அலர்ஜியை ஏற்படுத்தும் 10 பொருட்கள் ஒவ்வா&#299

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அலர்ஜியை ஏற்படுத்தும் 10 பொருட்கள்

ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியானது நம் அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும்.

அது ஏற்பட காரணமாக இருக்கும் பொருட்களும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறுபடலாம். ஆனால் அதை அப்படியே விட்டு விட்டால் கஷ்டம் நமக்கு தான். உயிருக்கு ஆபத்தைக் கூட விளைவிக்கும். அதனால் அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.

அலர்ஜி என்பது நம் உடம்பில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பின் அசாதாரண எதிர்ச்செயல். நம் உடல் தற்காப்பு அமைப்பு ஆபத்தில்லா பொருட்களான மகரந்தம், விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள் மற்றும் சில உணவு வகைகளால் கூட எதிராக செயலாற்றும். எந்த பொருளாலும் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்; அதன் தன்மை மிதமானதாக அல்லது சற்று கடுமையாக அல்லது உயிருக்கே ஆபத்தை வர வைக்கும் அளவிற்கு கூட செல்லும்.

அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களின் வகைகள் ஏராளமாக உள்ளது. அதில் முக்கியமானவை மகரந்தம், மூட்டைப்பூச்சி அல்லது சிற்றுண்ணி, விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள், பூச்சிக்கொட்டுகள், இரப்பர் பால் மற்றும் சில உணவு வகைகளும், மருந்து வகைகளும் அடங்கும். அதிலும் அலர்ஜி ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் லேசான கண் எரிச்சலில் ஆரம்பித்து, உடல் வீக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற கடுமையான விளைவுகள் வரை செல்லும்.

இதோ, அலர்ஜியை ஏற்படுத்தும் 10 பொருட்களைப் பற்றி பார்ப்போமா!!!

1. மகரந்தம்
மரங்கள், புற்கள் மற்றும் களைகளிலிருந்து வரும் மகரந்தங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதனால் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் பொங்குதல் போன்ற அறிகுறிகளை காணலாம்.

2. விலங்குகளின் இறகு, தேகம்
மற்றும் செதில்கள் விலங்குகளின் சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வெளிவரும் புரதங்களும், அதன் எச்சிலில் உள்ள புரதங்களும் படுவதால், சில பேருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தும். இந்த அலர்ஜி வளர இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாகவும் எடுக்கலாம். இந்த மிருகங்களை விட்டு ஒதுங்கிச் சென்றாலும், இந்த அலர்ஜியின் அறிகுறிகள் பல நாட்களுக்கு நீடிக்கும்.

3.சிற்றுண்ணி
சிற்றுண்ணி என்பது நம் கண்களுக்கு அகப்படாத நுண்ணுயிர் பூச்சிகள். இது வீட்டில் இருக்கும் தூசியில் இருக்கும். அதுமட்டுமின்றி இவைகள் அதிக ஈரப்பதம் இருக்கும் அசுத்தமான இடத்தில் இருக்கும். மேலும் மனிதன் அல்லது வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் சருமங்களில், மகரந்தங்களில், பாக்டீரியாக்களில் மற்றும் பூஞ்சைகளில் குடி கொண்டிருக்கும்.

4. பூச்சிக் கடிகள்:
பூச்சிக்கடிகள் வாங்கியவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி உண்டான அலர்ஜி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்; ஏன் உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும். கடிப்பட்ட இடம் வீங்குதல், அதிகப்படியான அரிப்பு, சருமம் சிவத்தல் (பல வாரங்களுக்கு கூட நீடிக்கும்), குமட்டல், அயர்ச்சி மற்றும் சிறிய அளவு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பூச்சிக்கடியினால் ஏற்பட்ட அலர்ஜியின் அறிகுறிகளாகும்.

5. பெயிண்ட்
பெயிண்ட்டுகள் சில பேருக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அவைகளை தொடுவதாலும், மோப்பம் பிடிப்பதாலும் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

6. உணவு
பால், மீன்கள், முட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் தான் அலர்ஜியை தூண்டும் முக்கிய உணவு வகைகள். இந்த உணவுகளை சாப்பிட்ட சில நிமிடங்களில் அலர்ஜி போன்ற எதிர் விளைவை காட்ட தொடங்கி விடும்.


7. இரப்பர் பொருட்கள்
கையில் அணியும் இரப்பர் கையுறைகள், ஆணுறைகள் மற்றும் சில மருத்துவ கருவிகளை பயன்படுத்தும் போது அதிலுள்ள இரப்பர் தன்மையால் அலர்ஜி உண்டாகலாம். கண் எரிச்சல், மூக்கு ஒழுகுதல், தும்மல், மூச்சுத் திணறல் மற்றும் சருமம் அல்லது மூக்கு அரித்தல் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகள்.


8. மருந்து உண்ணுதல்
பென்சில்லின் அல்லது ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகளை பயன்படுத்தினால் ஏற்படும் அலர்ஜி மிதமான அளவு முதல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவு வரை செல்லும். கண் எரிச்சல், இரத்த ஓட்டத் தேக்கம், திசுத் தளர்ச்சி, முகம் வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் வீக்கம் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகள்.


9. நறுமணம்
வாசனைப் பொருட்கள், வாசனை மெழுகுவர்த்திகள், சலவைக்கு பயன்படுத்தும் பொடிகள் மற்றும் அழகுப் பொருட்களில் இருந்து வரும் நறுமணம் சில பேருக்கு அலர்ஜியை உண்டாக்கும். அது சிறிய அல்லது பெரிய அளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கும். சில பேருக்கு அந்த நறுமணம் மறைந்த பின் இந்த நோய் சரியாகி விடும். சில பேருக்கு இந்த அலர்ஜி அதிகப்படியாக சென்று பல நாட்கள் வரை நீடித்து நிற்கும்.


10. கரப்பான் பூச்சிகள்
கரப்பான் பூச்சிகள் என்பது அச்சம் உண்டாக்குகிறவைகள் மட்டுமல்ல. அதன் கழிவுகளில் இருக்கும் ஒரு வகையான புரதம் அலர்ஜியை உண்டாக்கும். கரப்பான் பூச்சிகளை வீட்டில் இருந்து ஒழிப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை; முக்கியமாக கோடைக் காலத்தில்.
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.