அவன் அவள் காதல் - Avan Aval Kadhal by Durga C

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#41

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#42
அவன் அவள் காதல்

காதல் 21
அடுத்த நாள் எழுந்து குளித்துக் கிளம்பி ருத்ரனின் வீட்டிற்குச் சென்றாள் சகி. சற்றும் முற்றும் தேடிய சகி ருத்ரனைக் காணாமல் தவித்தாள். அதைக் கண்டுகொண்ட சஞ்சு, "அம்மா ருத்ரன் வீட்ல இல்ல..." என்று விசாலாக்ஷியிடம் கூறுவது போலச் சத்தமாகக் கூறினான். விசாலாக்ஷி, "டேய் வேலைக்கு போகும்போது சொல்லிட்டு தான டா போனான், எதுக்கு இப்டி கத்துற" என்று குரல் கொடுத்தார். சகியின் மனம் சற்று ஏமாற்றம் அடைய முகம் சுருங்கிப் போனது. விசாலாக்ஷியிடம் விடை பெற்றுக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்று உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாள்.


மனம் ருத்ரனையே சுற்றி வந்தது. 'எப்போவும் சொல்லிட்டு தான போவான். போகும்போதும் பைக் ஹாரன் அடிச்சு நாம பாத்த அப்பறம் தன போவான்' என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அப்போது சரியாக ருத்ரனிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதை ஏற்றவள் அவனைப் பேச விடாமல், "என்னடா நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? வேலைக்கு போகும் போது சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு போயிட்ட, அட்லீஸ்ட் எப்போதும் போல ஹார்னாச்சு அடிச்சுட்டு போயிருக்கலாம்ல.. இங்க ஒருத்தி நம்மளையே நெனச்சுட்டு நமக்காக காத்திருப்பாளேனு தெரிய வேணாம்? கருங்குரங்கு.. கருங்குரங்கு.." என்று இடைவெளியே விடாமல் பொறிந்து தள்ளினாள். அந்தப் பக்கம் ருத்ரன் பலமாகச் சிரிக்கும் ஓசை கேட்க மேலும் கடுப்பான சகி, "நான் பேசுறது உனக்கு சிரிப்பா இருக்கா? ஃபோன வைக்குறேன் பை" என்று சொல்லித் துண்டிக்கப் போக, "ஏய் ஏய் சகி இரு" என்று அவளைத் தடுத்தான் ருத்ரன். சகி எதுவும் பேசாமல் அலைபேசியைக் காதிலேயே வைத்திருந்தாள். "சகி சகி.... லைன்ல இருக்கியா?" என்ற ருத்ரனுக்கு, "ஹம்" என்று மட்டும் பதிலளித்தாள். ருத்ரன், "இன்னைக்கு ஒரு முக்கியமான கேஸ் விஷயமா காலையில ஆறு மணிக்கே கமிஷனர் கால் பண்ணி வர சொல்லிட்டாரு. என் தூங்குமூஞ்சி குட்டி காலையில எட்டு மணிக்கு கொறைஞ்சு எந்திரிக்காது, அதை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் காலும் பண்ணல ஹாரனும் அடிக்கல. உனக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு கிளம்பிட்டேன்" என்று அவளுக்கு நடந்ததை விளக்கினான். இதைக்கேட்டு அசடு வழிந்த சகி, "ஹி ஹி மெசேஜ் பாக்க மறந்துட்டேன் டா.. சாரி" என்றாள். "ஹம் ஹம்.. ஹப்பா எவ்ளோ கோவம் வருது என் செல்லக்குட்டிக்கு. என்னையே நெனச்சுட்டு எனக்காக காத்திருந்தியா?" என்றான் குறும்பாக. சகி வெட்கப்பட்டுக்கொண்டே, "ஏன் அது உனக்கே தெரியாதா? சொன்னாதான் தெரியுமா?" என்று வினவினாள். ருத்ரன், "எனக்கு தெரியும்.. ஆனாலும் சில விஷயங்கள் வெளிப்படையா சொன்னா மனசுக்கு சந்தோஷமா இருக்கும்ல.. சகி, உன்னால நாளைக்கு லீவ் போட முடியுமா? எங்கயாச்சு வெளிய போலாம். உன்ட நிறையா பேசணும். பத்து மாசமா உன்ட சொல்லணும் சொல்லணும்னு நினைச்சே கடத்திட்டேன், இனிமேல் என்னால முடியாது குட்டிமா" என்றான் மென்மையாக. அவன் என்ன சொல்லப் போகிறான் என்று யூகித்த சகியின் உள்ளம் துள்ளிக் குதிக்க, "ஹம்.. லீவ் போடறேன் ருத்ரா.. நானும் உன்கிட்ட நிறையா சொல்லணும்" என்றாள். மனம் மகிழ்ந்த ருத்ரன், "சரி குட்டி... இன்னைக்கு நைட் வீட்டுக்கு வர எப்டியும் பத்து மணி ஆய்டும்னு நினைக்குறேன், நாளைக்கு எப்போ வரணும் என்னனு நைட் நான் ஃபோன் பண்றேன் சரியா? பை மா" என்று அழைப்பைத் துண்டித்தான்.


சற்று நேரம் முன் இருந்த கோவமெல்லாம் பறந்து போக, உற்சாகமாக உணவு உண்டு மருத்துவமனைக்குச் சென்றாள் சகி. அன்று அவளிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு சிறுமியைப் பரிசோதித்துக் கொண்டிருந்த சகி, வெளியே ஏதோ சத்தம் கேட்க எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே ஒரு பெண் சகியின் உதவியாளனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். சகி தன் உதவியாளனிடம், "ராஜு அண்ணா என்ன பிரச்சன?" என்று வினவினாள். அதற்கு அவன், "ஒன்னுமில்ல மேடம், வரிசையா தான் உள்ள விடுவேன்னு சொன்னதுக்கு இந்தம்மா சண்டைக்கு வருது" என்று சொல்ல, அந்த பெண், "அம்மா என் புள்ளைக்கு ஜுரம் கொதியா கொதிக்குது மா... உங்கள பாக்கணும்னு சொன்னா இவன் எமெர்ஜென்சினா ஐநூறு ரூவா குடுன்னு கேக்குறான். குடுத்தாதான் உள்ள விடுவானாம். அவ்ளோ காசு இருந்தா நான் ஏன்மா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வரேன்" என்று அழுது புலம்பினாள். ராஜூவை முறைத்த சகி அந்தப் பெண்ணிடம் திரும்பி, "நீங்க குழந்தைய கூட்டிகிட்டு உள்ள வாங்கம்மா" என்றுவிட்டு உள்ளே சென்றாள். அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை செய்தவள், மீண்டும் வெளியே வந்து அங்கு இருந்தவர்களிடம் "இது கவர்மெண்ட் ஹாஸ்பிடல், இங்க வைத்தியம் பாக்க காசு குடுக்க தேவையில்ல. அப்டி யாராச்சு காசு கேட்டா என்கிட்ட கம்ப்ளைண்ட் எழுதி குடுங்க" என்று சொல்லிவிட்டு ராஜுவிடம் திரும்பினாள். "ராஜு அண்ணா உங்கள அன்னைக்கே நான் வார்ன் பண்ணேன். இப்டி உடம்புக்கு முடியாத குழந்தைகள கூட்டிகிட்டு வர்ற ஏழைங்க கிட்ட காசு வாங்குறீங்களே இது உங்களுக்கே அசிங்கமா இல்ல? இன்னைக்கு கண்டிப்பா டீன் கிட்ட கம்ப்ளைண்ட் குடுக்கதான் போறேன்" என்று அவள் RK-யின் அறை நோக்கி நடக்க, அவன், "மேடம் சாரி மேடம்... இனிமேல் இப்டி நடக்காது.. ப்ளீஸ் மேடம்" என்று கெஞ்சிக்கொண்டே அவளைத் தொடர்ந்தான். அதை பொருட்படுத்தாத சகி RK-யின் அறைக்குள் நுழைந்தாள். நடந்ததைக் கேட்டறிந்த RK ராஜூவைக் கண்டித்து அவனை இரண்டு மாதங்கள் சஸ்பெண்ட் செய்தார்.


