அப்பா என் அன்பு அப்பா..

Preethi4u

Friends's of Penmai
Joined
Jun 18, 2012
Messages
319
Likes
765
Location
Sunshine state
#1
அப்பா என் அன்பு அப்பா


அப்பா உங்களின் நெஞ்சின் மீது ஏறி விளையாடியதில்லை,முதுகில் உப்பு மூட்டை ஏறியதில்லை,உங்கள் தோளில் சவாரி போனதில்லை,உங்களின் கண் வழியே இந்த உலகத்தை நீங்கள் எனக்கு காட்டியதில்லை. ஒரு சராசரி இந்தியனாக பெண் குழந்தைகளான எங்களை தூரவே நிறுத்தினீர்கள்,கண்டிப்பும் கறாறுமாகவே வளர்த்தீர்கள்.

"சொல்லிக்கொடுத்ததில்லை,
திட்டியதும் இல்லை,
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை,
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு"உங்களின் அதீத கண்டிப்பு,அன்பை வெளிபடுத்தாத தன்மை என்னை எப்போதும் உங்களை விட்டு எட்டவே நிறுத்தியது.வாழ்க்கையின் அதி முக்கிய முடிவுகள் அனைத்தையும் எனக்கென முடிவெடுக்கும் வயது வந்ததும் உங்களை உதாசீனபடுத்தி விட்டு நானே சுயமாக படிப்பு,வேலை,வெளிநாடு,கல்யாணம் என அனைத்து முடிவுகளையும் எடுத்து உங்களை காயபடுத்தினேன்.


எனக்கு உங்கள் மீது சிறுதும் அன்பில்லை என அனைவரும் நினைத்தது போல தான் நானும் நினைத்திருந்தேன் பா, ஆனால் இவர் "உனக்கு உன் அப்பாவை பிடிக்காதுனு சொல்லிட்டு எப்பவும் அவர் புராணமே பாடிகிட்டு இருக்க" உங்க அப்பாவை ஏன் பிடிக்காது? அவர் அதிகம் பேசுவதில்லை,அன்பை காட்டுவதில்லை,எங்கு போனாலும் உன்னுடனே வருகிறார்,அமைதியாக ஒரு வார்த்தையில் உன் வாழ்க்கை முடிவுகளை எடுக்கிறார்" இது தானே ?? ஆனால் இதே காரணங்களுக்காக தானே நீ என்னை நேசிப்பதாக கூறினாய்;நேசிக்கிறாய் என பொட்டிலடிதார் போல கூறிய பொது தான் பா நான் உங்களை எவ்வளவு நேசிக்கறேன் என என் மரமண்டைக்கு விளங்கியது.


உங்களை பிடிக்கவில்லை எனில் எப்படி உங்களை போலவெ எப்படி ஒரு கணவரை தேர்தெடுத்து இருபேன்.


என் தவறை உணர்ந்ததும் உங்கள் மீது பாசம் காட்ட ஆரம்பிதேன் ஆனால் உங்களின் உண்மையான முகம் நான் தாயானதும் தான் நான் உணர்ந்தேன் பா, எனக்கு கிடைக்காத பாக்கியம் அனைத்தையும் என் மகளுக்கு கொடுத்தீர்கள். உங்களை அவள் ஒரு பொம்மை,வரம் கொடுக்கும் சாமி, எங்களை மிரட்ட உதவும் பூச்சாண்டியாக தான் பார்த்தாள் ஆனால் எனக்கு அன்பின் முழு உருவமாக தெரிந்திர்கள் நீங்கள்.


அதிகம் பேசியதில்லை அப்பா நீங்கள் ஆனால் ஒரு பார்வையிலும், புன்னகையாலும் உங்களின் அன்பை,பாதுகாப்பை எப்போதும் உணர்த்தினிர்கள் அப்பா.நான் இன்று வாழும் வாழ்க்கை,நல்ல பேர்,உதவும் குணம் என பலவும் நீங்கள் கற்று கொடுத்தது அப்பா ஆனால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவே இல்லையே அப்பா. நான் அந்த பேச்சை எடுக்கும் போதெல்லாம் ஒரு சிரிப்பின் மூலம் மழுப்பி என்னை மன்னிப்பு கேட்க்கும் நிலைக்கும் நீங்கள் தள்ளியதில்லை. அப்பா இதற்கு முன் ஜென்மத்தில் என் அப்பா எப்படி இருந்து இருப்பார் என தெரியவில்லை ஆனால் இனி வரும் ஜென்மங்கள் அனைத்திலும் நான் உங்களின் மகளாகவே பிறக்க வேண்டும்.மறவாமல் உங்கள் சொல் பேச்சு கேட்பேன் அப்பா.:rolleyes:


