அர்த்தமுள்ள அடக்குமுறைகள்

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
அர்த்தமுள்ள அடக்குமுறைகள்

சித்த வைத்தியத்தில் ஒரு பதினாலு விஷயங்கள் அடக்கப்படாது என்று சொல்லப்பட்டிக்கின்றது
இதை ஒருவர் இன்னொருத்தர்கிட்டே சொல்லிக் கொண்டிருந்தார்.


கேட்டுக் கொண்டு இருந்தவருக்கு திடீரென்று தும்மல் வந்துவிட்டது. அதை அடக்கிக்கொண்டே அந்த பதினாலு விஷயங்க என்னென்ன என்றார்.
அதில் ஒண்ணைத்தான் நீ இப்போ அடக்கினது...
புரியலையே...?
என்ன புரியலே... இப்பத் தும்மல் வந்தது இல்லே... அதையேன் அடக்கினே? அடக்கக் கூடாதுன்னு இப்ப சொன்ன பதினாலுல இதுவும் ஒண்ணாக்கும்.
அடக்கடவுளே... அதுசரி... அடக்கினா என்னாகும்?
தலைவலி வரும்; முகம் கோணும்; இடுப்பு வலி... இதெல்லாம் நடக்கும்.
அப்படியா...! அது எப்படி?
அந்தப் பதினாலு விஷயங்களும் இயற்கையோட இயல்பான ஒரு ஸ்பீடு. அதைக் கட்டுப்படுத்தக்கூடாது. ஸ்ஃபீட் பிரேக் போடப்படாது.என்ன சரியா!
அது சரி... பதினாலுல ஒண்ணு தும்மல். மத்த பதிமூணு என்னென்ன சொல்லேன் கேட்போம்.
சொல்றேன்... சொல்றேன்... நான்னா கேட்டுக்க. நான் சொல்லப்போறதிலே எதை எதை அடக்கினா என்னென்ன நடக்கும்னு விளாவாரியா புட்டுப்புட்டு வக்கிறேன்... அதுப்படி கேட்டுநடந்துக்கோ...
அபான வாயு. இதை அடக்கினா மார்பு - வயித்து வலி - உடலில் குத்தல். மலம் சிறுநீர்தடை - பசி மந்தம் இப்படிöல்லாம் ஆகும்.
அடடே! கேஸை அடக்கப்படாதுன்னு சொல்ல வர்றீங்க. ஃப்ரியா விட்டுடணும். அதானே!
ஆமாம்... அதுவேதான்... அடுத்தது சிறுநீர். சிறுநீரை அடக்கினா நீரடைப்பு. நீர்த்தாரைப் புண் - உறுப்பு சோர்வு ஏற்படும்.
அடுத்தபடியா மலம். இதை அடக்குவதாலே முழுங்கால் வலி - கபம் - தலைவலி - உடல் பலவீனம் எல்லாம் வரும். அடடே ஏன் இப்படிக் கொட்டாவி மேலே கொட்டாவியா விடறே? ராத்திரியெல்லாம் என்ன பண்ணினே? தூங்கலியா!
ஏதேது... கொட்டாவியக் கூட அடக்கக்கூடாதுன்னு உங்க சித்தவைத்தியம் சொல்லுதோ?
சொல்லுதோ என்ன? சொல்லியிருக்கு. கொட்டாவிய அடக்கப்படாது. அதை அடக்கியாண்டா முகவாட்டம் - செரியாமை புத்தி மங்கறது இதெல்லாம் நடக்கும். என்ன உன் வீட்டுக்கார அம்மா பலமா குரல் கொடுக்கிறாங்க...?
சாப்பிடக் கூப்பிடறாங்க...
என்ன அதுக்குள்ளாறவா? மணி பன்னிரண்டு கூட ஆகலே...!
அட நீங்க ஒண்ணு. இன்னும் காலை டிபனே நடக்கலே... எழுந்ததிலிருந்து வாயில பச்சைத் தண்ணீக்கூட இன்னும் பல்லுல படலே...
