அனுபவ வைத்தியம்

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#1
[h=2]அனுபவ வைத்தியம்[/h]



வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம்அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .

இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம்பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம் .

வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம் ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.