அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணி&#

vijaykumar12

Well-Known Member
#1
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னணி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்று உள்ளார்.


அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்பும் மோதுவது உறுதியாகி விட்டது.


இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. இருவரும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் 4 முக்கிய மாகாணங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. கொலராடோ, புளோரிடா, வடக்கு கரோலினா, வெர்ஜீனியா ஆகிய 4 மாகாணங்களில் என்.பி.சி. நியூஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், மாரிஸ்ட் போல் ஆகியவை இந்த கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. இந்த மாகாணங்கள், ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிற மாகாணங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கொலராடோ மாகாணத்தில் ஹிலாரியை 43 சதவீதம் பேரும், டிரம்பை 35 சதவீதத்தினரும் ஆதரிக்கின்றனர்.


புளோரிடாவில் ஹிலாரியை 44 சதவீதத்தினர் ஆதரிக்கின்றனர். டிரம்புக்கு 37 சதவீதத்தினரின் ஆதரவு உள்ளது. வடக்கு கரோலினாவிலும் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 38 சதவீத ஆதரவும் இருக்கிறது. 1976–ம் ஆண்டுக்கு பின்னர் 2008–ம் ஆண்டுதான் இந்த மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வென்றார். வெர்ஜினியாவில் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவு உள்ளது. டிரம்புக்கு 35 சதவீதத்தினரின் ஆதரவு இருக்கிறது.


இந்த வார தொடக்கத்தில் குயினிபியாக் பல்கலைக்கழகம், புளோரிடா, பென்சில்வேனியா, ஓஹியோ, இயோவா மாகாணங்களில் நடத்திய கருத்துக்கணிப்புகளில் ஹிலாரிக்கும், டிரம்புக்கும் இடையே இழுபறி ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை அடைந்து வரலாறு படைத்துள்ள ஹிலாரி, அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாறை படைப்பாரா என்பது நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ள தேர்தலுக்கு பின்னர் தெரிய வரும்.
 

vijaykumar12

Well-Known Member
#2
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வாண போராட்டம்

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுவது உறுதியாகி விட்டது.

டொனால்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென கூடிய 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணாடியால் தங்களது உடலை மறைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். டொனால்டு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர் என்று இவர்கள கருத்து தெரிவித்துள்ளனர்.

கிளீவ்லேண்டில் நிர்வாண ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்ற நிலையில் இவர்கள் நடத்திய போராட்டம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

vijaykumar12

Well-Known Member
#3
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு அதிக செல்வாக்கு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 25 முதல் 29-ம் தேதி வரை பிரபல செய்தி நிறுவனமான ‘ரியூட்டர்ஸ்’ நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரி வாக்காளர்கள் பங்கேற்று தங்களது மனதுக்கு பிடித்த அதிபர் பதவிக்கான வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

இதில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-ஐவிட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு 6 சதவீதம்பேர் அதிகமான ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 100 நாட்கள் உள்ள நிலையில் ஹிலாரியின் பிரசார வியூகத்தால் ஆதரவு சதவீதம் அதிகரிக்கலாம். பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் அவர் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றுவார் என்று கருதப்படுகிறது
 

vijigermany

Well-Known Member
#4
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

ஹிலாரிக்கு எதிராக வீடியோ வெளியிட்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரியும் இதுவரை மாறி மாறி தாக்கி பேசி, பிரசாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றைய பிரசாரத்தின் போது ஹிலாரி அறிவித்த வேலைவாய்ப்பு திட்டம், வரிகள், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சவால் விட்டு வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். ' தி ஸ்பீச்' என தலைப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்னும் பொய்க்கு பின் உள்ள கடினமான உண்மைகள் : ஹிலாரி ஆட்சியில் அமெரிக்காவில் மோசமாகும் விஷயங்கள்--அவரது நேர்மையற்ற திட்டத்தால் வரிகள் தொடர்ந்து அதிகரிக்கும். பயங்கரவாதம் பரவும். வாஷிங்டனில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படுவார்கள். அமெரிக்கர்கள் வேலையையும் வீடுகளையும், நம்பிக்கையையும் இழப்பார்கள்.


டிரம்ப்பின் வாக்குறுதிகளும் திட்டங்களும்...டிரம்பின் அமெரிக்காவில் மக்கள் வேலைக்கு திரும்புவார்கள். அவர்களின் வேலை மற்றும் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். அமெரிக்கர்களின் கனவு நனவாகும். அமெரிக்கா மீண்டும் சிறப்பான நாடாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்
 

vijaykumar12

Well-Known Member
#5
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

[h=2]ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு[/h]

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார்.

