ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
இந்த ஆண்கள் ஏன் வித்தியாசமாகிப் போனார்கள்? அவர்களும் பெண்களைப் போலவே இருந்திருந்தால் உலகில் எந்த ஆண்_பெண் பிரச்னைகளுமே வந்திருக்காதே! என்று நீங்கள் யோசிப்பது நியாயமானதுதான். ஆனால் என்ன செய்வது? இயற்கையின் லாஜிக் வேறாக இருந்ததே.

இயற்கையில் பெண் என்பவள் ரொம்ப பெரிய பொக்கிஷம். ஏன் தெரியுமா? பெண்ணிடம் தான் ஜனத்தொகையைப் பெருக்கும் பெரும் ஆற்றல் இருக்கிறது. ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டு இருப்பதா ஒரு பெண்ணின் வேலை? பெண் என்ன பிள்ளை பெறுகிற யந்திரமா? என்று நீங்கள் ஆட்சேபித்தால், வெயிட் வெயிட். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் வேண்டுமானால் மனித ஜனத்தொகை ஓவராய் இருப்பதினால், தாமத திருமணம், கருத்தடைச் சாதனம், பிள்ளை பிறப்பை சுயமாகக் குறைத்துக் கொள்ளும் போக்கு, கருக்கலைப்பு முறைகள், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்று நாம் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் தோன்றிய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு சிறுபான்மை உயிரினம் மனிதர்கள் மட்டுமே. அந்த கால கட்ட ஜீவனத்தில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் தான் அதிகம் என்பதால், குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல பெண் மிகப் பெரிய பொக்கிஷமாகவே கருதப்பட்டாள்.

பெண்கள் பாதுகாப்பாய் சவுக்கியமாய் இல்லை என்றால் ஒட்டுமொத்த உயிரினமே அழிந்து போய்விடுமே என்றுதான், பெண்களைப் பாதுகாக்கவென்றே இயற்கை ஆண்களைப் படைத்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் உயிர்கள் முதல் முதலில் தோன்றிய காலத்தில் ஆண் என்ற பாலினமே இருக்கவில்லை! எல்லா உயிர்களுமே ஆரம்பத்தில் பெண்பாலாக மட்டுமே இருந்தன. அவ்வளவு ஏன்? இன்று வரை பூமியில் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் வைரஸ், பாக்டீரியா, ஆல்கே, அமீபா மாதிரியான நுண்ணுயிர்களில் ஆண் பால் என்ற இனமே இல்லை... எல்லாமே ஒன்லி விமென்! ஏன் என்றால் இந்த உயிர்களுக்கு ஆணின் தேவை இல்லை! எந்தெந்த உயிர்களில் எல்லாம் பிற கிருமிகள் அல்லது வேறு உயிரினம் தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதோ அந்தந்த உயிர்களில் மட்டும் தான் ஆண் என்கிற ஒரு தனி பாலினம் இருக்கிறது.

மனிதர்களிலும் ஆணின் கடமை, பெண்ணைப் பாதுகாப்பதுதான். அதனால் தான் எரியும் விமானம், மூழ்கும் டைடானிக் கப்பல் ஆகிய செயற்கை விபத்துக்கள் ஆகட்டும், சுனாமி, நிலநடுக்கம், புயல் வெள்ளம் என்ற இயற்கைச் சீற்றங்கள் ஆகட்டும்... எங்கு ஆபத்து நேர்ந்தாலும் முதலில் காப்பாற்றப்படுவது பெண்ணினம் தான்.

இந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாப்பது அவ்வளவொன்றும் கஷ்டமில்லை. சமுதாயம், சட்டம், போலீஸ், மகளிர் ஆணையம் என்று பல கட்டமைப்புகள் இருப்பதால் பெண்களுக்கு நிறையவே பாதுகாப்பு உள்ளது. ஆனால் மனிதர்கள் தோன்றிய காலத்தில், இந்த ஏற்பாடுகள் இருக்கவில்லை. பிற மிருகம் தாக்கிவிடும் அபாயம் எந்நேரமும் இருந்த அந்த ஆரண்ய காண்ட வாழ்க்கை முறையில் ஒரு பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சும்மா சாதாரண நபரால் அது முடியாதே. அதுவும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்காத காலத்தில் பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதிக பட்ச வீரமும், அதைவிட அதிகமான தேகபலமும் கொண்டவனால் மட்டும்தான் முடியும்.

இந்த அதிகபட்ச வீரமும் தேக பலமும் தானாய் தோன்றிவிடாதே! அதை உருவாக்க டெஸ்டோஸ்டீரான் என்கிற தேகபலம் கூட்டும் ஹார்மோன் தேவைப்படுமே. இன்று ஒலிம்பிக்ஸ் மாதிரியான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையில் டெஸ்டோஸ்டீரான் மாதிரியான ஹார்மோன்களை ஊசி, மாத்திரை என்று செயற்கையாக உடம்பில் ஏற்றி, திடகாத்திரமான உடலைப் பெற முயல்கிறார்கள். அந்தக் கால காட்டு வாழ்க்கையில் ஆண் இப்படிச் செய்யவெல்லாம் வாய்ப்பே இல்லை. அவனே சுயமாகப் போராடி, தன் உடம்பை வளைத்து நிஜ டெஸ்டோஸ்டீரானை சுரந்தாக வேண்டும். அப்போதுதான் ஆபத்துகளுடன் மோதி, அயராமல் தன் துணைவியையும், பிள்ளைகளையும் அவன் காப்பாற்ற முடியும்.

ஆண்கள் இப்படி டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட, பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, அதிக பட்ச டெஸ்டோடீரான் சுரத்தலை வெளிப்படுத்தும் ஆண்களோடு மட்டுமே கூட விரும்பினார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இவள் பாட்டுக்கு ஒரு சோப்ளாங்கிக்கு பாவம் பார்த்து அவனோடு கூடி, பிள்ளை பெற்றாள் என்று வையுங்களேன். ஆபத்து காலத்தில் சோப்ளாங்கி, தைரியமாகப் போய் போராடி, மனைவி மக்களைக் காப்பாற்றிடாமல், பயந்து போய் எல்லாப் பொறுப்பையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டால் பிறகு அவளுக்குத் தானே எல்லா கஷ்டமும்? இந்த துர்பாக்கியம் எல்லாம் நேர்ந்துவிடக் கூடாதென்று தான் பெண்கள் எல்லோரும் மிக உஷாராக போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரத்தலை நிரூபிக்கும் ஆண்களோடு மட்டுமே கூட முயல்கிறார்கள்.

அவதார புருஷன் ராமனாகவே இருந்தாலும் வில்லை வளைத்தால் தான் சீதை என்று கட்டளைவிதித்தது கூட ராமனின் டெஸ்டோஸ்டீரான் அளவைச் சோதிக்கும் ஒரு நேரடி முயற்சியே! ஆக அந்தக் காலப் பெண்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து அதிக பட்ச டெஸ்டோஸ்டீரான் சுரந்த ஆண்களை மட்டும் ஜலித்து எடுத்து உறவுகொண்டதால், ஆண்வர்க்கம் போகப் போக அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் கொண்டவர்களாக மாறினார்கள். ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு அல்ல, முழுவதாய் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்கள் இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான், இன்னும் அதிக டெஸ்டோஸ்டீரான் என்று சுரந்துகொண்டே போனதில், ஆண்கள் அதிக தசைப் புடைப்பு, அதிக ரத்த அணுக்கள், அதிக நுரையீரல் கொள் அளவு, அதிக வலி தாங்கும் தன்மை, அஞ்சாத நெஞ்சம் என்று பல அனுகூலங்களைப் பெற்றார்கள்.

இந்த அதிகபட்ச டெஸ்டோஸ்டீரான் ஆணின் உடம்பை பல விதங்களில் மாற்றி அமைத்ததைப் போலவே அவனது மனதையும் மாற்றியது. அடிப்படை பெண் வடிவ மூளையில் மொழி மையம் பெரிது. கை ஜாடை, முக அசைவு போன்றவற்றை அறியும் மையங்கள் அதிகம். ஆணுக்கோ வேட்டையாடும் திறனை அதிகரிக்கும் ஆற்றல்கள் அதிகம் தேவை. ஓடும் இரையைத் துல்லியமாய் தேடிப் பிடித்து, அதன் வேகம், தன்னை விடவும் எவ்வளவு தூரம் என்பதையும் கணித்துக் குறிதவறாமல் ஆயுதத்தை எறிந்து, வேட்டையில் வெற்றி பெறத் தேவையான இந்த திறமையைத் தான் visuo spatial ஆற்றல் என்போம். அதாவது கண், கை அசைவு, தூரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் திறன்.

இந்தத் திறனெல்லாம் மனித இனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை. மனிதர்கள் பூச்சி உண்ணும் தாவர பட்சிணி வகையைச் சேர்ந்தவர்கள். பெரும் பனி யுகத்தில் கஷ்ட ஜீவனத்தை வெல்ல வேறு வழியில்லாமல் மாமிச பட்சிணி வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். அடிப்படையில் பூச்சி தின்னிகள் என்பதால் வேட்டைக்கு உதவாத ஒரு சாதா மூளைதான் ஆரம்பகால மனிதர்களுக்கு இருந்தது. மனித மரபணுக்கள் துரிதமாக செயல்பட்டு, மனித இனத்தைக் காப்பாற்ற புதிதாய் ஒரு சூப்பர் வேட்டை மூளையை உருவாக்க வேண்டியிருந்தது.

