அப்பா - Daddy

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அப்பா...1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக
எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.

4. மகன், மகள் இன்றையத்தேவைகளைவிட வருங்காலத்
தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத்
தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர்.

5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.

6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி, மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களைசகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர்.

7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர்...

8. கடைசி காலத்தில் பிள்ளைகளால் (எல்லா பிள்ளைகளும் அல்ல) துரத்தப்பட்டாலும் அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.....அப்பாக்களை நேசிக்கும் மகள்/மகன்களால்

மட்டுமே உணரமுடிந்த உண்மை..
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,566
Location
Chennai
#3
Chocki sweet likesssss :):):):):):)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.