அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#81
வரலாற்றில் முதன்முறையாக 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி
முஹம்மது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து லட்சம் பேர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து கடந்த (2017) ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக கடந்த 16-1-2018 அன்று அறிவிப்பு வெளியானது.இதுதொடர்பாக, கடந்த 27-2-2018 அன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம்பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

கண்ணியமான முறையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றும் குறிப்பிட்ட அவர், ஹஜ் மானியத்துக்காக செலவழிக்கப்படும் தொகை இனி சிறுபான்மையினத்தவர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி, நமது நாட்டின் சுதந்திரத்துக்கு பின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 25 முஸ்லிம்கள் இந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து இரண்டு யாத்ரீகர்கள் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் செய்யவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 47 சதவீதம் பெண்கள். இதுதவிர தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக 47 ஆயிரத்து 23 பேர் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதன்முறையாக ஆண்களின் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் யாத்திரை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அகமதாபாத் நகரில் இருந்து 6700 யாத்ரீகர்கள், அவுரங்காபாத் நகரில் இருந்து 350 யாத்ரீகர்கள், பெங்களூரு நகரில் இருந்து 5550 யாத்ரீகர்கள், போபால் நகரில் இருந்து 254 யாத்ரீகர்கள், கொச்சி நகரில் இருந்து 11,700 யாத்ரீகர்கள், சென்னையில் இருந்து 4000 யாத்ரீகர்கள், டெல்லியில் இருந்து 19,000 யாத்ரீகர்கள், கயா நகரில் இருந்து 5140 யாத்ரீகர்கள், கோவாவில் இருந்து 450 யாத்ரீகர்கள், கவுகாத்தியில் இருந்து 2950 யாத்ரீகர்கள், ஐதராபாத்தில் இருந்து 7600 யாத்ரீகர்கள், ஜெய்ப்பூரில் இருந்து 5500 யாத்ரீகர்கள், கொல்கத்தாவில் இருந்து 11,610 யாத்ரீகர்கள், லக்னோவில் இருந்து 14,500 யாத்ரீகர்கள், மங்களூருவில் இருந்து 430 யாத்ரீகர்கள், மும்பையில் இருந்து 14,200 யாத்ரீகர்கள், நாக்பூரில் இருந்து 2800 யாத்ரீகர்கள், ராஞ்சியில் இருந்து 2100 யாத்ரீகர்கள், ஸ்ரீநகரில் இருந்து 8950 யாத்ரீகர்கள் மற்றும் வாரணாசி நகரில் இருந்து 3250 யாத்ரீகர்கள் புறப்பட்டு செல்வார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் அவர் வெளியிட்டார்.

ஆண்களின் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை செல்ல விண்ணப்பித்திருந்த 1308 பெண்களின் விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் சேர்க்கப்படாமல் நேரடியாக அனுமதி அளிக்கப்பட்டதையும் முக்தார் அப்பாஸ் நக்வி சுட்டிக்காட்டினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#82
ஸ்ரீ விஜயகணபதி கோயிலில் கும்பாபிஷேகம்

|ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ விஜயகணபதி ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ விஜயகணபதி ஆலையம் உள்ளது. இக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையோடு தொடங்கியது. இதைத் தொடர்ந்து நவக்கிரக பூஜை, கோபூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, சம்பத் சிவாச்சாரியார் தலைமையில், கல்லூரி நிர்வாகக் குழுமத்தின் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கல்லூரி அறக்கட்டளையின் செயலர் சிவானந்தம், பொருளாளர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் கணேஷ் வைத்தியநாதன், கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சற்குருநாதன், வைத்தியநாதன் ஆகியோரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் இசைக்கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#83
கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்

|கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள 1600 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திரப்பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், நிகழாண்டுக்கான சித்திரைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்கி வரும் மே 6ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இவ்விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்பு, பவளக்கால் சப்பரத்தில் உற்சவர் எழுந்தருளி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, பகல் இரவு ஆகிய இருவேளைகளிலும் அடுத்தடுத்த நாள்களில் உற்சவர், தாயார் சுந்தராம்பிகை அம்மன் ஆகியோர் விசேஷ வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கவுள்ளனர்.

அதன்படி, பகல் வேளையில் சூரியப் பிரபை, பூத வாகனம், நாக வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், மகாரதம் (ஏப்.28), ஆள்மேல் பல்லக்கு, நடராஜர் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதுபோல், இரவு வேளையில் சிம்ம வாகனம், சந்திரப் பிரபை, திருக்கயிலை காட்சி, இடப வாகனம், பிரசித்தி பெற்ற திருக்கல்யாண உற்சவம் (ஏப்.26), யானை வாகனம், குதிரை வாகனம், முருக்கடி சேவை, பிரசித்தி பெற்ற வெள்ளி ரதம், புண்ணியகோட்டி விமானம், பஞ்சமூர்த்தி உற்சவம், தங்க இடப வாகனம், 63 நாயன்மார்கள் வீதியுலா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெறவுள்ளன.

சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கோயில் திருப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#84
ராமானுஜருக்கு கந்தப்பொடி வசந்தம்

|ராமானுஜரின் 1001ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கந்தப்பொடி வசந்தத்துடன் நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் கந்தப்பொடியைத் தூவி கொண்டாடினர்.

வைணவ குருவான ராமானுஜர், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். அவரது 1001ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா, இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயிலில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து சாத்துமுறை திருவிழா கடந்த 21ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ராமானுஜரை வழிபட்டுச் சென்றனர்.

இவ்விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, சாத்துமுறை தீர்த்தம், கந்தப்பொடி வசந்தம், சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதில் ராமானுஜர் மீது பக்தர்கள் கந்தப்பொடி தூவியதோடு, தங்கள் மீதும் கந்தப்பொடி எனும் மஞ்சள் பொடியைத் தூவி கொண்டாடினர்.

முன்னதாக 108 திவ்யதேசங்களின் சார்பாக ராமானுஜருக்கு திருமாலை, திருப்பரிவட்டம் வழங்கி மேள தாளத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராமானுஜர்ஆண்டாள் சன்னதியை சென்றடைந்தார்.
இரவு ஆண்டாள் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பாடும், நள்ளிரவு ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதாரத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதன் பின் திங்கள்கிழமை முதல் வரும் 26ஆம் தேதி வரை தெப்பத் திருவிழா நடைபெறும்.

வரும் 29இல் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின் 7ஆம் நாளான மே மாதம் 5ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#85
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமம்

|வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாள் மற்றும் வளர்பிறை அஷ்டமியையொட்டி, திங்கள்கிழமை வாஸ்து பகவான் சந்நிதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், கால பைரவருக்கு சிறப்பு ஹோமம்- மகா அபிஷேகமும் நடைபெற்றன.
அப்போது தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும், கால பைரவர் வழிபாடும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்திப் பொருள்களை
ஸ்ரீ தன்வந்திரி பீடாதிபதி முரளிதர சுவாமிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#86
நெல்லையப்பர் கோவில் யாகசாலை பூஜை இன்று தொடக்கம்

1524554948612.png

நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகிறது.

இதையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் ஹோம பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 7 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட ஹோம பூஜைகளும் நடந்தன. இரவு யாகசாலையில் பயன்படுத்துவதற்கு வெளி தெப்பக்குளம் அருகில் உள்ள அங்கூர விநாயகர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. யானை முன்னே செல்ல சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக அருகில் உள்ள தெப்பக்குளத்துக்கு சென்றனர். அங்கு பிடிமண்ணை சேகரித்து எடுத்து கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 3 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜை தொடங்கி, 7.15 மணிக்கு கடம் எழுந்தருளுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 9.30 மணி முதல் 10.25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுதவிர தேரடி திடலில் தினமும் மாலை 6 மணி முதல் 9 மணிவரை பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு வாசுகி மனோகரின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இன்று 24-ந்தேதி மஹதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், நாளை 25-ந்தேதி சுகிசிவம் பக்தி சொற்பொழிவு, 26-ந்தேதி சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசை கச்சேரி, 27-ந்தேதி திருச்செங்கோடு ஜெயக்குமார் குழுவினரின் சாக்சாபோன் இசை கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#87
அர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்

இந்துமத வழிபாட்டில் சில சடங்குகளும், வழிபாடுகளும் அர்த்தம் பொதிந்தவைகளாக உள்ளன. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கோவில் மணிகள்

ஆலயத்திற்குச் சென்றால் அங்கு ஒலிக்கும் மணியோசை பிரதானமானது. கோவில் மணிகள், சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், துத்தநாகம், இரும்பு, காப்பர், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை. கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு முறை மணியை அசைக்கும் போது எழும் கூர்மையான சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்குமாம். இந்த ஒலியை உற்றுக் கேட்டால், பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்ற ஒலியை எழுப்பி அடங்குவதை உணரலாம்.

அரச மரம்

சுயநலமாகவோ, பொருளாதார ரீதியிலோ பார்த்தால் அரசமரத்தால் பெரிய பயன் ஒன்றும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த மரம் இந்துக்களால் வழிபடப்படும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மரம் மனிதர்களின் உயிர்க்காற்றான ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதே இதற்குக் காரணம். இரவு நேரத்திலும் கூட ஆக்சிஜனை வெளியிடும் ஒருசில மரங்களில் அரசமரமும் ஒன்று. பெரும்பாலும் விநாயகரின் உருவங்கள், அரசமரத்தின் அடியில்தான் இருக்கும்.