ஆனால் தாவர பட்சிணி மூளையை, மாமிச பட்சிணி மூளை ஆக்குவது அவ்வளவு சுலபமில்லையே! மூளையின் அளவு கொஞ்சம்தான். அதை ரொம்பவும் பெரிதாக்க முடியாது. அப்புறம் பிரசவத்தின்போது சிசுவின் தலை, இடை எலும்பிலேயே மாட்டிக் கொள்ளுமே! தலையும் பெரிதாக வேண்டும், பெண்ணின் மெல்லிடையை விட்டுப் பிரசவித்து வெளியேறத் தோதாகவும் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தன மரபணுக்கள். தலையைக் கொஞ்சம் பெரிதாக்கி, இடையைக் கொஞ்சம் அகலமாக்கி, மூளையில் இருந்த அநாவசிய மையங்களைக் காலிசெய்து வெற்றிடங்களை வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை வைத்து நிரப்பின.

அதனால் ஆண்கள் முக்கால்வாசி மொழி மையத்தை இழந்தார்கள். கூடவே கை ஜாடை, முக ஜாடை அறியும் மையங்களும் காலியாகின. எப்படியும் ஒரு ஆணுக்கு இந்தச் செயல்பாடுகள் தேவைப்படவில்லை. ஒரு நல்ல வேட்டுவன் மௌனமகத்தானே இருந்தாக வேண்டும். பேசிக்கொண்டே இருந்தால் மிருகமல்லவா அவனை வேட்டையாடிவிடும்! கை இருக்கிறதே என்று இவன் விஸ்தாரமாய் ஜாடை செய்து நண்பர்களோடு உரையாடினாலோ, அசைவைக் கவனித்ததுமே மிருகங்கள் உஷாராகி ஓடிவிடும். அதோடு, `நான் பாவமில்லையா! என்னை விட்டுடேன்! என்று ஏதாவது மிருகம் பரிதாபமாய் அவனைப் பார்த்தால், `போனா போகட்டும், இன்னிக்கு நாம பட்டினியா கிடந்தாத்தான் என்ன! என்று இவன் பச்சாதாபத்தில் வெறும் கையோடு வீட்டிற்கு வந்தால் போச்சு! அன்றே மனித வரலாறுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும்! ஆக, முக ஜாடையை உணரும் மையமும் அவுட்.

இது போக டெஸ்டோஸ்டீரான் இன்னொரு பெரிய மாற்றத்தையும் மனித மூளையில் ஏற்படுத்தியது. அது ஆணை விடாமுயற்சி கொண்டவனாக்கியது... தொடர்ந்து ஒரே விஷயத்தில் குறியாய் இருந்து தன் இலக்கை எட்டும் வரை அயராதிருக்க வைத்தது.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.. அவன் என்னதான் முயன்று தொடர்ந்து குறி வைத்தும், கடைசி நேரத்தில் இரை டிமிக்கி கொடுத்து ஓடிவிட்டால், அந்தத் தோல்வி இவனை `சை!' என்று சலிப்புற செய்யும். இவ்வளவு கஷ்டப்பட்டும் பலனில்லையே என்று சோர்ந்துபோய், தன்னம்பிக்கை இழந்து வேட்டைக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அவன் தோல்வி மனப்பான்மை மனித இனத்தை நிர்மூலமாக்கிவிடும்.

வேட்டையில் வெற்றி பெறாவிட்டாலும் அவனை உற்சாகம் குறையாமலிருக்க வைப்பதுதானே மரபணு ரீதியாகப் பயனளிக்கும். அதனால் டெஸ்டோஸ்டீரான் ஆணின் மூளையிலுள்ள இன்ப மையத்தை மாற்றி அமைத்து, ஒவ்வொரு வேட்டையும் சந்தோஷம். அதன் வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது, டெஸ்டோஸ்டீரான் மட்டும் விதிவிலக்கா என்ன? டெஸ்டோஸ்டீரான் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க அதன் பக்க விளைவுகள் பல தலை தூக்க ஆரம்பித்தன.

அது ஆண்களை எதிலும் முந்திச் செல்லத் தூண்டியது. காரணம், மற்ற ஆண்களை விட முந்தியிருக்கும் `ஆல்ஃபா ஆணை'த்தானே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும், பிற ஆண்களை விட தான் பெரியவன் என்று காட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்ற உத்வேகமும் ஆண்களுக்கு அதிகமாய் இருந்தது. போகப் போக, இந்த `நான் தான் உசத்தியாக்கும்' என்கிறா போக்கே ஆண்களை ஆதிக்க மனப்பான்மை கொள்ள வைத்தும் விட, உலகிலேயே தான் ஒருவன் தான் சூப்பர், மற்றவை அனைத்தும் மட்டம் என்ற எண்ணம் தலைதூக்க, மற்ற எல்லாவற்றையும்' தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர பெரிதும் போராடினான் ஆண். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த `மற்ற எல்லாவற்றையும் என்ற பட்டியலில் மனிதப் பெண்ணும் அடங்கிப் போய்விட்டாள். அதனால் அவளையும் அடக்கி ஆள்வது தன்னுடைய பிறப்புரிமை என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டான் ஆண். ஓவர் டெஸ்டோஸ்டீரான் சுரத்தல் அவனை முன்கோபியாய், முரடனாய், மூர்க்கனாய் மாற்றியது. பதவி ஆசை, பெண்ணாசை, போர் வெறி, வன்முறை என்று ஆண் தடம் புரள, இதற்கெல்லாம் பெண்ணும் பலியாக ஆரம்பித்தாள்.

ஆக, ஆணைத் தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்தவே பெண் அவனுக்குள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரானை சுரக்கச் செய்தாள். ஆனால் காலப் போக்கில் இந்த டெஸ்டோஸ்டீரானே ஆண் - பெண் வித்தியாசங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இன்றைய தேதியில், இந்த இரு பாலினரும் ஒருவருக்கு மற்றவர் புரியாத புதிராகவே போய்விட்டார்கள். ஆனால் உற்றுப் பார்த்தால் தெரியும் ஆணின் இந்த எல்லா வித்தியாசங்களுக்கும் காரணம் ஆண்கள் அல்ல, பெண்களே!

இதெல்லாம் படிக்க சுவாரசியமாய் இருந்தாலும், பெண்ணின் கை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ஆண்களை மறுபடியும் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? சும்மா இருந்த ஆணை பயங்கரவாதியாக்கிவிட்டாளே பெண், இனி அவனை எப்படி ஹேண்டில் செய்து அமைதியை நிலைநாட்டுவாள்?

அதற்கும் ஏகப்பட்ட ஐடியாக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள் பெண்கள்.
 
Last edited:

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
niraiya vishyangal solli irukkeenga sakthi.... kandippaga manasule vechukka vendiyathuthan.. thanks for sharing..
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#4
ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 1

அடக்கி வாசித்தல்

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? இது காலங்காலமாய் பெண்கள் பயின்று வந்த ஒரு மிகப் பெரிய சாஸ்திரம். ஆனால் ரொம்பவே சீக்ரெட்டான ஒரு சாஸ்திரம்.

எதற்கு இவ்வளவு ஒளிவு மறைவு என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த ரகசியத் தன்மைக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. தன்னை ஒரு பெண் ஹேண்டில் செய்யப் போகிறாள் என்று தெரிந்தாலே... அட, ஆண்களை விடுங்கள்... குட்டிக் குட்டி குழந்தைகள் கூட பெரிதாக முரண்டு பிடித்து எப்படியாவது நழுவி தப்பித்துவிட முயலும் போது, இத்தனை வலிய, பெரிய ஆண், அப்படிச் செய்ய மாட்டார்களா? ஆகவே, ஆண்களை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான முதல் அஸ்திரமே இந்த ஒளிவு மறைவுதான்.

காட்டில் வாழும் மிகக் கொடிய விலங்குகளில் ஒன்று சிங்கம். சாதாரணமாக, சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்கள் ஓடிப் பதுங்கிக் கொள்வார்கள். மற்றபடி சிங்கம் மனிதர்களை மருந்துக்குக் கூட மதிக்காது. முடிந்தால் மிதித்துக் கடித்துக் குதறி தின்றுவிடும். ஆனால் அதே சிங்கத்தை சர்க்கஸில் சேர்த்து அதை ஒரு நெருப்பு வளையத்தினுள் குதிக்க வைக்க அதே மனிதனால் முடிகிறதே. எப்படி?

சாதாரண சிங்கம் நெருப்பைக் கண்டால் ஒதுங்கும். மனிதர்களைக் கண்டால் தாக்கும், இது தான் அதன் இயல்பு. ஆனால் இந்த சர்க்கஸ் சிங்கம் மட்டும் எப்படி மனிதன் சொன்னதைக் கேட்டு நெருப்பு வளையத்தினுள் குதிக்கிறது?

