அறுசுவை -''"உணவே மருந்து, மருந்தே உணவு"

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
அறுசுவை - துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவையே ஆறு வகைச் சுவை.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவையும் சம அளவில் தேவை. அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடும் போது தான் உடலில் பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அறுசுவைக்கும் நம் உணவில் இடம் கொடுத்து அதன்மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுத்துக்கொள்வோம். இனிய விஜய வருட வாழ்த்துக்கள் !

இதன் பலன்கள் -

இனிப்பு - தசையை வளர்க்கின்றது

பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.


நம் சித்த ம்ருத்துவர்களும், ஆயுர்வேத* மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொன்னார்கள்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very good information you have shared about the benefits of foods with 6 different tastes. thank you Sir
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.