அழகு மிளிரச்செய்யும் கொன்றை!

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,630
Location
Trichy
#1
தங்க நிற மலர்களுடைய கொன்றை மங்களகரமான மரம். திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம், திருக்கோவலூர் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயில்களில் தலமரமாக அமைந்துள்ளது.

சமஸ்கிருத மொழியில் கொன்றையின் பெயர் குண்டலினி ஆகும். தங்க மலர்களில் சுருண்டு இருக்கும் மகரந்த்தாள்கள் பாம்பாக உருவமுள்ள குண்டலினி சக்தியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுவதும் மரத்தில் கொத்துக்கொத்தாக மஞ்சள் வண்ணத்தில் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் பார்க்க பார்க்க அழகு மிளிரும். இதற்கு சித்திரைக் கனிப்பூ என்ற பெயரும் உண்டு.

இந்தியாவில் தோன்றிய கொன்றை மரம் தற்போது ஸ்ரீலங்கா,மொரிசியஸ், தென்ஆப்ரிக்கா, பிரேசில், போன்ற தேசங்களிலும் காணப்படுகிறது. நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

இதன் வேர், பட்டை, இலைகள், விதைகள், மருத்துவ குணம் கொண்டவை. பழம் பழுத்துவர விதைகள் ஒன்றைவிட்டு ஒன்றாக பிரிந்து விடும். ஒரு செல் மாத்திரம் இருந்த பழம் பல செல்களாகும். கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கொன்றையில் டேனின், ஆந்தராகுவினோன், ரெயின், எமோடின், ஸ்டிராய்டுகள், பிசின், எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு போன்றவை காணப்படுகின்றன.

தோல்நோய்களுக்கு மருந்து

இதன் சமஸ்கிருத பெயரின் படி, நோய்களை தீர்க்கும் குணம் உடையது. 3000 வருடங்களுக்கு முன்பே, சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. கொன்றை பழக்கதுப்பை 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை சரகர் கூறியிருக்கிறார். சரும நோய்களுக்கு இந்த மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார் தன்வந்திரி.

நிகண்டு என்னும் நூலில் தோல்வியாதிகள், ஜூரம் இவற்றுக்கு மருந்தாக கொன்றை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

ராஜமரமான கொன்றை


இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம். கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மில்லி கிராம் எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி மலத்துடன் வெளியேறும். கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இத்தனை பலன்களைத் தரும் கொன்றை மரம் ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

வலிகளைக் கொல்லும்

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும். பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க மலத்தை இளக்கி வெளியேற்றும். பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்குப் பலன் தரும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.மரப்பட்டையின் கசாயம் 60 மிலி தேன் 5 மிலி கலந்து ஒரு நாளைக்கு இருவேளை 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால் அதிக உடல்பருமன் குறையும். மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும் .

கிருமி நாசினி

கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி. பறிக்கப்பட்ட பழங்கள் வெய்யிலில் காயவைத்து பிறகு பழக்கோது பிரிக்கப்பட்டு காற்றுப்புகாத குப்பிகளில் அடைத்து வைக்கப்படும். பின்னர் மண்ணடியில் 7 நாள் வைக்கப்படுகின்றன.

பழக்கதுப்பு சிறப்பான கிருமி நாசினி. நுண்ணுயிர் நாசினி. பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கும் சக்தி உடையது. இதயத்திற்கு டானிக், நீரிழிவு, மூட்டுவலி, மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றிர்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. கொன்னையின் மற்ற பாகங்களை விட, பழக்கதுப்பு, சிறந்த கிருமி நாசினி.

ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி. வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து. தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.