அதுதான் மனிதனின் சாதுர்யம். தன்னை விடப் பல மடங்கு வலிமையும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு விலங்கை வெறும் சில உபாயங்களைக் கொண்டு அடக்கி, வழிக்குக் கொண்டு வருவதுதான் மனிதனின் சாமர்த்தியம்.

மனித ஆணும், மனிதப் பெண்ணை விட வலிமையானவன். ஆக்ரோஷம் மிக்கவன், அபாயகரமானவன். ஆனால், அந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அதே சாதுர்யத்தை சாதாரணப் பெண்களும் பயன்படுத்த பழகிக்கொண்டால், மனித ஆணும், சிங்கத்தைப் போலவே சாந்தமாய் மாறிப்போவான்.

அதெல்லாம் சரி. இந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அந்த சாதுர்யம்தான் என்ன? எடுத்த எடுப்பில் எந்த சர்க்கஸ் காரியும், ``ஏய் சிங்கமே, உன்னை நான் என்ன செய்கிறேன் பார். உன்னை ஹேண்டில் செய்ய கற்றுக் கொண்டு இதோ தெரிகிறது பார், இந்த நெருப்பு வளையம், அதன் உள்ளே உன்னைக் குதிக்க வைக்கப் போகிறேன்... தெரிந்துகொள்!'' என்று தன் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாய் போட்டு உடைப்பதே இல்லை. அதற்கு மாறாய் நெருப்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதை ஒரு வளைய வடிவில் வைத்திருப்பதாகவும் இந்த ஏற்பாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அவள் காட்டிக் கொள்வதே இல்லை.

அதற்குப் பதிலாய் சிங்கத்திடம் சாதாரணமாய் பழகுகிறாள். அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறாள், வேளா வேளைக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுகிறாள். அதன் பக்கத்திலேயே இருந்து பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். இப்படி ஆரம்பித்து, அப்புறம் சிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வரை காத்திருந்து பிறகு மெல்ல மெல்ல அதைப் பழக்கி, முதலில் சாதா வளையம், பிறகு சிவப்பு நிற வளையம், அப்புறம் தூரத்தில் கொஞ்சம் நெருப்பு, பிறகு பக்கத்தில் நெருப்பு, பிறகே வளைவில் நெருப்பு என்று மிகவும் நிறுத்தி நிதானமாகத் தானே செய்கிறாள்.

இவ்வளவு செய்யும் போதும் எந்தக் கட்டத்திலுமே தன் நோக்கத்தை அவள் சிங்கத்திடம் தெரிவிப்பதே இல்லை. அதனால்தான் சிங்கமும் தன் கெடுபிடியைத் தளர்த்தி, அவள் மனம் போல நடக்கப் பழகிக்கொள்கிறது.

இதற்கு மாறாக இவள் ஆரம்பத்திலேயே ``வா சிங்கம்... இந்த நெருப்பு வளையத்தினுள் போய் குதித்துவிடு'' என்று மிகவும் ஓப்பனாய் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தால், சிங்கம் அவளை அங்கேயே சிங்கிள் லபக்கில் விழுங்கியிருக்குமே.

அதனால் ஆண்களை ஹேண்டில் செய்யும் அரிய அஸ்திரங்களை கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் பழக வேண்டிய கலை, உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்று வெளியே காட்டிக் கொள்ளாத ரகசியம் காக்கும் திறமை.

``அதெல்லாம் முடியாது. என்னால் இப்படி எல்லாம் ரகசியம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். மனசுல பட்டதை பட்டு பட்டுனு செய்துதான் பழக்கம். இப்படி எல்லாம் ஒளிவு மறைவா என்னால் இயங்க முடியாது,'' என்று நீங்கள் நினைத்தால், வெல் அண்ட் குட், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், உங்களை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்ற இந்த கலையை கற்றுக்கொள்ளும் அடிப்படை தகுதி உங்களுக்கு இல்லை, அதனால் நீங்கள் இந்த ஆட்டத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது.

இல்லை. இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளத் தான் விரும்புகிறேன். ஆனால் உள்நோக்கம் மறைத்துப் பழக்கமில்லை. எப்படிச் செய்வது என்று தெரியாது என்று தயங்குகிறீர்கள் என்றால் டோன்ட் ஒர்ரி. இது ரொம்ப சுலபம் தான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வையுங்களேன். அந்தக் குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து தர வேண்டியுள்ளதென்றால் அதை எப்படிச் செய்வீர்கள்? ``இந்தா புடி, மருந்தைக் குடி'' என்று நேரடியாகவா சொல்வோம்? அப்படிச் சொன்னால்தான் குழந்தை முழு சவுண்டில் சைரனை ஆரம்பித்துவிட்டு அங்கிருந்து ஜகா வாங்கி விடுமே!

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளக் கூடிய பெரிய குழந்தை என்றால் உண்மையைச் சொல்லி குடிக்க வைக்கலாம். மிகவும் சின்னக் குழந்தை என்றால், எதுவுமே பேசாமல் குழந்தையை மடியில் போட்டு, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சங்கு நிறைய மருந்தை டபக் என்று குழந்தை வாயில் ஒரேயடியாக ஊற்றி, உடனே பாலைக் கொடுத்து குழந்தையை அப்படியே சமாதானப்படுத்துகிறவள்தான் சாமர்த்தியமான தாய்.

இப்படி அந்தத் தாய் குழந்தைக்கு தன் நோக்கத்தைத் தெரிவிக்காமல் மடார் என்று காரியத்தைச் செய்து முடிப்பது அந்தக் குழந்தைக்கு நன்மை தானே? அதைப் போலத்தான் இந்த `யுத்தி நம்பர் ஒன்று'ம், நீட்டி முழக்கி, விளக்கி, விவாதித்து முன்னறிவிப்புக் கொடுத்து எல்லாம் ஆண்களை நீங்கள் ஹேண்டில் பண்ண முடியாது. நீங்கள் பாட்டிற்கு இயல்பாக ஆண்களை அணுகுங்கள், உங்கள் உள்நோக்கம் வெளியே தெரியாதபடிக்கு. எப்படியும் ஆண்கள், ``இவள் வெறும் ஒரு பெண் தானே... இவளுக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது'' என்று அஸால்ட்டாகத் தான் இருப்பார்கள். அநேக ஆண்களுக்குத் தான் தெரியாதே, எல்லா ஜீவராசிகளையும் போல், மனித வர்க்கத்தில் பெண் தான் ஆணை விட ரொம்ப பொல்லாதவள். என்று...

இந்த ``ஆஃப்டர் ஆல் பெண் தானே'' என்கிற அஜாக்கிரதையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பெண்களுக்கு அட்வான்டேஜ் என்பதனால், `ஆண்களை ஹேண்டில் செய்யும் இந்தக் கலையின் முதல் பாடம் : `அடக்கி வாசியுங்கள்.' நீங்கள் ஹேண்டில் செய்யப் போகும் ஆணுக்கு கடைசிவரை தெரியவே கூடாது, அதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உள்நோக்கம் என்று.

எங்கே இந்த முதல் பாடத்தை வெற்றிகரமாய் கடைப்பிடித்து, ஏதாவது சில ரகசியங்களை பத்திரமாய் காப்பாற்றிக் காட்டுங்கள், பார்ப்போம். `சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம்' என்பதை மட்டும் நீங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இந்த முதல் டெஸ்டில் பாஸ் என்றும், இனி வரும் அடுத்தடுத்த அஸ்திரங்களை கற்றுக் கொள்ள தகுதியானவர் என்றும் அர்த்தம். பார்த்துவிடலாமே, நீங்கள் பாஸா இல்லையா என்று!
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#5
ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 2

ஆடவர் குணங்கள்

அடக்கி வாசித்து ஒளிவு மறைவாய் செயல்படுவது தான் ஆண்களை ஹேண்டில் செய்யும் முதல் அஸ்திரம் என்றெல்லாம் போன சிநேகிதியில் பார்த்தோமே... இத்தனை நாட்களில் நீங்கள் எத்தனை ரகசியங்களைக் காப்பாற்றினீர்கள்? எவ்வளவு ஒளிவு மறைவு சாதியப்பட்டது உங்களுக்கு? குறைந்த பட்சம் 35 சதவிகிதம் முடிந்தது என்றால் நீங்கள் பாஸ், அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள யூ ஆர் ரெடி. இல்லை என்றால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து உங்கள் ஓட்டை வாயை அடக்கிப் பாருங்கள். வெற்றிகரமாய் அடக்கிவிட்டீர்கள் என்றால், நீங்களும் அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள ரெடி.

அடுத்த அஸ்திரம் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா? தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது. இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, ``சீ, இவன் தேறமாட்டான்'' என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இரண்டாம் பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம். அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள். இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று, வழிக்குக் கொண்டு வருகிறேன், என்று பெண்கள் ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

அதை விட்டுவிட்டு, குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், நேரம் வீணாவதோடு, அரை ஆணை முழு ஆண் ஆக்குவதுதான் ஆட்டமே என்றான பிறகு, ஆண் ஏன் அரையாக இருக்கிறான் என்று எடுத்த எடுப்பிலேயே விதண்டாவாதம் பேசினால், இந்த ஆட்டத்தில் எப்படி முன்னேறுவதாம்?

