ஆடிட்டர் ஆவது எளிது!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,571
Location
chennai
#1
ஆடிட்டர் ஆவது எளிது!

பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே தற்போது சி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், சி.ஏ. நுழைவுத்தேர்வு நடைபெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே அதற்கான பதிவை மாணவர்கள் செய்ய வேண்டியது அவசியம். பிளஸ் டூ முடித்தப்பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் சி.ஏ. படிப்பை படித்துவிடலாம். இந்தப் படிப்பில் மொத்தம் நான்கு நிலைகள் உண்டு. காமன் புரபசியன்ஷி (சி.பி.டி.), இண்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ் எக்ஸாம் மற்றும் இன்போடெக் டிரெய்னிங், ஆர்ட்டிக்கிள்ஷிப் டிரெய்னிங், இறுதித் தேர்வு என நான்கு கட்டங்களாக இந்தப் படிப்பு பிரிக்கப்படுகிறது.

இதில் காமன் புரபஷியன்சி டெஸ்ட் என்பது சி.ஏ. படிப்பில் சேருவதற்கான அறிமுகத் தேர்வு என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இன்னும் எளிதாக சொல்லப்போனால், சி.ஏ. படிப்பில் வெற்றிபெறுவதற்கான நுழைவுத் தேர்வு இதுதான். இந்தத் தேர்வு எழுத பதிவு செய்ய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புல் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

சி.ஏ. படிப்பில்தான் சேர வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பில் கணிதப் பதிவியல், வணிகவியல், பொருளியல், கணிதம் அல்லது பிசினஸ் மேத்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் அடங்கியப் பிரிவை தேர்வு செய்து படிப்பது நல்லது. அதேபோல, பத்தாம் வகுப்பு முடித்துவுடன் நுழைவுத் தேர்வு எழுத பதிவு செய்வதைவிட பதினொன்றாம் வகுப்பு முடித்தப் பிறகு சி.ஏ. படிப்பில் பதிவு செய்வது சிறந்தது. அப்போதுதான், சி.ஏ. பாடங்கள் பற்றிய புரிதல் இருக்கும். நுழைவுத் தேர்வு எழுதுவதிலும் பெரும் குழப்பம் இருக்காது. சி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கொள்கையும் கொண்ட மாணவர்கள், சி.ஏ. படிப்பின் முதல்படியான சி.பி.டி. என்று அழைக்கப்படும் காமன் புரபஷியன்சி டெஸ்ட் எனும் தேர்வு எழுத பதினோறாம் வகுப்பு தேர்வு முடிந்தவுடனேயே அல்லது பிளஸ் டூ தேர்வு முடிந்த பிறகு தனியே பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்துவிடலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது படிக்க நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். சி.பி.டி. தேர்வானது தேசிய அளவில் நடைபெறுவதால், தேர்வு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். கேள்விகள் முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும்.

இந்த நுழைவுத் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கானது. ஃபண்டமெண்ட்டல் ஆஃப் அக்கவுண்டிங், மெர்க்கன்டைல் லா, ஜெனரல் எகனாமிக்ஸ், குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் ஃபண்டமெண்ட்டல் ஆஃப்அக்கவுண்டிங் பகுதிக்கு 60 மதிப்பெண்களும், மெர்சன்டைல் லா பிரிவுக்கு 40 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, ஜெனரல் எகனாமிக்ஸ் மற்றும் குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் பகுதிகளுக்கு தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்கள். தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் மற்றும், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

