அலோபதி - எந்தெந்த மாத்திரைக்கு எந்தெந்த &#2953

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
நுண்ணியிர்க் கொல்லி மருந்துகளான, Tetracycline, Doxycycline போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, சுண்ணாம்புச் சத்து அடங்கியுள்ள, பால், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வைட்டமின், கனிமம், இரும்புச் சத்து, வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
நிறைய உணவு ஆகாரங்கள், மருந்து வேலை செய்வதைப் பாதிப்பதுடன், சில மருந்து வகைகள், பணியைத் தடை செய்கின்றன. மற்ற மருந்து வகைகள், மனிதனை ஆபத்தான மருத்துவ நெருக்கடிக்கும் ஆளாக்குகின்றன. சில உணவு வகைகள், இயற்கை அல்லது வேதியியல் பொருள் சேர்க்கப்பட்டதால், ஒருசில மருந்துகளுடன் எதிர் செயலாற்றுவதுடன், அத்த மாத்திரை நடைமுறையில் பயனற்றதாகி விடும்.
உதாரணம்
* சுண்ணாம்புச் சத்து உள்ள பால் பொருட்கள், Tetracyclines & Quinolones போன்ற மருந்துகளை, அதிரடியாகச் செயலிழக்கச் செய்துவிடும்.
* புளிப்பான பழம் மற்றும் காய்கறி வகைச் சாறுகள், Erythromycin, Oral penicilin போன்ற மாத்திரைகளின் வீரியத்தைச் சிதைத்து, செயலிழக்கச் செய்வதோடு, அம்மருந்தே உணவைச் செரிமானப்படுத்தாமல், செயலிழக்க வைக்கிறது. மேலும், செரிமானத் தடத்தில் எளிமையான உணவைக் கூட மந்தப்படுத்தி, மாத்திரை கலந்து வேலை செய்வதைத் தடை செய்கிறது.
அமீபாவை எதிர்க்க
Metronidazole என்ற மருந்து, வயிற்றுப் போக்கு, வயிற்று வலிக்காக உட்கொள்ளப்படுகிறது. இந்த மாத்திரை உட்கொள்ளும் போது, மது அருந்துவதோ, புகை பிடிப்பதோ, கூடவே கூடாது. அதுமட்டுமின்றி, மருந்து உட்கொண்டு முடிந்து, மூன்று நாட்கள் வரை, மது அருந்தவே கூடாது. அப்படி மதுவும், மருந்தும் உட்கொள்ளும் போது, குமட்டல் உணர்ச்சி, வயிற்று வலி, வாந்தி, தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
வலி எதிர்க்க
இருதய வலிக்கு உட்கொள்ளப்படும், Isosorbide dinitrate, Nitroglycerine போன்ற மாத்திரைகளை, ஒருவேளை மது அருந்திய பின் உட்கொண்டால், ஆபத்தான குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாக்கும்.
பூஞ்சை எதிர்க்க
பூஞ்சை எதிர்ப்பு மருந்து எனப்படும், Ketaconazole மருந்தை, மதுவுடன் கலந்தால், இந்தக் கூட்டமைப்பு, குமட்டல் உணர்ச்சி, வயிற்று வலி, வாந்தி, தலைவலி, எதிர்பாராத குறை ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.
சிறுநீர் வெளியேற்ற
சிறுநீர் கழிவைத் தூண்டுகிற மாத்திரை உட்கொள்ளும் போது, தவிர்க்க வேண்டியவை, பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளான, வாழைப்பழம், ஆரஞ்சு, பச்சை இலைகள் நிறைந்த காய்கறி மற்றும் உப்பு போட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்.
* மிகக்குறைந்த அளவில் பொட்டாசியம் கொண்ட சிறுநீர் கழிவைத் தூண்டும் மாத்திரை, சிறுநீரகத்திலிருந்து வெளியேறும் பொட்டாசியத்தைத் தடை செய்கிறது. இதனால், உடல் நீரில் உள்ள பொட்டாசியம் உயர்ந்து, அது ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை ஏற்படுத்தலாம்.
கொழுப்பு குறைக்க
கொழுப்பைக் குறைக்கும் மாத்திரைகளான, Lovastatin, Simvastatin போன்றவற்றைச் சாப்பிடும் போது, மதுவைத் தவிர்ப்பது அவசியம். அதிகளவு மது அருந்தினால், ஈரல் சேதம் அதிகமாகி, அபாய நிலையை ஏற்படுத்தும்.
இதயத்தை பாதுகாக்க