ஆக, ஆண்களை ஹேண்டில் செய்ய வேண்டுமா, நீங்கள் கற்றுப் பழக வேண்டிய அடுத்த பாடம், அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் முக்கியமான மேட்டரே, இந்த அப்படியே ஏற்றுஃபிகேஷன்தான். இது தான் உங்களுக்கான இந்த ஹோம் ஒர்க். உங்களைச் சுற்றியுள்ள உருப்பட்ட, உருப்படாத, ஆண்களைக் கண்டு மன சஞ்சலப்படாமல், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையைப் பழக்கிக் கொள்ள முயலுங்களேன்.

இதில் நீங்கள் தேர்ந்து விட்டீர்கள் என்றால், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த பாடத்தைக் கற்றுக் கொள்ள நீங்கள் ரெடி!

source: kumudham snekithi
 
Last edited:

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#6
Eppadi Sakthi, Etharthamai ulla vishayangalai appadiye solli irukkireerkal... Angal Ellorume ippadiyillai... But Ippadi allatha Aangalum Adhigam illai.... Thanks for your sharing...
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#7
ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 3

பார்வை ஒன்றே போதுமே


என்ன ஸ்நேகிதிகளே, உங்களைச் சுற்றியுள்ள ஆண்களை எல் லாம் குற்றம் குறை யோடு அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டீர் களா? உங்கள் சகிப்புத் தன்மை அதிகமாகி யுள்ளதா? அப்படியானால், இந்த ஆண்களை ஹேண் டில் செய்யும் அரிய சாஸ்திரத்தின் அடுத்த லெசனைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

அடுத்த லெசனுக்குப் போவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு சின்ன மனமாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் எத்துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், இனி அடுத்து வரும் சில வாரங்களுக்கு உங்களை ஒரு மானுடவியல் நிபுணராய்க் கற்பனை செய்துகொள்ளுங்களேன். உங்களுக்கு ஆண்களோடு ஏற்கெனவே இருக்கும் அனுபவங்களை எல்லாம் தாற்காலிகமாய் ஏறக்கட்டி வைத்துவிட்டு, எந்த முன் அபிப்ராயங்களுமே இல்லாத வெற்றுத்தாளாய் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள் அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா? சிம்பிள், வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து இறங்கிய ஒரு புது அமானுஷய ஜீவராசியாய் உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள்! இதற்கு முன் நீங்கள், மனித ஆணைப் பார்த்ததே இல்லை, இப்போது தான் முதன் முதலில் பார்த்து அவனைப் பற்றிப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள். ஒரு தாவிரவியல் மாணவி செடி,கொடிகளை உற்று உற்றுப் பார்த்து இது என்ன? எப்படி? ஏது? எதனால்? என்றெல்லாம் புரிந்து கொள்வது போல, முழுக்க முழுக்க ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆண்களை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்துகொள்ளப் போகிறோம். என்ன ரெடியா?

உங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு x,y,z ஆணை எடுத்துக்கொள்வோமே. உங்கள் அமானுஷ்ய கண்களால் அவனை லைட்டாய்ப் பாருங்கள். அவன் ஒட்டுமொத்த நடை, உடை, பாவனை, தன் சுயத்தைப் பற்றிய வெளிப்பாட்டை வெறுமனே கவனியுங்கள். என்ன தெரிகிறது? நீங்கள் பார்க்கிறீர்கள் என்றதுமே, பார்வை தடுமாறி, வார்த்தைகள் தவறி, கொஞ்சம் அசௌகரியமாய் நெளிவது தெரிகிறதா? இது தான் ஒரு ஆணின் அடிப்படை கூச்சம்.

சிம்பிளாய் ஒரு உதாரணம் சொல்லட்டுமா? நாங்கள் கிராமங்களில் குழந்தைகளுக்கான மனநல முகாம்கள் நடத்தும் போது, குழந்தைகள், ``அய்யோ, டாக்டர், ஊசி போட வந்திருக்காங்க'' என்று பயந்துவிடக் கூடாதே என்பதற்காக சில கேளிக்கை விளையாட்டுக்களை முதலில் நடத்துவது வழக்கம். விளையாட்டு மூடில் குழந்தைகள் சற்று நேரம் ஜாலியாய் ஆடிப் பாடி முடித்த பிறகு முகாமை ஆரம்பித்தால், குழந்தைகள் பயப்படாமல் யதார்த்த மன நிலையில் இருப்பார்கள் என்பதற்காக இந்த யுத்தி.

இப்படி விளையாட்டு, கேலி, கேளிக்கை என்று குழந்தைகளை அழைத்து, ``ஒரு பாட்டுப் பாடேன்'' என்று சொன்னால், பெண் குழந்தைகள் ஆரம்பத்தில் கொஞ்சம் பிகு செய்துகொண்டாலும், வெட்கம் சீக்கிரமே ஆசை ஆசையாக, பாடவும் ஆடவும் செய்கிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகள், மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே, கூசி, ஒதுங்கி பின்னாலேயே நகர்ந்து போய்விடுவார்கள்.

ஆக, இயல்பிலேயே ஆண்களுக்கு இந்த விதமான சமூக கூச்சம் அதிகம் உண்டு. பெண் குழந்தைகளுக்கு மற்றவர்களின் முகபாவத்தைப் பார்த்து, அவர்கள் மூடை யூகித்து, இடம், பொருள் ஏவல் தெரிந்து நடப்பதென்பது இயல்பிலேயே வரும். காரணம் பிறவியில் இருந்தே பெண்களின் மூளைக்கு இப்படிப்பட்ட முகபாவம் புரிந்துகொள்ளும் தன்மை அதிகம். ஆனால் ஆண் குழந்தையின் மூளையில் இந்த முகபாவகிரகிப்பு மையம் குறைவு என்பதால், அவனுக்கு மனித முகங்களைக் கவனமாய்ப் பார்த்து குறிப்பு உணரும் தன்மை குறைவே.

இதனால் யாராவது அவர்களை உற்றுப் பார்த்தாலோ, ஒரு மாதிரியாகச் சிரித்தாலோ, தன்னை ஏதோ தவறாகப் பேசி, கேலி செய்கிறார்களோ என்ற பயம் ஆண்களுக்கு வந்துவிடுவதுண்டு. நீங்களே பரிசோதித்துப் பாருங்களேன். வேறு எதுவுமே செய்யாமல் ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையை அவன் கவனிக்கும் படி, வெறுமனே உற்றுப் பாருங்கள், உங்கள் முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி, உன்னிப்பாய் அவனை நீங்கள் தொடர்ந்து பார்த்தாலே போதும், குட்டிப் பையன் அழுது, அம்மாவைத் தேடி கத்தி ஊரையே கூட்டி விடுவான். அதுவே ஒரு வயது பெண் குழந்தையை நீங்கள் இப்படி முறைத்துப் பார்த்தால், அந்தக் குழந்தை உங்களை பதிலுக்கு முறைத்துப் பார்த்து, சிரித்து, கிட்டே வந்து கொஞ்சி, தாஜா செய்ய முயலும். இரண்டு குழந்தைகளுக்குமே, யாராவது தொடர்ந்து தங்களை முறைத்துப் பார்த்தால் பயமாகவே இருந்தாலும், ஆண் குழந்தை ஒதுங்கி ஆள் சேர்ப்பான். பெண் குழந்தை நைஸ் பண்ணி, நட்புண்டாக்க முயல்வாள்.

இப்படி ஆரம்பத்தில் சமூக கூச்சம் அதிகமாக இருந்தாலும், அநேக ஆண் குழந்தைகள் தொடர்ந்து பலருடன் பழகி, பக்கத்து வீடு, பள்ளிக்கூடம், விளையாட்டுத்திடல் என்று பல இடங்களுக்குப் போய், பல அன்னிய நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், இந்த கூச்ச சுபாவம் தணிந்து துணிந்து பேசிப் பழகும் பக்குவத்திற்கு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே பெண்களுடன் அரட்டை அடித்துப் பழகிய ஆண்களுக்கே பெண்களைப் போல, சரளமாய் வாயாடும் தன்மை தொற்றிக்கொண்டு விடுகிறது. இந்த வகை ஆண்களுக்கு சமூக கூச்சம் அவ்வளவாக இருப்பதில்லை.

இந்த அதிர்ஷ்டம் வாய்க்காத ஆண்கள் தான் நம்மூரில் அதிகம் என்பதால், சராசரி ஆணுக்குப் பெண்ணைக் கண்டால் கூச்சம் வந்துவிடுகிறது. இவனே இப்படிக் கூசி, பார்வை தடுமாறி, வார்த்தைகளை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும்போது, பெண் பாட்டிற்கு வள வள என்று பேச ஆரம்பித்து விட்டால், போயே போச்சு... பையன் அவள் பேச்சு வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போய் விடுவான்.

