அரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா

தேவையான பொருட்கள் :

பொரி - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
மஞ்சள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவுசெய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.

எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..

சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
உடலுக்கு சக்தி தரும் காளான் பார்லி சூப்

தேவையான பொருட்கள் :

காளான் - 100 கிராம்
பார்லி - 50 கிராம்
பட்டர் / எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
ரசப்பொடி - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
சத்து மாவு - 2 தேக்கரண்டி
ஃப்ரஷ் ஒரிகனோ - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிதுசெய்முறை :

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி, காளானை சிறுத்துண்டுகளாக நறுக்கவும்.

பார்லியை வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, காளான் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும்.

கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்..

சத்து நிறைந்த காளான் பார்லி சூப் ரெடி.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,704
Likes
35,077
Location
mysore
Wonderful காளான் பார்லி சூப்! Thank you
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
கடலைப் பருப்பு டிலைட்

என்னென்ன தேவை?

வேகவைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
துருவிய வெல்லம் - 250 கிராம்,
நெய் - 100 கிராம்,
தேங்காய்த்துருவல் அல்லது கொப்பரை துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
வறுத்த கசகசா - 1 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, காய்ந்ததிராட்சை - 25 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த கடலை மாவு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து கிளறி நன்றாக சுருண்டு வரும்போது கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும். நான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், கரைத்த குங்குமப்பூ கலவை, முந்திரி, திராட்சை, கசகசா சேர்த்து கிளறி கடலைப்பருப்பு கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.

1534823530236.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
ஜவ்வரிசி தயிர் வடை

என்னென்ன தேவை?

நைலான் ஜவ்வரிசி 100 கிராம்,
உளுந்து 1/2 கப்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1,
நறுக்கிய பச்சைமிளகாய் 2,
நறுக்கிய கொத்தமல்லி 1 கைப்பிடி
, துருவிய இஞ்சி, கேரட் சிறிது
, பொரிக்க எண்ணெய்,
உப்பு தேவைக்கு,
கடைந்த கெட்டித்தயிர் 2 கப்,
சர்க்கரை,
மிளகாய்த்தூள்,
சாட் மசாலாத்தூள் சிறிது.

எப்படிச் செய்வது?


ஜவ்வரிசியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பிறகு பிழிந்து கொள்ளவும். உளுந்தை 20 நிமிடம் ஊறவைத்து வடித்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனுடன் ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி சேர்த்து கலந்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வடித்து வைக்கவும்.

தயிர் வடை செய்ய:

தயிரில் சர்க்கரை, சிறிது உப்பு கலந்து கொள்ளவும். தட்டில் வடைகளை அடுக்கி அதன் மீது தயிர் கலவையை ஊற்றி மல்லித்தழை, கேரட் துருவல், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சிறிது குளிரவைத்து பரிமாறவும்.

1534823889830.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
இரும்பு சத்து நிறைந்த பசலை கீரை சூப்

தேவையான பொருட்கள் :

பசலை கீரை - ஒரு சின்ன கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
பூண்டு - மூன்று பல்
சோள மாவு அல்லது அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
பட்டர் - இரண்டு டீஸ்பூன்
பால் - 1 / 2 டம்ளர்
தண்ணீர் - ஒன்று அல்லது இரண்டு டம்ளர்செய்முறை :

பசலைக்கீரையினை சுத்தமாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் பட்டர் போட்டு கரைந்த பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

அடுத்து அதில் நறுக்கிய கீரையினை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

நன்றாக கீரை வெந்த பின்பு அதனை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

கீரை ஆறிய பிறகு சிறுது தண்ணீர் ஊற்றி கீரையினை அரைத்து எடுக்கவும்.

இதனை எடுத்து வைத்த தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

சிறு பவுலில் பால், சோள மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கட்டி வராமல் கலந்து கீரை கலவையில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் சூடு செய்து இறக்கவும்.

கடைசியாக தேவைக்கு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.

சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி…
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
அலர்ஜி!

லைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்றொரு பழமொழி உண்டு. தலைவலி, காய்ச்சல் வரிசையில் ஒவ்வாமையையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு ஒவ்வாமை மனிதர்களைப் படுத்தியெடுக்கிறது. சிலருக்குப் புகை ஒவ்வாமை; சிலருக்குத் தாளிக்கும் வாசனை ஒவ்வாமை; இன்னும் சிலருக்கு அதிகாலைக் காற்று ஒவ்வாமை. தும்மல், அரிப்பு, தடிப்பு... என ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவுகள் எரிச்சலூட்டுபவை.

1534995050416.png


ஒவ்வாமை என்பது என்ன?

டலால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பொருள் உணவாகவோ, மருந்தாகவோ, தூசியாகவோ உள்ளே நுழையும்போது உடல் தனது எதிர்ப்பைக் காட்டும். ஒவ்வாமை எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் வரலாம். ஒவ்வாமையைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.