பொட்டு

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது வழக்கமானதே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது, இந்த சக்கரம் தானாக செயல்படத் தொடங்கி விடும். இது உடலில் உள்ள ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும் என்கிறார்கள்.கோவில் வலம்

உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையில், சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அப்படி ஒரு இடமாக ஆலயங்கள் திகழ்கிறது. வெறும் பாதத்தில் மேடு பள்ளமாக கற்களைப் பதித்திருக்கும் வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும். வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் ேபாது உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புண்ணியத்துடன் கூடிய ஆரோக்கியம். நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களில் இணைந்துள்ளன. கடற்கரை மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள். புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் வளரும்.

துளசி வழிபாடு

பலரும் தங்களது வீடுகளில் துளசி செடியுடன் கூடிய மாடம் அமைத்திருப்பார்கள். அதனை சுற்றி வந்து தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உருவாக்கினார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#88
நெல்லையப்பர் கோயிலில் 96 வகை திரவியங்களுடன் யாகசாலை பூஜை: நாளை மஹா கும்பாபிஷேகம்

|திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 27) நடைபெறவுள்ளது. இதையொட்டி, 96 வகையான திரவியங்களுடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிவனடியாளர்கள், பக்தர்கள் திருநெல்வேலியில் குவிந்துள்ளனர்.
நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, 21ஆம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

நின்றசீர்நெடுமாறன் கலையரங்கம் அருகே வெளிபிரகாரத்தில் 87 யாககுண்டங்கள், 49 வகை வேதிகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை க் கூடத்தில் முதல்கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

96 வகை திரவியங்கள்: புதன்கிழமை காலை விசேஷ சந்தி என்ற பூஜையும், தொடர்ந்து, 2 வது கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறப்பம்சமாக 96 வகை திரவியங்கள், மூலிகைகளை வைத்து யாகசாலைபூஜை நடைபெற்றது. பின்னர், மந்திர புஷ்பம் எனப்படும் ரிக், சுக்ல யஜூர், கிருஷ்ண யஜூர், ஜெய்மினி சாம வேதம், அதர்வண வேதம், இதிகாச புராணங்கள், சிவாகமங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறை, ராகம், தாளம் போன்ற உபசாரங்கள் செய்தல் நடைபெற்றது.

மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜை, பிரதான மூர்த்திகளுக்கு மூலிகைப் பொருள்களை இடித்து மருந்து சாத்துதல் வைபவம், சுவாமி பீடத்திற்கும், விக்ரகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜையில் சர்வசாதகம் தூத்துக்குடி ஆலால சுந்தர வேத பாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், கோயில் அர்ச்சகர் பிச்சையா பட்டர் தலைமையில் சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். பழனி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், கபிலர் மலை செல்வ கபில சிவாச்சார்யார், சர்வ போதகம் காஞ்சிபுரம் ராஜப்பா சிவாச்சார்யார், தாழையூத்து கணேசபட்டர், சிவகாசி விக்னேஷ் பட்டர், நெல்லையப்பர் கோயில் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

வியாழக்கிழமை (ஏப். 26) காலை 8 மணிக்கு 4ஆம் காலயாகசாலை பூஜை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப்.27) காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்: நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள் ராஜகோபுரங்கள், தெற்கு, மேற்கு, வடக்கு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் விமானங்கள், கோயில் உள்புறங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு யாகசாலை பூஜைகளைப் பார்க்க குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
மாலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவாச்சாரியார்கள், உழவாரப்பணிக் குழுவினர் புதன்கிழமை இரவு முதலே குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் திருநெல்வேலி நகரம், சந்திப்பு பகுதிகளில் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#89
அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ல் தொடக்கம்

|தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமர்நாத் புனிதஸ்தலம் செல்வதற்கான யாத்திரை ஜூன் 28-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த யாத்திரையானது 60 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. குறிப்பாக, ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடெங்கிலும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஜம்மு-காஷ்மீர் வங்கி ஆகியவற்றின் கிளைகளில் யாத்திரைக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

அமர்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்வதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.27) தொடங்குகிறது.

இவை தவிர ஜம்முவில் உள்ள வைஷ்ணவி கோவில், சரஸ்வதி கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் யாத்திரை நடைபெறும் காலத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அமர்நாத் கோவில் அதிகாரி தெரிவித்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#90
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கருட சேவை

1524809658424.png

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினசரி தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சூரிய பிரபை, யாளி, தங்க விமானம் என்று வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி சாமி வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து 5-வது நாளான நேற்று முன்தினம் காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, நாச்சியார் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

பின்னர் இரவில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் கருட வாகனத்தில் எழுந்தருளிய தேவநாதசாமி நேற்று காலை வரையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் மஞ்சள் உற்சவமும், வசந்த உற்சவமும் நடைபெற்றது. இரவில் யானை வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) வெண்ணை தாழி உற்சவமும், இரவில் தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) காலை பேட்டை உற்சவம் நடந்து இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.