அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்ஹாசன&#

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#71
துப்பாக்கிச்சூடு தொடர்பாக மய்யம் விசில் செயலியில் குவிந்திருக்கும் புகார்கள் - கமல் ட்வீட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசில் செயலியில் குவிந்திருக்கும் புகார் கேள்விக்கு அரசு பதிலளிகத் தயாரா என கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.


மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் மக்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்தால் அதற்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக தூத்துக்குடியில் நடந்து வந்த கலவரம் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து மய்யம் விசில் செயலிக்கு அதிக புகார்கள், கேள்விகள் வந்துள்ளதாகவும் அதற்கு அரசு பதிலளிக்க முடியுமா என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘தூத்துக்குடியில் காவல் துறையின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் அரசாங்கம் மற்றும் காவல் துறையினரின் திறமையின்மையா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையவோ, அங்கிருக்கும் பொருள்களை சேதப்படுத்தவோ, முயலவில்லை என்றே நமக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் உறுதி செய்கின்றன.’Kamal Haasan

@ikamalhaasanதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நமது மய்யம் விசில் செயலியில் வந்திருந்த பல்வேறு புகார்க் கேள்விகளை மக்கள் நீதி மய்யம் எழுப்பியிருக்கிறது. பதில் தருமா தமிழ்நாடு அரசு?
7:04 PM - May 25, 2018
Twitter Ads info and privacy


மேலும், மய்யம் விசில் செயலியில் வந்திருக்கும் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை, யார் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன? துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் குண்டுகளின் விவரங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை? இதுபோன்று பல சந்தேகங்கள் நிறைந்த கேள்விகளை முன் வைத்து அதற்கு அரசு பதிலளிக்க முடியுமா என கமல்ஹாசன் கேட்டுள்ளார்.


 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#72
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கமல் எழுப்பும் ஆறு கேள்விகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதி பெற்றுத் தருவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.
அதில், “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு - இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கத் துடிப்பதை இதற்கு முன் நாம் கண்கூடாகக் கண்டிருந்தாலும், தூத்துக்குடியில் நடைபெற்றதைப் போல காவல்துறை மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு துயரச் சம்பவம் , அண்மைக் காலத்தில் நடந்தேறியதில்லை.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு காரணம், அரசாங்கம் மற்றும் காவல்துறையின் திறமையின்மையா அல்லது திட்டமிட்டு நடந்தேற்றப்பட்ட வன்முறையா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையவோ, அங்கிருக்கும் அலுவலர்களைத் தாக்கவோ, அரசு உடமைகளுக்கு சேதமோ விளைவிக்கவில்லை என்றே நமக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் உறுதி செய்கின்றன.
துப்பாக்கிச் சூடும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளேயோ அல்லது வாசற்படிக்கு அருகாமையில் கூட நடத்தப்படவில்லை. மாறாக, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்திலேதான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பதற்கு ஆதாரமாக உயிர் இழந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் சாலைகளில் தான் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களைத் தீவைத்துப் போராட்டக்காரர்கள் எரித்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவது என்பது அபத்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். நடைபெற்ற இந்த வன்முறை மிகுந்த துயரச் சம்பவம் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்காத தமிழ்நாடு அரசின் மவுனம், அதிர்ச்சியூட்டக் கூடியதாகவே உள்ளது.
மக்களின் ஏகோபித்த கேள்விகளாகவும், பல்வேறு தரப்பினரின் தொடர் கேள்விகளாகவும் இருக்கின்ற கீழ்க்கண்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை விடையளிக்கவோ, விளக்கமளிக்கவோ இல்லை.
* யார் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது?
* துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?
* துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும், குண்டுகளின் விவரங்களும் ஏன் இன்னும் அளிக்கப்படவில்லை?
* இறுதியாகத் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை?
* துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும், காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் அளிக்கப்படவில்லை?
* இரண்டாம் நாளில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழு விவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்?
காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் உள்துறைச் செயலாளர் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில் கூட, நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அமைதியாகவே இருக்கிறது. எனவே, அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் தண்டனை நடவடிக்கையாக, அவர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தோ அல்லது பணியில் இருந்து நீக்கம் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கு முழு பொறுப்பான அரசை நடத்தும் அரசியல் சக்திகளையும் தண்டனைக்குள்ளாக்குவது மிக அவசியம்.
14 பேரின் உயிரிழப்பிற்கு எவ்விதப் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிப்பதும், அதுகுறித்தக் கேள்விகளுக்குப் பதில் பதில் சொல்லாமல் இருப்பதும் மக்களாட்சியின் மாண்பிற்கு உகந்தது அல்ல. மக்கள் நீதி மய்யம் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், தொடர்ந்து எவ்வித சுணக்கமும், தொய்வுமின்றி தகுந்த ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துக்கொண்டே இருக்கும். இந்த மண்ணையும் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில், மக்களின் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் தனது ‘மய்யம் விசில் செயலி’ மூலமாகத் தமிழ்நாடு முழுக்க இருந்து பல்வேறு அக்கறையுள்ள குடிமக்கள் மூலம் கிடைக்கப்பெற்றப் புகார்களின் மீதான நடவடிக்கைகளை, கீழ்க்கண்ட நீதி அமைப்புகள் மூலமாக முன்னெடுப்புகளை எடுக்கவுள்ளது.
* தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம்
* நீதிமன்றங்கள்
* தமிழ்நாடு ஆளுநர்
* இந்திய குடியரசுத் தலைவர்
தூத்துக்குடி வாழ் எம் சகோதர, சகோதரிகளோடு தோள்நின்று, இந்தத் துயரச் சம்பவத்தில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்று உறுதி அளிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.