அரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#81
Cucumber Kheer‏... Satvik Recipe

This Satvik recipe is for all the people who think that they have tried each recipe of kheer available worldwide. Cucumber Kheer‏ is a lip-smacking kheer recipe which most of us wouldn't have heard of. This scrumptious kheer is made with milk, sugar, cucumber pieces, cooked further with condensed milk, sago and garnished with cashews. This lip-smacking dessert seems totally worth a try as it promises a variety of pleasing flavors in the first bite itself.


  • 2 cup milk
  • 2 teaspoon powdered green cardamom
  • 4 tablespoon cashews
  • 1/2 cup sago
  • water as required
  • 1/4 cup sugar
  • 5 tablespoon ghee
  • 4 cup cucumber
  • 1/2 cup condensed milk

How to make Cucumber Kheer‏
  • Step 1
    To begin with, take a deep-bottomed pan and put sago along with enough water to submerge in it. Let soak for about an hour or so. Then, take the cucumber, peel and chop it further into pieces.
  • Step 2
    Next, drain the water, refill it again and boil sago along with cucumber pieces until they turn tender on medium flame. Once done, drain the water and add salt. Once the salt is dissolved, pour condensed milk, milk and stir along.
  • Step 3
    Turn the flame to low and let simmer for about 5 minutes. Add water if thinner consistency is desired. Once cooked, add cardamom powder, turn off the flame and cover with a lid.
  • Step 4
    Your last step would be to place a pan on medium flame, pour ghee and once heated, add cashews and fry until golden brown. Pour it over the prepared cucumber kheer while serving.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#82
Masala Popcorn Recipe
Masala Popcorn recipe is a delicious and unique twist given to the unflavored and natural popcorn. This flavorsome combination of popcorns, with the zesty spices is sure to be loved by all the spice lovers

Ingredients of Masala Popcorn

  • 4 cup unpopped popcorns
  • 2 teaspoon coriander seeds
  • 2 teaspoon powdered Kashmiri red chilli
  • 1 pinch asafoetida
  • salt as required
  • 2 tablespoon refined oil
  • 2 teaspoon fennel seeds
  • 1 teaspoon turmeric
  • 1/4 teaspoon sugar
How to make Masala Popcorn

  • Step 1
To prepare this snack recipe, place the unpopped popcorn in a bowl and microwave them for 2-3 minutes or until all corns have popped. Once done, transfer these in a bowl and cover them for some time.

  • Step 2
Now, in a pan, heat oil over medium flame. When the oil is hot enough, add coriander seeds along with fennel seeds. Saute for a while, and let the seeds splutter. Now, add the microwaved popcorns and stir firmly into the pan.

  • Step 3
Next, add on the Kashmiri red chili powder, turmeric powder, sugar, asafoetida and salt as per your taste. Saute the popcorns well with the spices and make sure they get evenly coated. Once done, remove from heat and serve hot with a beverage of your choice!
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#83
மொறுமொறு பூரி செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்





பூரி செய்யும்போது மாவுடன் ரவையை வறுத்து சேர்த்து பிசைந்தால் பூரி சுவையுடனும், மொறுமொறுப்புடனும் இருக்கும்.

வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் கண்ணாடிகளைத் துடைத்தால் பளிச்சென்றிருக்கும்.

முட்டை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் முன் முட்டைக் கூட்டில் சமையல் எண்ணெய்யைத் தடவி அதில்முட்டைகளை வைத்தால் கெடாது.
சீனி வைத்துள்ள பாட்டில் அல்லது ஜாரில் சிறிது கிராம்புத் துண்டுகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.


மீன், இறைச்சி ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது கையில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.வாடை அடிக்காது. கையில் பாதிப்பு ஏற்படாது.


வீட்டில் எறும்புகள் தொல்லை இருந்தால் அதற்கு பெருங்காயத் தூளைத் தூவிவிடவும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.



பூண்டு, வெங்காயம்,மாமிசம் இவற்றை கத்தியால் வெட்டும்போது துர்நாற்றம் வீசும். இதற்கு சிறிதளவு கல் உப்பை பொடித்து கத்தியில் தடவி நீரில் கழுவினால் போதும்.

பழங்களை கடைகளில் இருந்து வாங்கி வரும்போது வீட்டில் அவற்றை சிறிதளவு வினிகர் கலந்த நீரில் போட்டு கழுவி சாப்பிடலாம். கிருமிகள் இருக்காது.
அரிசி, கோதுமை போன்ற தானியங்களை போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சிறிது வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் தொல்லை இருக்காது.


வாழைத் தண்டை பொடிப் பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டுப் பிசைந்து பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டு கலந்து வடை செய்தால் மொறு மொறுவென சுவை ஆக இருக்கும்.

கத்தரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்க வேண்டும், கத்தரிக்காய் நன்றாக குழையும், ருசியும் கூடும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#84
கை வைத்தியம்!

தேங்காயைப் பாலெடுத்து, சிறிது கற்கண்டு சேர்த்து நெய்யில் வறுத்த பெருங்காயம் பொடியும் சேர்த்துப் பருகி வர, மூலத்தினால் உண்டான எரிச்சல் வலி குறையும்.

சேப்பங்கிழங்கை புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மூலம் நீங்கும்.

பிரண்டையை நெய் விட்டு வதக்கி அரைத்து, பாக்களவு, காலை, மாலை சாப்பிட்டு வர, மூலத்தால் உண்டாகும் வலி, குருதிப் போக்கு சரியாகும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#85
பாசிப்பருப்பு இட்லி

தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - அரை கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து அரைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். இதனுடன் சமையல் சோடா, தயிர், தேங்காய்த் துருவல், உப்பு ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#86
கோசுமல்லி

தேவையானவை:
பாசிப் பருப்பு - அரை கப், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சிறிய எலுமிச்சைப் பழம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து, பிறகு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.



குறிப்பு:
மாங்காய், வெள்ளரிக்காயையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#87
Tips ...Tips !!

மோர்க்குழம்புக்கு அரைத்து விடும்போது சிறிது ஓமம் சேர்த்து அரைத்தால், குழம்பு வாசனையில் அசத்தும்.

கிழங்கு வகைகளை சீக்கிரம் வேகவைக்க வேண்டுமானால் பத்து நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பிறகு வேகவையுங்கள்; எளிதில் வெந்துவிடும்.

சம் வைத்தபிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை ரசத்தில் போட்டு மூடி வைத்து, சிறிது நேரம் கழித்துப் பயன்படுத்தி னால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

1528968707013.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#88
சீரக வாட்டர்

தேவையானவை:

தண்ணீர் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், துளசி இலைகள் – 5.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். இதனுடன் துளசி இலைகள் சேர்த்து மூடி வைக்கவும். ஆறிய பின் வடிகட்டி பருகவும்.

குறிப்பு:

கோடையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#89
பீட்ரூட் லஸ்ஸி

தேவையானவை:

பீட்ரூட் துருவல் – கால் கப், கெட்டித் தயிர் – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை:

பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து சாப்பிட... மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

கால்சியம் நிறைந்தது; ரத்தச் சோகையை சரிசெய்ய உதவுகிறது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#90
மசாலா மில்க்‌ஷேக்----குட்டீஸ் விரும்பும் பானம்

தேவையானவை:

பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது), பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 5, பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன், மிளகு – 4, ஏலக்காய் – ஒன்று, சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா , மிளகு, ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் பனங்கற்கண்டுத்தூள், சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். பாலுடன் அரைத்த பவுடரைக் கலந்து ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பருகவும்.

குறிப்பு:


குட்டீஸ் விரும்பும் பானம் இது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.