ரத்தம் உறையாமல் தடுக்கும் அல்லது ரத்தத்தை நீர்க்கச் செய்யும், Coumadin, Dicomarol போன்ற சில மருந்துகளை உட்கொள்ளும் போது, வைட்டமின் கே அதிகம் அடங்கிய, உயிர்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறி, உருளைக்கிழங்கு, ஈரல் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இவை, ரத்த அடர்வை ஏற்படுத்தும்.
நுண்ணியிர்க் கொல்லி மருந்துகளான, Tetracycline, Doxycycline போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, சுண்ணாம்புச் சத்து அடங்கியுள்ள, பால், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வைட்டமின், கனிமம்,
இரும்புச் சத்து, வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை, குடல் உட்கவர்தல் இடையீடாகச் செயல்பட்டு, Tetracycline என்ற மாத்திரையை, உபயோகமில்லாத கழிவாகச் செய்து விடும்.
* எரித்ரோமைசின், பென்சிலின் - வி போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, அமிலத்தன்மை உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதிகளவு அமிலத்தன்மை வயிற்றுப் பகுதியில் இருந்தால், இந்த மாத்திரையை செயலிழக்கச் செய்துவிடும்.
Quinolones (ciprofloxacin, levofloxacin, ofloxacin) போன்ற மருந்தை உட்கொள்ளும் போது, ஒரு மணி நேரம் உணவுக்கு முன், காலியான வயிற்றில் அல்லது இரண்டு மணி நேரம் உணவுக்குப் பின் உட்கொள்வது நல்லது. காபின் உள்ள பானங்களான, காபி, டீ, கோலா குளிர்பானங்களை உட்கொண்டால், மருந்து மிக நல்ல உட்கவர்தலை எளிதாக்க உதவுகிறது. சில உணவு வகைகள் மற்றும் சப்ளிமென்ட் எனப்படும் சேர்ப்பு வகைகள், உடலில் குயினோலோன்ஸ் அளவைக் குறைத்து விடுகின்றன.
தைராய்டு சுரப்பி மாத்திரை
"காய்ட்ரோஜன்' எனப்படும் பொருள், தைராய்டு சுரப்பி நீர் உற்பத்தியைத் தடை செய்கிறது. எனவே, தைராய்டு சுரப்பி மருந்து உட்கொள்ளும் போது, காய்ட்ரோஜன் உள்ள பொருட்களான, சோயா, அவரை, முள்ளங்கி, முட்டைகோஸ், கீரை, தினைச்செடியின் விதை, பீச் பழம், கடலை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
Anti Histamine, Anti tubercular (ரிபாம்பிசின்), ஒவ்வாமை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல வாய்வழி நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ரத்த ஓட்டத்தைச் சென்றடைய, சில உணவு வகைகள் இடையூறாகச் செயல்படுகின்றன.
எனினும், வயிற்றிலுள்ள ஏதோ ஒரு உணவு கூட, உட்கவர்தலை வேகப்படுத்துகிறது. ஆதலால், riseofulvin என்ற மாத்திரை சாப்பிடும் முன், கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்டால், படர்தாமரை போன்றவற்றைக் கொன்று விடும்.
கடைபிடிக்க வேண்டியவை
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காபின் கலந்த குளிர்பானத்துடன், மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உடகொள்ளும் போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்து சாப்பிட வேண்டிய வேளை, உணவு வகைகள், பானம் மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டியவை குறித்து, உங்கள் மருத்துவர் கூறும் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும்.
டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ்
பொது நல மருத்துவர்

-senthilvayal
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
Re: அலோபதி - எந்தெந்த மாத்திரைக்கு எந்தெந்த &a

Thanks for the useful info.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.