தேர்வு காலை 2 மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் நடைபெறும். காலையில் நடைபெறும் தேர்வுக்கு 100 மதிப்பெண்களும், பிற்பகல் நடைபெறும் தேர்வுக்கு 100 மதிப்பெண்களுமாக ஒதுக்கப்படுகிறது. கேள்விகள் முழுவதும் அப்ஜக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா ஒரு மதிப்பெண்கள். சரியாக பதில் அளிக்கும் கேள்விக்கு ஒரு மதிப்பெண்ணும், தவறாக விடையளித்தால், 0.25 மதிப்பெண்களும் கழிக்கப்படும் என்பதால், மாணவர்கள் மிக கவனமாக விடையளிக்க வேண்டியது அவசியம். விடை தெரிந்தது மாதிரியும், ஆனால், நிச்சயமாக விடை தெரியாத கேள்விக்கு விடையளிக்காமல் விடுவது உத்தமம். ஏனெனில் சரியான விடை என்று நினைத்து தவறாக விடையளித்துவிட்டால், சரியாக விடையளித்த கேள்விக்குறிய மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால், மாணவர்கள் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. தேர்வு முடிவடைந்து 40 நாட்களுக்குள் தேர்வு முடிவு வெளிவந்துவிடும்.

சி.பி.டி. தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அந்த மாணவர், தேர்ச்சியடைந்தவராக கருதப்படுகிறார். ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் கண்டிப்பாக 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை ஒரு பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு மேலும், மற்றொரு பாடத்தில் 40 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றிருந்தால் அந்த மாணவர் தேர்ச்சியடைந்தவராக கருதப்படுவாரா?
இல்லை. ஒரு பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அந்த மதிப்பெண் டிஸ்டிங்க்ஷனாக கருதப்படும். அதே வேளையில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றிருக்கும் பாடத்தில், மாணவர் தோல்வி அடைந்தவராகவே கருதப்படுகிறார். அந்தப் பாடத்தை மறுபடியும் படித்து தேர்வு எழுத வேண்டியது வேண்டியது அவசியம்.

பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்த மாணவர்கள் சி.ஏ. படிப்பில் சேர முடியாதா?
நம்மில் பலபேருக்கு இம்மாதிரியான சந்தேகம் இருக்கிறது. பிளஸ் ஒன் பிரிவில் கணிதம், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களைக்கொண்ட தேர்வு செய்த மாணவர்களுக்கு, சி.ஏ. படிக்க எளிதாக இருக்குமே தவிர இந்த மாணவர்களால் மட்டும்தான் சி.ஏ. படிக்க முடியும் என்ற அர்த்தம் இல்லை. அறிவியல் பிரிவு தேர்வு செய்த மாணவர்களும் கண்டிப்பாக சி.ஏ. படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், சி.பி.டி. தேர்வில் பரவலாக எல்லாப் பிரிவில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பொருளியல், வணிகவியல் சார்ந்த கேள்விகள் அதிகம் என்பதால், அந்தப் பாடங்களை பிளஸ் டூ வகுப்பில் தேர்வு செய்து படித்திருந்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் அவ்வளவுதானே தவிர, எந்தப் பிரிவை தேர்வு செய்த படித்த மாணவர்களும் கண்டிப்பாக சி.ஏ. படிப்பில் சேர்ந்து படிக்க முடியும்.


சி.ஏ. படிக்க ஏதேனும் தனியே கல்வி நிலையங்கள் உண்டா?
சி.ஏ. படிப்பை தனியே கற்றுத்தர பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மாதிரி தனிப்பட்ட கல்லூரிகள் எதுவும் கிடையாது. ஆனால், சி.ஏ. என்பது பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற ஒரு தொழிற்படிப்பு. இந்தப் படிப்பை வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். வீட்டில் இருந்து படிக்க முடியாத மாணவர்கள், சி.ஏ. படிப்பை கற்றுத்தரும் இன்ஸ்டிட்யூட் அல்லது கோச்சிங் வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். கோச்சிங் வகுப்பை விட இன்ஸ்டிட்யூட்டில் கட்டணமும் குறைவு. அதே நேரத்தில் ஒரே பாடத்திற்கு பல்வேறு நிபுணர்கள் வந்து கற்றுத்தருவதால், சமீப காலமாக இன்ஸ்டிட்யூட்டிற்குச் சென்று சி.ஏ. படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.

