அரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் !!

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
672
Location
chennai
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

1531735606792.png


வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அவை உடலுக்கு பல்வேறு தீங்கை ஏற்படுத்தக்கூடிவையாகும். அத்தகைய உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

* தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

* எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

* பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.* காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

* காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சினைக்கு உள்ளாக்கி விடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

* காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

* தயிரில் என்ன தான் நல்ல பக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

* வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கல்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

1531735708595.png
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
672
Location
chennai
சுவையான கம கம இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்

புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - ஒன்று

அரைக்க

இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
கொத்துமல்லி தழை - கால் கைபிடி அளவு
கறிவேப்பிலை - கால் கைபிடி அளவு

தாளிக்க

நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவுசெய்முறை

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.

தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி!

குறிப்பு

1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.

3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.
1531735922384.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
நோய்களுக்கு ‘நோ’ ---
நேச்சுரல் ஆன்டிபயாட்டிக்ஸ்!


ஆரம்பத்தில், மூலிகை இலை, தண்டு, வேர், காய், விதை உள்ளிட்டவற்றை மருந்தாக, கஷாயமாக, லேகியமாகச் செய்து சாப்பிட்டோம்

மது அன்றாட உணவு வகைகளே நம் நோய்களுக்கு மருந்தாக உள்ளன. கிருமிகளை அழித்து உடலைக் காக்கும் காய், கனிகளைத் தெரிந்துகொள்வோம்.
இஞ்சி

இஞ்சியில், `ஜிஞ்சரால்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. மாரடைப்பைத் தடுக்கிறது. மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. குழந்தைகளின் தொப்புளைச் சுற்றி இஞ்சிச் சாற்றைப் பற்றுப்போடுவதன் மூலம் அவர்களின் அஜீரணத்தைச் சரிபடுத்தலாம்.

செம்பருத்தி

செம்பருத்திப் பூவில் பாலிஃபீனால், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ஃப்ரீரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்தும். இதன் இலையைத் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிநீருக்குப் பதிலாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பம் இயல்புநிலையில் இருக்கும். செம்பருத்தி, முடி வளர்ச்சியை அதிகரித்து நரைமுடிப் பிரச்னையைக் குணமாக்கும். காய்ந்த மொட்டுகளை ஊறவைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தலையில் தடவினால், கூந்தல் கறுப்பாகும். மாதவிடாய் சரியாக வருவதற்கு அரைத்த செம்பருத்தி விழுதை வெறும் வயிற்றில் உண்ணலாம்.

தேன்

தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதில், 17 முதல் 70 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. தேனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டால், உடல் இளைக்கும்; உடல் உறுதியாகும். ஆஸ்துமா பிரச்னைக்குத் தேன், முட்டை மற்றும் பால் சேர்த்து பருகலாம். வாந்தி, ஜலதோஷம் போன்றவற்றுக்குத் தேனுடன் எலுமிச்சைப்பழச் சாறு கலந்து பருகலாம். மிதமான சூட்டில், பாலோடு தேன் சேர்த்து பருகும்போது ரத்தச்சோகையும் சரியாகும்.

மாதுளம் பழம்

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த உற்பத்தியையும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகின்றன. மாதுளைச் சாற்றில் தேன் கலந்து பருகும்போது, இதயம் பலம்பெறும்; நரம்புத் தளர்ச்சி மற்றும் ஜீரணப் பிரச்னைகள் நீங்கும். பித்தப் பிரச்னைகள் சரியாக, மாதுளைச் சாற்றோடு கற்கண்டுப் பொடி கலந்து பருகலாம். மாதுளம் பழம் சாப்பிட்டால் இதயத்துக்கும் மூளைக்கும் சக்தி கிடைக்கும்.

பூண்டு

தினசரி பூண்டு எடுத்துக்கொள்வது அனைத்து வகையான பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். நோய்க்கிருமிகளை மட்டும் அல்ல... உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு. சளி, ஃப்ளூ, பல் வலி போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால், பூண்டின் முழுப் பலனும் கிடைத்துவிடாது. எனவே, தினசரி ஒன்றிரண்டு பூண்டைத் தோல் உரித்து, சாலட், சூப் போன்றவற்றில் போட்டுச் சாப்பிடுவது நல்லது. பூண்டைப்போலவே, வெங்காயமும் சிறந்த ஆன்டிபயாட்டிக் உணவு.

மஞ்சள்

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. இதில் உள்ள குர்குமின், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள மஞ்சள், இருமலுக்குச் சிறந்த மருந்து. சளி, இருமலினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால், தேனுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடலாம். ஆயுர்வேத பாரம்பர்யத்தில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் சிறந்த பொருளாக மஞ்சள் கருதப்படுகிறது.

முட்டைகோஸ்

முட்டைகோஸில் உள்ள கந்தகம், கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இவை மட்டும் இன்றி, பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பினை முட்டைகோஸ் ஈடுசெய்யும். அல்சரைக் குணப்படுத்தும் குளூட்டமைன் சத்தும் இதில் உள்ளது.

எலுமிச்சைப் பழம்

இதில் உள்ள சிட்ரிக் அமிலம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து, நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சைச் சாற்றில் மருதாணி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து, காலில் தடவுவதன் மூலம் பாதவெடிப்புகள் சரியாகும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, முகப்பொலிவைத் தரும். பருக்களை நீக்கும்.

