அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

chan

Well-Known Member
#1
அழகிய அழகு குறிப்புகள்

மஞ்சள் உடன் எலுமிச்சை சாறு கலந்து paste ஆக்கி முகத்திற்கு பூசி 20 நிமி விட்டு கழுவவும் .. சருமத்திற்கு உடனடி பொலிவு தர கூடிய pack ...

 

chan

Well-Known Member
#2
oily ஸ்கின் உள்ளவர்கள் , orange சாறில் ஐஸ் கட்டியை தொட்டு முகத்திற்கு மென்மையாக மசாஜ் செய்து காயவிட்டு கழுவவும் .... சருமத்தின் அதிகபடியான எண்ணெய் தன்மை குறையும் ..

 

chan

Well-Known Member
#3
வெயில் காலத்தின் சரும வறட்சிக்கு watermelon சிறந்த face pack ஆகும் .. பழத்தின் சதை பகுதியை மசித்து முகத்தில் பூசி 20 நிமி விட்டு குளிர் நீரால் கழுவவும் .. சருமம் கூடுதல் பொலிவு பெற தேன் கலந்து பூசலாம் ..

 

chan

Well-Known Member
#4
முகசுருக்கம் உடையவர்கள் முட்டையுடன் சிறிது olive oil மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பூசி 20 நிமி விட்டு கழுவவும் ... முட்டை சருமத்திற்கு இறுக்கம் தரும் ..

 

chan

Well-Known Member
#5
கண் கருவளையங்கள் உள்ளவர்கள் eye makeup செய்யும் முதல் கண்களுக்கான eye primer apply செய்து eye makeup செய்யவும் ... கருவளையங்கள் மறைந்து கண்கள் அழகாக காணப்படும்

 

chan

Well-Known Member
#6
பாத வெடிப்புக்கு மஞ்சள் தூளுடன் தேங்காய் எண்ணெய் குழைத்து பூசவும் ... ஒவ்வொரு நாளும் செய்ய மாற்றம் தெரியும்

 

chan

Well-Known Member
#7
தக்காளி சாறுடன் தேன் கலந்து முகத்திற்கு பூசி 20 நிமி விட்டு கழுவவும் .. சருமம் உடனடி பொலிவு பெறும் ...

 

chan

Well-Known Member
#8
சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் .. அப்படியானவர்கள் Olive oil ஐ நகங்களுக்கு பூசி ஊறவிட்டு கழுவி வர , நகங்கள் உறுதி பெறும்

 

chan

Well-Known Member
#9
பிசுபிசுப்பான தலைமுடி கொண்டவர்கள் butter fruit இன் சதை பகுதியை மசித்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு apply பண்ணவும் .. 20-30 நிமி ஊறவிட்டு குளிக்கவும் ... முடி soft and shine ஆக இருக்கும்

 

chan

Well-Known Member
#10
மசித்த வாழை பழத்துடன் சிறிது காய்ச்சாத பால் , எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு pack போட்டு 20 நிமி விட்டு கழுவவும் .. இது Oily Skin கொண்டவர்களுக்கு ஏற்ற pack
 

chan

Well-Known Member
#11
தேன் உடன் சிறிது குங்கும பவுடர் கலந்து முகத்திற்கு பூசி 15 நிமி விட்டு கழுவவும் ... சருமத்திற்கு உடனடி பொலிவு தரும் ... 

chan

Well-Known Member
#12
ஆண்களின் சருமத்துக்கு ஏற்ற face pack ... பப்பாளி உடன் சிறிது lemon juice , காய்ச்சாத பால் கலந்து பேஸ்ட் செய்து apply பண்ணி 15-20 நிமி விட்டு கழுவவும் .. சருமத்தின் கடின தன்மை குறையும் 

chan

Well-Known Member
#13
lipstick நீண்ட நேரம் இருக்க lip primer பூசி விட்டு lipstick apply பண்ணவும் ..

 

chan

Well-Known Member
#14
சீனியுடன் சிறிது தேன் கலந்து சுத்தமான brush இனால் உதடுகளை தேய்க்கவும் .. உதட்டின் இறந்த செல்கள் அகன்று உதடு பொலிவு பெறும் 

chan

Well-Known Member
#15
மசித்த பப்பாளி உடன் தேன் கலந்து முகத்துக்கு பூசி 20 நிமி விட்டு கழுவவும் .. சருமத்துக்கு உடனடி பொலிவு கிடைக்கும்

 

chan

Well-Known Member
#17
மஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.. என சுவை சொட்டும் இதன் வகைகள் ஏராளம்; அது தரும் சரும பலன்களும் தாராளம்! வயோதிகத்தைத் தள்ளி வைத்து, இளமையை தக்க வைத்து நம் வனப்பைக் கூட்டும் வாழைப்பழத்தின் அழகு பலன்களைப் பார்ப்போமா?

வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது 'வாழைப்பழ பேஸ்ட்'..

ஒரு வாழைப்பழத்துடன் (வெறும் வாழைப்பழம் என்றால், அது பூவன் பழத்தையே குறிக்கும்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.

இந்த வாழை - வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.

[TABLE="align: left"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.
 

chan

Well-Known Member
#18
ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் சீஸ் அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்-மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும். சருமத் தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.

ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன்பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின் ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.

கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்!
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்துவிடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தய பவுடர், ரெண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் 'பேக்' போடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.
 

chan

Well-Known Member
#20
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
------------------------------------------------------------------------------------------------------------------
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
------------------------------------------------------------------------------------------------------------------------
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆரஞ்சுப் பழத் தோலை காய வைத்து அதனுடன் பாசிப்பயிறையும் சேர்த்து அரைத்து தினமும் சொப்புக்குப் பதிலாக உபயோகித்து குளித்து வந்தால் சற்று மாநிறமாக இருப்பவர்கள் கூட சிவப்பாக மாறுவார்கள்.
---------------------------------------------------------------------------------------
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
---------------------------------------------------------------------------------------------------------------
தேங்காய் எண்ணெயுடன் சிறிது நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் கலந்து உடலில் நன்கு தேய்த்தால் தோல் மிருதுவாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------
ஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும்.
-------------------------------------------------------------------------------------------------------------
பாதாம் பவுடர், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்.
 

Important Announcements!