அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய&amp

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய்வது எப்படி..?


ளம் பெண்களின் பிரச்னைகளில் ஒன்று... அன்வான்டட் ஹேர். கன்னம், உதட்டுக்கு மேல், தாடை, கை, கால் என இயல்புக்கு அதிகமாக ரோம வளர்ச்சி உள்ள பெண்கள், சங்கடத்துக்கு உள்ளாவார்கள். அந்த ரோம வளர்ச்சியை மட்டுப் படுத்த மற்றும் சரிசெய்வதற்கான வழிகளைச் சொல்கிறார் சென்னை, போரூர் ‘இமேஜ் ப்ளஸ்’ பியூட்டி பார்லரின் உரிமையாளர் ஜான்சி.


பெண்களுக்கு இயல்புக்கு மீறிய ரோம வளர்ச்சி ஏற்பட மரபு, உடலில் நிகழும் ஹார்மோன் சார்ந்த மாற்றங்கள், ஹார்மோன் சிகிச்சை போன்றவை காரணமாக இருக்கலாம்.

த்ரெடிங், வாக்ஸிங் போன்ற பார்லர் ட்ரீட்மென்ட்டு கள் மூலம், இவற்றை நீக்கிக்கொள்ளலாம். தரமான பார்லரை அணுக வேண்டியது முக்கியம்.

பொதுவாக, உதடுக்கு மேற்புறம் மற்றும் தாடையில் வளரும் ரோமத்தை நீக்க த்ரெடிங் சரியான சாய்ஸ். கை, கால்களில் ரோமம் நீக்க வாக்ஸிங் செய்துகொள்ளலாம்.

ரோமத்தை நீக்காமல்... ஆனால், ரோமத்தின் கருமையை மங்கச்செய்து சரும நிறத்துக்கு மாற்றி கவனம் குறைக்கவைக்கும் விதமாக, பிளீச்சிங்கும் செய்துகொள்ளலாம். ஆனால், பிளீச்சிங் க்ரீம் சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்பதை பரிசோதித்துவிட்டுப் பயன்படுத்தவும்.

முகமோ, கை, கால்களோ... ரேஸரால் ஷேவ் செய்யக்கூடாது. அது சருமத்துக்கு எரிச்சல் தரும் என்பதுடன், மீண்டும் ரோமம் வளரும் போது முன்பைவிட தடிமனாக்கும்.

ட்வீஸிங் என்பது, தேவையற்ற ரோமத்தை ஒரு அழகுசாதனம் (முள்வாங்கி போன்றது) கொண்டு ஒவ்வொன்றாக நீக்கும் பார்லர் சர்வீஸ்.

ஹேர் ரிமூவல் க்ரீம்களை பெண்கள் பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதுடன் நாளடைவில் சருமத்தைக் கறுக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து சரும சிறப்பு மருத்துவரிடம் லேசர் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அது நிரந்தரத் தீர்வைத் தரும். எனினும், தழும்புகள் உள்ளிட்ட விளைவுகளை மருத்துவரிடம் முன் ஆலோசனை செய்துகொள்வது நல்லது.

ஹோம்மேட் தீர்வுகள்!

ரோம வளர்ச்சி உள்ள இடங்களில் தினமும் படிகக்கல்லால் சிறிது நேரம் தேய்த்தால், வளர்ச்சி மட்டுப்படும்.

மஞ்சள்தூள், கடலை மாவு தலா கால் ஸ்பூன், ஆலோவேரா ஜெல் 4 ஸ்பூன், பப்பாளி சதைப் பகுதி ஒரு ஸ்பூன், கடுகு எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து முகத்தில் பேக் போடவும். காய்ந்தவுடன் கழுவி லேசாக ஆலிவ் எண்ணெய் தடவி வர, நாளடைவில் ரோம வளர்ச்சி குறையும்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் பேக் போட்டு, அரை மணி நேரம் கழித்து உரிக்க, பூனை முடிகள் நீக்கப்படும்.

வாழைப்பழத்துடன் ஓட்ஸ் 2 ஸ்பூன் சேர்த்து பேக் போட்டு, காய்ந்ததும் கழுவி வர... ரோமம் நீங்கும்.

மருத்துவத் தீர்வுகள்!

ஹார்மோன் பிரச்னைகளில் இருந்து மீள, அதிகப் புரதச் சத்துக்கள் நிறைந்த சோயா, ஆளி விதைகள், பெருஞ்சீரகம் போன்றவற்றை தொடர்ந்து உண்டுவரலாம்.

சிலருக்கு உடலில் அளவுக்கு மிக அதிகமான ரோம வளர்ச்சி இருக்கும். சீரியஸான அந்த மெடிக்கல் கண்டிஷனை ஹிர்ஸுடிசம் (hirsutism) என்பார்கள். இதற்கு பார்லர் மற்றும் ஹோம்மேட் தீர்வுகள் மட்டும் போதாது. சரும மருத்துவரிடம் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பிரச்னை அறியப்பட்டு, அதற்கு ஏற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

rlakshmi

Friends's of Penmai
Joined
Apr 7, 2013
Messages
186
Likes
122
Location
rajapalayam
#2
Re: அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய

gud sharing...
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய

Nice homemade suggestions. Thanks for sharing
 

spv

Friends's of Penmai
Joined
Mar 29, 2015
Messages
122
Likes
225
Location
chennai
#4
Re: அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய

படிகக்கல் என்பது pumice stoneனா
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.