தயிர்

தயிரில், `புரோபயாட்டிக்’ எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்துள்ளது. இது, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துன்றன. மேலும், இதில் உள்ள லேக்டோபேசியல் (Lactobacil) செரிமானத்தைத் தூண்டி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்துவிடும்.

அன்னாசிப் பழம்

ஆன்டிஃபங்கல் தன்மை கொண்டது. அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி, புரோமெலின் சத்து அதிகமாக உள்ளன. புரோமெலின், கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். ஜீரண மண்டல உறுப்புகளை வலுவாக்கும். அன்னாசிப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
672
Location
chennai
அசைவ உணவு செரிக்கவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க

அசைவ உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உணவை பார்த்தவுடன் பாய்ந்து மேய்ந்து விடும் சிலர், சாப்பிட்டு முடித்த பின் படும் துயரம் தான் அஜீரண கோளாறு. செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

வெந்நீர்:

அசைவம் சாப்பிடும் போது குளிர்ந்த தண்ணீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்கிறது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நீங்கள் சாப்பிட்ட உடன் மிதமான சூடுள்ள நீரை பருகுங்கள் இதனால் உணவு செரிப்பது எளிமையாகிறது. கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், காலையில் மலப்பிரச்சனை ஏற்படாமல் எளிதாகிறது.

பப்பாளி:

பப்பாளியில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. இந்த பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம் அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாம்.


சீரகம்:

அசைவ உணவு செரிக்காமல் அவஸ்தைப்படும் போது, சீராக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். மேலும் இது, மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

புதினா ஜூஸ்:

புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. அசைவ சாப்பாட்டிற்கு பின் புதினா மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸ் குடித்தால், அவை செரிமான பிரச்சனையை சரி செய்வதுடன், அவை வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க உதவும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுக்கிறது. இந்த அமிலத்தன்மை அதிகரித்தால் அது வயிற்றில் எரிச்சலை உண்டாகும். நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

க்ரீன் டீ:

சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். காலை மாலை என ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ என அருந்தலாம்.

1531827084269.png
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
672
Location
chennai
ராஜஸ்தான் ஸ்பெஷல் தர்பூசணி சப்ஜி

தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழத்தின் வெள்ளைப் பகுதி துண்டுகள் - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
தனியாத்தூள் (மல்லித்தூள்) - சிறிதளவு,
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை :

தர்பூசணி பழத்தின் வெள்ளைப் பகுதியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அதனுடன் தர்பூசணித் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

நன்றாக வெந்ததும் மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சூப்பரான தர்பூசணி சப்ஜி ரெடி.

சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள ஏற்றது.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
672
Location
chennai
கேழ்வரகு - கொள்ளு கேரட் சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 200 கிராம்,
கொள்ளு மாவு - 200 கிராம்,
கேரட் - 150 கிராம்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை :

கேரட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு, கொள்ளு மாவுடன் உப்பு, துருவிய கேரட் போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சுற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

அருமையான கேழ்வரகு - கொள்ளு கேரட் சப்பாத்தி ரெடி.

இதற்கு தக்காளி சட்னி அல்லது குருமா சுவை கூட்டும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
ஈஸியா எரிக்கலாம் கலோரி!:p

ணவின்றி உயிர் வாழ முடியாது. சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்கள் மட்டும் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேறினால்தான், மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். மனிதர்களுக்கு உடல் எடை மற்றும் அவரது உயரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1500- 2500 கலோரிகள் வரை உணவு தேவைப்படுகிறது. தினமும் குறிப்பிட்ட கலோரிகளை ஏதாவது பயிற்சி மூலம் எரிக்க வேண்டியதும் அவசியம்.

1531894726531.png


தினமும் ஒரு மணி நேரம் நன்றாக வாலிபால் விளையாடினால், 180 கலோரிகள் வரை எரிக்க முடியும்.


அரை மணி நேரத்தில் இரண்டு கி.மீ வரை வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டால், 80 கலோரிகளை எரிக்கலாம்.


உங்கள் வீட்டை ஒரு மணி நேரம் சின்சியராக குனிந்து நிமிர்ந்து சுத்தம்செய்தால், உங்கள் உடலில் இருந்து 210 கலோரிகள் காலி.


டென்னிஸ், 40 நிமிடங்கள் விளையாடினால், சுமார் 294 கலோரிகள் எரிக்கப்படும்.


ஒரு மணி நேரத்தில் எட்டு கி.மீ தூரம் வேகமாக ரன்னிங் செய்தால், 522 கலோரிகள் வரை எரிக்கலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?


பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.


ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.


பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.

பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.


பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.


பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
எப்போது சாப்பிட வேண்டும்?


பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.


உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.


சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.

உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.


நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.


ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
வாழைப்பூ வடை


தேவையானவை:
வாழைப்பூ - ஒன்று, நீர் மோர் - 250 மி.லி., நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - சிறிதளவு, கடலைப் பருப்பு - 100 கிராம், இஞ்சி - சிறிய துண்டு.


செய்முறை:
கடலைப் பருப்பை ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவை ஆய்ந்து மோரில் போட வேண்டும். பிறகு, மோரை வடித்து நறுக்கிய வாழைப்பூவை உப்புச் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, மாவைப் பருப்பு வடை போலத் தட்டி, கடாயில் எண்ணெய் சூடானதும் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.