அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
சமயபுரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

1529734146095.png


சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மூலவர் அங்காளம்மனுக்கும், மாரியம்மன் கோவிலின் குருவாயூரப்ப குருக்கள் தலைமையில் அரவிந்த் குருக்கள் உள்பட 23 பேர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் சமயபுரம் மற்றும் திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூஜகர் சிவகுமார், சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அணையா தீபம்

1529734240720.png

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கற்பூரம், விளக்கேற்ற வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு பதில் அணையா தீபம் ஏற்றி பாதுகாக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி சன்னதி கொடிமரம் அருகில், அம்மன் சன்னதி கொடிமரம் அருகில், கால பைரவர் சன்னதி, துர்க்கையம்மன் கோவில், சோமாசிபாடி முருகர் கோவில், அடிஅண்ணாமலை கோவில் ஆகிய 6 இடங்களில் அணையா தீபம் வைக்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சினிமா நடிகர் அம்சவர்தன் ரூ.3 லட்சம் மதிப்பில் 6 அணையா தீபங்களை நன்கொடையாக கோவிலுக்கு வழங்கி, அதனை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அப்போது கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

இந்த அணையா தீபத்தில் பக்தர்கள் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் நிறையும் வகையில் கலன்கள் வைத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதில் கருகாத திரி போடப்பட்டு உள்ளது. தீபம் அணையாமல் இருக்க காற்று சென்று வர துவாரம் அமைக்கப்பட்டு உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாமி விழாவினை முன்னிட்டு செப்பு தேரோட்டம் விமரிசையாக நடந்தேறியது.

விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று பெரியாழ்வார் சன்னதியில் இருந்து புறப்பட்டு செப்புதேருக்கு எழுந்தருளிய பெரியாழ்வாருக்கு பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.
தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா இன்று தொடங்குகிறது

1529905651152.png

இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் காரைக்கால் அம்மையார். இவர் காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீ பரமதத்தர் செட்டியாருக்கும், ஸ்ரீ புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறகிறது.

27-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த சமயத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
கோவிலில் ஆகம விதி மீறலா?
ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு


'ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை' என, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


மே மாதம், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் வந்து சென்றனர். தொடர்ந்து, மே, 24ல், ரெங்கநாதர் கோவில் மூலஸ்தானத்துக்குள், செருப்பு வீசியதாக, ஒருவர் பிடிபட்டார்.


பக்தர்கள் அதிர்ச்சி

அடுத்து, 26ம் தேதி, வசந்த உற்சவத்தின் போது, நம்பெருமாள் எழுந்தருளும் வெட்டிவேர் பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் ஆகம விதிகள் மீறப்படுவதாக, குற்றம் சாட்டிய

ஸ்ரீரங்கம் ஆலய மீட்புக் குழுவினர், ஸ்ரீரங்கத்தில், கண்டன பொதுக் கூட்டம் நடத்தினர்.


கூட்டத்தில் பங்கேற்ற, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும், பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா ஆகி யோர்,'ஆகம விதிகளுக்கு முரணாக செயல்படும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோவிலை விட்டு வெளியேற வேண்டும்' என, வலியுறுத்தினர்.


கடந்த, 22ம் தேதி, ஸ்ரீரங்கத்துக்கு வந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரெங்கநாதர் கோவில் முன், பூர்ண கும்ப மரியாதை அளித்து, வரவேற்பு அளித்தனர். அப்போது, அர்ச்சகர்கள் நெற்றியில் இட்ட சந்தனத்தை, உடனடியாக ஸ்டாலின், சால்வையால் அழித்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனால், கோவிலில் மீண்டும் ஆகம விதிகள் மீறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


இது குறித்து, தலைமை அர்ச்சகர் முரளிதரபட்டர் கூறியதாவது:ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதி கள் மீறப்படுவதாக சிலர் குற்றம் சாட்டு கின்றனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றிய கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்த குற்றசாட்டை மையப் படுத்தி, பொதுக்கூட்டமும் நடத்தி உள்ளனர்.

குற்றச்சாட்டில், எவ்வித உண்மையும் கிடை யாது. கோவிலில் ஆகம விதிகள் மீறப்பட வில்லை. மீறப்படுவதாக கூறுபவர்கள் அதை நிரூபிக்கட்டும்.


கோவில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறை வெளியேற வேண்டும், என கூறுபவர்களுக்கும் இடையே பிரச்னைகள் இருக்கலாம். அதை வைத்து, ஆகம விதிகள் மீறப்படுவதாக கூறு வது தவறு. இதனால், கைங்கர்யம் செய்பவர் கள் மன வேதனை அடைகின்றனர்.


இது பற்றி, அறநிலையத்துறை ஆணையரி டமும், நிர்வாகக் குழு தலைவரிடமும் தெரி விக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது காரைக்கால் மாங்கனித் திருவிழா: இன்று திருக்கல்யாணம்

மாப்பிள்ளை கோலத்தில் வீற்றிருக்கும் பரமதத்தர்.

காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, அம்மையார் கோயிலில் பரமதத்தர் - புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.

காரைக்காலில் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை நிலையை விளக்கி, காரைக்கால் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா 4 நாள்கள் நடத்தப்படுகின்றன.

அம்மையாருக்கு நடக்கும் திருமணம், அம்மையாரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் வீட்டுக்கு அமுது உண்ண செல்வது, தமது மனைவி இறைவனுக்கு ஒப்பானவர் எனக் கருதி கணவர் (பரமதத்தர்) பிரிந்து செல்லுதல், அம்மையாரின் கணவருக்கு மறுமணம் நடப்பது, கைலாயத்தை அம்மையார் தலைக்கீழாக சென்றடைவது, அம்மையாருக்கு இறைவனும் இறைவியும் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடத்தப்படுகிறது.
இதில், புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிச்சாண்டவர் வீதியுலாவின்போது மாங்கனி இறைப்பு நிகழ்வு புதன்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் திங்கள்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்துக்காக பரமதத்தர், ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக இரவு அம்மையார் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

பகல் 11 மணியளவில் புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாண நிகழ்ச்சி அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. புதுமணத் தம்பதிகள், சுமங்கலிப் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வர். மாலை கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளைச்சாற்று புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு பரமதத்தர் - புனிதவதியார் முத்து சிவிகையில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
சிவன் கோவில்களில் முக்கனி அபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது

1529992728712.png


தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற 28-ந் தேதி(வியாழக் கிழமை) சிவபெருமானுக்கு முக்கனிகளான மா, பலா, வாழையால் பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானால் பல திருவிளையாடல் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூலவரான சொக்கநாத பெருமானுக்கு உச்சிகால வேளையில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக நாளை அருணகிரி நாதர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று இரவு ஆவணி மூல வீதிகளில் அருணகிரி நாதர் புறப்பாடு நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி நிறைவடைகிறது, 7-ம் நாளான நேற்றும் 100-கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழா காலங்களில் தங்க தேர் உலா, உபயதிருக்கல்யாணம் போன்றவை நடைபெறாது.

ஆனி பவுர்ணமி அன்று மதுரை இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரர், திருவாப்புடையார், தென் திருவாலவாய, பழைய சொக்கநாதர் ஆகிய கோவில்களிலும், திருவாதவூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள சிவன் கோவில்களில் உச்சி காலத்தில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்

1530082000674.png

மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை ஏராளமான பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
அமர்நாத் யாத்திரை தொடக்கம்: 3,500 பேர் அடங்கிய இரண்டாம் குழு புறப்பட்டது

அமர்நாத் யாத்திரை வழித்தடமான பால்டால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் அருகே கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயில் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை வழிபட பயணம் மேற்கொண்டனர். அடுத்து வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள அமர்நாத் கோயிலில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்துக்கு இயற்கையாகவே பனி லிங்கம் தோன்றும். அதனை தரிசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவதுண்டு.
கடந்த 2016-இல் 48 நாள்கள் பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அந்த கால அளவு 40 நாள்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை மற்றும் குகைக் கோயில் தரிசனம் மொத்தம் 60 நாள்களுக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான யாத்திரையை மேற்கொள்ள சுமார் 2 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பஹல்காம், பால்டால் ஆகிய இருவேறு வழித்தடங்களின் மூலமாக அமர்நாத் யாத்ரீகர்கள், பனி லிங்கத்தைத் தரிசிக்கச் செல்ல 6,429 பேர் அடங்கிய இரு குழுக்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன. யாத்திரையை ஒட்டி அந்த இரு வழித்தடங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸார் மட்டுமன்றி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உள்பட துணை ராணுவப் படையினர் பலரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 592 பெண்கள் உள்பட 3,500 பேர் அடங்கிய இரண்டாவது குழு அமர்நாத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. அதற்கு ஒரு நாள் முன்னதாக 3,000 பேர் அடங்கிய முதல் குழு யாத்திரையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடும் மழை மற்றும் நிலச் சரிவு காரணமாக யாத்திரை சற்று தாமதமானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் போக்குவரத்து சீர்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் யாத்திரை தொடங்கியது.

அடுத்து வரும் நாள்களில் பனிலிங்கத்தை தரிசிக்க வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உறுதி: இதனிடையே, அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் என்.என்.வோரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இதுவரை இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், யாத்ரீகர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாகினர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அமர்நாத் யாத்திரைக் குழுவினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேக விழா

1530269901879.png

பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன்வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி முத்துக்குமாரசாமி மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், யாகம் நடைபெற்றது.

இதையடுத்து நடந்த சாயரட்சை பூஜையில் சிவன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு கலச அபிஷேகம் மற்றும் 16 வகை அபிஷேகமும், அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

அதன் பின்னர் மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் ஆகியோருக்கு பரிவட்டமும், கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.