மதியம் உணவு உண்டு, தன் அறைக்கு வந்து வேலையைத் தொடர்ந்த சகி, மீண்டும் ருத்ரனின் நினைவிற்குச் சென்றாள். அப்போது அங்கு வந்த மகப்பேறு மருத்துவர் கிரிஜா, "சகி, இன்னைக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா இருக்கியா?" என்று வினவினார். சகி, "என்ன மேடம் சொல்லுங்க" என்றாள். "இல்ல சகி, இப்போ ஒரு பேஷன்ட்க்கு லேபர் பெயின் வந்திருச்சு. டெலிவரி ஆக எப்டியும் லேட் ஈவினிங் ஆய்டும், குழந்தைய செக் பண்ண ஒரு சைல்டு ஸ்பெஷலிஸ்ட் வேணுமே.. டாக்டர் ராபர்ட்டும் இன்னைக்கு லீவ், அதான் கேட்டேன்" என்றார் கிரிஜா. சகி, "என்ன மேடம் இதுக்கு போய் இவ்ளோ தயங்குறீங்களே. இத விட என்ன வேல எனக்கு? நான் அந்த டெலிவரி முடியிற வரைக்கும் ஸ்டே பண்றேன்" என்று புன்னகைத்தவாறே கூறினாள். கிரிஜா அவளுக்கு ஒரு நன்றியை உதிர்த்து விட்டுச் சென்றார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்து முடித்துவிட்டு அந்த டெலிவெரிக்காகக் காத்திருந்தாள் சகி. இடையிடையே ருத்ரனுக்கு அழைக்க அது எடுக்கப் படாமல் இருந்தது. இரவு எட்டரை மணிக்கு அந்தப் பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, குழந்தையைப் பரிசோதித்து முடித்துக் கிளம்ப இரவு ஒன்பதரை ஆனது. தான் அவளை வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதாகச் சொன்ன கிரிஜாவிடம், "நீங்க ரொம்ப தூரம் போனும், அதுவும் இல்லாம என் வீடு நீங்க போற வழிக்கு அப்டியே ஆப்போசிட்... நான் போய்க்கிறேன் மேடம்" என்று சொல்லி மறுத்துவிட்டாள்.


வெளியே வந்து வண்டியைக் கிளப்பிய சகி, ருத்ரனின் நினைவு வர அவனுக்கு அழைக்கலாம் எனத் தன் அலைபேசியை எடுத்தாள். அது சார்ஜ் இல்லாமல் உயிரற்று இருந்தது. 'ஹம் இது வேறயா? சரி அவன் வீட்டுக்கு வர பத்து மணி ஆகும்னு சொன்னானே, அதுக்குள்ள போய் கொஞ்சம் சார்ஜ் போட்றலாம்' என்று நினைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பி வீடு நோக்கிச் சென்றாள். மனம் முழுவதும் ருத்ரனே நிறைந்திருந்தான். நாளை அவன் சொல்லப் போவதை எண்ணி உள்ளம் மகிழ்ந்தது. சரியாக விளக்குகள் எரியாத ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கையில், அவள் வண்டியின் முன்சக்கரத்தில் இன்னொரு வண்டி வந்து மோதியதில் சகி தன் வண்டியுடன் கீழே சரிந்துச் சிறிது தூரம் உரசிக்கொண்டு போய் விழுந்தாள். அவளது வலப்புறக் கையிலும் காலிலும் பலமாகச் சிராய்த்து ரத்தம் வழிந்தது. மெல்ல எழுந்து சுற்றி முற்றிப் பார்த்தவளுக்கு அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. தன்னை இடித்த வண்டியிலிருந்து ஒருவன் இறங்கி நடந்து வந்தான். அவனைப் பார்த்து அதிர்ந்த சகி, "ராஜு அண்ணா, நீங்க.. நீங்களா?" என்றாள். ராஜு பலமாகச் சிரித்து, "இந்த அண்ணா நொன்னால்லாம், உன் பின்னாடி கெஞ்சிக்கிட்டே வந்தனே அப்போ தெரியலையா? எவன் காசு வாங்குனா உனக்கென்னடி கொறஞ்சு போச்சு? பெரிய இவ மாதிரி போய் கம்ப்ளைண்ட் பண்ற. எனக்கு ஒன்னுமில்ல.. நான் இன்னும் ரெண்டு மாசத்துல போய் ஜாயின் பண்ணிருவேன். ஆனா நீ இந்த நாள உன் வாழ்க்கைல மறக்கவே கூடாது" என்று கூறி அவளை நெருங்க, அவள் ஓட முயற்சிக்க, அடிப்பட்ட அவளது கால் ஒத்துழைக்காமல் கீழே விழுந்தாள்.காதல் மலரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#43

