ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்?

Joined
Apr 17, 2016
Messages
1
Likes
1
Location
canada
#1
ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பது உண்மையா?

ஆண் குழந்தை பெண் குழந்தை இரண்டிற்குமே அப்படி தானா.

விளக்கம் தேவை.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,292
Likes
149,873
Location
Madurai
#2
Hi @swathi pras

Read out here

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?

எதுகை, மோனையுடன் நம்மவர்கள் நிறைய சொற்றொடர்களைப் புதிது, புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும், ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தால் நாய் படாத பாடு பட வேண்டும்,

சித்திரையில் பொறந்தா பெத்தவனுக்கு ஆகாது, ஆனியில பொறந்தா கூனிப் போகும், ஐப்பசியில பொறந்தா பசியில வாடும், மாசியில வயசுக்கு வந்தா வேசியாப் போவா, என முட்டாள்தனமான, மூட நம்பிக்கையை வளர்க்கின்ற பல சொற்றொடர்கள் இங்கு உலா வருகின்றன. இந்த மாதிரியான சொல் வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவை முற்றிலும் பொய்யானவை.

ஒரு சில பித்தலாட்டக்காரர்கள் பரிகாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. இது போன்ற ஏடாகூடமான கருத்துகளில் கவனத்தைச் செலுத்தாதீர்கள். எந்த மாதத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரஹ நிலையின்படியே வாழ்க்கை அமையும் என்பதுதான் உண்மை.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,571
Location
chennai
#3
ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பது உண்மையா?

ஆண் குழந்தை பெண் குழந்தை இரண்டிற்குமே அப்படி தானா.

விளக்கம் தேவை.
Dear swathi
எங்கள் குடும்பத்தில் சிலர் ஆடி மாதத்தில் பிறந்து இருக்கிறார்கள்.என் தோழிகள் சிலர் ஆடியில் பிறந்து இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோரும் சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள். கர்பமாக இருக்கும் ஆடி மாதத்தில் குழந்தை பேரை எதிர் பார்த்து இருப்பவர்கள் யாரும் இதை மனதில் வைத்து குழப்ப வேண்டாம் .

சிலர் அவசரப்பட்டு ஆனி மாத கடைசியில் சிசேரியன் செய்வது தவறு.நாம் பிறக்கும் நேரத்தில் நல்ல கிரக நிலை இருப்பது தான் முக்கியம் .மாதம் அல்ல.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,362
Likes
84,065
Location
Bangalore
#4
Hi @swathi pras

நிச்சயமாக இல்லை . @chan - லக்ஷ்மி சொல்லியிருப்பது போல , இதெல்லாமே கட்டுக்கதைகள் தான் .

இதே போல பலதும் நம்பிக்கையில் வைத்து , நிறைய பேர் கவலைக் கொள்கிறார்கள் .

எந்தக் குழந்தை , எந்த மாதத்தில் அல்லது நட்சத்திரத்தில் ,தினத்தில் பிறந்தாலும் , அந்தக் குழந்தையின் முந்தின ஜென்மங்களின் கர்மாக்களின் விதிப்படிதான் அமையும் அவர்களின் தொடர்ந்த வாழ்க்கை .

எனக்குத் தெரிந்தும் , எங்கள் குடும்பத்திலும் நிறைய பேர் ஆடி மாதத்தில் பிறந்து , சீரும் சிறப்புமாகவே உள்ளனர் .

ஆகவே , இதையெல்லாம் நினைத்து கவலை கொள்ளவே வேண்டாம் .
 
Joined
Aug 4, 2016
Messages
3
Likes
4
Location
chennai
#5
மிக்க நன்றி தெளிவுபடுத்தியர்க்கு. நான் இதனை அக்காவிடம் படிக்க சொல்கிறேன்.
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,242
Likes
17,086
Location
chennai
#7
Hi swathi,

Aadi madham ambalukku uriya madham. so aadiyil kuzhandhai piraaaaandhal naladhuthan nadakkum. Aandal pirandhadhu aadi madhathil thane. Naan pirandhadhum adi madham than. ippozhudhu varaikkum kadavulin arulal niraivana vazhakkayai than vazhndhu kondu irukkiren.so idhayellam ninaithu kavalai padadheergal.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.