எல்லா பெண்களை போலவும் நீங்கள் தான் அப்பா என் நிரந்தர ஹீரோ,இந்த தலைமுறையில் பிறந்திருந்தால் உங்களின் கை பிடித்து "லவ் யு டாட் " என கண்டிப்பாக கூறி இருப்பேன் பா.


எப்படி எப்படி எல்லாமோ தன்
பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கை அழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா.

முன்னால் சொன்னதில்லை,
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்,

என்னைப்பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை.

அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை,
உடனேயே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பாவின் முகம் வாடும்போது.

உனது தந்தை எவ்வளவு அற்புதமானவராக
இருக்கிறார் தெரியுமா என்று,
நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது
தான் தெரிந்தது,
எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை
எனக்கு மட்டுமென.

கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .

எத்தனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்,
அப்பாவைப் போல் யார் இருக்க இயலும்?.

சொல்லிக்கொடுத்ததில்லை,
திட்டியதும் இல்லை,
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை,
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.

வெளிப்படையாக நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் பாசத்தை.

அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்.
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்.


லவ் யு அப்பா. உலகின் தலை சிறந்த அப்பாவிற்கு என் தந்தையர் தின வாழ்த்துகள்.


உங்களின் அன்பு மகள்

கவிதை: இணையம்
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,393
Location
chennai
#2
Preethi..

superb ... no words to say....
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#6
Dedicated to a Dad by a Daughter
14[SUP]th[/SUP] of October, 2011.
Grand Finale of Pantaloons Femina Miss India (UP)
Moments to go before the 5 finalists are called out. The 12 contestants wait with baited breath as the compere announces Top 5
Contestant No.2
Contestant No.3
Contestant No.4
Contestant No.5
Contestant No.12
The 5 finalists breathe a sigh of relief but it’s now time for the deciding question.
One by one the esteemed judges put forward there tricky questions.
From why do you want to win this pageant to who would you like to go on a date with? From choosing between modelling and acting to deciding between success and riches, the finalists were put through all sorts of tests.
In between all these questions and answers, there was one that won a thousand hearts that evening.
“If it were the last day of your life, who would you spend it with, and why?” one of the judge posed the question to Contestant No. 4.
Contestant No.4: … a few moments of thought and then came the answer:
‘A Father has a prime role to play in the life of his daughter. He is the first male that a girl comes across and hence, becomes the role model of her life. She sees the reflection of men in the rest of the world, through her dad and often perceives that all men should be like her father. Right from her childhood to adolescence to adulthood, he plays an influential role in her life.
He is the guide, the saviour, the protector, a friend and most importantly, the ultimate caretaker, who nourishes her in the loving and protective atmosphere set by him.
I have seen my daddy assuming multi-faceted role, which keeps changing with the changing phases of my life.
I would like to dedicate the last day of my life to my Father, and those 24 hours I would want to spend in his company.’
What followed was a thundering applause. The Compere was amazed with the answer and the applause that followed. ‘Is your lucky father around.’ asked the Compere.
’Yes, he is very much there’ Contestant No 4 replied,
Compere requested the lucky father to please stand up wherever he was. The proud father stood up and waved his hand. Thousands of eyes turned towards him, cameras and flashlights moved towards the proud father. And there was another round of great applause for him. He was touched. He was emotional. He folded his hands and thanked the crowd for the applause. There were tears in his eyes. He had received the greatest gift of his life from his daughter.
This is a true story of love, affection and dedication of a Daughter towards her Dad demonstrated at MB Club, Lucknow.
 

Preethi4u

Friends's of Penmai
Joined
Jun 18, 2012
Messages
319
Likes
765
Location
Sunshine state
#7
Good sharing Rajesh, daughters always hold their appa very close to their heart. My husband always says, I wish our daughter also speaks like you..sweets things about (dad)me always..i have to be a good father..my reply will be,dont be a good father..just be a father thats enough for us we will talk about you decades :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.