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்தது.

ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் பென்சில் வேனியாவில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது ஹிலாரி கிளிண்டனை ‘சாத்தான்’ என வர்ணித்தார். வேட்பாளர் தேர்வில் ஹிலாரி எதிராக போட்டியிட்டு கடைசி நேரத்தில் விலகிய பெர்னி காண்டர்சையும் கடுமையாக சாடினார். ‘சாத்தானுடன் அவர் உடன் படிக்கை செய்து கொண்டு போட்டியில் இருந்து விலகி அவருக்கு வழி விட்டார்’ என்றார்.

இதற்கிடையே டிரம்ப்பின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈராக் போரில் மரணம் அடைந்த முஸ்லிம் ராணுவ அதிகாரியின் பெற்றோர் குறித்த டிரம்ப் பேச்சுக்கு ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் ஜான் மெக்கேனும் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல வர்த்தகரும், கோடீசுவரருமான வாரன் பப்பெட் டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

டிரம்ப் தாக்கல் செய்த தனது வரி கணக்கை பொதுமக்களிடம் வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

vijaykumar12

Well-Known Member
#6
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெறலாம்: குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் அச்சம்

அமெரிக்காவில் நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது.

இந்த நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் நகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நவம்பரில் நடக்க உள்ள தேர்தலில் தில்லுமுல்லுகள் நடைபெறலாம். இந்த போட்டி நேர்மையற்றவிதத்தில் அமையும் என கூடுதல் தகவல்கள் வந்துள்ளன” என குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. இதனால் தான் அச்சம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘பாக்ஸ் நியூஸ்’ சேனலுக்கு அளித்த பேட்டியின்போதும் இதே புகாரை அவர் திரும்பவும் கூறினார். அதே நேரத்தில், “குடியரசு கட்சியினர் தீவிரமாக இதை கண்காணிப்பார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் எங்களிடம் இருந்து அவர்கள் வெற்றியை பறித்து விடக்கூடும்” என எச்சரித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பென்சில்வேனியாவில் நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ‘சாத்தான்’ என சாடினார். ஹிலாரியின் போட்டியாளராக திகழ்ந்த பெர்னீ சாண்டர்சையும் அவர் தாக்கினார். ‘சாத்தானிடம் சாண்டர்ஸ் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார்’ என அப்போது குறிப்பிட்டார்.
 

vijigermany

Well-Known Member
#7
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன் ஒபாமா பதவி விலகுவார்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க நாட்டின் வரலாறு கண்ட மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன் ஒபாமா பதவி விலகுவார் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நாட்டின் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார்.

பொய்க்காரி, பித்தலாட்ட பேர்வழி என்றெல்லாம் ஹிலாரியை விமர்சித்துவரும் அவர் நேற்று ஹிலாரி ஒரு சாத்தான் என்று கூறினார். அவ்வப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்காது என முன்னர் ஒபாமா கூறினார். பின்னர், தேர்தல்வரை நான் தாக்குப்பிடிக்க மாட்டேன் என்றார். இப்போது, ஒருவேளை டொனால்ட் டிரம்ப் தேர்தலில் ஜெயித்தால்.., என்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிரியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒபாமா ஒரு பயங்கரமான அதிபர், பெரும் பேரழிவாக இருக்கும் அவர் அமெரிக்க நாட்டின் வரலாறு கண்ட மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன்தான் பதவி விலகுவார் .

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Well-Known Member
#8
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியில்லாதவர் : ஒபாமா

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போது, குடியரசு கட்சியைச் சேர்ந்த அனைவரும் அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர். அமெரிக்க அதிபராக யாரையும் ஆதரித்து இந்த கருத்தை நான் கூறவில்லை. டிரம்ப் எனது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் இதே கருத்தை தான் கூறி இருப்பேன். அதிபராக இருந்து சேவையாற்றுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என நான் கடந்த வாரம் கூறி இருந்தேன். அதை டிரம்ப் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

நமது நாட்டிற்காக அவர் மிகப் பெரிய தியாகம் செய்து விட்டதை போல் பேசுகிறார். உண்மையில் எந்த தியாகத்தையும் அவர் செய்து விடவில்லை. ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகளின் பிரச்னைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அதனாலேயே அவர் அதிபராவதற்கு பொருத்தமற்றவர் என கூறினேன் என தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Well-Known Member
#9
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

