ஆட்டிசத்துக்கு’ காரணம் அப்பா?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
[h=2]

ஆட்டிசத்துக்கு’ காரணம் அப்பா?
[/h]

பெற்றோரின் உயிரணு அல்லது கருமுட்டை செல்களில் ஏற்படும் திடீர்மாற்றங்கள், குழந்தைக்கு 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சிக் குறைபாடு அபாயத்தை அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், தாயை விட தந்தையே இந்த குறை பாட்டைத் தமது குழந்தைக்கு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக மூன்று பெரிய அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, முட்டை அல்லது உயிரணுவின் டி.என்.ஏ.வில் காணப்படும் குறைபாடுகள் எவ்வாறு ஆட்டிச அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒரு வர் இவ்வாறுதான் அந்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் குழு மேற்கொண்ட ஓர் ஆய்வில், அண்டத்தை விட உயிரணுவே முக்கியக் காரணம் என்று தெரியவந்தது.

'டீ நோவோ' திடீர்மாற்றம் என்று அழைக்கப்படும் நான்கு மரபணு மாற்றங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் மூன்று, உயிரணுவில் ஆரம்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஒன்று மட்டும் முட்டையில் தோன்றியிருக்கிறது.

ஆய்வாளர்கள் தங்களின் இந்த ஆய்வின்போது 209 குடும்பங்களைச் சேர்ந்த ஆட்டிச பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள், அவர்களது பெற் றோரின் டி.என்.ஏ.வை ஆராய்ந்தனர். இந்தக் குடும்பங்களில், குழந்தை மட்டுமே ஆட்டிச பாதிப்புக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஆட்டிச பாதிப்பு ஏதும் இல்லாத 50 குழந்தைகளையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வாளர்கள், 248 'டீ நோவோ' திடீர்மாற்றங்களில் 60, ஆட்டிச பாதிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இவர்களின் ஆய்வு முடிவின்படி, மூன்று ஜீன்கள் இந்த 'டீநோவோ' திடீர்மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆட்டிச பாதிப்பில் நூற்றுக்கணக்கான ஜீன்கள் தொடர்புடையதாக இருக்கலாம், நாம் ஏற்கனவே நினைத்ததை விட இது மிகவும் சிக்கலான விஷயம் என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
 
lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#2
useful information guna...tks for sharing
 
mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#4ஆட்டிசத்துக்கு’ காரணம் அப்பா?
பெற்றோரின் உயிரணு அல்லது கருமுட்டை செல்களில் ஏற்படும் திடீர்மாற்றங்கள், குழந்தைக்கு 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சிக் குறைபாடு அபாயத்தை அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், தாயை விட தந்தையே இந்த குறை பாட்டைத் தமது குழந்தைக்கு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக மூன்று பெரிய அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, முட்டை அல்லது உயிரணுவின் டி.என்.ஏ.வில் காணப்படும் குறைபாடுகள் எவ்வாறு ஆட்டிச அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒரு வர் இவ்வாறுதான் அந்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் குழு மேற்கொண்ட ஓர் ஆய்வில், அண்டத்தை விட உயிரணுவே முக்கியக் காரணம் என்று தெரியவந்தது.

'டீ நோவோ' திடீர்மாற்றம் என்று அழைக்கப்படும் நான்கு மரபணு மாற்றங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் மூன்று, உயிரணுவில் ஆரம்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஒன்று மட்டும் முட்டையில் தோன்றியிருக்கிறது.

ஆய்வாளர்கள் தங்களின் இந்த ஆய்வின்போது 209 குடும்பங்களைச் சேர்ந்த ஆட்டிச பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள், அவர்களது பெற் றோரின் டி.என்.ஏ.வை ஆராய்ந்தனர். இந்தக் குடும்பங்களில், குழந்தை மட்டுமே ஆட்டிச பாதிப்புக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஆட்டிச பாதிப்பு ஏதும் இல்லாத 50 குழந்தைகளையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வாளர்கள், 248 'டீ நோவோ' திடீர்மாற்றங்களில் 60, ஆட்டிச பாதிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இவர்களின் ஆய்வு முடிவின்படி, மூன்று ஜீன்கள் இந்த 'டீநோவோ' திடீர்மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆட்டிச பாதிப்பில் நூற்றுக்கணக்கான ஜீன்கள் தொடர்புடையதாக இருக்கலாம், நாம் ஏற்கனவே நினைத்ததை விட இது மிகவும் சிக்கலான விஷயம் என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
new info..................thanks
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#6
பகிர்வுக்கு நன்றி குணா
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.