அழகுக்கு அழகூட்டும் நடை பயிற்சி

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
நாள்தோறும் நடைபயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கு அதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகிறது.


 1. * நடை பயிற்சி ஓர் சிறந்த உடற்பயிற்சி. உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது உடற்பயிற்சியும், சிறந்த உணவுப் பழக்கமுமே ஆகும். உணவுப் பழக்கத்தில் எல்லாருமே கவனம் எடுத்துக் கொள்கிறோம்;
  அதுபோல, உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
 2. * உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பரவலாக பேசப்படும் காலம். உடற்பயிற்சிக்கென்றே எல்லாவித கருவிகளுடனும் உடற்பயிற்சி மையங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில், உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பதை ஒவ்வொருவரும் அறிந்து, நடைமுறைபடுத்திக் கொள்வது சிறந்தது.

 3. * நகரத்து மக்களிடத்திலேயே இந்த உடற்பயிற்சி பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 16 வயது முதல், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்கின்றனர்.
  அதிலும் குறிப்பாக, 29 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆர்வம் உடற்பயிற்சியிலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் அதிகமாகியே வருகிறது.

 4. * உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. நகரத்து மக்கள் பலர், உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று, உடற்பயிற்சியை செய்யவில்லை என்றாலும், சாதாரணமாக நேரத்தை ஒதுக்கி, நடக்கவோ அல்லது சைக்கிள் ஓட்டுவதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சீனா, நெதர்லாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளில், அலுவலக வேலைக்குச் செல் பவர்கள் பலர் வசதியான வாகனம் இருந்தும், நடந்து செல்வதையோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

 5. * நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து, 6 கி.மீ., வரை செல்வது. நான்கு மணி நேரம் நீந்துவதும், நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே அல்லது 20 கி.மீ., சைக்கிள் மிதிப்பதும் இதற்கு சமமானதே!​
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
 1. * அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் லிப்டை பயன்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதாலும், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடைபயிற்சியின் தேவையை சற்று சமன் செய்து கொள்ளலாம்.
  டூ நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பலமும், உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின் போது, உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
  இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

 2. * நாள்தோறும் நடைபயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கு அதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகிறது.

 3. * நடைபயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழி வகுக்கிறது. முதுமை அடைந்தவர்கள் கூட, ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்து கொள்ளும் திறமையை வளர்த்து விடுகிறது.​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.