சி.ஏ. படிப்பை எந்தப் பல்கலைக்கழகம் நடத்துகிறது?
சி.ஏ. எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா எனப்படும் ஐ.சி.ஏ.ஐ. எனப்படும் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

சி.ஏ.வில் இரண்டாம் படித் தேர்வு எப்படி இருக்கும்?
சி.ஏ. படிப்பை பொருத்தவரை முதல் படியான சி.பி.டி. தேர்வில் தேர்ச்சியடைந்தவுடன் இரண்டாம் படிக்கு பதிவு செய்துவிடவேண்டும். பதிவு செய்த நாள் முதல் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாகவது கண்டிப்பாக படிக்கவேண்டும். சொல்லப்போனால், இந்த இரண்டாம் படித் தேர்வு கொஞ்சம் கஷ்டம்தான். இண்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ் எனப்படும் ஐ.பி.சி.சி. எனும் இரண்டாம் பிரிவில் மொத்தம் 7 தாள்கள். இரண்டுப் பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரிவில் முதல் பிரிவில் அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), லா எதிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (160 மதிப்பெண்கள்), காஸ்ட் அக்கவுண்டிங் அண்ட் ஃபைனான்சியல் மேனேஜ்மெண்ட் (100 மதிப்பெண்கள்), டேக்சேஷன் (100 மதிப்பெண்கள்) என்று நான்கு தாள்களும், இரண்டாம் பிரிவில் அட்வான்ஸ் அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), ஆடிட்டிங் அண்ட் அஸ்யூரன்ஸ் (100 மதிப்பெண்கள்), இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் ஸ்ட்ரேடஜிக் மேனேஜ்மெண்ட் (100 மதிப்பெண்கள்) என்று மூன்று தாள்களும் உண்டு. இரண்டாம் கட்டத் தேர்வில் 7 தாள்களுக்கான மொத்த மதிப்பெண்கள் 760 மதிப்பெண்கள். இதிலும் மாணவர்கள் கண்டிப்பாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும்.

சி.ஏ. படிப்பில் 100 மதிப்பெண்கள் சாத்தியமா?
கண்டிப்பாக சாத்தியம். பலபேர் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பை படிப்பதே கடினம். அதுவும், இதில் தேர்ச்சிப் பெறுவது என்பது குதிரைக்கொம்பு என்றெல்லாம் தவறான எண்ணங்களை பரப்பிவிட்டுவிட்டார்கள். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. பிளஸ் டூ படிக்கும்போது, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று போராடிப் படிக்கிறோம். அதனால், குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களையாவது பெற்றுவிடுகிறோம். ஆனால், சி.ஏ. படிப்பில் சேர்ந்த உடனேயே எப்படியாவது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிடுகிறது. 50 சதவீத மதிப்பெண்களுக்கு மட்டுமே படிக்கும் நம்மவர்களால் எப்பஐ 100 மதிப்பெண்கள் பெற முடியும். 100 மதிப்பெண்களுக்கு குறிக்கோளை வகுத்துக்கொண்டு, சி.ஏ. படித்தால் கண்டிப்பாக இதிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெறலாம். என் பயிற்சி மையத்தில் படித்த நிறைய மாணவர்கள் சி.ஏ. தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தப் படிப்புக்கு பயிற்சி ஏதும் உண்டா?
இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு, ஓரியண்டேஷன் புரோகிராம் நடத்தப்படும். அதைப்போல இன்பர்மேஷன் டெக்னாலஜி குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படும். இவையெல்லாம் முடிந்தபிறகு நகரத்தில் உள்ள முன்னணி ஆடிட்டர்களிடம் ஜூனியராக சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் எப்பஐ பிரபல மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக சேர்ந்து சில ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்களோ, அதேபோல் சி.ஏ. இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், முன்னணி ஆடிட்டர்களிடம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது பயிற்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். இதை ஆர்ட்டிக்கிள்ஷிப் என்று சொல்வார்கள். இந்தக் காலக்கட்டங்களில் பல்வேறு நிறுவனங்களில் வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமாவரி தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாணவர்கள் நேரடியாக தெரிந்துகொள்வார்கள். மூன்று ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்கள் சி.ஏ. படிப்பில் கடைசி கட்டமான ஃபைனல் எக்ஸாமிற்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்காலத்தில் ஊதியம் வழங்கப்படுமா?
கண்டிப்பாக ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் வழங்கவேண்டும் என்று நியதி இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அப்பஐ இல்லை. நகரங்களைத் தக்கவாறும் ஆடிட்டர்களின் மனநிலையை பொருத்தவாறும் பயிற்சிக்காலத்தில் ரூ.5000 முதல் பத்தாயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. படிக்கும் காலத்தில் அதிகபட்ச வருமானம் பெறக்கூடிய ஒரே படிப்பு சி.ஏ. என்றுகூட சொல்லலாம்.