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#44
அவன் அவள் காதல்

காதல் 22
இரண்டு மணி நேரமாகச் சகிக்கு அழைத்த ருத்ரனுக்கு அவள் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் வர, அவன் கடுப்படைந்து அவள் வீட்டிற்குச் சென்றான். அங்கு கதவில் பூட்டு தொங்கிக்கொண்டிருக்க, அவள் எங்கே போயிருப்பாள் என்று பதறியவன் தன் சீருடையைக் கூட மாற்றாமல் வண்டியைக் கிளப்பிக்கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றான். அங்கே ஒரு சாலையில் சகி கீழே விழுந்து கிடைக்க, அவளை ஒருவன் நெருங்குவதைக் கண்ட ருத்ரனுக்குக் கோவம் தலைக்கேற, "டேய்" என்று கத்திக் கொண்டு வண்டியை விரைந்து செலுத்தினான். இவனது காக்கிச் சீருடையைக் கண்ட ராஜு வேகமாக அருகிலிருந்த புதரில் மறைந்து ஓடித் தப்பித்தான். ருத்ரனைக் கண்டதும் நிம்மதியுடன் மெல்ல எழுந்து நின்ற சகி, "ருத்ரா..." என்று ஏதோ சொல்லவர, அவள் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது. ஏற்கனவே விழுந்ததால் பட்ட காயங்களுடன் சோர்ந்து தடுமாறி நின்றிருந்தவள் அவன் அறைந்ததில் நான்கு அடி தள்ளிப் போய் விழுந்தாள். உதடோரம் கிழிந்து ரத்தம் வழிந்தது. மிகவும் கடினப்பட்டுப் பக்கத்தில் இருந்த மரத்தைப் பிடித்து எழுந்து நின்றவளைப் பார்க்காமல், "ச்ச நீ என் லைப்ல வந்ததுல இருந்தே தொல்ல தான்டி. என் நிம்மதியே போச்சு உன்னால.. இம்சை ச்சை எல்லாம் என் தலையெழுத்து.. உனக்கெல்லாம் ஊரே உன்ன தலையில தூக்கி வச்சு ஆடனும், ஆஹா ஒஹோன்னு புகழனும், அதுக்காக என்னையும் சேத்து தொல்ல பண்ற. உன்ன காப்பாத்திக்கிட்டே இருக்கிறதுதான் என் வேலையா?" என்று தன்னிலை மறந்து கத்திக் கொண்டிருந்தான். அவன் மனதில் ஓடியதெல்லாம் 'என் சகிக்கு ஏதாவது ஆகி இருந்தால்' என்பதே. ஆனால் அதை அந்த ராஜு மீது இருந்த கோபத்துடன் சேர்த்து வெளிப்படுத்தியதில் அவன் என்ன பேசுகிறான் என்று அவனுக்கே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான்.


சகியின் கண்களில் இருந்து மள மளவெனக் கண்ணீர் கொட்டியது. அவள் இதயம் சுக்கு நூறாக உடைந்தது போல இருந்தது. நாளை அவன் காதலைச் சொல்லப் போகிறான் என எவ்வளவு கனவு கண்டிருந்தாள். அனைத்தையும் தன் வார்த்தைகளைக் கொண்டு தகர்த்து எறிந்து விட்டானே. கீழே விழுந்ததில் பட்ட காயத்தின் வலி கூட அவளுக்கு மறந்து போயிற்று. இதை எதையுமே அறியாத ருத்ரன் அவளைத் திரும்பிப் பார்க்க, கண்களில் கண்ணீரும், உடம்பில் ரத்தமும் வழியச் சிலையெனச் சமைந்து நின்று கொண்டிருந்தாள் சகி. அவள் காயங்களைப் பார்த்துப் பதறியவன், "சகி என்னமா இப்டி அடி பட்டிருக்கு. எவ்ளோ ரத்தம்" என்று அவள் கையைப் பற்றி ஆராய்ந்தான். அவனின் இந்தத் தொடுகையில் சுயநினைவு பெற்றவள், "ச்சீ விடு.. நீ பேசுனத விட இதெல்லாம் எனக்கு வலிக்கல, இதுவர உனக்கு தொல்ல குடுத்ததுக்கு மன்னிச்சிரு. இனிமே உன் கண்ணுலயே படமாட்டேன்" என்று தன் கையை அவனிடமிருந்து உறுவிக்கொண்டு தன் உடல் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் வண்டியைத் தூக்கி நிறுத்திக் கிளப்பிச் சென்று விட்டாள். ருத்ரன் அங்கேயே உறைந்து நின்றான். கோபத்தில் என்னென்ன பேசிவிட்டோம், அவள் இருக்கும் நிலை கூடத் தெரியாமல் அவளை மேலும் காயப்படுத்தி விட்டோமே என்று மனதில் நினைத்து வருந்தி அவள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.


வீட்டிற்கு வந்த சகி, அவளது அறைக்குச் சென்று விளக்குகளைக் கூட உயிர்ப்பிக்காமல், கட்டிலில் விழுந்தாள். 'நீ என் லைப்ல வந்ததுல இருந்தே தொல்ல தான்' என்று அவன் சொன்னது மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. "நான் தொல்லையா ருத்ரா? உனக்கு என்ன புடிக்கலயாடா? அப்போ இவ்ளோ நாள் சந்தோஷமா இருந்தது எல்லாமே வெறும் கனவா?" என்று வாய்விட்டுக் கதறி அழுதாள். சிறிது நேரம் கழித்து எழுந்தவள், குளியலறைக்குச் சென்று ஷவரைத் திருகிவிட்டு குளிர்ந்த நீரில் வெகு நேரம் நின்றாள். பின்பு அப்படியே ஈரத்துடன் சென்று கட்டிலில் சாய்ந்துவிட்டாள். காற்றாடியைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தவள், அவனைப் பத்து மாதங்களுக்கு முன்னால் முதன்முதலில் சந்தித்தது முதல் இன்று காலை அவனுடன் அலைபேசியில் பேசிச் சிரித்தது வரை நினைத்துக் கண்ணை மூடினாள். உடலும் மனமும் சோர்வைத் தர, கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் உறைய அப்படியே தூங்கிப் போனாள்.


தனது முன்கோபத்தால் தன் சகியைக் காயப்படுத்தியதை எண்ணி அன்று இரவு முழுக்கத் தன் வண்டியில் பைத்தியம் பிடித்தார் போலச் சுற்றித் திரிந்தான் ருத்ரன். பின்னிரவில் சகியின் வீட்டையே பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவன் தன் அறைக்குச் சென்று அடைந்து கொண்டான். 'என் சகிய போய் தொல்லன்னு எல்லாம் சொல்லிட்டேனே, அவ என் வாழ்க்கைல வந்து அத எவ்ளோ அழகா மாத்துனா. காலையில கூட சொல்லாம போனதுக்கு சண்ட போட்டாளே. என்னையே நினைச்சுட்டு எனக்காகவே காத்திருக்கேன்னு சொன்னாளே. அவள போய்.. கீழ விழுந்தவளுக்கு அடி பட்டு ரத்தம் வந்தத கூடப் பாக்காம நான் வேற அவள அடிச்சு ரத்தம் வந்து.. ச்ச நான்லாம் மனுஷனே கிடயாது" என்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவன் தன் மேலேயே தனக்கு எழுந்த கோவத்தில் கையால் கண்ணாடியை ஓங்கி அடிக்க, அது உடைந்து அவன் கையைப் பதம் பார்த்தது. ரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் கையைப் பார்த்தவன், 'என் சகிக்கும் இப்டி தான வலிச்சிருக்கும்' என்று எண்ணி அப்படியே தரையில் விழுந்தான். "சகி நீ இல்லாம எனக்கு லைஃப்ல எதுவுமே இல்லடி. என்ன மன்னிப்பியா குட்டிமா? ப்ளீஸ்" என்று புலம்பிக் கொண்டிருந்தவன் கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.