அத்தோடு, அவள் இவ்வளவு சுலபமாய், சரளமாய், தடையின்றிப் பேசுகிறாள், நான் மட்டும் ஏன் இப்படி தயங்கித் தொலைக்கிறேன்! என்கிற சுயபரிகாசமே, அவனின் கொஞ்ச நஞ்ச தைரியத்தைச் சூறையாடி விடுமே. அப்புறம் அவன் பாட்டிற்கு இந்த ஆட்டத்திற்கு நான் வரலைப்பா என்று ஒதுங்கிப் போய்விட்டால், உங்கள் இஷ்ட ஆணை நீங்கள் எப்படி ஹேண்டில் செய்யப் பழகுவதாம்?

அதனால் ஆண்களை முதன் முதலில் சந்திக்கும் போது, அவன் அதீத வெட்க உணர்வை மதித்து, பெண் கொஞ்சம் அவள் பார்வையைத் தாழ்த்தியோ, திருப்பியோ வைத்தால், தன் ஆரம்ப ``அய்யோ, பெண், பார்க்கிறாளே, என்ன செய்வேன்?'' என்ற பதட்டத்தில் இருந்து ஆண் மீண்டுகொள்ள அவகாசம் இருக்கும். அதுவரை பெண் கப் சிப் என்று இருந்தால், ``அய், என்னை விட இவளுக்கு கூச்சம் அதிகமா இருக்கே, இவளை விட நானே மேல்!'' என்று மகிழ்ந்து, தலைவர் திருவாய் மலர்ந்து பேச்சைத் துவக்குவார்.

இந்தப் பெண் உண்மையில் கூச்சமே படவில்லை, விட்டால் ஒரு நிமிடத்தில் ஒன்றரைக் கிலோ வார்த்தைகளை உதிர்த்துவிடும் வாயாடி இவள் என்பதெல்லாம் காலப் போக்கில் இந்த ஆணுக்குத் தெரிய வரும். இருந்தாலும் உறவின் ஆரம்பத்தில் அவன் கூச்சத்தை வெளிக்காட்டாமல் தைரியமாகப் பேச முடிந்தால் தானே இந்த உறவே தொடர வாய்ப்பு.

``ஆண் பிள்ளை வெட்கப்படக்கூடாது'', என்று சமுதாயம் வேறு விதிகளைப் போட்டுத் தொலைக்கிறதா, அதனால் அவன் கூச்சப்படுவதே ஒரு அவஸ்தை என்றால், அதை அந்தப் பெண் பார்த்து, தன்னைக் குறைவாக மதிப்பிட்டு விடுவாளோ என்ற கவலையே அதை விடப் பெரிய இம்சை.

அதனால் அந்த ஆணை ஆட்கொள்ள வேண்டும் என்று ஏதாவது அபிப்ராயம் உங்களுக்கு இருந்தால், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து வைக்காதீர்கள். அவன் தன் கூச்சத்தை விழுங்கிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவனுக்குக் கொஞ்சமாவது அவகாசம் தாருங்கள். தலைவர் கூச்சம் நீங்கி, தானாய் பேசும் வரை, அவனைக் கவனியாது போல பார்வையை வேறு பக்கம் திருப்பி வையுங்கள். இப்படி நீங்கள் அவனை மறைமுகமாய் ஊக்குவித்தால், அப்புறம் பாருங்களேன், பையன் எப்படி, துணிந்து பேச்சை ஆரம்பிக்கிறான் என்று.

இந்த யுத்தி பெண்கள் எல்லோருக்குமே இயல்பிலேயே வருவதுண்டு. ஒரு பெண் ஒரு ஆணை விரும்ப ஆரம்பித்திருக்கிறாள் என்பதற்கான முதல் அறிகுறியே அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு அவனை ஊக்குவிப்பது தான். இந்த இயல்பு தான் பெண்கள் தங்களை அறியாமலேயே ஆண்களை ஊக்குவிக்க பயன்படுத்தும் அஸ்திரம் நம்பர் 3!

இதே அஸ்திரத்திற்கு இன்னொரு முனையும் உண்டு. யாராவது ஆண் உங்கள் விருப்பத்திற்கு விரோதமாய் உங்களை நோட்டம் விடுகிறான், அவனை ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றால், தலை குனிந்துகொண்டு, அவன் பார்வையை ஊக்குவிக்காமல், நிமிர்ந்து நேராய் அவன் கண்ணையே பார்த்து, ``சரிதான் அடங்குடா'' என்பது போல ஒரே ஒரு சிங்கிள் பார்வை விட்டாலே போதும், உடனே அண்ணன் ஒதுங்கி விலகிவிட ஆரம்பித்து விடுவார்.

பார்வை ஒன்றே போதும், யாரையுமே மிரட்டிவிடும்.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#8
[h=3]ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 4

பொம்பளை சிரிச்சா...[/h]எந்தவித உணர்ச்சிவசப்படலுமே இல்லாமல், மனித ஆண் என்கிற உயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகும் ஒரு உயிரியல் மாணவி என்ற மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக் கொண்டாயிற்றா? அடக்கி வாசித்து, உங்கள் குறிக்கோள் வெளியே தெரியாதபடி இருக்கப் பழகி வருகிறீர்களா? ஆண்களை ஓட்டை உடைச்சல், சொத்தை, வெத்து, தேறுவது தேறாதது என்று அனாவசியமாய் பாகுபடுத்தாமல், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அக்செப்டென்ஸ் என்கிற பக்குவத்தை அடைந்துவிட்டீர்களா? பார்வை விலக்கி, ஆணின் அபரிமிதமான கூச்சத்தைப் போக்கி, அவனை ஊக்குவிக்கும் வித்தையைப் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? வெரிகுட், அப்படியானால் நான்காம் யுத்தியைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

இந்த நான்காம் யுத்தியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால், ஆண் - பெண் பழகுமுறையைக் கொஞ்சம் ஆராய்வோம். உங்களுக்குப் பிடித்த ஆணிடம் நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதைக் கவனியுங்களேன். அது உங்கள் மகன், மாணவன், சகா, காதலன், கணவன், கொழுந்தன், மாமனார், மச்சினர் என்று யாராக இருந்தாலும், உங்களுக்கு அவர்களைப் பிடித்திருந்தால், அவர்களைப் பார்த்த உடனே உங்களை அறியாமலேயே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அட, அவர்கள் ஆணாக இருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை, உங்களுக்குப் பிடித்த பெண்ணை, அல்லது பிடித்த நாய் குட்டி, பூனை குட்டி, அல்லது பொம்மை அல்லது ஏதாவது பொருளைப் பார்த்ததுமே என்ன செய்கிறீர்கள்?

``அய்'' என்று உங்களையும் அறியாமல் உங்கள் முகம் மலர்ந்து ஒரு புன்முறுவல் பூத்துவிடுகிறீர்கள்தானே? உங்கள் மனதிற்குப் பிடித்தவர், பிடித்தது என்றதுமே உங்கள் மூளை குஷியாகிவிடுகிறது. உடனே குஷி ரசாயனங்களைச் சுரக்கிறது. அகத்தின் இந்த குஷி முகத்திலும் உடனே தெரிந்துவிட, முகம் இறுக்கம் இன்றி, தளர்ந்து, விரிந்து, கண்கள் மலர்ந்து பிரகாசிக்கின்றன.

இப்படி முகம்மலர்ந்து ஒருத்தி இருந்தால், இந்த புன்முறுவலை பார்த்த உடனே, எதிராளிக்கு என்ன தோன்றும்? ``ஆஹா, என்னைப் பார்த்தவுடன் இவளுக்கு இவ்வளவு சந்தோஷம் என்றால், இவளுக்கு என் மேல் ரொம்பவே ஆசை போலிருக்கிறதே! இவளுக்கு என் மேல் இவ்வளவு ஆசை ஏற்பட என்ன காரணம்? நான் ரொம்ப ஓஹோ என்று இருக்கிறேன் போல், அதனால்தான் என்னைக் கண்டதுமே இவளுக்கு இத்தனை பரவசம் ஏற்பட்டு விடுகிறதுபோல!'' என்று எதிராளிக்கு தன் சுய அபிப்ராயம் சட்டென அதிகமாகி விடுகிறது.

உங்களின் சிரித்த முகம் அவர்களைப் பற்றிய கூடுதல் சுய மதிப்பீட்டை ஏற்படுத்துவது ஒரு பக்கம் என்றால், உங்களின் இந்த முகத் தோற்றம், உங்களைப் பற்றிய சில அபிப்ராயங்களையும் அநிச்சையாக ஏற்படுத்தும். ``இத்தனை சிரித்த முகமாக இருக்கிறாளே, அப்படியானால் இவள் உண்மையிலேயே மனுஷி தான்'' என்பதுதான் முதல் அபிப்ராயம். என்ன, சிரிக்கிறதுக்கும், இதுக்கும் என்னங்க சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ரிமெம்பர் சிநேகிதி, ஒட்டுமொத்த மிருக ஜாதியில் சிரிக்கவல்ல ஒரே மிருகம் மானிடர்தான். ஆக நீங்கள் புன்னகை பூப்பதே மனித வர்க்கம் என்பதன் மிக முக்கியமான அடையாளம்தான்.

