அறுபதில் அவசியம் மறதி சோதனை

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
அறுபதில் அவசியம் மறதி சோதனை

வயதானவர்களின் ஞாபக மறதிப் பிரச்சனைக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கென்றே 'நினைவாற்றல் மையம்' அமைப்பை சென்னையில் நடத்தி வரும் நடராஜன், முதியோர் மருத்துவத்தில் ஐம்பதுக்கும் அதிக ஆராய்சிகளை செய்துள்ளவர்.

'மறதி நோய் சுகமா சுமைய' என்கின்ற இவரது நூல், சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது.

'என்கிட்டே வர்ற நோயாளிகள் எல்லோருமே வயதானவங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். எல்லோருக்கும் பொதுவானத நான் பார்த்தது ஞாபக மறதியை தான்.

மறதியில் நிறைய வகைகள் இருந்தாலும் பொதுவா மனிதர்களுக்கு வர்றது, 'அம்னீசியா', 'டிமென்ஷியா', 'அல்ஸைமர்' ங்கற மூணு தான். இதுல அம்னீசியா தற்காலிகமானது. இதனால பெரிய பிரச்சனை இருக்காது. 'டிமென்ஷியா'வும் குணப்படுத்தக்கூடியது தான்.

உடல்ல ஏற்படற மட்டத்த குறைபாடுகளை பொறுத்து இந்த பிரச்சனை வரும். அதை சரி பண்ணிட்டோம்னா, மறதியும் போய்டும். உதாரணத்துக்கு, ரத்த அழுத்தம் குறைஞ்சிருக்கற நேரங்கள்ல சிலருக்கு சில விஷயங்கள் மறந்திடும். திரும்ப அது நார்மலுக்கு வந்துட்டா மறதி இருக்காது.

மூணாவது மரதியான அல்ஷைமரை குணப்படுதத்தான் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படலை. இதனோட தாக்கம் இருக்கறவங்களுக்கு 40 வருசத்துக்கு முந்தய நிகழ்வுகள் ஞாபகத்தில் இருக்கும். ஆனா, முந்தா நாள் நடந்தது எதுவும் நினைவிருக்காது.

பிள்ளைகளை கூட அடையாளம் காண முடியாத நிலையும் ஏற்படலாம். பிரச்சனையோட தன்மையை பொறுத்து இதுல மரணத்துக்கு கூட வாய்ப்பு இருக்குங்கறதை மறுக்க முடியாது.' என்கிற நடராஜன்,
"அதுக்காக அதிர்ச்சியடைய தேவை இல்லை. அறுபது வயது தாண்டியவுடனே, ஒரே ஒரு முறை நினைவாற்றல் பரிசோதனை செய்து பார்த்துட்டா, எளிதில் இதுல இருந்து தப்பிக்கலாம். மனநல மருத்துவர்கள் கிட்ட இந்த பரிசோதனை பண்ணிக்கலாம்" என்கிறார்.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
thanks 4 sharing this inform....Anitha...
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
You are allways welcome sudha....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.