சகியிடம் நேற்று அவ்வாறு நடந்து கொண்டவனைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காலை எழுந்த ருத்ரன், தன் காயத்தைச் சுத்தப் படுத்திக் கட்டுப் போட்டுக் கொண்டு, குளித்துத் தயாராகிக் கிளம்பினான். முதலில் அந்த சாலைக்குச் சென்றவன் கண்ணில் ராஜுவின் வண்டி பட, அதன் எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு அவனது முகவரியைக் கண்டு பிடித்தான். அவன் அங்கு இல்லை என்பதை அவன் குடும்பத்தினரிடம் இருந்து தெரிந்து கொண்டவன், நேராக மருத்துவமனைக்குச் சென்றான். RK-விடம் விசாரிக்க, சகி ராஜூவைப் பற்றிக் கொடுத்த புகாரையும், அவர் அவனை இரண்டு மாதங்கள் சஸ்பெண்ட் செய்ததையும் சொன்னார். பிறகு சகி நேற்று இரவு வரை இருந்த காரணத்தை வினவிய பொழுது அவர் கிரிஜாவை அழைக்க, கிரிஜா நேற்று அவளிடம் இருக்க முடியுமா என்று கேட்டது முதல் அவளைத் தான் வீட்டில் விடுவதாகக் கூறியது வரை அனைத்தையும் அவனுக்கு விளக்கினார். அதைக் கேட்டவன், புகழுக்காக அலைவதாய்த் தான் அவளைத் திட்டியது நினைவிற்கு வர, தன்னையே நொந்து கொண்டான். பிறகு RK-விடம் சகியைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டதற்கு, அவள் இன்றைக்கு விடுப்பு வேண்டுமென நேற்றே கேட்டதாகச் சொல்ல, ருத்ரனின் மனம் மேலும் ரணமானது. நேற்று இரவு மட்டும் அப்படி நடக்காது இருந்திருந்தால் இன்று எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.


காதல் மலரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#45

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#46
அவன் அவள் காதல்

காதல் 23

ராஜுவைப் பிடிக்க அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ருத்ரனுக்கு இரவு எட்டு மணிக்கு விசாலாக்ஷியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர அதை ஏற்றான். விசாலாக்ஷி பதட்டத்துடன், "ருத்ரா.. நம்ம சகி குட்டிக்கு ரொம்ப உடம்பு சரி இல்லடா.. ஹாஸ்பிடல் போகணும், அப்பாவும் சஞ்சுவும் ஊர்ல இல்ல, நீ உடனே சகி வீட்டுக்கு வா" என்றார். சகி என்ற சொல்லிலேயே பதறி வண்டியைக் கிளப்பிய ருத்ரன், வீட்டை நோக்கி விரைந்தான். தன் வீட்டிற்குச் சென்று வண்டியை அப்படியே கீழே போட்டுவிட்டு உள்ளே சென்று கார் சாவியை எடுத்துவந்து காரைக் கிளப்பினான். சகி வீட்டின் முன் காரை நிறுத்தியவன் உள்ளே விரைந்தான். படிகளில் தாவி ஏறிச் சகியின் அறைக்கு ஓடினான்.


அங்கு கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளைக் கண்டு பதறி அருகில் அமர்ந்திருந்த விசாலாக்ஷியிடம் "மா என் சகிக்கு என்னாச்சும்மா" என்று வினவினான். விசாலாக்ஷி அவனிடம், "ஹாஸ்பிடல் போய் பேசிக்கலாம்பா எனக்கு பயமா இருக்கு" என்றார். அவள் அருகே சென்றவனுக்கு அவள் இருந்த நிலை கண்டு கண்கள் கலங்கின. நேற்று பார்த்த அதே உடையில், கை காலில் இருந்த காயங்கள் மருந்திடப்படாமல் இருக்க, அவன் அறைந்ததால் உதடோரம் காயத்துடன் நினைவற்றுக் கண்மூடிக் கிடந்தாள். அவளை உடனே தன் கைகைளில் ஏந்திய ருத்ரன், கட கடவெனப் படிகளில் இறங்கி வெளியே வந்தான். அவளது உடல் கொதிப்பதை அவனால் உணர முடிந்தது. காரின் பின் இருக்கையில் விசாலாக்ஷி அமர்ந்து கொள்ள, அவர் மடியில் அவளைக் கிடத்தியவன், வேகமாகக் காரைக் கிளப்பிக் கொண்டு தெரிந்த மருத்துவமனைக்குச் சென்றான்.


சகியை மருத்துவர் பரிசோதிக்க வெளியே நின்றிருந்தனர் இருவரும். ருத்ரன் விசாலாக்ஷியிடம், "சொல்லுமா என்னாச்சு அவளுக்கு?" என்று கேட்டான். அதற்கு விசாலாக்ஷி, "இன்னைக்கு சகி நம்ம வீட்டுக்கு வரவும் இல்ல ஃபோனும் பண்ணவே இல்லன்னு அவளுக்கு கால் பண்ணேன். ரொம்ப நேரமா ஸ்விச்ட் ஆஃப்னே வந்துச்சு. அவ வீட்டுக்கு போய் பெல் அடிச்சா கதவையே திறக்கல. சரி நம்ம வீட்டுல ஒரு ஸ்பேர் கீ இருந்துச்சேன்னு அத வச்சு உள்ள போய் இவ ரூம்ல பாத்தா உடம்பெல்லாம் காயம். பெட், அவ தலைமுடி எல்லாம் ஈரமா இருந்துச்சு. தொட்டுப் பாத்தா கொதியா கொதிச்சுது. எவ்ளோ எழுப்பி பாத்தும் எந்திக்கல. எனக்கு பயமா போச்சு. அதான் உனக்கு போன் பண்ணேன்" என்று நடந்ததை அவனுக்கு விளக்கினார். ருத்ரனின் மனதில் தன்னால் தான் இவ்வளவும், தான் மட்டுமே காரணம் என்று எண்ணித் தன்னையே கடிந்து கொண்டான்.


