அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன ?

#1
அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன ?

அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது.
60 வயசுக்கு என்ன விஷேசம்?
சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்.
நம்மள போல வேலை செய்பவர்களும் ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம்.
அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...
கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..
20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை
20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை
40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை
60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.
அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்லுது?
மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ குற்றம்,
தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக
அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் ,
78 ஆம் ஆண்டு துவக்கம்,
80 ஆம் ஆண்டு நிறைவு,
100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.
இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி... குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..
பெயரிடப்பட்ட தமிழ் ஆண்டுகள் அறுபது. பிரபவ, விபவ என்று
சாஸ்திரங்களின் படி மனிதனுக்கு என்று வழங்கப்பட்ட நிறைந்த ஆயுள் என்பது 120. கிருஷ்ணர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது புராணங்கள்.
பகல் இரவு என்பது போல 60 ஆண்டுகள் முதல் சுற்று முடிந்து இரண்டாம் அறுபது ஆண்டுகள் ஆரம்பமாகிறது.
முதல் அறுபது ஆண்டுகளில் லௌகீக(கர்ம) வாழ்க்கை வாழ்கிறோம்.
இரண்டாம் அறுபது ஆண்டுகள் கடமைகள் முடித்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
அறுபதாம் கல்யாணம் செய்வதால்
1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கிறோம்.
2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி, பரிகாரம் என்ற பெயரில் மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம்
3. இனி தர்ம வழியிலான பொதுவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிகொண்டு இவ்வளவு காலம் கூட வந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற வாழ்வை தருகிறோம்.
இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை, நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா விட்டாலும்,
உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம் செய்யலாம்.