அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற்&

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,024
Location
chennai
#1
ஒரு சிலருக்கு ஆயில் ஃபேக்டிரியே வைக்கிற அளவுக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் "ஃபேஸ் வாஷா"ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து முகத்துல மெதுவா மசாஜ் பண்ணணும். இதனால வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் எல்லாம் போறதோட முகத்துல இருக்குற துவாரங்கள்ல அடைச்சிருக்கிற அழுக்கும் வெளியேறிடும். முகமும் பார்க்கப் படு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.


இதே சிசிக்சையை கழுத்துக்கும் செய்யணும். அப்போதான் முகமும் கழுத்தும் ஒரே நிறத்துல இருக்கும்.


குளிக்கிறதுக்கு எப்பவுமே மைல்டான பேபி சோப்தான் பயன்படுத்தணும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற அன்னிக்கு மட்டும் உடம்புக்கு சோப் போடாம, கடலைமாவுல கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.


தலைமுடியைப் பராமரிக்கிறதுக்கு சோம்பல்படவே கூடாது. மாசம் ஒரு தடவை ஹென்னா போடணும்.ஹென்னா எப்படி தயாரிப்பது?
முந்தின நாளே நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் எல்லாத்தையும் தண்ணீர் சேர்த்துக் கலந்து இரும்பு கடாயில நல்லா ஊற வச்சிடணும். மறுநாள் இந்தக் கலவையோடு முட்டையோட வெள்ளைக் கரு, தயிர் கலந்து தலையில தேய்ச்சு ரெண்டு மணி நேரமாவது ஊற வெச்சுக் குளிக்கணும். தயிர் கலந்து ஹென்னா போடறதால, பொடுகு தொல்லை ஒழியறதோட, தனியா கண்டிஷனர் போட வேண்டிய அவசியமும் இருக்காது. ஹென்னா போடுற அன்னிக்கு மட்டும் முடிக்கு ஷாம்பூ போடாம, தண்ணியாலதான் அலசணும். அப்போதான் அதோட சாரம் தலையில தங்கும்.


அழகுல உதட்டுக்கு முக்கிய பங்கு இருக்கு. தொடர்ந்து லிப்ஸ்டிக் உபயோகிச்சா உதடு கருத்துப் போயிடும். எப்பவும் லிப் கிளிசரின் அல்லது லிப் கார்ட் தடவிட்டு, அதுக்கு மேலதான் லிப்ஸ்டிக் போடணும். இதனால, உதட்டோட இயல்பான நிறம் மாறாது.


தினமும் தூங்கப், போறதுக்கு, முன்னாடி கை, கால்களை சுத்தமா கழுவிட்டு ஆலீவ் எண்ணெய் தடவணும். இப்படி ரெகுலரா செஞ்சா சருமம் பட்டுப்போல மிருதுவா மாறும்."


ரெகுலரா பார்லர் போய் ஐ-ப்ரோஸ் ட்ரிம் பண்ணிக்கலாம். ஹேர் கட்-டும் செய்துக்கலாம். இப்படி நம்மள நாமே அழகுபடுத்திக் கொண்டால் எப்பவுமே நாம அழகுதான்.


பள பள பப்பாளிப் பழமே!
முகம் பள பளக்க பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரின் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பாக் மாதிரி போட்டு பதினைந்து நிமிஷம் ஊறிப் பிறகுக் கழுவிப் பாருங்க.. முகம் தங்கம்போல ஜொலிக்கும்!


உடம்பு தோல் பள பளக்கவும் பப்பாளிப்பழம் நல்லது. ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சக்கரை (தேவையானால்) சேர்த்து காலை ப்ரேக், பாஸ்ட்டாக சாப்பிட்டுப் பாருங்க... முப்பதே நாளில் தோலில் மாற்றம் தெரியும். மலச்சிக்கல் தீரும், புத்துணர்ச்சி தரும் ரத்தம் சுத்தியாகும்.


பப்பாளிக் காயின் பால் பாத பித்த வெடிப்புக்கு நல்லது.
உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம்.
பழங்களினால் சாலட் செய்யும் போதும், ஜாம் செய்யும் போதும் பப்பாளிப் பழத்தை நிறைய சேர்க்கலாம்.


இந்தப் பழம் போலவே அத்தி பழமும் உடல் அழகுக்கு உதவும். இதயம் வலுப்பெறும்.
இரத்த அழுத்தம் சீராக சாத்துகுடி ரசம், பித்தம் தணிய விளாம்பழம், ஜூரம் தணிய மலச்சிக்கல் நீங்க திராட்சைப்பழம் என்று நிறைய இருக்கிறது!
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,334
Location
Trichy
#2
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

thanks for sharing these natural tips sudha....
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,024
Location
chennai
#3
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

welcum banu sis....
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,729
Likes
9,416
Location
Tirupur
#4
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

Hello Sudha... Alagu kurippukal kku romba thanks pa... hmm Enakkellam padikka than mudiyum enge neram irukku... Oil Factroye vekkara alavukku valiyutha.... nice... nalla uvamai...
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,024
Location
chennai
#5
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&amp

ovorutharuku ovvondru alagu.......latha sis...
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,729
Likes
9,416
Location
Tirupur
#6
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

sudhavukku enna alagu...
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,024
Location
chennai
#7
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

ennaku naan fulla alagudhan...... sonnadhu romba adhigama iruko?
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,729
Likes
9,416
Location
Tirupur
#8
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

illai sudha... athu unga nambikkaiyai kattuthu... athu romba alaguthane...sis....
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,024
Location
chennai
#9
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

correct sis.... namma nammala luv panna dhan ellorum nammala luv pannuvanga....
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,729
Likes
9,416
Location
Tirupur
#10
Re: அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற&#30

luv it dear... Nammai naam nesithal nammai pirar nesippargala... good.. sudha..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.