டொனால்ட் டிரம்ப் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருப்பார்: சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். பிராச்சாரங்களில் மிகவும் சர்ச்சைகுரிய கருத்துகளை வெளியிட்டுவரும் டிரம்ப்க்கு அவரது கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குடியரசு கட்சியை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்கள் 50 பேர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் டொனால் டிரம்ப் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருப்பார் என எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் “அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பதற்கான அடிப்படை பண்புகளோ, அனுபவமோ டிரம்புக்கு இல்லை. டிரம்ப் அமெரிக்காவின் அறப்பண்புகளை பலவீனப்படுத்துகிறார்.

நாங்கள் யாறும் டொனால்ட் டிரம்புக்கு வாக்கு அளிக்க போவது இல்லை” என்று அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு டிரப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
 

vijaykumar12

Well-Known Member
#10
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க தேர்தல் பிரசாரம்: டிரம்பின் கருத்தால் புதிய சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தனது பிரசாரத்தின் போது அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்திய சர்ச்சை, துப்பாக்கி ஆர்வலர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு பற்றியது ஆகும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தின் 2-வது திருத்தத்தின்படி ஒருவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் துப்பாக்கி உரிமையாளர்கள், ஆர்வலர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி, இந்த 2-வது திருத்தத்தை ஒழிக்க விரும்புவதாகவும், அவர் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றால் துப்பாக்கி ஆர்வலர்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் நேற்று முன்தினம் வடக்கு கரோலினாவில் நடந்த பிரசாரத்தின் போது டிரம்ப் கூறினார். எனவே ஹிலாரி ஜனாதிபதி ஆவதையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதையும் நீங்கள் தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துகள் ஹிலாரிக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக ஜனநாயக கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எனினும் தனது கருத்தை நியாயப்படுத்தி உள்ள டிரம்ப், தங்கள் வாக்குகளின் மூலம் மட்டுமே ஹிலாரியை ஜனாதிபதியாகாமல் தடுக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.அமெரிக்க தேர்தல் பிரசாரம்: டிரம்பின் கருத்தால் புதிய சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தனது பிரசாரத்தின் போது அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்திய சர்ச்சை, துப்பாக்கி ஆர்வலர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு பற்றியது ஆகும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தின் 2-வது திருத்தத்தின்படி ஒருவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் துப்பாக்கி உரிமையாளர்கள், ஆர்வலர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி, இந்த 2-வது திருத்தத்தை ஒழிக்க விரும்புவதாகவும், அவர் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றால் துப்பாக்கி ஆர்வலர்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் நேற்று முன்தினம் வடக்கு கரோலினாவில் நடந்த பிரசாரத்தின் போது டிரம்ப் கூறினார். எனவே ஹிலாரி ஜனாதிபதி ஆவதையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதையும் நீங்கள் தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துகள் ஹிலாரிக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக ஜனநாயக கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எனினும் தனது கருத்தை நியாயப்படுத்தி உள்ள டிரம்ப், தங்கள் வாக்குகளின் மூலம் மட்டுமே ஹிலாரியை ஜனாதிபதியாகாமல் தடுக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
 

vijaykumar12

Well-Known Member
#11
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.

இந்நிலையில், சிகாகோவிற்கு கிழக்கே உள்ள ஓகியோ மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசியவை பின்வருமாறு:-

அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன். அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு இடைநிறுத்தம் செய்வேன்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை நசுக்கி, அழித்து ஒழிப்பேன். முன்னாள் அதிபர் கிளிண்டனும், அதிபர் பராக் ஒபாமாவும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வளர்வதற்கு அனுமதித்து விட்டார்கள்.

ஜிகாதிஸ்டுகளின் நெட்வொர்க்கை வேரோடு பிடுங்கி எறிய மற்றும் அமெரிக்க இளைஞர்கள் அதனால் பாதிக்காமல் இருக்க தீவிர இஸ்லாமியம் குறித்து ஆணையம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

தீவிரவாதத்திற்கு எதிராக போராட புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Well-Known Member
#12
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

கண்காணிப்புக்கு பின்னரே அனுமதி: ட்ரம்ப்

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்கள் கூடுதல் கண்காணிப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு நாட்டில் அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளார்.
 

vijaykumar12

Well-Known Member
#13
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண சிலைகள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு கட்சியின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் வாழும் ஓவியக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ‘indecline’ என்ற அமைப்பு டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மத்திய பூங்காவில் நேற்று திடீரென டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண சிலையை இந்த அமைப்பு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பூங்காவுக்கு பொழுதுபோக்க வந்தவர்கள் இந்த சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெரிய தொந்தி வயிறு, குட்டிக்குட்டியாய் கைவிரல்கள் என பலரை ஆச்சரியப்படுத்திய இந்த சிலைக்கு அருகில் நின்று சிலர் செல்பியும் எடுத்து கொண்டனர்.

