அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
நாக பூஜை... நடத்தியது சரிதானா? - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்?

கடலூரில் தன் பெற்றோரின் ஆயுளைக் கூட்ட, நாக பூஜை செய்த மகன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் கடலூரிள்ள கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்துவருகிறார். தன் தந்தைக்கு எண்பது வயது முடிந்ததையொட்டி சதாபிஷேக விழாவைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தார். உற்றார், உறவினர்களை எல்லாம் பூஜைக்கு அழைத்த கையோடு, நாகபூஜை நடத்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்று கருதி நாகபூஜை நடத்தவும் முடிவுசெய்தார். அதிலென்ன தவறிருக்கிறது நாகபூஜை என்பது பொதுவாக அனைவரும் செய்வதுதானே? அவர் நாகத்தின் சிலையையோ, நாகத்தின் உருவத்தையோ வைத்து பூஜை செய்யவில்லை... உண்மையான நாகத்தை வைத்தே பூஜை செய்திருக்கிறார். அந்த பூஜை தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்திலும், வாட்ஸ்அப்பிலும் பரவ ஆரம்பித்தது.





சுந்தரேசனின் பெற்றோர் மாலையும் கழுத்துமாக நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே பூஜை நடத்தப்படுகிறது. புரோகிதருக்கு எதிரே பாம்பாட்டியின் துணையோடு ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது. அடிக்கடி புரோகிதர் இருக்கும் திசையைப் பார்த்து தரையில் கொத்துகிறது. பாம்பாட்டி அதன் கவனத்தைத் திருப்புகிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கிறது பாம்பு, மீண்டும் பாம்பாட்டி இருக்கும் திசையில் தரையில் கொத்துகிறது. இப்படியாக முடிகிறது அந்த வீடியோக் காட்சி. பூஜைக்கு வந்த உற்றார், உறவினர்கள் இதை முழுவதுமாக வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் பரவவிட்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் முதலில் வைரலான இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு முழுவதும் வைரலாகிப் போனது. தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக புரோகிதர் சுந்தரேசனைக் கைது செய்திருக்கிறார்கள்.

`அனுமதியில்லாமல் காட்டு விலங்குகளை எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது’ என்று வனத்துறைச் சட்டம் கூறுகிறது. அதன் காரணமாகத்தான் புரோகிதர் சுந்தரேசன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

முதலில் சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை அவசியம்தானா? சிவாச்சாரியார்களிடம் கேட்டோம்...

``சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை நடத்துவதென்பது எந்தச் சம்பிரதாயத்திலும் இல்லை. `கோபூஜை’, `கஜ பூஜை’ செய்வதுதான் வழக்கம்.
மகாலஷ்மியின் வடிவமாக இருப்பதால், கோபூஜை அவசியம் நடத்தப்பட வேண்டும். கோயிலில் நடத்தினால், கஜபூஜையும் செய்யலாம். நாகதோஷம் உள்ளவர்கள்தாம் நாகபூஜை செய்ய வேண்டும். அதிலும் நிஜ நாகத்தை வைத்து பூஜை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட உருவங்களை வைத்துதான் செய்ய வேண்டும். அதுவுமே இல்லாத பட்சத்தில் அரிசி மாவில் சர்ப்ப உருவத்தைப் பிடித்து பூஜை செய்யலாம். உருவங்கள் என்றால் உண்டியலில் போட்டுவிட வேண்டும். மாவில் செய்தது என்றால், புனிதத் தீர்த்தங்களில் கரைத்துவிடவேண்டும். சர்ப்ப தோஷத்துக்குப் புகழ்பெற்ற காலஹஸ்தியிலேயே நாகத்தை வைத்து பூஜை செய்யப்படுவதில்லை. சங்கரன்கோவிலும் நாகதோஷ தீர்த்தத் தலம்தான். இங்கேயும் அந்த வழக்கமில்லை.

கடலூரில் நடந்த சம்பவம் விளம்பரத்துக்காக, அவருக்குப் புகழ் கிடைக்க வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் அதை வீடியோ எடுத்துப் பரப்பியிருக்கிறார்கள். அது அவர்களுக்கே எதிராக அமைந்துவிட்டது’’ என்கிறார் சிவராஜ பட்டர்.