அடப்பாவி! இது ரொம்ப தப்பாச்சே... பசி - தாகத்தைக் கூட அடக்கப்படாது. தெரிஞ்சுக்கோ, அடக்கினா உடம்பு பூரா குத்துற மாதிரி இருக்கும். உடல் இளைக்கும். முகச்சோர்வு ஏற்படும். மூட்டுவலி வரும்.
அப்புறம் இருமலை அடக்கக்கூடாது. பெருமூச்சை அடக்கக்கூடாது. என்னவோ கேக்க வர்றே.. எதுவா இருந்தாலும் கடைசியா கேளு. நடுவில என்னை அடக்கப்படாது. அப்புறம் நான் என் கோவத்தை அடக்க அங்கிட்டும் இங்கிட்டும் குதிக்க வேண்டி வரும்.
சரி... சரி... நீங்க மேலே போங்க... இருமலையும் பெருமூச்சையும் அடக்கினா என்னாகும் சொல்லுங்க...
என்னாகும்? மூச்சில் துர்நாற்றம். இதயநோய்... வயிற்றுப் புண் - மயக்கம் - நடுக்கம் எல்லாம் வர வாய்ப்பாகும். முக்கியமா தூக்கத்தை அடக்கக் கூடாது. தலைவலி, கண் சிவப்பு, செவிட்டுத் தன்மை எல்லாம் ஏற்படும்.
சிலபேருக்குப் பஸ்ஸில் போறச்சே வாந்தி வரும். அடக்கப் பார்ப்பாங்க. அப்படி அடக்கறதாலே என்னாகும்?
நாளடைவில் தோலில் தடிப்பு. கண் நோய் இரும்ல் எல்லாம் வர வாய்ப்பாகும்... அப்புறம் கண்ணீரை அடக்கக் கூடாதாம். அதனால் மார்பு வலி, பீனிசம், ரோமக்காலில் புண்ணு, அல்சர் எல்லாம் வரும்.
வந்து... வந்து...
என்ன வந்து வந்துன்னு வந்தனம் பண்றே? சும்மாக் கூச்சப்படாம கேளு.
அதாங்க அதை அடக்க
இதில் என்ன இருக்கு.. ஏன் இத்தனை சங்கோஜம்? காம இச்சையை அடக்கலாமான்னு கேக்க வர்றே... அதுதானே... அடக்கலாமா? வேண்டாமாங்கிறது கேள்வியில்லே... அடக்கினா என்ன நிகழுங்கிறத சொல்றேன்.. அப்புறம் நீயே தீர்மானத்துக்கு வந்துடுவே.. அதை அடக்கினா திடீர் ஜுரம், மூட்டுகளில் வீக்கள், இரவில் இந்திரியம் வெளிப்படுதல் எல்லாம் நடக்கும்.
அப்புறம் மூச்சை அடக்கக் கூடாதுன்னு சித்தவைத்தியம் சொல்லுது அடக்கினா இருமல், சுவையின்மை வெட்டை போன்ற (உடல்சூடு) பிரச்சினைகள் வருமாம்.
அது சரியண்ணே.. மூச்சையடக்கக்கூடாதுன்னு சொல்றீங்களே... ஆனா மூச்சுப்பயிற்சின்னு வர்ரப்போ மூச்சை அடக்குகிறோமே; அது எப்படி? முத்துக் குளிக்கவாரீகளா? மூச்சையடக்க வாரீகளான்னு பாட்டு வேற இருக்கே..
அய்யா சாமி... அதையும் இதையும் முடிச்சுப் போட்டுக் குழப்பிக்கப் படாது.. அது வேற... இது வேற... அததை யாருக்கிட்ட கேக்கணுமோ அததை அவங்கவங்க கிட்டே கேக்கணும். நான் படிச்ச சமாச்சாரத்தை உங்கிட்டே ஷேர் பண்ணின்டேன் அவ்வளவுதான்.
