அழகை கெடுக்கும் டென்ஷன்!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
அழகை கெடுக்கும் டென்ஷன்!
சிலரைப் பார்த்தால் ப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் `ப்ரெஷ்ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்எப்போதும் தூங்கி வழியும் மூஞ்சாக இருப்பார்கள். சுறுசுறுப்பும் அவர்களிடம் `மிஸ்ஆகி இருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும்.

இதையொட்டி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதாவது, இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அந்த ஆய்வு அமைந்திருந்தது
.

500
க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன
.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
.

இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, `அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்என்று தெரிவித்தனர்
.

என்னநீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால் இப்போதே அதை தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையென்றால், அழகு உங்களிடம் இருந்து `எஸ்கேப்ஆகிவிடும்.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.