அருகம்புல் மருத்துவ பலன்கள்

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
“ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி" என்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு. இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது. கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும்.


இந்துக்களின் பூஜைகளில் அருகம்புல் அவசியம் இடம் பெறும். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் அதில் பல மருத்துவ தன்மைகள் இருப்பது. அருகம்புல்லை போன்ற அற்புதமான ஊட்டச்சத்து பானம் வேறில்லை என்றே கூறலாம்.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது பழமொழி…ஆனால் புலி புல்லை தின்னும் அதற்கு வயிறு சரியில்லாத போது. மிருகங்கள் அறிந்து வைத்திருகின்றன இப்புல்லின் சிறப்பு பற்றி…!
பயன்படுத்தும் முறைகளும், பலன்களும்
பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

* நல்ல இளந் தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் நன்கு கழுவி அரைத்து பசும்பாலுடன் கலந்து சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் பலவீனமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இந்த முறையை கையாளலாம்.

* அருகம் புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும்.

* அடிபட்டு ஏற்படும் வெட்டு காயத்திற்குஅரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும் அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்கட்டினால் ரத்தப்பெருக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

* அருகம்புல்லை அரைத்து தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் சருமம் பளபளக்கும். அருகம்புல்லை பொடியாக்கி கடலை மாவுடன் தேய்த்துக் குளித்தாலும் இதே பலன் கிடைக்கும்.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, குணம் கிடைக்கும் . உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது. யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.