அவர்களை அரைமணி நேரம் காக்க வைத்த பின் மருத்துவர் வெளியே வந்து, "பயப்பட ஒன்னும் இல்ல. ஷி இஸ் ஆல்ரைட்.. எங்கயோ கீழ விழுந்ததுல்ல கை கால்ல நல்லா அடி பட்டிருக்கு, அந்த காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணிருக்கேன். அப்பறம் அவங்க ஒன் டே ஃபுல்லா ஃபீவர் வந்து சாப்பிடாம இருந்திருக்காங்க, சோ ட்ரிப்ஸ் போட்டிருக்கேன். பெயின் கில்லர் இன்ஜெக்க்ஷன் போட்டிருக்கனால ஒரு ஃபோர் ஹவர்ஸ் தூங்குவாங்க. அதனால நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்றார். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் அவள் அறைக்குச் சென்று அவளைப் பார்த்துவிட்டு வெளியேறினர். ருத்ரன் விசாலாக்ஷியிடம், "நான் நைட் இங்க இருக்கேன் மா, நீ வீட்டுக்கு போ. காலையில நானே அவள டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்" என்றான். அதை முதலில் மறுத்த விசாலாக்ஷியைச் சமாதானப் படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ருத்ரன். போகும் போது, "நைட் அவ எப்போ கண்ணு முழிச்சாலும் கால் பண்ணுடா" என்று சொல்லிவிட்டே சென்றார்.


விசாலாக்ஷி சென்ற பின் எதுவும் உண்ணத் தோன்றாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வந்து அவள் படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். கை காலில் கட்டுகளுடன், மற்றோரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க கசங்கிய மலர் போலச் சோர்ந்து படுத்திருந்தவளை அவனால் பார்க்க முடியவில்லை. கண்மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டான். மனம் 'சகி சகி' என்று புலம்பிக் கொண்டு இருந்தது. அவனும் நேற்று இரவு முதல் தண்ணீரைத் தவிர ஒன்றும் உண்ணவில்லை. அவளிடமிருந்து லேசான முனகல் வர அவள் அருகில் சென்று, "சகி..." என்று அவளின் கன்னம் தொட்டு அழைத்தான். அவனது ஸ்பரிசத்தை உணர்ந்தவள், "ருத்து குட்டி உனக்கு என்ன புடிக்கலயா? என்ன விட்டு போமாட்டேல்ல" என்று மயக்கத்தில் அரற்றினாள். இதைக் கேட்ட ருத்ரனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. "இல்லடா குட்டிமா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். நான் உன் பக்கத்துலயே தான் இருக்கேன்" என்று மென்மையாகக் கூறி அவள் தலையை வருடிக் கொடுத்தான். அந்த மயக்க நிலையிலும் அவன் சொன்னது அவள் மனதை எட்டியதற்குச் சாட்சியாக அவள் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.


நள்ளிரவு இரண்டு மணிக்குக் கண் விழித்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, அவளருகில் நாற்காலியில் கண்மூடிச் சாய்ந்திருந்த ருத்ரன் தெரிந்தான். தற்செயலாகக் கண்ணைத் திறந்து பார்த்தவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சகியைப் பார்த்துத் துள்ளி எழுந்து, "குட்டிமா.. முழிச்சுட்டியா? நான் பயந்தே போய்ட்டேன்..." என்று அவள் அருகில் வந்தான். அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்த சகி, "ஹம் நான் செத்திருந்தா உனக்கு நிம்மதியா இருந்திருக்கும்ல" என்றாள். அதிர்ந்து போன ருத்ரன், "சகி... என்ன வார்த்த சொல்ற... இனிமேல் இப்டிலாம் பேசுன என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்று வலியிலும் கோவத்திலும் கத்தினான். லேசாக முறுவலித்த சகி, "ஹம் இன்னும் வேற என்ன நடக்கணும்" என்று அவனைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டாள். ருத்ரன், "குட்டிமா ப்ளீஸ் டா... உனக்கு ரெஸ்ட தேவ. இப்போ தூங்கு, அப்பறம் என்ன எப்டி வேணும்னாலும் திட்டு நான் வாங்கிக்குறேன்" என்று கெஞ்சலாகக் கூறினான். "எனக்கு உன் முகத்த பாக்கவே புடிக்கல, இங்க இருந்து போ" என்று கண்களில் நீர் வழியக் கத்தினாள். ருத்ரன், "சரி மா நான் போய்டுறேன்.... ஒரே ஒரு தடவ அம்மா கிட்ட மட்டும் பேசிரு. நீ மயக்கமா கிடந்தத பாத்து ரொம்ப பயந்துட்டாங்க" என்று விசாலாக்ஷிக்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்க, "அம்மா சகி முழிச்சுட்டா. நான் அவகிட்ட குடுக்குறேன்" என்று அவளிடம் தன் அலைபேசியை நீட்டினான். தன் இரு கைகளையும் பார்த்தவள் அவனைப் பார்க்க, அதைப் புரிந்து கொண்டவன், "சாரி சகி.." என்று அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான். சகி "ஆண்ட்டி..." என்றதுமே விசாலாக்ஷி, "சகி குட்டி உனக்கு ஒன்னும் இல்லேல, நான் பயந்தே போய்ட்டேன். இப்போ பரவால்லயா? வலிக்குதா" என்று கேட்டுக்கொண்டே சென்றவரை இடைமறித்த சகி, "ஆண்ட்டி.. ஆண்ட்டி.. ரிலாக்ஸ்.. எனக்கு ஒன்னும் இல்ல.. நைட் பைக் ஸ்கிட் ஆகி கீழ விழுந்துட்டேன். அதுல லேசா கை கால்ல உறசிடுச்சு. வீட்டுக்கு வந்து ஷவர் பண்ணிட்டு வந்து வலில கொஞ்சம் கட்டில்ல சாஞ்சேனா அப்டியே தூங்கிட்டேன்" என்று ருத்ரனைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். விசாலாக்ஷி, "சரிம்மா நீ ரெஸ்ட எடு. காலையில ருத்ரன் கூட வீட்டுக்கு வந்துரு.. இல்லேனா நான் வேணும்னா வரவா?" என்று வினவினர். சகி தயங்கியபடியே, "இல்ல ஆண்ட்டி நீங்க அலைய வேணாம். நான் ரு... அவர் கூடயே வந்துறேன்.. அப்பறம் எங்க வீட்ல சொல்லாதிங்க ஆண்ட்டி ப்ளீஸ்... ரொம்ப பயந்திருவாங்க, எனக்கு ஒன்னும் இல்ல ஆண்ட்டி.." என்க, விசாலாக்ஷி அழைப்பைத் துண்டித்தார். 'என் பேர கூட சொல்லமாட்டியாடி' என்று மனதில் நினைத்து வருந்தியவன் அவள் ஓய்வு எடுக்க வேண்டுமென்று அறைக்கு வெளியே வந்துவிட்டான். அவ்வப்போது அறையின் ஜன்னல் வழியாக அவளை எட்டிப் பார்த்துக் கொண்டான்.