``இதற்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை. சதாபிஷேகத்துக்கும் சர்ப்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றுதான்’’ என்கிறார் கணேச சிவாச்சார்யார்.

கடலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்

"யானை, பாம்பு போன்ற வன விலங்குகளை இப்படித் துன்புறுத்துவது சட்டப்படிக் குற்றம். வனத்திலிருந்து விலங்குகளை அழைத்துவருவதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும். அதுவும் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். எத்தனை நாள்கள், எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறோம் என்பதை முறையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட வன அலுவலரிடமும் அனுமதி பெறவேண்டும். பாம்பு ஏற்பாடு செய்துகொடுத்த புரோக்கரைத்தான் இப்போது தேடி வருகிறோம். அவரைக் கைது செய்து விசாரித்தால்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும்’’ என்கிறார் ராஜேந்திரன்.


 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் மீண்டும் ஓடியது

1526884138988.png


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி கிரிபிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கிரிபிரகார மண்டபத்தை முற்றிலும் அகற்றியது. இப்பணியின் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிபிரகாரத்தில் இழுக்கப்பட்ட தங்கத்தேர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கிரிபிரகார மண்டபம் அகற்றும் பணி முற்றிலும் முடிந்த நிலையில் நேற்று முதல் தங்கத்தேர் மீண்டும் இழுக்கப்பட்டது.

கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று சுவாமிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.



தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை வலம் வரும் வைபவம் நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் நேற்று மீண்டும் இழுக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் 25-ந்தேதி நடக்கிறது

1526966768868.png

கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

25-ந்தேதி காலை 10.15 மணிக்கு மாலை மாற்றுதலும், 11 மணிக்கு ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29-ந்தேதி காலை 10.45 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து சாமி, அம்மன் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
திருச்சி சமயம்புரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்






திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் யானை தாக்கி பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள மசினி என்ற பெண் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானையை அடக்க முயன்ற பாகன் கஜேந்திரனை (40) மிதித்ததில், பாகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோயிலுக்குள் இருந்த பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் அலறியடித்து ஓடினர். இதனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை அவசர அவசரமாகச் சாத்தப்பட்டது. பின்பு யானையைக் கோயில் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டது.

கோயில் யானை தூக்கி வீசியதில் 8 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இரண்டு பேர் பலத்த காயம் ஏற்பட்டு, கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி






ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரெய்சா மாவட்டத்தின் கத்ரா என்னும் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி குகைக்கோயில். புனிதமான இந்து சமயக் கோயில்களில் இதுவும் ஒன்று. சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத்தலமாக விளங்குகின்றது.

கடந்த புதன்கிழமை திரிகுடா மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியதால், புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் மூத்த அதிகாரி கூறுகையில்,
திரிகுடா மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, பக்தர்கள் செல்லும் பேட்ரி கார் வழியாகவும் காட்டுத் தீ பரவியதால் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் கத்ராவில் முகாமிட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் சில பகுதியில் புகைந்து வருகின்றது.

காட்டுத்தீயை அணைக்கும் பணிகளும், கோயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து யாத்திரை செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
மனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்!

திருச்சி சமயபுரத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில் யானைக்கு மதம் பிடித்து, மூத்த பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக, `ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும்’ என்பார்கள். ஆனால், சமயபுரத்தில் பெண் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. இந்தப் பரபரப்பு காரணமாக, சமயபுரம் கோயிலில் இன்று தரிசனம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.







மதம் பிடித்த யானை, கோயில் வளாகத்துக்குள் சுற்றி வந்ததால் கோயில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இப்போது யானை ஓரிடத்தில் நின்றுகொண்டிருக்கிறது. ஆனால், யாராலும் அதை நெருங்க முடியவில்லை. உதவிப் பாகன்கள் கோயில் யானையை அமைதிப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். யானையை அமைதிப்படுத்த ஜெயா என்ற பெண் யானையும் ஓர் ஆண் யானையும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. மயக்க ஊசி செலுத்தாமல் யானையை அமைதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.


