அந்த நாளைய வரலக்ஷ்மி விரதம்

Joined
Aug 8, 2011
Messages
88
Likes
130
Location
Muscat,Oman
#1
[h=6]வெள்ளிக்கிழமை நோம்பு என்றால் , வியாழன் படாத பாடு படும்.
நாங்க எல்லாம் ஸ்கூல் !! அம்மாதான் பாவம்.எல்லாம் செய்வாள். அப்போது அந்த வேலையின் கஷ்டம் எனக்கு தெரியவில்லை.
எங்களை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு, தலைக்கு ஸ்நானம் செய்து, மடி உடுத்தி, சாப்பிடாமல்....
1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, தனித்தனியாக ஊற வெச்சத கல்லுரலில் அரைப்பா.. உளுத்த மாவில் கொஞ்சம் பச்சரிசி மாவுடனும், மீதியை 2.பு.அரிசி மாவுடனும் கரைத்து வைப்பா. பச்சரிசி இட்லி நெய்வேத்யத்துக்கு.
3. தேங்காயை உதித்து, துருவி, பூரணம் பண்ணுவா.
4. எள்ளை வறுத்து, எள் பூரணம்
5. பச்சரிசி களைந்து, உலக்கையால் இடித்து (வேலைக்காரி இடிக்க, அம்மா தள்ளி கொடுப்பாள்) , சலித்து வைப்பாள் - கொழக்கட்டைக்கு.
6. அம்மன் முகமெல்லாம் அப்போது கிடையாது. காப்பர்/ வெண்கல சொம்பில், சுண்ணாம்பை பூசி, காவியால் அம்மன் முகம் அப்பா வரைந்து வைப்பார். அதில் தேங்காய், மாவிலை வைத்து, சொம்பிற்குள் அரிசி, பருப்பு, வெள்ளம், வெள்ளி, தங்க காசுகள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எல்லாம் போட்டு, கலசம் வைத்து, அலங்காரம் செய்து, பலகையில் இழை கோலம் போட்டு, வாழை நுனி இலை போட்டு, அதன் மேல் அரிசி பரத்தி, கலசத்தை வைப்பா. தெரிந்த அளவு அலங்காரம். (கண்ணுக்கு மை இட்டு, செயின் போட்டு)
7. இழை கோலத்துக்கு, கல்லுரலில் அரிசி மாவு அரைத்து வைத்து
எல்லாவற்றையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு தான் சுமார் மூன்று மணிக்கு சாப்பிடுவாள்.

சாயந்திரம் அப்பா மார்கெட் போய் (அதற்கு மட்டும் நான் ஒட்டி கொள்வேன்) தேங்காய், பழம், தாழம்பூ, உதிரிப்பூ, தொடுத்த பூ, பிச்சோலை கருக மணி, பல வகை பழங்கள் எல்லாம் வாங்கி வருவார்.
ராத்திரிக்கு வெண் பொங்கல் தான் பலகாரம். சாப்பாட்டுக்கடை முடிந்ததும், அடுப்பு (மண்) மெழுகி, கோலம் போட்டு, சமையல் உள் அலம்பி...

அதற்குள் அப்பா, சுவற்றில், சுண்ணாம்பு பூசி, காவியால், பிரஷ் வைத்து, scale வைத்து, மண்டபம் வரைந்து, நடுவில் கலசம், அதன் மேல் தேங்காய் etc. எல்லாம் வரைந்து, பல்லாங்குழி, கழக்கொடி(அம்மனுக்கு விளயாடவாம் !), நாகப்பழம், மண்டபத்தில் வாழை மரம் (தாரோடு) எல்லாம் வரைந்து...
(அந்த அழகை சொல்லி முடியாது. ஒரு போட்டோ கூட இல்லை) ரெடி பண்ணுவார்.
வாசலில், சுவாமி இடத்தில் இழை கோலங்கள் ராத்திரியே போட்டு விடுவோம்.

பூஜை அன்று... அம்மா சுத்த பட்டினி.
இந்த பூஜை... மாலை பசுக்கள் மேய்ச்சலில் இருந்து திரும்பும் வேலையில் (சுமார் 5 மணிக்கு மேல் செய்ய வேண்டும் !!)
நிறைய நேரம் இருப்பதால், பூஜை சாமான்கள் எடுத்து வைத்து, அம்மன் அழைத்து, பாட்டு பாடி - எல்லாம் நிதானமாக நடக்கும்.

சாஸ்த்ரிகள் வந்து, பூஜையை சிரத்தையாக செய்து, சரடு கட்டும்போது 6 மணி ஆகி விடும் !!

பிறகு என்ன.. நமஸ்காரம் செய்து எழுந்திருக்கும்போது... வடை, அப்பத்துடன் தான் எழுந்திருப்போம் !!
நெய்வேத்யத்துக்கு : இட்லி, சாதம், பருப்பு, கொழுக்கட்டை (வெல்ல பூரணம், எள்ளு, உளுத்தம் பூரணம்) , வடை, அப்பம்...
இட்லிக்கு சாம்பார்... வெளுத்து வாங்குவோம் சாப்பாட்டை.
அம்மா... 1922 to 1986 (64 years) இதே போல் பூஜை பண்ணி இருக்கா.

சென்னையில், எங்காத்துல எல்லாம் காலை ராகு காலத்துக்கு அப்புறம் பூஜை.
வேலைக்கு போகும்போது, எங்க North Indian Principal க்கு சாஸ்த்ரிகள் வர லேட் ஆகும் என்று சொன்னால் புரியாது. லீவும் கிடையாது.
அதனால், பூஜை காலை 7 மணிக்கு என்று ஆயிற்று !!

இப்போது (சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது !!) : கடையில் வாங்கும் processed arisi maavu; idly maavu; velaikkaari thuruvum thengaai; podikkum vellam, yelakkaai; mudhal naal iravu alangaaram, kolam. maru naal kaalai 4 manikku ezhunthu, ellaam seithu, 8 manikkul poojai.

சுருங்கித்தான் போய் விட்டது !!!
நான் இந்த வருடம் தேங்காய் பழம் நெய்வேத்யம் பண்ணி, ஒரு நமஸ்காரத்துடன் சரடு கட்டிக்கொள்ள போகிறேன் !!
அம்மா ௬௪ வருஷம் அலுக்காது, மன உறுதியுடன் செய்த நோம்பு, இப்போது கஷ்டமாக தெரிகிறது !!
என் அடுத்த தலை முறை அதுவும் இல்லை !!![/h]
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
Very interesting Kannan.. Varalkashmi Nonbukku ennallam pannuvangannu live aga sonna mathiri irukku.. thanks for sharing... Ippothu ellame surungithan poivittathu... sathiyamana varthai....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.