காதல் மலரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#47

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#48
அவன் அவள் காதல்

காதல் 24

காலை சகிக்கு மருத்துவமனையில் இருந்த உணவு விடுதியில் பால் வாங்கிக் கொடுத்தான் ருத்ரன். சகி, "எனக்கு ஒன்னும் வேணாம். நான் கேட்டேனா உன்கிட்ட" என்று பொறிந்து தள்ள, அவன் "என் மேல இருக்க கோவத்துல உன்ன நீயே கஷ்ட படுத்திக்காத... ப்ளீஸ்டி குடி" என்று கெஞ்சினான். அவனது கெஞ்சல் சகியை ஏதோ செய்ய, மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் குடித்தாள். ருத்ரன், "இப்போ வலி பரவால்லையா குட்டிமா" என்று அக்கறையாகக் கேட்க, சகி "வீட்டுக்கு கிளம்பலாமா ப்ளீஸ்" என்று அவன் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள். அவன் முகம் சுருங்க, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளது மருந்துகளையும் மருத்துவக் கோப்புகளையும் ஒரு பையில் எடுத்து வைத்து அவள் எழுவதற்கு உதவ வந்தான். வேண்டாம் என்று கையைக் காட்டி அவனைத் தடுத்தவள், தானே மெதுவாக எழுந்து வெளியே சென்றாள். அதற்குள் அவன் காரைக் கிளப்பி வர, முன்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.


ருத்ரனின் வீடு வந்ததும் இறங்கிக் கொண்டவளை வெளியே நின்றிருந்த விசாலாக்ஷி அணைத்துக் கொண்டார். அவளை உள்ளே அழைத்து அமரச் செய்தவர், "என்ன டா குட்டி இது, இவ்ளோ கேர்லெஸாவா இருகிறது? நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா" என்று உரிமையாகக் கடிந்து கொண்டார். "ஐயோ விசுக்குட்டி எனக்கு ஒன்னும் இல்ல. ஐ ஆம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்று அவர் கன்னங்களைப் பிடித்து இழுத்துக் கொஞ்சினாள். அப்போது உள்ளே வந்த ருத்ரனின் விழிகள் இதை ஏக்கமாகப் பார்த்தன. விசாலாக்ஷி, "சகி நீ அந்த ரூம்ல இருந்துக்கோ, பக்கத்துல தான் என்னோட ரூம். உனக்கு எதுவும் வேணும்னா கூப்டு" என்றார். சகி, "ஆண்ட்டி நீங்க என்ன பேஷன்ட்டாவே மாத்தீருவீங்க போலயே. நான் என் வீட்லயே இருந்துக்குறேன்" என்றாள். அதற்கு விசாலாக்ஷி, "பாரு சகி குட்டி... உனக்கு பெயின் கில்லர் டேப்ளெட்ஸ் எல்லாம் குடுத்திருக்காங்க. அதுக்கு நல்லா தூக்கம் வரும், கரெக்ட் டைம்க்கு சாப்பிட மாட்ட. ஃபீவர் சரியாகுற வரைக்குமாச்சு நீ இங்க இருந்துதான் ஆகணும். சஞ்சு, அங்கிள் யாரும் ஊர்ல இல்ல, வர ஒரு வாரம் ஆகும். சோ நீ ஃப்ரீயா இருக்கலாம்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். இன்னமும் சகி தயங்க விசாலாக்ஷி, "சரி உனக்கு இங்க தங்க விருப்பமில்லன்னா உன் அம்மாவுக்கு கால் பண்ணி உன் கூட வந்து இருக்க சொல்றேன்" என்று இடியை இறக்கினார். பதறிப்போன சகி, "விசுக்குட்டி.... நகர முடியாதபடி லாக் பண்ணிட்டியே, என்ன ஒரு வில்லத்தனம்.. சரி இங்கயே இருக்கேன் பட் ஃபீவர் சரியாகுற வரைதான். இப்போ வீட்டுக்கு போய் என் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்" என்று அவரைச் செல்லமாக முறைத்தபடி கிளம்பினாள்.


அவள் தன் வீட்டிற்குச் சென்று கதவைத் திறக்க, அவள் பின்னே வந்து நின்றான் ருத்ரன். அவள் என்ன என்பது போல் பார்க்க, அவன் "உன் திங்ஸ் எடுத்துட்டு வர்றதுக்கு அம்மா ஹெல்ப் பண்ண சொன்னாங்க" என்றான். அவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள். பின் வெளியே வந்தவள், தன் மருத்துவச் செலவுக்கான பணத்தை அவனிடம் நீட்டினாள். அவன் அவளைக் குழப்பமாகப் பார்க்க, அவள் "ஹாஸ்பிடல் பில் நீங்க கட்டுனத பாத்தேன்" என்றாள். ருத்ரனுக்கு கோவம் தலைக்கேற, மிகவும் கஷ்டப்பட்டுத் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தவன், "என் சகிக்கு நான் கட்டுனேன். அத உள்ள வை ப்ளீஸ்" என்றான். சகி,"யார் யாரோலாம் எனக்கு பணம் கட்டத் தேவையில்ல. நான் யாருக்கும் தொல்லையா இருக்கவும் விரும்பல, யாரோட நிம்மதிய கெடுக்கவும் விரும்பல. சோ ப்ளீஸ்..." என்று மறுபடியும் அவனிடம் பணத்தை நீட்டினாள். அதற்கு மேல் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாத ருத்ரன், "அம்மா தாயே தப்புதான்... நான் அன்னைக்கு எதயுமே யோசிக்காம என்ன பேசுறேன்னே தெரியாம பேசுனது தப்பு தான். அன்னைக்கு உனக்கு ரெண்டு மணி நேரத்துல அம்பது தடவையாச்சு கால் பண்ணிருப்பேன், ஸ்விச்ட் ஆஃப்னே வந்துச்சு. என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறி அடிச்சுட்டு வந்தா, அந்த ராஸ்கல் உன்ன..... அத பாத்ததும் அவன கொன்னு போடற அளவுக்கு கோவம் வந்துச்சு. உன் கேர்லெஸ்னஸ்-ஆல உனக்கு எதுவும் ஆகிருமோன்னு பயத்துல தான் அன்னைக்கு அப்டி நடந்துக்கிட்டேன். அவன் மேல இருந்த கோவத்தையும் உன் மேல காட்டி தப்பு பண்ணிட்டேன். நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புதான். என்ன மன்னிச்சிரு. நீ அழுதுட்டே கிளம்புன அப்பறம் தான் நான் பேசுனது தப்புன்னு எனக்கே தெரிஞ்சுது. உனக்கு ரத்தம் வர்றத பாத்து எவ்ளோ துடிச்சு போய்ட்டேன் தெரியுமா? அடுத்த நாள் அம்மா கூப்டாங்கன்னு உன் வீட்டுக்கு வந்தப்போ உன்ன அந்த நிலைல பாத்துட்டு என்ன நானே வெறுத்துட்டேன். ஒவ்வொரு தடவையும் நீ என்ன யாரையோ நடத்துற மாதிரி நடத்துறப்போ வலிக்குதுடி. உனக்கு என்ன பாக்க புடிக்கலேன்னு சொன்னேல்ல. இனிமேல் கஷ்டப் படாத. உன் கண்ணுல படாதபடி இருந்துக்குறேன். உனக்கு எப்போவாச்சு என்ன மன்னிக்கனும்னு தோனுச்சுன்னா கால் பண்ணு" என்று கட கடவெனப் பேசவிட்டு, அவள் பையைச் சுமந்துகொண்டு சென்றுவிட்டான். கலங்கிய கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சகி.


