீர் அதிகம் உள்ள போது தாகம் எடுக்காது. தவிர, உடல் இன்னொரு விதத்திலும் தண்ணீர் சமச்சீர் விகிதத்தை, பிட்யூட்டரி சுரப்பியால் பாதுகாக்கும். உடலின் தண்ணீர் இருப்பு குறையும் போது பிட்யூட்டரி சுரப்பி vasopressin என்ற ஹார்மோனை சுரக்கும். இது சிறுநீரகத்தில் தண்ணீரை சேமிக்கவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கவும் கட்டைளையிட்டு உதவும். தண்ணீர உடலில் அதிகம் இருந்தால் அதையும் பிட்யூட்டரி சுரப்பி அட்ஜஸ்ட் செய்யும்.


தண்ணீர் நம் உடலில் நமது எடையின் பாதி அளவு , அல்லது மூன்றில் இரண்டு அளவு என்ற கணக்கில இருக்கும். கொழுப்பு திசுக்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். பெண்கள் ஆண்களை விட உடல் பருமன் அதிகம் இருப்பதால், பெண்கள் உடலில் இருக்கும் தண்ணீர் அளவு குறைவாக இருக்கும்.(52லிருந்து55 சதவீதம்) ஆண்களில் தண்ணீர் அளவு 60% கூட இருக்கும். உடலின் தண்ணீரை இங்கும் அங்கும் மாற்றும் சக்தி நம் உடலில் உள்ளது. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 1-2 லிட்டர் தண்ணீர் குடித்தால் நல்லது. குறைவாக குடிப்பதை விட, அதிகமாக தண்ணீர் குடித்தல் நல்லது.


நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் மூலம் தண்ணீர் வெளியாகிறது. எண்ணெய் மிகுந்த உப்பான உணவுகள் தாகத்தை அதிகரிக்கும். வாந்தியிலும்,பேதியிலும் தண்ணீர் வெளியேறும். தண்ணீர் சிறுநீரக கற்களை தவிர்க்க, சிறுநீர்ப்பைகளில் தொற்றுநோய் வராமல் பாதுகாக்க, இவையெல்லாம் சாதாரணமான நடைமுறை தண்ணீர் தேவைகள், ஆனால் அடங்காத தாகம் வேறுவிதமானது.


நீரிழிவு வியாதிகள் ஒரு வகை diabetes insipidous, இதற்கும் diabetes mellitus க்கும் உள்ள ஒரே ஒற்றுமை -அதிக அளவு சிறுநீர் கழித்தல் இவை இரண்டும் வேறு, வேறு. diabetes insipidous, ல் பிட்யூட்டரி சுரப்பி சரியான அளவு ஹார்மோன் vasopressin ஐ சுரக்காததால் அடங்காத தாகம் ஏற்படும். 4லிட்டரிலிருந்து 40 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. சிறுநீர் அபரிமிதமாக, அதுவும் இரவுகளில் போகும்.இதே நிலை நீரிழிவு வியாதியிலும் (diabetes mellitus) இதில் இன்சுலின் இல்லாததால் சிறுநீர் அதிகம் வெளியேறி அடங்காத தாகம் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, அதிக உடல் உழைப்பு, பலவீனம், நரம்புத்தளர்ச்சி, இவற்றால் வாதமும், கோபதாபம், கெடுதலான உணவுகள், பட்டினி, இவற்றால் பித்தமும் உண்டாகி தாகவிடாயைத் தூண்டும்.

ஆயுர்வேத சிகிச்சைகள்:

காய்ச்சப்படாத புதுப்பால் இரண்டு கிளாஸ் குடிக்காலாம்.

கொத்தமல்லி விதைகள், நெல்லிக்கனிகள், சுக்கு, உலர்ந்த திராட்சை, இவற்றால் செய்த கஷாயத்தை குடித்தால் தாகம் அடங்கும்.

மாவிலை, நாகப்பழ மர இலைகள், அத்தி இலைகள், இவற்றின் சாறுகள், 5-10 மி.லிட்டர் அளவில் மூன்று வேளை குடிக்கலாம்.

மஞ்சள் சேர்ந்த கஷாயம் குடிக்கலாம்.

சந்தனப்பொடி சேர்த்த இளநீர் அடங்காத தாகத்திற்கு நல்லது.

ஜம்பீராதி பானகம். நெல்லி ரசாயனம், குடூச்சி, சத்வா, போன்ற மருந்துகள் குணம் தரும்.

போனஸ் தகவல்:

சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்துதல் செரிமானத்திற்கு நல்லது

குளிப்பதற்கு முன் தண்ணீர் அருந்துதல் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வருவதை தவிர்க்கலாம்.

Sumathi Srini


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.