சிலமணி நேரத்துக்கு பின்னர் அங்குவந்த நியூயார்க் நகர பூங்கா மற்றும் மனமகிழ் மன்ற அதிகாரிகள் அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றி, வேறொரு இடத்துக்கு தூக்கிச் சென்றனர். சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ், மன்ஹாட்டன், சியாட்டல், கிளிவ்லேண்ட் ஆகிய முக்கிய பெருநகரங்களிலும் இதுபோன்ற சிலைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Well-Known Member
#14
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு: வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னணி

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகின்றனர்.

இந்த நிலையில், ராய்டர்ஸ் மற்றும் இப்சோஸ் நிறுவனங்கள் பொது மக்களிடம் 50 மாகாணங்களில் ஆன்லைனில் வாக்கெடுப்பு மூலம் கருத்து கணிப்பு சர்வே நடத்தின. இது கடந்த 14 முதல் 18-ந்தேதி வரை நடத்தப்பட்டது.

இதில் ஹிலாரி கிளிண்டன் 42 சதவீதம் வாக்குகளும், டொனல்டு டிரம்ப் 34 சதவீதம் வாக்குகளும் பெற்றனர். 23 சதவீதம் பேர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஹிலாரி கிளிண்டன் 8 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் 41 முதல் 44 சதவீதம் பேர் ஹிலாரியை ஆதரித்தனர். டிரம்புக்கு 33 முதல் 39 சதவீதம் மட்டுமே ஆதரவு கிடைத்தது.

ஹிலாரியும், டிரம்பும் அமெரிக்க வாக்காளர்களை கவர தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர். ஏனெனில் மூன்றில் 2 பங்கு இளைஞர்கள் நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கருதுவதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
 

vijigermany

Well-Known Member
#15
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க தேர்தலில் சாதிக்கக் காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகப் பேசிய மேடைப் பேச்சு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
அப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் அமெரிக்க தேர்தலுக்காக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த, அதுவும் தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் அமெரிக்க நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளி பெண்கள். ஜனநாயகக் கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

இதேபோல ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போது கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக உள்ள கமலா ஹாரிஸ் என்பவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் கமலா வெற்றி பெற்றால் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை கிடைக்கும். இந்தத் தேர்தலில் சமீபத்தில் கருத்து கணிப்பில் பிரமிளாவும், கமலாவும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் ஃப்ளோரிடாவில் இருந்து குடியரசு கட்சி சார்பில், லத்திகா மேரி தாமஸ் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பாளை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். ஜனநாயகக் கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமிபேரா மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் மொத்தம் 19 பெண்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Well-Known Member
#16
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: 7 சதவீத கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னணி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் (70) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. மேலும் அங்கு தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையில் மான்மவுத் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு 46 சதவீதம் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 7 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்று ஹிலாரி முன்னணியில் உள்ளார்.

அத்துடன், கட்சியினர் ஆதரவு என்ற வகையில் பார்த்தால், ஹிலாரி கிளிண்டனுக்கு ஜனநாயக கட்சியில் 85 சதவீதம் பேரின் ஆதரவு உள்ளது. இதே போன்று, டொனால்டு டிரம்புக்கு குடியரசு கட்சியில் 78 சதவீதத்தினரின் ஆதரவு இருக்கிறது.
எந்த சார்பும் இல்லாதவர்கள் மத்தியில் ஹிலாரிக்கு 37 சதவீதம் பேரின் ஆதரவும், டிரம்புக்கு 32 சதவீதம் பேரின் ஆதரவும் உள்ளது.

த்ரி எமர்சன் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், ஓஹியோ மாகாணத்தில் இருவரும் சம பலத்தில் (தலா 43 சதவீத ஆதரவு) இருப்பது தெரிய வந்துள்ளது.