சரி... சரி... கோபிச்சிக்காதீங்க... இன்னொண்ணு உங்ககிட்ட சொல்லியே ஆகணும்... பெருமூச்சை அடக்கக்கூடாதுன்னு பதினாலுல ஒண்ணா சொன்னீங்க. அது நம்மப் பொருத்த வரைக்கும் நூத்துக்கு நூறு சரிதான்...
பக்கத்து வீட்டுக்காரன் பங்களாவில் இருக்கான்.. மாடி மேல மாடியா கட்றான்... கார் வச்சிருக்கான்... கம்பெனி நடத்துறான்... ஆள் அம்புன்னு அமர்க்களப்படுத்தறான் அப்படின்னு நாம பெருமூச்சு விடாத நாளே இல்லியே, அடுத்தவங்களைப் பாத்து...
அடப்பாவி... நீ எப்பவும் வில்லங்கமாத்தான் பேசுவியா? போய் நேரத்தோடு சாப்பிடு... போ... போ...
அதோ பாருங்க. எம் பொண்டாட்டி என்னம்மா சத்தம் போடறாள்னு.. நான் இங்கென்ன உங்ககிட்ட வெட்டிக்கதையா பேசிக்கிட்டிருக்கேன்... இல்லே நீங்கதான் என்னாண்ட வெட்டிக்கதை பேசறீங்களா... அதுக்குள்ளாற என்னமா கூப்பாடு போடறா பாருங்க. இருடீ கழுதே... வர்றேன்.
அடே அடே அவளை ஏன்டா கழுதேன்னு சொல்றே.. உன்மேல இருக்கிற அக்கறையாலதானே கூப்பிடறா... முட்டாள் கழுதை... உனக்கிது தெரியமாட்டேங்குதே... உனக்கு இத்தனை கோபம் ஆகாது. கோபத்தை அடக்கணும்.
என்னண்ணே நீங்க சொல்றீங்க. நீங்க இவ்வளவு நேரமா சொன்ன அந்தப் பதினாலையும் அடக்குவேனே தவிர, இந்தக் கோபத்தை மட்டும் என்னாலே அடக்க முடியாதுண்ணே.
எதை அடக்கக் கூடாதோ அதை அடக்குவே... எதை அடக்கணுமோ அதை அடக்கமாட்டே... இன்னும் உன்னால என்னத்தையெல்லாம் அடக்க முடியாதுன்னு சொல்லு..
அட நீங்க ஒண்ணு. போங்கண்ணே... சும்மா வெளியில பார்க்கத்தான் நான் இப்படி. இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் வெளியிலதான் உண்மையாவே நான் அவளைக் கட்டின நாளாப் பார்க்கிறேன். அடக்கியாளணும்னு... ம்... நடக்கலே...
அடப்பாவி பயலே. மனைவிய அடக்கறது மகிழ்ச்சியை அடக்குகிற மாதிரி.. நாடும் வீடும் நல்லாயிருக்கனும்னா பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கணும். முதல்ல உன் நாக்கை அடக்கு. அப்புறம் எல்லாம் தன்னாலே சரியாயிடும்.
போங்கண்ணே...
என்னடா சிரிக்கிறே... பதினாலு விஷயங்களை அடக்கினா என்னாகும்னு சொன்னேன். இந்த நாக்கு விஷயத்தை அடக்கலேன்னா என்ன நடக்கும்னு நான் சொல்ல என்ன இருக்கு... வள்ளுவனே எழுதி வச்சுட்டுப் போயிருக்கான... என்னன்னு தெரியுமா?
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...
அப்படீன்னு...
சரி! அடக்கக்கூடாததைப் பாத்தி பேசினோம்...
அடக்கத்தைப் பத்தியும் கொஞ்சம் பேசலாமா?
ஓ! பேசலாமே..
கதிர் நிறைஞ்சா பயிர் தரையிலத்தட்டுமாம்.. மேலானவர்கள் அடக்கமும் இப்படித்தான்னு - பிஷப் ரெய்னால்ட்ஸ் சொல்லியிருக்கிறார். 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.