அன்னாசிப் பழம் - Health Benefits of Pine Apple

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#1
அன்னாசிப் பழத்தை அப்படியே சாப்பிட சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அன்னாசிப் பழத்தின் மேல் சிறு சிறு முட்கள் காணப்படுவது தான் அதற்குக் காரணமாக இருக்கும்.

அன்னாசிப் பழத்தில் பெரும் பகுதி தண்ணீராகத் தான் இருக்கிறது. எனவே, நாம் இதை சிறிது சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிவிடும். மதிய உணவில் பழங்களை உண்பவர்களா நீங்கள், அப்படியென்றால் அதில் அன்னாசிப் பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இதை எவ்வளவு சாப்பிட்டாலும் தொப்பை போடாதாம்.

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி2 உயிர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, இது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. அன்னாசிப் பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அன்னாசிப் பழத்தில் அதிகமாக இருக்கிறது. அன்னாசிப் பழச்சாற்றுடன் தேன் கலந்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு பக்க தலைவலி, வாய்ப்புண், மூளைக் கோளாறு, ஞாபக சக்திக் குறைவு போன்றப் பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

அன்னாசிப் பழம் ஓரளவு குளிர்ச்சியை உடலுக்குத் தரக் கூடியது. மேலும், அன்னாசிப் பழம் குடலில் உள்ள கெட்ட கிருமிகள் மற்றும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதில், கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அன்னாசிப் பழம் சளி மற்றும் காய்ச்சலைக் கூட குணப்படுத்த வல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கூட சரி செய்கிறது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.