மிச்சிகனில் ஹிலாரிக்கு டிரம்பை விட 5 சதவீதம், பென்சில்வேனியாவில் 3 சதவீதம் கூடுதல் ஆதரவு உள்ளது. ஹப் போஸ்ட், யூ கவ் நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்புகளில், குடியரசு கட்சியினரில் 54 சதவீதம்பேர் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் சரியான தேர்வு இல்லை என கருத்து கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜனநாயக கட்சியில் 56 சதவீதம் பேர் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
 

vijigermany

Well-Known Member
#17
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்து கணிப்பு டொனால்டு டிரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து அங்கு வருகிற நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இவர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஏற்கனவே பல கருத்து கணிப்புகள் வெளிவந்தன.

அதில், ஹலாரிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. டொனால்டு டிரம்பை விட அவருக்கு கூடுதலாக 7 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என்று முந்தைய கருத்து கணிப்புகள் கூறின.

இந்த நிலையில் நேற்று சி.என்.என். டி.வி., ராய்ட்டர் செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் பல நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கூறுகின்றன.

சி.என்.என். கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 45 சதவீத ஆதரவும், ஹிலாரிக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராய்ட்டர் செய்தி நிறுவன கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒயிட்ஹவுஸ் வாச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 30 சதவீத ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்டு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு மட்டும் டொனால்டு டிரம்பை விட ஹிலாரிக்கு சற்று அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.என்.என். கருத்து கணிப்புபடி இளைஞர்கள் மத்தியில் 50 சதவீதமும், டெனால்டுக்கு 29 சதவீதமும் ஆதரவு உள்ளது. ஆனால், பெரியவர்கள் மத்தியில் டொனால்டுக்கு 54 சதவீதமும், ஹிலாரிக்கு 35 சதவீதமும் ஆதரவு உள்ளன.

பெண்களை பொறுத்த வரையில் ஹிலாரிக்கு 53 சதவீதமும், டெனால்டுக்கு 38 சதவீதமும் ஆதரவு இருக்கின்றன. ஆனால், ஆண்கள் தரப்பில் டொனால்டுக்கு 54 சதவீதமும், ஹிலாரிக்கு 32 சதவீதமும் ஆதரவு கிடைக்கின்றன.

வெள்ளையர்கள் மத்தியில் டொனால்டுக்குதான் அதிக ஆதரவு இருக்கிறது. அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு கொள்கைபற்றி அவர் கூறிய கருத்துக்கள் வெள்ளையர்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவை பெற்று தந்துள்ளன.

தேர்தலுக்கு இன்னும் 2 மாதம் இடைவெளி உள்ளது. இந்த கால கட்டத்தில் இருவரும் செய்ய போகும் பிரசாரத்தை வைத்து வாக்காளர்கள் மனநிலை மாறலாம் என கருதப்படுகிறது.

கருத்து கணிப்பில் முந்தி இருப்பது தொடர்பாக டொனால்டு கூறும்போது, இந்த மாதம் எனக்கு மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கி இருக்கிறது என்று கூறி உள்ளார்.
 

vijaykumar12

Well-Known Member
#18
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

நிமோனியா காய்ச்சலால் ஹிலாரி கிளிண்டன் அவதி - தேர்தல் பிரசாரம் ரத்து


நிமோனியா காய்ச்சலால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.


இவர் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.

எனவே, அவரை டாக்டர் பர்டாக் பரிசோதித்தார். அப்போது அவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும், அதன் காரணமாக நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே, ஹிலாரி கிளிண்டன் நன்றாக ஓய்வு எடுக்கும் படியும் அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து அவர் நியூயார்க்கில் உள்ள தனது மகள் செல்சியாவின் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
இதையடுத்து கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அவர் 2 நாட்கள் கலிபோர்னியாவில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் நிதிதிரட்டும் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே, ஹிலாரி கிளிண்டனுக்கு இருமல் தொடர்பான அலர்ஜி இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இருமலில் அவதிப்பட்டு வந்த அவருக்கு நியூயார்க்கில் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹலாரிகிளிண்டனின் உடல் நலக்குறைவு வீடியோ காட்சிகள் டி.விக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் ஒளிபரப்பபட்டன. அதில் நியூயார்க் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் உதவியாளர்களால் கைத்தாங்கலாக வேனுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொண்டர்கள் சாதகமாக பயன்படுத்தி பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த பிரசாரத்தின் போது இதே கருத்தை தான் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் ஹிலாரி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக அவரது டாக்டர் பர்டாக் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
 