இந்த முதல் அபிப்ராயம் போக, சிரித்த முகத்தைப் பார்த்தால், இன்னொரு அபிப்ராயமும் தானாக ஏற்படும், ``புன்னகை பூக்கிறாள், ஆக மனுஷிதான். மனுஷி மட்டும் அல்ல, சந்தோஷமானவளும்கூட...'' என்று உடனே உங்கள் பக்கம் அந்த நபரை வசீகரித்து இழுக்கும் தன்மையும் இந்தச் சிரிப்புக்கு உண்டு.

சிரிப்பு ஏன் வசீகரிக்கிறது என்கிறீர்களா? மனிதர்கள் மற்றவர்களின் உணர்ச்சி நிலைகளை மிகத் துரிதமாக கிரகித்துக் கொள்ளக்கூடியவர்கள். சந்தோஷம், சோகம், கோபம், மோகம், பயம், பதட்டம், ஆசை, நிராசை என்று எல்லா உணர்ச்சிகளுமே நம்மை ஆட்கொள்ள வல்லவைதான். அதனால்தான் திரையில் ஓடும் யாரோ ஒருவரது உருவத்தைப் பார்த்து, சிரிக்கிறோம், அழுகிறோம், கோபிக்கிறோம், மகிழ்கிறோம். வேறு யாருக்கோ ஏற்படும் உணர்வுகள்கூட நம்மைத் தொற்றிக்கொள்ள வல்லவை. இப்படி உணர்ச்சிகளுக்கு தொற்றும் தன்மை இருப்பதினால், மிக கவனமாக நாம் மனிதர்களை பரிசீலினை செய்கிறோம். யாரிடமிருந்து நமக்கு சந்தோஷ உணர்ச்சி தொற்றிக்கொள்கிறதோ, அவர்களை நாம் விரும்பிவிடுகிறோம். அதனால்தான், சினிமா ஹீரோ, ஹீரோயின், காமெடி நடிகர்களுக்கு இத்தனை மவுசு ஏற்பட்டிருக்கின்றது.

இதுவே யாராவது நம்மில் சோகமான, குரோதமான, மோசமான உணர்வுகளை தொற்ற வைத்தால், அவர்களோடு இருக்க நமக்குப் பிடிப்பதில்லை. சதா ஒப்பாரி வைக்கும் பெண், சதா மூஞ்சை தூக்கி வைத்திருக்கும் ஆண், சதா நை நை என்கிற திரிகிற பெரிசு...

இவர்களைக் கண்டதும், நாம் டபக்கென தப்பி ஓடிவிட முயல்வதே இந்த நெகடிவ் உணர்ச்சி தொற்றலில் இருந்து தப்பிக்கத்தான்!

ஆக, பாஸிடிவ் உணர்ச்சி வெளிப்படுத்தும் ஆட்களை விரும்பி நாடுவது, நெகடிவ் உணர்ச்சி ஆசாமிகளைக் கண்டால் ஒதுங்கி விலகுவது, இதுதான் மனித நடைமுறை. இப்போது சொல்லுங்கள். சிரித்த முகமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால், அவளோடு நேரம் செலவிடத் தோன்றும்தானே!

சிரிப்பு பொதுவாக எல்லோரையுமே ஈர்க்கும். அழும் குழந்தையைவிட, சிரித்த முக குழந்தையைக் கொஞ்சத் தான் எல்லோரும் விரும்புவார்கள். சிடுமூஞ்சி பெண்களைவிட சிரித்த முக பெண்களைத் தேர்ந்தெடுத்து, மாடலாக்கினால்தான் வியாபாரம் ஓடும். ஆக சிரித்த முகம் கூடுதல் வசீகரம், இதுதான் பொதுவிதி.

இந்த பொதுவிதி போக, பெண்ணின் சிரிப்புக்கு இன்னொரு முக்கியமான பணி உண்டு. பெண் சிரித்தால், ``அருகே வா'' என்கிற அழைப்பு மணி கேட்டுவிடும் சில ஆண்களுக்கு. இவளின் வெறும் இந்த புன்முறுவலாலே, உடனே அவள் அருகில் வந்துவிடும் உந்துதல் ஏற்பட்டுவிடும் ஆணுக்கு.
பெண்ணின் சிரிப்பு, ஆணுக்கு அத்தனை போதை ஏற்படுத்தும் தன்மை உண்டு.

``உன் ஒரு சிரிப்புக்காக ஊரையே தரலாமே'' என்கிற சினிமா வசனமாகட்டும், ``ஏன் உம்முனு இருக்கே, சிரிச்சா முத்தா உதிர்ந்திடும்'' என்று கெஞ்சும் காதலனாகட்டும், ``வீட்டுக்குப் போனா அவ மூஞ்சை தூக்கி வெச்சிருப்பா, பார்க்கும் போதே பத்திக்கிட்டு வரும்' என்று புகாரிடும் கணவர்களாகட்டும், எல்லாமே பெண்ணின் புன்னகை எத்தனை வலிமையான ஆயுதம் என்பதைச் சொல்லும் உதாரணங்களே.

இவ்வளவு வலிமையான ஆயுதம் என்பதினால் தான், ``பொம்பளை சிரிச்சாப் போச்சு!'' என்பது மாதிரி கட்டுப்பாடுகளை ஆணாதிக்க சமுதாயங்கள் முக்கிய கோட்பாடாகவே முன்வைக்கின்றன. ``இவப் பாட்டுக்கு சிரிச்சு வெச்சு, எவனாவது இவ பின்னாடியே வந்து தொலைச்சான்னா, எப்படிச் சமாளிக்கிறது?'' என்று பெண்களை அடக்கி ஆளும் போக்கும், அவர்களை கெடுபிடியாய் நடத்தும் போக்கும் இதனாலேயே ஏற்பட்டன. யார் என்ன கட்டுப்படுத்தினாலும், பெண்கள் தொடர்ந்து இயற்கை ஏவிய வழிகளில் இயங்கிக்கொண்டேதான் இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். உங்கள் ஆணை ஹேண்டில் செய்ய நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது, அவனைப் பார்த்து புன்னகை பூத்திடுங்கள். உங்களுக்கு அவனை உண்மையிலேயே பிடித்திருந்தால், நீங்கள் முயலாமலே தானாகவே உங்கள் முகம் புன்னகையில் மலர்ந்து விடுமே. முசுடு பாஸ், மோசமான கணவன், மூடியான மகன் இவர்களிடம் வலுக்கட்டாயமாகவேணும், ஒரு புன்னகையைப் பொழிந்து வையுங்கள். உடனே, உங்களை அவர்கள் நடத்தும் விதமே மாறிவிடும்.

இதே சிரிப்பென்னும் அஸ்திரத்திற்கு இன்னொரு ஆபத்தான முனையும் உண்டு. பெண்களைக் கவருகிறேன் பேர்வழி என்று எசகு பிசகாக உளறிக்கொட்டும் ரோட்டோர ரோமியோ, ஜொள்ளு விட்டே பிராணனை வாங்கும் சகா, மேலதிகாரி என்ற மிதப்பில் பெண்களிடம் தவறாக நடக்க முயலும் சீப்பான ஆசாமிகள், பெண்ணைப் பார்த்ததுமே தன் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லிப் பீற்றிக்கொண்டே தீருவது என்று குறியாய் இருக்கும் மொக்கைகள்... இப்படிப்பட்ட ஆசாமியாக இருந்தால் மறந்தும்கூட சிரித்து வைத்து விடாதீர்கள். அப்புறம் அவ்வளவுதான்... ஏகத்துக்கு குஷியாகி ஓவராய் வழிந்து கொட்டி உங்களைத் திணறடித்து விடுவார்கள். ``ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலை?'' என்று யாராவது கேட்டால், ``நான் சும்மாதான் இருந்தேன். அவதான் என்னைப் பார்த்துச் சிரிச்சா, அதனாலதான் பேசினேன்'' என்பார்கள்.

நீங்கள் என்னதான் ``பாவம் பார்த்துச் சிரித்தேன், சும்மா சிரிச்சேன், வேறு யாரையோ பார்த்துச் சிரித்தேன்'' என்று சொல்லி நழுவ முயன்றாலும், அநாவசிய வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடும்.

அதனால் அஸ்திரம் நம்பர் நாலான இந்த சிரிப்பு, ரொம்பவே கூரானது என்பதை உணர்ந்து, அதை பிரயோகிக்கப் பழகுவதே உங்களுக்கான இந்த வார ஹோம் ஒர்க். இந்த அஸ்திரத்தைத் திறமையாக உபயோகிக்க நீங்கள் பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்த பாடத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#9
ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 5

கண்டுஃபிகேஷன்!


அடக்கி வாசித்து ஆண்களை உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளும் திறன், உறவின் ஆரம்பத்தில் பார்வையை தாழ்த்தி, அவனை ஊக்கு வித்தல், பிறகு சிரிப்பாலேயே ஒரு அழைப்பிதழ் விரித்தல் ஆகிய ஆரம்ப அஸ்திரங்களை நீங்கள் வெற்றிகரமாக கையாள கற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால், லெட் அஸ் மூவ் ஆன் டூ அஸ்திரம் நம்பர் 5, அதாகப்பட்டது, கண்டுஃபிகேஷன்.

