அறுபதாம் கல்யாணம்.....!!

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன் என்று தெரியுமா?




பெற்றோருக்கு பிள்ளைகள் சேர்ந்து திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்ச்சியே அறுபதாம் கல்யாணம் ஆகும். தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை அறுபதாம் கல்யாணம், மணிவிழா, சஷ்டியப்த பு+ர்த்தி என்றும் சொல்வார்கள்.

அறுபதாம் கல்யாணமானது ஒருவருக்கு வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது. இந்த நிகழ்வானது ஒருவருக்கு 60 வயது முடிந்து, 61வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது. ஏனெனில் ஒரு மனிதர் பிறந்த தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம், வருடம் ஆகிய அனைத்தும் அந்த மனிதரின் 60வது வயது நிறைவு பெற்றதற்கு அடுத்த நாள் வரும்.

ஒரு மனிதன் இளமையில் திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து, குழந்தைகளை பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்த்து, நல்ல வாழ்வை அமைத்துக் கொடுத்து, இல்லற கடமையை நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும், அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாக அறுபதாம் கல்யாணம் அமைகின்றது.

தங்களின் நலனுக்காக உழைத்த தாய், தந்தையரின் மனம் மகிழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகவும், அவர்களது குழந்தைகள், பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணத்தை நடத்துவார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது போல், பெற்றோர்களுக்கு குழந்தைகள் நடத்தி வைப்பது அறுபதாம் கல்யாணத்தின் சிறப்பம்சம் ஆகும்.

அறுபது ஆண்டுகள் இன்பத்திலும், துன்பத்திலும் இணைந்து வாழ்ந்து இல்லற வாழ்க்கையை கடந்து, தன் துணையுடன் இணைந்து நடக்கும் அறுபதாம் கல்யாண பாக்கியம் என்பது ஒருவருக்கு தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அறுபதாம் கல்யாணம் என்பது எல்லோருக்கும் கிடைக்காது.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களின் 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கத்திலும், 78 ஆம் ஆண்டு துவக்கத்திலும், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலக்கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.