மதம் பிடித்த பெண் யானையின் பெயர் மசினி. அதற்கு வயது ஒன்பது. 2008-ம் ஆண்டு முதுமலை கார்குடி வனப் பகுதியில் பெய்த பெருமழையின் காரணமாகப் பெருக்கெடுத்து வந்த ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட குட்டி இது. முதுமலையில் மசினி அம்மன் கோயிலுக்கு அருகில் மீட்கப்பட்டதால், இந்த யானைக்கு `மசினி’ என்று பெயர் வைத்தார்கள். இந்த யானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்பாமல் தெப்பக்காடு முகாமில் வைத்துப் பராமரித்து வந்தார்கள். 2016-ம் ஆண்டு சமயபுரம் கோயிலிலில் இருந்த மாரியப்பன் என்ற யானைக்கு மதம் பிடித்தது. அதைக் கட்டுப்படுத்த முடியாததால், டாப்சிலிப் முகாமுக்கு அனுப்பிவைத்தார்கள். மாரியப்பன் யானைக்குப் பதிலாக மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு வழங்க உத்தரவிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.





மசினி யானைக்கு மதம் பிடித்தது ஏன்?


``வழக்கமாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. யானைக்கு மதம் பிடிப்பதென்பது, நோய் அல்ல. அது, ஆரோக்கியமான ஆண் யானையின் இயல்புகளில் ஒன்று. மத நீர் ஒழுகும் காலம் என்பது இணை சேரும் காலத்தைக் குறிக்கும். இந்தக் காலம் பத்து நாளிலிருந்து ஒரு மாதம் வரைகூட நீடிக்கும். சமயபுரம் பெண் யானைக்கு ஏற்பட்டிருப்பது மதம் அல்ல. ஒருவித மன அழுத்தம். அதன் வெளிப்பாடுதான் இந்த ஆவேசம். யானைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. அதனால் அது வெயிலில் சுற்றாது. உணவைக்கூட, காலை, மாலை, இரவு வேளைகளில்தான் தேடும். ஆனால், கோயில் யானைகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்கவைக்கப்படுகின்றன. தார்ச் சாலையில் அவற்றை நடக்கவைக்கிறார்கள். யானையின் இயல்பென்பது நடந்துகொண்டே இருப்பது. ஓரிடத்தில் நிற்கவே நிற்காது. கோயில் யானைகள் ஒரே இடத்தில் நிற்கவைக்கப்படுகின்றன. அதனால், யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்பிவைத்தால் மட்டும் போதாது. கோயில் யானைகளைப் பராமரிப்பதில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். வியர்வைச் சுரப்பியே இல்லாத யானை மீது போர்வை போர்த்தி, அலங்காரம் செய்வது தவறு. தொடர்ச்சியாக அது அனுபவிக்கும் வேதனைதான் இப்படி மன அழுத்தமாகவும் கோபமாகவும் வெளிப்படுகிறது" என்கிறார் 'ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின்' தலைவர் காளிதாஸ்.





கோயில்களில் `கோபூஜை’, `கஜபூஜை’ போன்ற பூஜைகளைச் செய்வது மிகவும் விசேஷம். அதன் காரணமாகத்தான் கோயில்களில் பசுக்களும், யானைகளும் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான கோயில்களில் பசுக்கள் வளர்க்கப்பட்டாலும், குறிப்பிடத்தக்க சில கோயில்களில் மட்டுமே யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோயில்களுக்கு யானைகளை நன்கொடையாகத் தரவிரும்பும் நபர்கள், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறுவதுடன், யானைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று வனத்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் யானைகளைப் பெற்று கோயில்களுக்கு வழங்க வேண்டும் என்பது நியதி. ஆனால், யானைகளைப் பராமரிப்பதில் வனத்துறையினர் விதித்திருக்கும் நிபந்தனைகளை மீறுவதால்தான், கோயில் யானைகளுக்கு மதம் பிடிக்கிறது. உரிய முறையில் பராமரித்தால், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்துவிடலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
லாரியில் வந்து பொக்லைன் மூலம் நிறுவப்பட்ட கருப்பண்ணசாமி அரிவாள்!

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மூடுபாறை கருப்பண்ணசாமி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 18 அடி உயர பிரமாண்ட அரிவாளை நேர்த்திக்கடனாகக் கொடுத்த சம்பவம், அப்பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.







திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்துள்ள பழையகோட்டை ஊராட்சிப் பகுதியில் அமைந்திருக்கிறது மூடுபாறை கருப்பண்ணசாமி திருக்கோயில். சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்தக் கோயிலுக்குக் கடந்த வாரம் பக்தர் ஒருவர் 18 அடி உயரத்தில், 7 அடி அகலத்தில் சுமார் 2 டன் அளவு இரும்பினால் செய்யப்பட்ட பிரமாண்ட அரிவாளை நேர்த்திக்கடனாகக் கொடுத்திருந்தார். அந்த அரிவாள் கடந்த மே - 15 ம் தேதி பக்தர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரிவாளின் நடுப்பகுதியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் பூசியிருப்பதைப் போன்று பெயின்ட் அடிக்கப்பட்டு, அரிவாளின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் மணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அரிவாளைத் தாங்கிப்பிடிக்கும் வகையில் அதன் அருகே இரும்புத் தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த அரிவாளை பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் ஊழியர்கள் நட்டு வைத்தபோது, அந்தப் பகுதி மக்கள் அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள் .





அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்திய ஈரோடு பக்தர் சுரேஷிடம் பேசினோம். ``இந்தத் திருக்கோயில் கருப்பண்ணசாமிதான் எங்களுக்குக் குலதெய்வம். கடந்த 5 வருஷங்களுக்கு முன்பு, நானும் என் தம்பி சரவணனும் சேர்ந்து எங்கள் ஊர் மாமரத்துப்பாளையத்தில் சொந்தமாக ஒரு பிரின்டிங் பட்டறையைத் தொடங்கினோம். அடுத்த 3 மாதத்திலேயே நான் ஒரு சாலை விபத்தில் சிக்கிவிட்டேன். உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. உடனடியாக என்னை ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். அங்கிருந்த டாக்டர்கள் என் நிலைமையைப் பார்த்துவிட்டு, உயிர் பிழைப்பது ரொம்பக் கஷ்டம். கோயம்புத்தூரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பாருங்கன்னு சொல்லிட்டாங்க. அதன்பிறகுதான் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போய் சேர்த்தார்கள். உடனே ட்ரீட்மென்டும் ஆரம்பித்துவிட்டார்கள். ஒருபக்கம் நான் எப்படியாவது உயிர் பிழைக்கவேண்டுமென்று என் மனைவி நித்யாவும், தம்பி சரவணனும் கருப்பண்ணசாமிகிட்ட வேண்டிக்கொண்டார்கள். கிட்டத்தட்ட மருத்துவச் செலவே 20 லட்சம் வரை ஆனது. எப்படியோ ஒருவழியா உயிர் பிழைத்துவிட்டாலும், பழைய நிலைமைக்கு வர 1 வருடமாகி விட்டது.





எனவே, என் மனைவியின் வேண்டுதல் பலித்ததற்குக் காரணமான எங்க குல தெய்வம் கருப்பண்ணசாமி கோயிலுக்கு, புதிதாக ஒரு அரிவாள் செய்து, நேர்த்திக்கடனா கொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோயில் நிர்வாகத்திலும் அதற்கு சம்மதம் சொன்னார்கள்.


அப்போதுதான் மதுரைப் பக்கம் கார்த்திக்னு ஒருத்தர் ஏற்கெனவே கின்னஸ் சாதனைக்காக 33 - அடியில் ஓர் அரிவாளை உருவாக்கியிருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. உடனே அவரிடம் பேசி, மதுரை திலகர் திடலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு வெல்டிங் லேத்ல நம்ம அரிவாளுக்கான ஆர்டரைக் கொடுத்தோம். சரியா 4 மாதத்தில் அரிவாளை நல்லபடியா செய்து கொடுத்தார்கள். அங்கே இருந்து லாரியில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தோம். சரியா வைகாசி 1-ம் தேதி சிறப்பு பூஜை நடத்தி, பொங்கல் வைத்து நம்ம அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஊர் மக்கள் எல்லாம் ஆச்சர்யத்தோட வந்து பார்த்தார்கள். தமிழ்நாட்டிலேயே அதிக எடையுள்ள அரிவாள் இதுதான். எங்கள் குலசாமிக்கு என்னால முடிந்த நேர்த்திக்கடன் இது. மனதுக்கு ரொம்பவும் நிம்மதியா இருக்கு சார்!'' என்றார் மகிழ்ச்சியுடன்.


