அன்றைய பள்ளி விடுமுறை வேறு; இன்றைய பள்ளி &

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அன்றைய பள்ளி விடுமுறை வேறு; இன்றைய பள்ளி விடுமுறை வேறு


பள்ளி விடுமுறை என்றால் ஒருகாலத்தில் புத்தகங்களை மூட்டை கட்டிவிட்டு, விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவோம். உறவினர் வீடுகளுக்கு சென்று உறவுகளை வளர்ப்போம். கிராமங்களுக்கு சென்று பழைய உறவுகளை புதுப்பிப்போம். இதனால் விடுமுறை முடியும் தருவாயில் பிள்ளைகள் உடல் ரீதியாக, மனரீதியாக புத்துணர்ச்சி பெறுவர்.

எண்ணங்கள் தெளிவாக இருக்கும். பள்ளி செல்லும்போது புது சிந்தனையோடு பாடங்களை படிக்கத் துவங்குவர். இப்போதோ நிலைமை மாறிவிட்டது. அடுத்த வகுப்பிற்கான பாடங்களை விடுமுறையில் படிக்க வைக்கின்றனர் பெற்றோர்கள். இதனால் மாணவர்களின் சிந்தனைத்திறன் பாதிக்கப்படும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர் சி. ராமசுப்ரமணியன்.

படிப்போடு விளையாட்டும், நல்லொழுக்கமும் அவசியம் என்பது குறித்து அவர் கூறியதாவது: பள்ளி வரை படிப்பு, வீட்டுக்கு வந்த பின் டியூசன் என ஓய்வில்லாமல் படிப்பை மட்டுமே பிள்ளைகளை சிந்திக்க வைக்கின்றனர்.

வகுப்பறை மட்டுமே மாறியிருக்கும். டியூசனில் அதே ஆசிரியர்கள், அதே பாடங்கள் என்றிருந்தால் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும்.

பிள்ளைகளை நல்ல மாணவர்களாக உருவாக்க வேண்டும். எப்பாடு பட்டாவது நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற சிந்தனையை தவிர்க்க வேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் திறமை, தகுதி அறியாமல் தாங்களாக கற்பனையை வளர்த்து, தன் ஆசையை திணித்து படிக்க வைக்கின்றனர். எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படி படிக்கிறார்கள் என்பதே முக்கியம்.

பத்து மணிநேரம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு கவனக்குறைவாக இருப்பதை விட, குறைந்த நேரம் படித்தாலும் மனதில் பதியும் வகையில் பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும்.

ஞாபகமறதி வரலாம்: மூளைக்கு நல்ல ஓய்வு தேவை. இலகுவான இசை, கதைகள், புத்தகங்கள் படிப்பதன் மூலம் மூளையை புத்துணர்வாக்கலாம். நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது நகைச்சுவையாக பேச வைக்கலாம். வீட்டில் எந்நேரமும் இறுக்கமாக இருப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். எந்நேரமும் படி படி என்று சொல்லும்போது, ஞாபக மறதி ஏற்படும். அடுத்ததாக துாக்கமின்மை, தலைவலியால் அவதிப்படுவர்.

தேவையற்ற பதட்டத்தால் விபரீதங்கள் ஏற்படலாம். இத்தகைய மாணவர்களுக்கு கவுன்சிலிங் தருவது அவசியம். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை உண்டு. எல்லோரையும் மதிப்பெண் பெற வைப்பது முக்கியமல்ல.

நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவது என்பது எல்லோரும் செய்யும் விஷயம்தான். நுாறு மதிப்பெண் மாணவர்தான் சிறந்த மாணவர் என்று உளவியல் அறிஞர்கள் கூறுவதில்லை. அவனை முழுமையான மாணவன் என்றும் சொல்ல முடியாது.

தன்னம்பிக்கை, தன்மானம், என்னால் முடியும் என்ற சிந்தனை, நற்பண்புகளுடன் படிப்பும் சேர்ந்தால்தான் சிறந்த மாணவரை உருவாக்க முடியும்.

ஒழுங்கில்லாமல், குணமில்லாமல், நெறியில்லாமல் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் தருவதால் அதற்கு மதிப்பில்லை.

ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகங்களும் சமூக சிந்தனையுள்ள, தன்னம்பிக்கையுள்ள மாணவர்களை உருவாக்குவதுதான் முக்கியம். அதை நோக்கி, வரும் கல்வி ஆண்டில் செயல்பட வேண்டும், என்றார்
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.