அலுவலகத்தில் சோர்வா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அலுவலகத்தில் சோர்வா?


ரிலாக்ஸ்

நினைக்கிற வேலையைச் செய்து முடிக்க ராமாயண வாலியைப் போல எதிரே இருக்கிறவரின் பலமும் இன்று தேவை. காரணம், 8 மணி நேர அலுவலக செயல்பாடுதான் மிச்சமிருக்கும் 16 மணி நேர வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

மராத்தான் பந்தயமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், நம்மை நாமே சார்ஜ் செய்து கொள்ள சில எளிய வழிகளை இங்கே குறிப்பிடுகிறோம். ஏற்கெனவே பின்பற்றிக் கொண்டிருந்தால் தொடருங்கள்... இல்லாவிட்டால் தொடங்குங்கள்!

*நாம் உணராமலேயே நம்மிடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம் காபி அருந்துவது. காபியில் உள்ள Caffeine என்ற வேதிப்பொருள் இதயம் மற்றும் சுவாச மண்டலத்தைத் தூண்டி நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறி இருக்கின்றன.

நல்லது என்பதற்காக அடிக்கடி காபி சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதையும் ஆய்வாளர்கள் நினைவுபடுத்தி இருக்கிறார்கள். அதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காபி என்ற அளவைத் தாண்டாமல் பயன்படுத்துங்கள்.

*காலை உணவைத் தவிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் எல்லாமே நியாயமற்றவை என்கிறார்கள் மருத்துவர்கள். காலையில் சாப்பிடாமல் அந்த நாளைத் தொடங்குவது, பெட்ரோல் இல்லாத வாகனத்துடன் பயணத்தை ஆரம்பிப்பது போன்றது. அலுவலக சோர்வு வர இது முக்கிய காரணம். அதனால், காலை உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் எனர்ஜியை பாதுகாக்கும்.

*எப்போதெல்லாம் சோர்வாக, தூக்கம் வருவதுபோல உணர்கிறீர்களோ அப்போது எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திப் பாருங்கள். மாற்றம் தெரியும்.

*தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதும் சோர்வை உண்டாக்குகிற காரணியாக இருக்கிறது. வேலையைக் கெடுக்காமல் சக ஊழியர்களுடன் விவாதிப்பது, சின்னதாக அலுவலகத்துக்குள்ளேயே வாக் போய் விட்டு வருவதும் நல்லது.

*காதலியைப் போல கம்ப்யூட்டரையே வைத்த கண் வாங்காமல் பார்க்காமல் கண்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள்.

*அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட மற்ற நேரங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இரவில் அரிசி, சர்க்கரை ஆகிய வெள்ளை உணவுப் பொருட்கள் எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தித் தூக்கத்தின் அளவை குறைக்கும். அதனால் இவற்றைத் தவிர்க்கலாம். முடிந்தால் இரவில் சிவப்பு அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

*படுக்கையறையில் லேப்டாப், கம்ப்யூட்டர், டி.வி., மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் சர்வ நிச்சயமாகத் தூக்கம் கெட்டு, அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சி பறிபோகும்.

*படுக்கையறையில் அதிக வெளிச்சமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற சத்தம் எழுப்பும் உபகரணங்களை இரவில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

*எல்லோருமே சொல்வதுதான். ஆனால், நல்லவற்றை மீண்டும் மீண்டும் சொல்லித்தானே ஆக வேண்டும். யோகா, மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றை முறையாக செய்துவந்தால் வேலை தரும் மன அழுத்தத்திலிருந்து மட்டும் அல்லாமல் வாழ்வின் பல சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்!
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.