கம்பீரமான கருப்பண்ணசாமிக்கு அரிவாள் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது !
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
கஜுராஹோ

மத்தியப்பிரதேசத்தின் சிறு நகரம் கஜுராஹோ. இந்தியர் களின் மிகச் சிறந்த கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


புகழ்பெற்ற இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோவில், மத்திய கால இந்து மற்றும் சமணக் கோயில்கள் அதிக அளவில் உள்ளன.


கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலங்களுள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.





இது, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


கஜுராஹோ என்ற பெயர், 'கர்ஜுராவாஹகா’ என்ற பெயரிலிருந்து மருவியதாகும். இது சம்ஸ்கிருதச் சொல்லான 'கர்ஜூர்’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதற்குப் பேரீச்சம்பழம் என்று பொருள்.


ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதிற் சுவரால் சூழப்பட்டது.ஒவ்வொரு வாயிலையும் இரு தங்க பேரீச்ச மரங்கள் அலங்கரிக்கின்றன.





கஜுராஹோ கோயில்கள் 950ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரையிலான 200 ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்டவை. சான்டெலா முடியரசர்கள் இவற்றைக் கட்டினார்கள், இங்கு முன்பு 80 இந்துக் கோயில்களுக்கு மேல் இருந்தன. இப்போது 25 கோயில்கள் மட்டுமே ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை சுமார் 20 சதுர கி.மீ.பரப்பளவில் பரவியுள்ளன. இக்கோயில்கள் மணற்பாறைகளால் ஆனவை.





கலையம்சம் நிரம்பிய நுணுக்கமான சிருங்கார சிற்பங்கள் இந்தக் கோயில்களில் காணப்படுகின்றன. மனிதர்களால் இத்தனை நுணுக்க மாக வடிக்கமுடியுமா என்கிற பிரமிப்பை இந்தச் சிற்பங்கள் ஏற்படுத்துகின்றன.


இந்த ஸ்தலத்திலுள்ள கோயில்கள் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி கோயில்கள் என மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன.





மேற்குத் தொகுதியில் முழுக்க முழுக்க இந்து தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன. இவற்றில், கண்டரிய மஹாதேவா கோயில் மிகப் பெரிய, கம்பீரமான கோயிலாகும். கஜுராஹோ கிழக்குத்தொகுதி கோயில்களில் இந்துக் கோயில் களும் ஜைனக்கோயில்களும் அடங்கியுள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை நாள்முழுவதும் அடைக்கப்பட்டது இதுவே முதல்முறை!






திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று கோயில் யானை மசினிக்கு திடீரென மதம் பிடித்து பாகனை மிதித்துக் கொன்றது.

பாகனை யானை மிதித்துக் கொன்றதால், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் திருக்கோயிலின் மற்ற கோபுர வாயில்கள் வழியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக கோயில் நடை அடைக்கப்பட்டடு தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.

திருக்கோயிலுக்குள் இறப்பு நிகழ்ந்திருப்பதால் ஆகம விதிகளின்படி புண்ணியதானம், பரிகார ஹோம சாந்திகள் நடத்தப்பட்டு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.

பாகனை கொன்ற அதிர்ச்சியில் இருந்து பக்தர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாததால், கோயிலுக்குள் பக்தர்கள் கூட்டம் இன்றி கோயில் விரிச்சோடி இருந்து வருகின்றது.

இதுவரை சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றுக்காக குறிப்பிட்ட நேரத்தில் அம்மன் சன்னதி மூடப்பட்டிருக்கும். ஆனால், கோயிலுக்குள் இறப்பு நிகழ்ந்திருப்பதால், பூஜைகளும் பரிகாரங்களும் செய்ய வேண்டியிருப்பதால் கோயில் நடை நாள் முழுவதும் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று கோயில் குருக்கள் கூறியுள்ளார்.

கோயில் யானை மசினியை பரிசோதிக்க கோவையில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
பெரியவா ரேடியோ: முப்பொழுதும் மஹா பெரியவாளுடன்..!