vijigermany

Well-Known Member
#19
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்: டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் ஊடக குழுமங்களின் அதிபரும் பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் நாட்டில் நிலவிவரும் துப்பாக்கிகள் தொடர்பான தாராளமய கொள்கையை மறுபரிசீலனை செய்து சட்டதிருத்தம் ஏற்படுத்த ஆலோசிப்பேன் என சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மியாமி நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், ‘ஹிலாரி கூறியுள்ள கருத்தை வைத்துப் பார்க்கையில், அவருக்கு பாதுகாப்பு அளித்துவரும் ரகசிய போலீசாரிடம் இருக்கும் துப்பாக்கிகளை அவர்கள் கைவிட வேண்டும், அவர்கள் உடனடியாக இந்த முடிவை எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளை பறித்து விடுங்கள். அப்போது ஹிலாரியின் கதி என்னவாகிறது? என்பதைப் பாருங்கள். அதன் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்’ என்று கூறினார்.
 

vijigermany

Well-Known Member
#20
Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&#300

அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட ஹிலாரி கிளிண்டனுக்கு உடல் தகுதி இருக்கிறதா? டாக்டர் பரபரப்பு அறிக்கை


அமெரிக்க ஜனாதிபதியாக செயல்படத்தக்க அளவுக்கு ஹிலாரி கிளிண்டனுக்கு உடல் தகுதி இருக்கிறதா என்பது பற்றி டாக்டர் பரபரப்பு அறிக்கை அளித்திருக்கிறார்.

ஹிலாரிக்கு உடல்நலக்குறைவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தல் களமும் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நியூயார்க் நகரில், அமெரிக்க தாக்குதல் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு (வயது 68), திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அவசர அவசரமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவர் தனது தேர்தல் பிரசாரத்தையும் தற்காலிகமாக நிறுத்தினார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவத்தொடங்கின.

இந்த நிலையில் அவருக்கு நிமோனியா தாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

டாக்டர் அறிக்கை

இதையடுத்து ஹிலாரி கிளிண்டன், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லிசா பார்டாக் அளித்த மருத்துவ அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய தகவல்கள் வருமாறு:-

ஹிலாரி தனக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருக்கிறார். நிமோனியா தடுப்பூசியும் போட்டிருக்கிறார்.

ஹிலாரியின் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அளவு, அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறக்கூடிய அளவுக்கு இருக்கிறது.

அவரது மேமோகிராம் பரிசோதனை (மார்பக ஊடுகதிர் பரிசோதனை), அல்டிராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருக்கின்றன.

அவர் தைராய்டு, ஒவ்வாமை மருந்துகளை எடுத்து வருகிறார்.

ஆரோக்கியமாக இருக்கிறார்

2012-ம் ஆண்டு அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டு, அதன் காரணமாக அவரது மூளைக்கும், மண்டையோட்டுக்கும் இடையே ரத்த உறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தேவையான மருந்துகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்தும், ஓய்வு எடுத்தும் ஹிலாரி நலம் பெற்று வருகிறார். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக செயல்படுவதற்கு ஏற்ற தகுதியுடன் இருக்கிறார்.

இவ்வாறு டாக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் ஹிலாரி எடுத்துவருகிற மருந்துகளின் பெயர்களும் கூட பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரசார குழு அறிக்கை

இதேபோன்று அவரது பிரசார குழுவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஹிலாரி கிளிண்டனை அவரது மருத்துவர் பரிசோதித்து பார்த்தார். அவரது முழுமையான உடல் பரிசோதனை, இயல்பாக அமைந்துள்ளது. அவர் மிகச்சிறப்பான மன நலம் கொண்டிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவரது நெஞ்சுப்பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் லேசானதும், பரவும் இயல்பும் இல்லாததுமான நிமோனியா தாக்கி இருப்பது தெரிய வந்தது” என கூறப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் அறிக்கை

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (70), தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் உயரத்துக்கு ஏற்ற எடையை விட அதிகமாகவும், உடல் பருமனுடன் இருப்பதும் தெரிய வந்தது.

தவிரவும், அவர் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “ஹிலாரியால் ஒரு மணி நேரம் கூட நிற்க முடியாது, அவர் படுக்கையில் இருக்கிறார்” என கூறியது நினைவுகூரத்தகுந்தது.

இதன்காரணமாக ஹிலாரி கிளிண்டன், டாக்டர் அளித்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.