ருத்ரனின் வீட்டிற்குச் சென்ற சகி, அங்கு இரண்டு நாட்கள் தங்கினாள். ருத்ரன் சொன்னது போல அவ்விரண்டு நாட்களும் அவன் அவளது கண்ணிலேயே படவில்லை. மனம் அவனை வெகுவாகத் தேடியது. அவன் தோள் மீது சாய வேண்டும் போல இருந்தது. இரண்டு நாட்களை விசாலாக்ஷியுடன் கழித்தவளுக்குத் தன் வீட்டிற்கு வந்த பின்பு தனிமை வாட்டி எடுத்தது. ஒரு மாதமாகியும் சகி அவனைப் பார்க்கவே இல்லை. சகி அவனது வீட்டிற்குச் செல்லும் நேரங்களில் கூட அவன் அங்கு இருக்கவில்லை. ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் புரண்டவளுக்கு அன்று மருத்துவமனையில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டது, தன்னிடம் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சியது அனைத்தும் நினைவிற்கு வந்தது. 'அன்னைக்கு அவன் ஃபோன்ல ஆண்ட்டிட்ட பேசுனப்போ பாத்தேனே, என் ஃபோட்டோவ தான வால்பேப்பரா வச்சிருந்தான். நான் தான் புரிஞ்சுக்காம பேசிட்டேன்.. அன்னைக்கு அவன் கையில கூட கட்டு போட்டிருந்தான், நான் என்னனு கூட கேக்கலயே' என்று நினைத்து வருந்தினாள். நள்ளிரவு சமயம் அவனது வண்டியின் சத்தம் கேட்க, ஓடிச் சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். ருத்ரன் தான் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். சோகம் நிறைந்த முகத்துடன், பல நாட்கள் மழிக்கப் படாத தாடியுடன் இருந்த அவன் தோற்றத்தைக் கண்ட சகிக்குக் கண்கள் கலங்கின. அவன் அவள் வீட்டைக் கடந்து சென்ற சில நொடிகளுக்குள் அவனைத் தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டாள் சகி. அவனையே நினைத்துப் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு அன்று தூக்கமே வரவில்லை. காலை ஆறு மணிக்கு மீண்டும் அவனது வண்டியின் சத்தம் கேட்க, அதே போல ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தாள். அவன் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காகத் தான் பின்னிரவில் வந்து அதிகாலையில் செல்கிறான் என்று நினைத்தவளுக்கு மனம் கனத்தது. அவன் இவ்வாறு வரும் நேரங்களில் விழித்திருந்து அவனுக்குத் தெரியாமல் ஜன்னல் வழியாக அவனைப் பார்ப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டாள். மருத்துவமனையில் கூட முன்புபோல் யாரிடமும் வள வளப்பது இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என அமைதியாக இருந்தாள். கலகலவெனச்
சுற்றித் திரிந்தவள் உயிரற்று சுற்றிக் கொண்டிருந்தாள்.


காதல் மலரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#49

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
341
Likes
913
Location
Chennai
#50
அவன் அவள் காதல்

காதல் 25

சகி ஒரு நாள் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். தன்னை யாரோ பார்ப்பது போலத் தோன்ற ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். அங்கு ருத்ரன் தன் சீருடையில் வண்டி மீது சாய்ந்து நின்று இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சகி தன்னைக் கண்டு கொண்டதை அறிந்ததும், உடனே வண்டியைக் கிளப்பிச் சென்று விட்டான். அடுத்து வந்த நாட்களில் சகி மருத்துவமனைக்குச் செல்லும் போதும் வீட்டிற்குத் திரும்பும் போதும் மருத்துவமனை அருகில் நின்று ருத்ரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை சகி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவள் மனம் நெகிழ்ந்தது. சகி இரவு வீட்டில் படுத்திருக்கும் பொழுது, 'இவ்ளோ ஆசைய மனசுல வச்சுக்கிட்டு இவன் ஏன் இப்டி இருக்கான்? ஒரு சின்ன சண்ட.. திருப்பி வந்து பேசுனா கொறைஞ்சா போயிடுவான். என் கண்ணுலயே படமாட்டானாம் ஆனா அவன் மட்டும் ஒளிஞ்சு நின்னு பாப்பானாம். பெரிய இதயம் முரளினு நினைப்பு, லவ் பைலியர் மாதிரி தாடிய வளத்துக்குட்டு எப்போ பாத்தாலும் சோகமா மூஞ்சிய வச்சுகிட்டு சுத்திட்டு இருக்கான்' என்று அவனை மனதில் திட்டிக் கொண்டாள். பிறகு, 'சகி... நீ இனிமே அழுது வடிஞ்சுகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது... இவன இப்டியே விட்டா காலம் பூராவும் ரெண்டு பேரும் இப்டியே இருக்க வேண்டியதான்.. பழைய சகியா மாறி களத்துல இறங்குனா தான் சரிவரும்' என்று முடிவெடுத்தாள்.


அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்தாள் சகி. விறு விறுவெனத் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு ருத்ரனின் வீட்டிற்குச் சென்றாள். விசாலாக்ஷி வழக்கமாக ஐந்து மணிக்கே எழுந்து சமையலைத் தொடங்கி விடுவார். சகி அங்கு போய் நிற்கவும் அதிர்ந்தவர், "சகி குட்டி என்ன நடுராத்திரில எந்திச்சு வந்திருக்க? மழ தான் பெய்யப் போகுது இன்னைக்கு" என்றார் கிண்டலாக. அப்போது சரியாக ருத்ரன் தயாராகிக் காபி குடிக்கக் கீழே வந்து இவளைப் பார்த்து அதிர்ந்து நிற்க, சகி "போ விசுக்குட்டி, உன்ன பாக்காம என்னால எப்டி இருக்க முடியும்.... ஐ மிஸ்ட் யு சோ மச்" என்று ருத்ரனைப் பார்த்துக்கொண்டே விசாலாக்ஷியின் கன்னத்தைப் பிடித்து இழுத்துக் கொஞ்சினாள். 'இவ நம்மள சொல்றாளா இல்ல அம்மாவ சொல்றாளா... கொழப்புறாளே... ராட்சசி' என்று நினைத்துக் கொண்டு காபியைக் குடித்தான். பிறகு விசாலாக்ஷியிடம் "சரிமா நான் கிளம்புறேன்" என்று கூறி வெளியே சென்று கொண்டிருந்த பொழுது, "ஏன் ஆண்ட்டி உங்க பையன் உண்மையிலேயே போலீஸ் தானா? இவ்ளோ சீக்ரம் போறாரு? தோட்டக்காரங்க தான் அதிகாலையிலேயே வேலைக்கு போவாங்க" என்று சத்தமாகக் கத்தினாள் சகி. அதைக் கேட்ட ருத்ரனின் உதடுகளில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. இன்றைக்கு இது போதும் என்று நினைத்த சகி தன் வீட்டிற்கு வந்து உற்சாகமாக மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.


மறு நாளும் அதே போல அதிகாலையில் ருத்ரனின் வீட்டிற்குச் சென்றாள் சகி. அப்போது பேச்சு வாக்கில் ருத்ரனின் அறையில் AC வேலை செய்யவில்லை என்றும் அவன் சஞ்சுவின் அறையில் படுத்திருக்கிறான் என்றும் விசாலாக்ஷி கூற, சட்டென்று சகிக்கு மூளையில் மணி அடித்தது. கட கடவெனப் படிகளில் ஏறி மேலே சென்று சஞ்சுவின் அறைக்கதவைத் தட்டினாள். அவள் யூகித்த படியே ருத்ரன் கதவைத் திறந்தான். குளித்து விட்டுத் தலையைத் துவட்டிக்கொண்டே கதவைத் திறந்தவனை சில நொடிகள் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவள், தன்னைச் சமாளித்துக் கொண்டு "சஞ்சு.. சஞ்சு...." என்று கத்திக் கொண்டே ருத்ரனை இடித்து விட்டு உள்ளே சென்றாள். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த சஞ்சுவை அவள் தலையணையால் அடித்து எழுப்ப, அதிர்ந்து எழுந்து அமர்ந்தான். சகி அவனிடம், "பெரிய இவனா நீ? ஏதோ கோவத்துல கொஞ்சம் திட்டிட்டேன். நீயும் தான திட்டுன.. அதுக்காக இப்டி பேசாமையே இருப்பியா? சிடுமூஞ்சி சிடுமூஞ்சி" என்று பொறிந்து தள்ளினாள். அரைத் தூக்கத்தில் இருந்த சஞ்சுவுக்கு இவள் எதற்குத் தன்னைத் திட்டுகிறாள் என்றே புரியவில்லை. அவளைப் பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ருத்ரனுக்கோ தெளிவாக விளங்கியது, இவள் தன்னிடம் தான் வம்பு செய்கிறாள் என்று. மனதில் 'அன்னைக்கு என்ன என்ன பேச்சு பேசுனா ராட்சசி.. இப்போ டெரெக்டா பேசமாட்டாளாமா' என்று நினைத்துக் கொண்டு அலமாரியில் துணியைத் தேடுவது போல அங்கேயே நின்றிருந்தான். சகி மேற்கொண்டு, "AC ரூம்லயே AC ஒர்க் ஆகலையாமே ஆண்ட்டி சொன்னாங்க.." என்று சஞ்சுவிடம் மீண்டும் பேச ஆரம்பித்தாள். கடுப்பான சஞ்சு, "பைத்தியமே எதுக்கு காலங்காத்தால என்ன எழுப்பி வச்சு இப்டி மொக்க போடற, ஒழுங்கா கிளம்பீரு.. இல்ல கொன்றுவேன் உன்ன" என்று கத்தினான். சகி சிரித்துக் கொண்டே, "சரி சஞ்சு கோவ படாத, நான் கிளம்புறேன்.. டாடா..." என்று அறைக்கு வெளியே சென்றவள் மறுபடியும் அறைக்குள் எட்டிப் பார்த்து, "சஞ்சு.. உங்க அண்ணனுக்கு எதுவும் ஷார்ட் டைம் மெமரி லாஸ் இல்லயே, உன் வாட்ரோப்ல ரொம்ப நேரமா டிரஸ் தேடிட்டு இருக்காரு" என்று ருத்ரனைப் பார்த்துக்கொண்டே சொல்லி, நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுச் சென்றாள். அசட்டுப் புன்னகை ஒன்றை உதிர்த்த ருத்ரன், 'ச்ச கண்டு புடிச்சுட்டா' என்று நினைத்துக் கொண்டான்.


நள்ளிரவு ருத்ரனின் வண்டிச் சத்தம் கேட்டதும் விறு விறுவென பால்கணிக்கு ஓடினாள் சகி. தன் அலைபேசியை வேண்டுமென்றே காதில் வைத்து, "ஹலோ.... ஹலோ... டேய்.... இப்போ கேக்குதா?" என்று கத்தினாள். இதை எதிர்பார்க்காத ருத்ரன் சட்டென வண்டியை நிறுத்தி மேலே பார்த்தான். சகி அலைபேசியில் பேசுவதைப் போலவே, "என்னடா லுக்கு விட்ற? கண்ண நோண்டிருவேன்.. கருங்கொரங்கு.. வரும்போது ஹாரன் அடிக்கணும்னு தெரியாது உனக்கு? ஆளு மட்டும் நல்ல மலை மாடு மாதிரி வளந்திருக்க, கொஞ்சம் கூட அறிவு இல்லயா? டியூப் லைட்... மரமண்ட..." என்று ருத்ரனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு பேசினாள். ருத்ரன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வண்டியைக் கிளப்பி வீட்டிற்கு வந்தான். முகம் கைகால் கழுவிக் கட்டிலில் சாய்ந்தவன் சகி செய்யும் குறும்புகளை எண்ணிச் சிரித்துக் கொண்டான். 'எப்டிலாம் படுத்துறா, பிசாசு.. லைஃப்ல உன்ன மிஸ் பண்ணிருவேனோன்னு பயமா இருந்துச்சு டி.. இனிமே இல்ல.. நீ என்னோட சகி.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ டி... இன்னும் ஒரு வாரத்துல நான் உன்ன முதல்முதலா பாத்த நாள் வருது, அன்னைக்கு உனக்கு சப்ரைஸிங்கா ப்ரொபோஸ் பண்றேன்' என்று நினைத்துக் கொண்டான். இத்தனை நாள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்க நிம்மதியாகக் கண்ணயர்ந்தான்.


காதல் மலரும்..!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.