அந்த மூன்று நாட்களில்' தனியாக ஒதுக்குவது

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
பெண்கள் மாதவிலக்கான நாட்களில், அவர்கள் முன்னால் ஒரு உலக்கையை போட்டு, அதை தாண்டாமல் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இது மூடநம்பிக்கையல்ல. ஏனெனில், பெண்களுக்கு மாதவிலக்கான நாட்களில் கருப்பை மற்றும் வயிற்று தசைப்பகுதிகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் செல்ல வேண்டுமென்பதற்காக பிற பணிகள் தவிர்க்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, மாதவிடாயின் போது பெண்கள் உடலில் ஏற்படும் ரத்த நாற்றம், கொடிய விலங்குகளையும், பூச்சிகளையும் ஈர்க்கும் என்பதால், பெண்கள் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, மாதவிலக்கான நாட்களில் பெண் ஹார்மோன்களை தூண்டி, மாதவிலக்கில் சிக்கலை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, மல்லிகை பூவை சூடுதல், வாசனை திரவியங்களை பூசிக் கொள்ளுதல், பிறர் பார்க்கும் வண்ணம் கவர்ச்சியாக திரிந்து, ஆண்களின் அருகில் சென்று, பாலுணர்வு தூண்டப்படுதல் ஆகியவை, மருத்துவ ரீதியாகவும், பெண் பாதுகாப்பு குறைவாக இருந்த, அந்தக்கால சூழ்நிலையில் ஏற்றதாக இருந்தது.

அதுமட்டுமின்றி, பெண்கள் மாதவிலக்கான நாட்களில் குளம், அருவியில் குளிப்பது தடுக்கப்பட்டதுடன், தனியாக குளிக்க அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு குளம், அருவியிலுள்ள மீன் மற்றும் சில உயிரினங்கள் பெண்களின் ரத்த வாடையால் ஈர்க்கப்பட்டு, இனப்பெருக்க உறுப்புகளுக்கு ஆபத்து உண்டாகும் என்ற அறிவியல் பூர்வ அணுகுமுறையே காரணமாகும். ஆகவே நமது முன்னோர்களின் ஒவ்வொரு நடைமுறையிலும் அர்த்தம் பொதிந்து உள்ளது.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#2
Re: அந்த மூன்று நாட்களில்' தனியாக ஒதுக்குவத&#3

Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.