இந்த அஸ்திரத்தை பற்றி சொல்வதற்கு முன்னால், ஆண்பாலின இயல்பை பற்றி உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் விலங்கினங்களை ஒரு முறை நன்றாக உற்று பாருங்களேன். அதே ஆடு, மாடு, நாய் , பூனை, கோழி, சேவல், கொசு, ஈ, எறும்பு, கரப்பாண்பூச்சி, தானே, இதில் புதிதாக பார்க்க என்ன இருக்கிறது? என்று அலுத்துக்கொள்ளாதீர்கள்....நீங்கள் அன்றாடம் பார்க்கும் இந்த விலங்குகளில் ஆண் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். உதாரணத்திற்கு பேடை கோழிக்கு தலைக்கு மேல் அழகான அந்த சிகப்பு கொண்டை இருக்காது, ஆனால் சேவலுக்கோ பளிச்சென்று ஒரு கொண்டை இருக்கிறதே. ஆண் அடுக்கு தான் தாடியும், வளைந்த வணப்பான கொம்புகளும் இருக்கும். காலை மாட்டுக்கு தான் முதுகில் பெரிதான அந்த வளைவு இருக்கும். ஆண் கரப்பாண்பூச்சு பெரிய ஆண்டனாவோடு திரியும்.....ஆக, யானை, சிங்கம், மான், மயில் என்று நீங்கள் எந்த விலங்கை எடுத்தாலுமே ஆண் பெண்ணை விட கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறதே, அது ஏன் என்று யோசித்தீர்களா?

இந்த ஆண் விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது, யாரை கவர? இவை இப்படி கவர்ச்சியாக இருந்து தொலைப்பதினால் தானே வேடர்களின் கையில் சுலபமாக மாட்டிக்கொள்கின்றன. ஆக இந்த விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது அதுகளுக்கே ஆபத்தாகியும் போவதுண்டு. அப்படி இருந்தும் இந்த விலங்குகள் எல்லாம் இத்தனை எக்ஸ்டிரா ஃபிட்டிங்ஸ்ச்சுடன் சுற்றி வருகிறதென்றால், இதெல்லாம் யாரை கவர்வதற்கான முயற்சி?

இந்த கேள்வி தான் சார்லஸ் டார்வினுக்கும் வந்தது. அவரும் பல தரப்பட்ட விருகங்களை பரிசோதித்து பார்த்து விட்டு, கடைசியில் கண்டு பிடித்த உண்மை என்ன தெரியுமா? இந்த ஆண் விலங்குகள் எல்லாம் இப்படி ஓவராய் ஷோ காட்டியதே பெண் மிருகங்களை கவரத்தானாம்!

பெண் மிருகங்களை ஆண் மிருகங்கள் ஏன் கவர வேண்டும் என்று பார்த்தால், மிருக ஜாதியில் இப்படி ஒரு நடை முறை இருந்ததை கவனித்தார்கள். பெண் மிருகம் தேமே என்று மேய்ந்துக்கொண்டிருக்கும். இனபெருக்க காலம் வரும் போது அதன் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்களை மோப்பம் பிடித்துக்கொண்டு, ஆண் மிருகங்கள் அந்தப்புறம் வந்து சேர, பெண் மிருகமோ, உடனே ஆணோடு கூடிவிடாது. வந்து சேர்ந்த அத்தனை ஆண்களுக்குள் முதலில் ஒரு பல பரிட்சை நடக்கும். கொம்புள்ள மிருகங்கள் தலையோடு தலை மோதி, யார் பெரிய கொம்பன் என்று போட்டியிடும். இதை ரட்டிங் (Rutting) என்போம்.

மயில், குயில் மாதிரி ஆண் பறவைகளோ, தோகையை விரித்து ஆடி காட்டி, அல்லது, தேன்மதுர குரலில் பாடி காட்டி, தன் திறமையை வெளிபடுத்தும்.
இப்படி ஆண்பால், மோதலில் ஜெயித்து, தன் அருமை பெருமைகளை எல்லாம் கடை பரப்பி, தன் பராக்கிரமத்தை எல்லாம் பரைசாற்றியதும், தான், பெண்பால் அதனோடு கூடவே இசையும்.

ஆக ஆண் பாலின் அனைத்து பிரையாசைகளுமே, பெண் பாலின் பார்வையில் தான் , “பெரியவன்” என்று காட்டிக்கொள்ளவே செய்யபடுகின்றன. இப்படி எல்லாம் விஞ்ஞானிகள் புட்டு புட்டு வைக்க, சே சே, அதெல்லாம் மிருக நடத்தையாக இருக்கலாம், ஆனால் மனித ஆண்கள் போயும் போயும் பெண்ணை கவருவதற்காக இப்படி எல்லாம் நடந்துக்கொள்ளவே மாட்டார்களாக்கும் என்று பல பேர் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.

ஆனால் மானுடவியல்காரர்கள் உலகம் முழுக்கும் இருக்கும் எல்லா விதமான மனித நாகரீகங்களையும் போய் பார்த்து, மனித நடத்தையை ஒரு விசாலமான பார்வையில் ஆராய்ந்துவிட்டு, கடையில் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? மனிதர்களிலும் ஆண், தன் கவர்ச்சிகளை கடைபரப்புவது பெண்ணின் கவனத்தை ஈர்க்கத்தான்! பல ஆண்கள் இதை தெரிந்தே செய்கிறார்கள், சில ஆண்கள் தங்கள் அறியாமலேயே செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்களே உங்களை சுற்றி இருக்கும் ஆண்கள் அனைவரையும் கவனித்து பாருங்களேன். கதை கவிதை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, வர்த்தகம், வணிகம், அறிவியல், ஆண்மீகம், பென்பொருள், என்று எத்துறையை சேர்ந்த ஆணாக இருக்கட்டுமே, அவர்களின் எல்லா பிரயர்த்தனைகளுமே கடைசியில் பெண்களுக்காக தான் என்பது புரியும்! வயதிற்கு வந்த அந்த தருணம் முதல், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆண்ணில் பெருபாண்மை பொழுதும், பெண்ணிடம் எப்படி நன்மதிப்பு பெருவது என்ற போராட்டத்திலே தான் போகிறது.

இதற்க்காக, அவன் கல்வி கற்று அறிவாளி ஆகிறான், பொழுதுபோக்குகள் பல கொண்டு திறமைசாலி ஆகிறான், நேர்த்தியாக, நாகரீகமாக, தன் நடை உடை பாவனைகளை மெருகேற்றிக்கொள்ள பாடுபடுகிறான், வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்க முயல்கிறான். நான் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் பார், என்று காட்டிக்கொள்வதறக்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாகனங்களையும் வாங்கி, பிரயோகித்து, தன் அந்தஸ்த்தை அதிகரிக்க பார்க்கிறான்....எல்லாம் எதற்க்காக? பெண்களிடம் நற்சான்றிதழ் பெருவதற்க்காக தானே!
அதனால் ஸ்நேகிதிகளே, ஆண்களின் இந்த அவஸ்த்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள். அவன் இத்தனை பாடுபட்டு, தன் கவர்ச்சி விகித்தை கூட்டிக்கொள்ள முயலும் போது, நீங்கள் அவனை சட்டை செய்யாமல் போனீர்கள் என்றால், அவனுக்கு எவ்வளவு வலி உண்டாகும். ஒரு மனிதனின் மனம் புண் பட நீங்கள் காரணமாக இருக்கலாமா? அதனால் உங்களை கவர முயலும் ஆண், உங்கள் எதிரில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள செய்யும் நடவடிக்கைகளை கவனியுங்கள். அவனை நீங்கள் ஒரு பெரிய ஹீரோவாக நினைக்க வேண்டும், உங்கள் மனதில் வேறு யாருக்குமே தராத பிரத்தியேக இடத்தை அவன் ஒருவனுக்கு மட்டுமே தர வேண்டும் என்றெல்லாம் அவன் ஆசை படுவதை புரிந்துக்கொள்ளூங்கள்.

வேறு எதையும் கவனிப்பதை நிறுத்திவிட்டு, அவனுக்கு உங்கள் முழு undivided attention னையும் கொடுங்கள். அவனை ஆசையாய் பாருங்கள். அவன் பேசுவதை கவனமாய் கேட்டு, அவன் காரியங்களை ஊக்குவித்து, உம் கொட்டு வையுங்கள். இப்படி நீங்கள் அவனை கண்டுக்கொண்டே இருந்தால் தான், “அப்பாடா, கடைசியில என்னை கவனிச்சிட்டா!” என்று அவன் பட்ட பாட்டிற்கெல்லாம் பலன் கிடைத்த ஆனந்தம் அவனுக்கு கிடைக்கும். இன்னும் இன்னும் உங்களை மகிழ்வித்து பார்க்கும் ஆசை அவனுக்கு அதிகரிக்கும்.

நீங்கள் நேசிக்கும் ஆணை இப்படி கண்டுஃபை செய்தீர்கள் என்றாலே போதும், சூரியன் பட்டதும், போஷாக்கேற்பட்டு, செழிப்பாய வளரும் மரம் மாதிரி, அவன் தன்நம்பிக்கையும், சுய மரியாதையும் அதிகரிக்கும். சந்தோஷம் பெருகும். உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் ஆசையும் அதிகரிக்கும்!

