அரச மரம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அரச மரம்


அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம். காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது .

அரச மரத்தடியில் எங்கும் விநாயகரை காணலாம் .பௌத்தர்கள் அரசமரத்தடியில் புத்தரை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது அரச மரம் அவர்களின் புனித மரம் .பின்பு பௌத்தம் மறைய தொடங்கியபோது புத்தர் இருந்த இடங்களை எல்லாம் விநாயகர் பிடித்துக் கொண்டார்.

சம்ஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என்பது அரசமரம்.

அரச மரக்குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னிஹோத்ரத்திற்குப் பயன் படும். அரச மரத்தை வெட்டவோ எரிக்கவோ கூடாது

அரசமரத்திற்கு அரணி என்ற பெயரும் உண்டு அசுவம் என்றால் குதிரை. இந்த அரசமரத்திற்கும் குதிரைக்கும் ச்ம்பந்தம் இருக்கிறது. புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :

மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :


என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .

அரச மரம் தனுசு ராசி மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுக்களை ஈர்த்துத் தன் உடலில் நிரப்பி வைத்துக் கொண்டுஅதைத் தொடுபவர்களுக்கு .,சுற்றுபவர்களுக்கு வழங்குகிறது.
மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ மரங்களில்
முதன்மையானது அரச மரமாகும்.

அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாகநம்பப்படுகிறது. மும்மூர்த்தி வடிவம் கொண்ட அரச மரத்தின் அடிப்பக்கம்பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர்.

இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தைஎக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அப்படிச் செய்தால் எதிர்பாராத விபத்து, வறுமை,துன்பங்கள் ஏற்படும் என்பர்.

அரச மரத்திற்கு "அஸ்வத்தா' என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,"வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது' என்று பொருள்சொல்லப்படுகிறது.

இந்த அரச மரத்தை திங்கட் கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும்.காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இருபத்தியொரு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். அரசமர நிழல் படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணிசங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.

"ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்' என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வவளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்திஉண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார்.அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்திமரமாகவும் கருதப்படுகிறது.

அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்குமுன் வலம் வருவது சிறப்பிக்கப்படுகிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது.சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

அரசமரம் மருத்துவக் குணம் கொண்டது. இதன் இலைகளை (பழுப்பு) நல்லெண்ணெயில்தடவி அனலில் வாட்டி, உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுத்தால்நல்ல குணம் தெரியும். இதன் பழங்களை முறைப்படி லேகியம் செய்து சாப்பிட்டால்தாது விருத்தி யாகும்; சுக்கிலம் பெருகும். ஆயுர் வேதத்தில் இதுபெரும்பாலும் பயன்படுவதாகச் சொல்லப் படுகிறது.

ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் அதன் வேர் ஒரு குணம், பட்டை ஒரு குணம்,கிளை, இலை, கொழுந்து ஒரு குணம் என்று மாறுபட் டிருக்கும். ஆனால், அரச மரம்மட்டும் வேர், பட்டை, பூ, பழம் உட்பட அனைத்தும் ஒரே குணம் கொண்டவை. இதில்பிராண வாயும் துவர்ப்புச் சத்தும் மிகுதியாக உள்ளது.

இம் மரத்திலிருந்துமுப்பது மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில்மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்ப திலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது.

புத்தருக்கு ஞானம்பிறந்தது அரசமரத்தடியில் என்று வரலாறு சொல்லும்.

விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு ஆயிரத்து எண்ணூறு கிலோகரியமில வாயுவை உட்கொண்டு, இரண்டா யிரத்து நானூறு கிலோ பிராண வாயுவைவெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப் பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு,அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள்,கிருமிகள் அழிந்துவிடும்.

அரசமரத்திற்கு சூரிய உதயத்திற்குமுன்பூஜை செய்து இருபத்தி யொரு முறை வலம் வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்டபல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.

திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி அன்று அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானை யும் நாக தேவதைகளையும் ஆயிரத்தோரு முறை சுற்றி வந்தால்ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். நூற்றியொரு முறை வலம் வந்தால்கன்னியர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் நல்ல இடத்தில் திருமணம்நடை பெறும்.

சுமங்கலிகளுக்கு சுமங்கலி பாக்கியம் நீடித்து நிற்கும்.ஒன்பது முறை வலம் வந்தால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

அதன் அணைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. அரச மரத்தின் பட்டையைக் கஷாயமிட்டுக் குடித்து வந்தால் மூலம், மூலத்தால் வரும் பாதிப்புகள் கட்டுப்படும். காயங்கள், புண், சிரங்குகள், வெடிப்புகள் இருந்தால் அரச மரத்தின் இலைகளைக் கொண்டு கட்டுக் கட்டலாம்.

அறிவியல் ரீதியாக மரங்கள் பகலில் பிராண வாய்வையும், இரவில் கரிமில வாய்வையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அரச மரம் பகலிலும்,இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. ! சரியா எனப்பார்க்கவேண்டும் .

இலையை கஷாயமிட்டு குடித்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீர்ப்பை குறைபாடுகள் நலம் பெறும். அரச மரத்தின் பழம், இலைக் கொழுந்து, தண்டுப்பகுதி, வேர் இவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கும் .

அரச மரத்தின் தண்டுப் பகுதியைத் தனியாக எடுத்து, நிழலில் காய வைத்து அரைத்துப் பவுடராக்கி புண், வடுக்களின் மீது போடலாம். பசையாக்கி பற்றிடலாம். அரச மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டு உப்பு மற்றும் வெல்லம் கலந்து குடித்தால் நாள்பட்ட, தீவிர வயிற்றுவலி கட்டுப்படும். அரச மரத்தின் கட்டையை கஷாயமிட்டு கக்குவான் இருமலுக்கு மருந்தாகத் தரலாம். ஆஸ்துமா, சர்க்கரைநோய் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக இவை விளங்குகின்றன.

இதுதவிர, இம்மரத்தின் அனைத்துப் பொருட்களும் வயிற்றுப் போக்கு, சீதபேதி, தீப்புண், தோல் தொற்றுப் பாதிப்புகள், புண் வடுக்கள், வெள்ளைப்படுதல், நரம்புத் தளர்ச்சிஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

'அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி
வயிற்றைத் தொட்டுப் பார்த்துக்
கொண்டாளாம்'' என்ற பழமொழி

அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.

இம்மரத்தில் வளரும் புல்லுருவியை அரைத்து ஒரு எலுமிச்சை அளவு ,பிள்ளையில்லாத பெண்களுக்கு தர தூரம் போவதற்க்குன் முன்று நாள் தந்தாள் சூல் அமையும் .

அரசனை நம்பி புருஷனை கைவிடவேண்டாம் என்றும் ஒரு பழமொழி உண்டு .இதிலும் அரசன் என்பது அரச மரத்தையே குறிக்கும் .இதுவும் கணவன் மார்களை காக்க வந்த பழ மொழிதான்

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.