அலாரம் வைத்து எழுந்திருப்பது நல்லதல்ல

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அலாரம் வைத்து எழுந்திருப்பது நல்லதல்லநம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நிம்மதியாக உடல் முழுவதும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அலாரத்தின் சத்தம் வேகமாக அடிக்கும்பொழுது, நாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும் பொழுது, நமது உடல் பாதிப்பு அடைகிறது. நமது உடலில் ஒருவிதமான டென்சன் ஏற்படும். அந்த டென்சன் அந்தநாள் முழுவதும் நமக்கு இருக்கும். எனவே தயவு செய்து அலாரம் வைத்து எழுந்திருக்காதீர்கள்.


சற்று சிந்தித்துப்பாருங்கள், ஒருவேளை அலாரம் அடிக்கவில்ல என்றால் என்ன நடந்திருக்கும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரம் அதிகமாகத் தூன்கியிருப்பீர்கள் அல்லவா? அப்படி என்றால் என்ன அர்த்தம், நம், உடலுக்கு மேற்கொண்டு இரண்டு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலுக்கு தூக்கம் தேவைப்படும்பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திருத்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவது? தினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தைக் கட் செய்தால், பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மொத்தமாக தூங்கவேண்டியிருக்கும்.


எனவே தயவுசெய்து அலாரம் பயன்படுத்தாதீர்கள். நாங்கள் சீக்கிரமாக எழுந்திருக்கவேண்டும் அலாரம் இல்லாமல் எப்படி எழுந்திருப்பது என்று சிலர் கேள்வி கேட்கலாம், காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று அனைவரும் பிரச்சாரம் செய்கிறார்கள்,. ஆனால் சீக்கிரம் படுக்கவேண்டும் என்று இதுவரை யாரும் பிரச்சாரம் செய்வதே கிடையாது. இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியும். நாம் T.V அல்லது சினிமா படங்கள் போன்றத் தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை அல்லது இரண்டு மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு.


இரவு இரண்டு மணிக்கு யார் படுத்தாலும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? எனவே இரவு தாமதமாகப்படுத்தால் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருக்கவேண்டும். எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும். எனவே அலாரம் பயன்படுத்துவது ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு தினமும் பயன்படுத்தாமல் எப்போதாவது அவசரக் காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


மனதில் அதிகம் குழப்பம் இருந்து இரவு நீண்ட நேரமாக தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சுலபமான வழியுள்ளது. படுத்து ஓய்வு எடுத்தால் ஓய்வு மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால் உட்கார்ந்து ஓய்வு எடுத்தால் ஓய்வு சீக்கிரமாக கிடைக்கும். எனவே படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள். நீங்கள் நேரடியாக படுக்காமல் அமர்ந்து முதுகுக்கு சப்போட்டு கொடுத்து ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து தலைக்கு சப்போர்ட் கொடுத்து கண்களை மூடி அமைதியாக காலை நீட்டியோ அல்லது சம்மணம் இட்டு அமர்ந்து தூங்க ஆரம்பியுங்கள். அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.


தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள். வர்ம சிகிச்சையில் கொண்டை கொள்ளி என்று கூறுவார்கள்.


இன்றும் கிராமங்களில் ஒரு குழந்தைக்கு ஏதாவது வியாதி வந்தால் ஒரு பாட்டி வைத்தியம் செய்வார்கள். பூக்கட்டும் வெள்ளை நூலை ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு எடுத்து அதை வாயில் வைத்து பந்துபோல் உருட்டி, எச்சில் கலந்து குழந்தைகளை அமரவைத்து, குழந்தையின் உச்சந்தலையிலிருந்து இரண்டு அடி அல்லது நான்கு அடி உயரத்திலிருந்து அந்த தாய் வாயிலுள்ள எச்சில் கலந்த நூல் உருண்டையை துப்புவதால், அந்த உருண்டை நேரடியாக உச்சந்தலையில் படும்பொழுது அந்த ஒரு வினாடி தொடுவதன் மூலமாக குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று, நோய்கள் குணமாகும் என்று பல கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்சிலர் கிராமங்களில் அந்த எச்சில் கலந்த பந்து உருண்டையை உச்சந்தலையில் ஒட்டி வைத்துவிடுவார்கள். எனவே உச்சந்தலை என்பது 72,000 நாடி, நரம்புகள் சங்கமிக்கும் இடம். இந்த இடத்தில் நாம் சக்தியை செலுத்துவதன் மூலமாகவும் மசாஜ்செய்வதன் மூலமாகவும், தொட்டு தடவுவதன் மூலமாகவும் அல்லது நினைத்து பார்ப்பதன் மூலமாகவும் 72,000 நாடி, நரம்புகளை நாம் அமைதிப்படுத்த முடியும். எனவே இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்றால், உச்சந்தலையை உங்களுக்கு நீங்களே தடவிக் கொடுத்து தூங்கிக் கொள்ளலாம்.


குழந்தைகளுக்கு நோய் இருந்தாலோ அல்லது தூக்கம் வராமல் அழுதுக்கொண்டு இருந்தாலோ, உச்சந்தலையைத் தடவிக்க்கொடுத்தால் அந்த குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நமது கையில் உள்ள சுண்டுவிரலையும், கட்டைவிரலையும் தவிர மற்ற மூன்று விரல்களின் நுனிகளால் நமது தாடைக்கு கீழே உள்ள எலும்பில் லேசாக தடவிக்கொடுப்பதன் மூலமாக உடலில் தூக்கத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரக்கமுடியும்.


நமது வீடுகளில் குழந்தைகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருப்பார்கள். நடந்துகொண்டு படிக்கும்பொழுதும், அமர்ந்துகொண்டு படிக்கும்பொழுதும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆனால் குப்புறப்படுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் தாடைக்கு கீழே சப்போர்ட் கொடுத்து, எப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறீர்களோ கண்டிப்பாக அரைமணி நேரத்திற்குள் நன்றாக தூக்கம் வந்து, அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு தூங்கிவிடுவார்கள். எனவே நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவீர்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.