அல்சர் இருக்குதா? கவனமா இருங்க புற்றுநோய

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
இன்றைய உலகில் தற்போது அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய்களில் அல்சரும் ஒன்றாகும். அல்சர் என்பது வயிற்றில் இருக்கும் இரைப்பையில் புண்களை ஏற்படுத்தும். மேலும் எப்பொழுது வயிற்றில் இருக்கும் பாதுகாப்பைத் தரும் ஒரு உறையானது சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதோ, அப்போது வயிற்றில் வீக்கம் அல்லது புண் போன்றவை ஏற்படும். அத்தகைய அல்சர் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது, அந்த ஆய்வில் அல்சர் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் அல்சர் உருவாதற்கு முக்கிய காரணம் இரைப்பையில் பாக்டீரியாவான ஹெலிகோபேக்டர் பைலோரி (helicobacter pylori) தாக்குவதால் வருகிறது. அல்சரை உருவாக்கும் இந்த பாக்டீரியா, கார்சினோமாவுடன்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாக்டீரியா எளிதில் உடலை தாக்கி அல்சரை உண்டாக்கும் தன்மையையும் உடையது. அதுமட்டுமல்லாமல் டி.என்.ஏ-வில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் இருக்கும் பாதுகாப்பு உறையையும் பாதிப்பை எற்படுத்திவிடும். இதனை எளிதில் சரிசெய்துவிட முடியாது. நீண்ட நாட்கள் வயிற்றில் புண்கள் இருந்தால், அவை வயிற்று புற்றுநோயை உண்டாக்கிவிடும். ஏனெனில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வயிற்று திசுக்கள் நீண்ட நாட்கள் இருப்பதால், இயற்கையாக அவை ஃபைபரஸ் திசுக்களாக மாற்றப்படுகின்றது. இதனால் நாளடைவில் வயிற்று புற்றுநோயானது ஏற்பட்டுவிடும்.

ஆகவே அல்சர் இருப்பவர்கள் ஆஸ்பிரின் அல்லது மற்ற அழற்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வயிற்றில் உற்பத்தியாகும் பாதுகாப்பான கோழையானது குறைந்துவிடும். மேலும் அந்த மருந்துகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரித்து. வயிற்றுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைத்து, உடலின் திறனை பலவீனப்படுத்தும் செல்களை சரி செய்யாமல் இருக்கும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.

அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை...

மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுதல் போன்றவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அல்சரிலிருந்து, வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மேலும் அவை வயிற்றில் அதிகமான அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். ஆகவே வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். மேலும் அல்சர் ஏற்பட்டால் கடைகளில் அதற்கான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சரிசெய்யலாம். இதனால் புற்றுநோய் அளவுக்கு கொண்டு போகாமல் தடுக்கும்.

அல்சரானது சரிசெய்யக் கூடிய ஒன்றே. அதிலும் வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தால் கூட சரிசெய்துவிட முடியும். ஆனால் எதற்கு அந்த அளவு வரை நாம் இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே மருத்துவரை ஆலோசித்து சரியான மருந்துகளை உட்கொண்டு, அல்சரை தடுக்கலாமே!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.