ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா... அதை, பல வருடங்கள் போட்டு கிழித்து, பின் புதுச் செருப்பு வாங்கச் சென்ற கடையில், கிழிந்த செருப்பைக் காட்டி, இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி, நடந்து பார்த்து, திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை, வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரிக காலம் இது.

ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷூ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பல, பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன. ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும், அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும். பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும், மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 2,000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை.

அதாவது, திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால், ஆடம்பரமான காலணிகளை அணிந்து, அனைவரையும் அசத்தலாம். ஆனால், தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது. மிகவும் நளினமாக, ஆனால், பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும், அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன. சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும், நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது.

உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள். காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

கலர்புல் செருப்பு: கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், செருப்பு என்பது, நம் உள்ளங்களோடு நெருங்கிய தொடர்பு உடையதால், அதை வயசுக்கு தக்கபடியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக்கியமானது. ஏனென்றால், உள்ளங்காலுடன் நம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் தொடர்புடையது. உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங்குவது நல்லது. பொருத்தமான செருப்புகளை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்; பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால், தன்னம்பிக்கை குறையும். செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது, மூன்று விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. அவை, சவுகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர்களை விட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப்பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்புகின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால், விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. மேலும், வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால், தலைவலி, கண்வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்னைகள் ஏற்படும். பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால், பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும் போது, அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல்லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணியவும். பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப்புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும் போது, முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து, போதுமான இடைவெளி உள்ளதா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

Dinamalar
 

ashaaherb

Friends's of Penmai
Joined
May 29, 2011
Messages
275
Likes
336
Location
Dubai
#3
i always prefer buying flat sandals as i'm comfortable with my height..once in khadims' chennai, i was attracted by a blue colour designer footwear and bought immediately..planned to buy a matching dress for that which has been teased my friends till now...so whenever i buy footwear my friends make fun of that incident...never forget in my life...frm that day a big full stop to my designer footwear:)ROF..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.