மஹா பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷத்தில் அவருடைய பக்தர்கள் அவருடனேயே மானசீகமாக அந்த நாள் முழுவதையும் செலவழிப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு. எல்லா நேரத்திலும் ஸ்மார்ட் ஃபோனுடன் பொழுதுபோக்கும் நமக்கு அதில் அரூபமாக பெரியவாளும் நம்முடனேயே இருந்தால் அதைவிட பெரும் பாக்கியம் இருக்கமுடியுமா? அதற்கான ஒரு முயற்சிதான் பெரியவா ரேடியோ.

அனுஷம் அன்றுதான் 24x7 பெரியவா ரேடியோ கேட்கமுடியுமா? இல்லை, எப்போது வேண்டுமானாலும் ட்யூன் செய்யலாம். இதை எழுதும்போது பெரியவா ரேடியோவை ஆன் செய்தபோது... ‘‘பால் வடியும் முகம்.. நினைந்து.. நினைந்து.. என்னுள்ளம்.. பரவசம் மிக ஆகுதே...’’ என்று பித்துக்குளி முருகதாஸ் பாடிக்கொண்டிருந்தார். அடுத்தது கம்பீரமான குரலில் யாரோ ஒருவரின் பஜன் ஆரம்பித்தது. இனி ரேடியோவை அணைக்க முடியுமா?

கூகுள் ப்ளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் Periyava Radio என்று தேடினால் இந்த ஆப்பை நமது மொபைலில் தரவிறக்கிக்கொள்ளலாம். ரேடியோவில் ஆதித்ய ஹ்ருதயம், ஆதிசங்கரரின் கதைகள், மஹா பெரியாவா பாடல்கள், எம்.எஸ். அம்மாவின் பாடல்கள், மஹா பெரியவா சரித்திரம், பி. ஸ்வாமிநாதனின் பெரியவா மஹிமை என்று பல நிகழ்ச்சிகள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, மஹா பெரியவாளை அவரது குரல் மூலமாகவும் ஒலியலைகளாகவும் தரிசனம் செய்யலாம். எப்போதெல்லாம் பக்தி சார்ஜ் ஏற்றிக்கொள்ள வேண்டுமோ அப்போது உடனே நமது பாக்கெட்டில் கிடக்கும் பெரியவா ரேடியோவை ட்யூன் செய்தால் போதும்.

பெரியவாளின் வீடியோக்கள் பல தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. தெய்வத்தின் குரல் புத்தகத்திலிருந்து கணபதி, அத்வைதம், முருகன், ராமர், சிவன் என்று தலைப்பிட்டு சில தேர்ந்தெடுத்த அத்தியாயங்களை, பக்தி ததும்பும் ஒரு பெண் குரலில் கேட்கலாம். ஜெயேந்திர பெரியவா மற்றும் பால பெரியவா ஆகியோரின் உபன்யாசங்களும் ஒலிவடிவில் கேட்கக் கிடைக்கின்றன.


அனுஷ்டானங்கள் எவ்வளவு தூரம் ஸ்ரத்தையாகக் கடைப்பிடிக்கிறோம் என்பதற்கு ஒரு பகுதி இருக்கிறது. தினமும் நாம் செய்யும் காயத்ரி மந்த்ர ஜபத்தின் எண்ணிக்கைகளை பதிந்து வைக்கலாம். பதிந்ததை எவ்வளவு என்று மீண்டும் திறந்து பார்க்கலாம். நாம் இதுவரை செய்த காயத்ரி மந்திரக் கணக்கைப் பார்த்ததும் நமக்குள் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. தெய்வத்தின் சன்னிதியில் ஏற்படும் நம்பிக்கை கிடைக்கிறது.

மொபைலுக்கு வாழ்வை அர்ப்பணித்த நம் இளைய சமுதாயத்துக்கு அதன் மூலமாகவே நமது சமுதாய பாரம்பரிய வேர்களைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒரு உபயோகமான சாதனம் “பெரியவா ரேடியோ”. இணைய ஸ்டோர்களில் தேடிக் கண்டடைவோம், கலியுக தெய்வத்தின் அருட்கடாக்ஷத்தை! அனுஷத்தை அன்று முழுவதும் பெரியவா ரேடியோவில் கொண்டாடுவோம்.

ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர:
பெரியவா சரணம்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.