ஃபைனல் எக்ஸாம் எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
ஐ.பி.சி.சி. எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், இரண்டரை ஆண்டுகள் முன்னணி ஆடிட்டர்களிடம் பயிற்சி முடித்து அதாவது ஆர்ட்டிக்கிள்ஷிப் முடித்தவுடன், இந்தந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் மொத்தம் எட்டுத் தாள்கள். இதிலும் ஒவ்வொரு தாளிலும் கண்டிப்பாக 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றாகவேண்டும். அதில் குறையும் மாணவர்கள் தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவார்கள். தனித்தனியாக 40 சதவீத மதிப்பெண்களும் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இறுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் முழுமையான ஆடிட்டர் ஆகிவிட முடியுமா?
இறுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஜி.எம்.சி.எஸ். எனப்படும் ஜெனரல் மேனேஜ்மெண்ட் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியானது மொத்தம் 30 நாள்கள். முன்பு இந்தப் பயிற்சி 15 நாள்கள்தான் இருந்தது. தற்போது, இந்தப் பயிற்சி நாட்களை அதிகரித்துள்ளார்கள். இந்தப் பயிற்சியில் ஆடிட்டர்கள் தாங்கள் எப்பஐ நடந்துகொள்ளவேண்டும், வாடிக்கையாளர்களிடம் எப்பஐ கலந்துரையாடவேண்டும் என்ற விஷயங்கள் ஆரம்பித்து பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்படும். இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு ஏ.சி.ஏ. எனப்படும் அசோசியேட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஷிப் எனப்படும் சான்றிதழ் அளிக்கப்படும். இந்தச் சான்றிதழைப் பெற்றவர்கள் அடுத்ததாக, தங்கள் ஆடிட்டர் பணியினை தொடரலாம்.

சி.ஏ. படிப்பிற்கு கல்விக் கடன் கிடைக்குமா?
இது ஒரு தொழிற்படிப்பு. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு எவ்வாறு கல்விக்கடன் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறதோ அதேபோல், சி.ஏ. படிப்பிற்கும் வங்கிகள் எந்தவித காப்பும் இல்லாமல் பல்வேறு வங்கிகள் கடன் வழங்கி வருகிறது.

சி.ஏ. படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்பஐ இருக்கிறது?
சி.ஏ. படித்து முடித்து ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதுவே தனியாக ஆடிட்டர் தொழில் செய்ய நினைப்பவர்கள் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் பெற முடியும். இந்தியாவில் மொத்தமாக கணக்கெடுத்துப் பார்த்தால், இரண்டில் இருந்து இரண்டரை லட்சம் ஆடிட்டர்கள்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிவரத்தில் 2015 ஆம் ஆண்டிற்குள் நம் நாட்டுக்கு கிட்டத்தட்ட 8 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்தே சி.ஏ. படிப்பிற்கான மகத்துவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சி.ஏ. படித்தால் நிறுவனங்களில் என்னமாதிரி பதவியளிப்பார்கள்?
சி.ஏ. படித்து வெளிவரும் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஃபைனான்சியல் அனாலிசஸ், மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ஸி, டேக்ஸ் கன்சல்டன்ஸி, கார்ப்போரேட் லா அட்வைஸ், புராஜக்ட் பிளானிங் அண்ட் பைனான்ஸ், போரன்சிக் ஆடிட் அண்ட் இன்வஸ்டிகேஷன் போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம். இந்தப் பிரிவில் பணியில் சேருபவர்களுக்கு தொடக்கத்திலேயே மாதம் ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.