அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணி&#

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு

1528783633115.png

வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
டொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை முடிந்தது

1528783728170.png

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.


இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினார் டிரம்ப்

1528783795578.png

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக கூறினார். மேலும், கிம் ஜாங் அன்னுடன் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும், அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் கிம் ஜாங் அன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

1528783869392.png

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.அதன்பின்னர், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவு அருந்திய பின்னர் இருவரும் தனியாக நடந்து சென்று பேசினர். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறும்போது, ‘இது மிகவும் அற்புதமான கூட்டம், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்’ என்றார். ஆனால் அது எந்த துறை சார்ந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
US President Donald Trump shakes hands with North Korea's leader Kim Jong Un as they sit down for their historic US-North Korea summit, at the Capella Hotel on Sentosa island in Singapore
1528808009234.png
 
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
செலவழித்தது ரூ.38 ஆயிரம்... கிடைத்தது ஏமாற்றம்.... ட்ரம்ப் உடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் செல்பி எடுப்பதற்காக ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு, நேற்று சிங்கப்பூரில் நடந்து முடிந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட இரு தலைவர்களும் சுமார் 48 நிமிடங்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்களின் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் இருவரும் ஈடுபட்டனர். இதில் அணு ஆயுதங்களைக் கைவிடுவது, வடகொரியா மீதான தடைகளை நீக்குவது குறித்த பேச்சுகள் நடைபெற்றன.


இவர்களின் சந்திப்பு தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில், ட்ரம்ப் உடன் செல்பி எடுப்பதற்காக இந்திய வம்சாவளி வாலிபர் ஒருவர் ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன். 25 வயதாகும் இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராம். இதனால், கிம் ஜாங்கை சந்திப்பதற்காக ட்ரம்ப் சிங்கப்பூர் வருவதைத் தெரிந்துகொண்ட மோகன் அவருடன் எப்படியாவது செல்பி எடுக்க வேண்டும் என நினைத்து சிங்கப்பூர் வந்துள்ளார். இதற்காக செண்டோசா தீவில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு மட்டுமே ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார்.

அங்கிருந்து ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடைபெற்ற பகுதிகளில் பல மணி நேரங்களாக சுற்றித்திறிந்துள்ளார். ஆனால், அவரால் ட்ரம்ப் அருகில் நெருங்கமுடியவில்லை. எனினும் அங்கிருந்து ட்ரம்ப் கிளம்பும்போது, அவரின் பீஸ்ட் என்ற கார் அருகே நின்று செல்பி எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து பேசிய மகாராஜ் மோகன், ``ட்ரம்ப் உடன் செல்பி எடுப்பது கடினம் என அனைவரும் கூறினார்கள். ஆனால், சில நேரம் நாம் எதிர்பாராதவையும் நடக்கும் என்ற எண்ணத்தில், ஒரு சதவிகிதமாவது அவருடன் செல்பி எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முயற்சியில் இறங்கினேன்" எனக் கூறியுள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை முறிந்துபோனால் அடுத்தது என்ன? - டிரம்ப்

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கி வந்த வடகொரிய தலைவர் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததுடன், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கும் முன்வந்தார். அதன்படி ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. சமரச ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. அப்போது வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. அதேசமயம் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தும் வகையில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா நடத்தி வந்த ராணுவ ஒத்திகைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா-வடகொரியா இடையே நடக்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அதிபர் டிரம்ப் டுவிட்டர் தளத்தில் அடுத்தடுத்து பதிவு செய்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

பேச்சுவார்த்தையின்போது போர் விளையாட்டுகளை (ராணுவ ஒத்திகை) நிறுத்திவைக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால் ராணுவ ஒத்திகைக்கு அதிக செலவு ஆவதுடன், உண்மையான பேச்சுவார்த்தை நடக்கும்போது அதற்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும். ஆத்திரத்தையும் தூண்டும். பேச்சுவார்த்தை முறிந்துபோனால் தென் கொரியாவுடனான ராணுவ ஒத்திகையை மீண்டும் தொடங்குவோம். அப்படி நடக்காது என நம்புகிறேன்.சிங்கப்பூரில் வடகொரிய தலைவரை சந்தித்தபோது அவருக்கு நான் அதிக அளவில் ஆதரவு அளித்ததாக போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது வேடிக்கையானது. இந்த சந்திப்பின் மூலம் உலகில் அமைதி ஏற்பட்டுள்ளது. வடகொரியாவுடனான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை ஆசிய கண்டம் முழுவதிலும் பாராட்டி கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.