ஆனால் ஒரு எச்சரிக்கை. பார்க்கும் எல்லா ஆண்களையும் கண்டுஃபை பண்ணி வைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் மேல் மையல் கொண்டு, “நீ என்னோட இல்லைனா என்னால உயிர் வாழவே முடியாது” என்று ஓவர் செண்டிமெண்டில் உருக ஆரம்பித்துவடுவார்கள் நீங்கள் கண்டுஃபை செய்த அத்தனை ஆண்களூம். இதுவே அநாவசிய பிரச்சைனைகள ஏற்படுத்தி விடுமே.

அதனால் இந்த கண்டுஃபிகேஷன் எல்லாம் நீங்கள் விரும்பும் ஆண்களுக்கு மட்டும் தான். பிற ஆண்களை கண்டுஃபை பண்ண இந்தியாவில் மட்டும் நூறு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் தந்தாக வேண்டுமே, அதனால் உங்கள் காதலன், கணவன், மகன், நண்பன், மருமகன், பேரன் மாதிரியான ஆண்களை மட்டும் கண்டுகொண்டு வையுங்கள். மீதமுள்ள மற்ற ஆண்களை கண்டுக்கொள்ள தான் அவரவர்க்கு என்று தாய் குலங்கள் இருப்பார்களே. அதனால் பேட்டை மாறி பரோபகாரம் செய்யாமல் உங்கள் எல்லைகளை உணர்ந்து இந்த கண்டுஃபிகேஷன் என்கிற அஸ்திரத்தை உபயோகித்து பாருங்கள்! ஆண்களை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸி என்பது புரியும்!
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#10
ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 6

ஆண்-வாட்சிங்


என்ன ஸ்நேகிதி, உங்கள் வாழ்வின் முக்கியமான ஆண்களை எல்லாம் கண்டுஃபை பண்ண ஆரம்பித்துவிட்டீர்களா? வெரி குட். இப்படி அவர்களை நீங்கள் கவனிக்கும் போது, பல முக்கியமான அம்சங்கள் உங்கள் கண்ணில் படும். உதாரணத்திற்கு உங்கள் எதிரில் அந்த ஆண்களின் உடல் அசைவுகள், பேசும் விதம், பேசும் தலைப்புக்கள், குரலின் ஏற்ற இறக்கம், பேசும் தோரனை, இத்யாதி, இத்யாதிகள்.

இதை எல்லாம் சாதாரண கண்களால் பார்த்தால் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னேனே, அறிவியல் மாணவியாக மாறி, ஆண்களை உங்கள் பாடபொருளாக எண்ணிக்கொள்ளுங்கள் என்று. அப்படி நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றி, பெண் என்கிற பிரக்ஞையை விட்டு வெளியேறி, முற்றிலுமாய் விஞ்ஞான பூர்வமாய் ஆண்களை அணுக வேண்டும். அதனால் சாதாரண பெண்பால் கண்களை தொடைத்துவிட்டு, பாலினமே இல்லாத விஞ்ஞான கண்களால் ஆண்களை கவனியுங்கள். என்ன உங்கள் மனதையும், பார்வை கோணத்தையும் மாற்றியாச்சா? ஓகே, நவ் யூ ஆர் ரெடி டு டூ சம் man-watching!

இந்த Man watching என்பது ரொம்பவே ஸ்வாரசியமான ஒரு பொழுது போக்கு. பறவைகளை வேடிக்கை பார்க்கும் பர்ட் வாட்சிங், காடுகளுக்குள் போய் வனவிலங்குகளை நேரடியாக பார்த்து புரிந்துக்கொள்ள உதவும் சஃபாரி பயணம், கடலடியில் டைவ் அடித்து நீர் வாழ் உயிர்களை காண உதவும் ஸ்கூபா டைவிங் மாதிரி, மனித ஆண்ணினத்தை நேரடியாக பார்த்து, observe செய்து அவர்களை பற்றி புரிந்துக்கொள்ள உதவும் இந்த சமாசாரத்தை தான் Man Watching என்கிறோம்.

பறவைகள், விலங்குகள், கடல் பிராணிகள் மாதிரியான வற்றை பார்க்கவாவது காடு, மேடு, குலம், கடல் என்றெல்லாம் போய் மெனக்கெட வேண்டும். ஆனால் இந்த ஆண்-வாட்சிங் இருக்கிறதே, எந்த விதமான சிரம்முமே இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே ஜோராய் செய்து விடும் சுலபமான பொழுதுப்போக்கு இது.

ஆனால் இது வெறும் ஒரு பொழுது போக்கு மட்டும் அல்ல, இது ஒரு சயின்ஸ், அறிவியல் துறை என்பதால், சும்மா போகிற வருகிற எல்லோருக்கும் இந்த சமாசாங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட முடியாது. ஆண்-வாட்சிங் மாதிரியான மிக உயர்நிலையான இந்த பாடங்களை கற்றுக்கொள்ள உங்களுக்கு பல அடிப்படை தகுதிகள் இருந்தாக வேண்டும்.

அதில் முதல் தகுதி: உணர்ச்சிவசப்படக்கூடாது. தமிழ் சமுதாயம் என்ன தான் கலை, இலக்கியம், தொழில்நிட்பம், மாதிரியான பல துறைகளில் அந்த காலத்திலேயே பெரிய சாதனைகள் செய்திருந்தாலும், அறிவியலில் நாம் புதிதாக, பெரிதாக எதையும் கண்டுபிடித்துவிடவில்லை.

காரணம் அறிவியலில் ஈடுபட உணர்ச்சியற்ற மனநிலை தேவைபடுகிறது. நமது சமுதாயமோ உணர்ச்சிக்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் தந்து வருவதால், உணர்ச்சிகளை மறந்து முழுக்க முழுக்க அறிவு பூர்வமாய், ஏன் எதற்கு எப்படி, எதனால் என்று கேட்டு, விடைகளை தேடும் பக்குவம் நமக்கு லேசில் சாத்தியமாவதில்லை. மனித மூளையின் டிசைன் எப்படி தெரியுமா? அடி மூளை உணர்ச்சி வசப்படும், மேல் மூளை பற்றற்று யோசிக்கும். எரிப்ரொருள் சிக்கனத்திற்காக, இந்த இரண்டில் ஒன்று வேலை செய்தால் இன்னொன்று ஆஃப் ஆகி விடும்படியாக தான் மூளை வடிவமைக்க பட்டுள்ளது. அதனால் தான் உணர்ச்சிவசப்படும் போது, தெளிவாக யோசிக்க முடியாமல் போகிறது. அதுவே அறிவியல் நோக்கோடு யோசிக்கும் போது, உணர்ச்சிகள் ஏற்படுவதில்லை. அதனால் ஸ்கிதிகாள், இந்த உணர்ச்சி மூளையை ஆஃப் செய்துவிட்டு, வெறும், அறிவு மூளையை ஆன் செய்யும் போக்கை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து, விமர்சனமற்ற மனநிலை, being non-critical. நம் ஊரில் இது ஒரு பழக்கம். நமக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அது பற்றி, முழுதாய் தெரியுமோ, தெரியாதோ, ஆனால் எல்லாவற்றை பற்றியும் முன் கூட்டியே ஒரு அபிர்ராயத்தை, preformed conclusionனை ஏற்படுத்திக்கொண்டு விடுவோம். அந்த அபிப்ராயத்தை தவறு சரி என்று சீர்தூக்கிபார்க்காமல் விடாபிடியாக பிடித்துக்கொண்டே இருப்போம். இந்த அணுகுகுறை ஆண்-வாட்சிங் என்கிற நமது ஆட்டத்திற்கு கொஞ்சம் கூட சரிபடாது. எந்த பாடபொருளானாலும், அதை அதனுடைய சுபாவத்தோடே ஏற்றுக்கொண்டு, சரி தவறு என்று ஓவராய் விமர்சனம் செய்யாமல், எது எப்படி இயங்குகிறதோ, அதனை அப்படியே கவனித்து கொள்வது முக்கியம். அப்புறம் தானே, இப்படி இயங்குவதை வேறு எப்படி எல்லாம் மாற்றி இயக்கலாம் என்று யோசிக்கவே முடியும்!

மூன்றாவது முக்கியமான தகுதி, குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவர்க்க வேண்டும், nonjudgmental மனப்பாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் உள்ள ஜீவன்கள், வஸ்துக்கள், ஜந்துக்கள் என்று எல்லாமே வேவ்வேறு விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்குகின்றன. புள் உயிர் தான், ஆனால் மான் அதை சாப்பிடுவதை பாவம் என்று கருதுவதில்லை. மானும் ஒரு உயிர் தான், புலி மானை சாப்பிடுவதை பாவம் என்று நினைப்பதில்லை. இரண்டும் உயிர்கள் தானே என்று மான் புலியை சாப்பிடுவதில்லை, புலியும் புள்ளை சாப்பிடுவதில்லை. அதே போல, இரண்டும் மான் தான் என்றாலும் ஆண் மானின் சுபாவமும் பெண் மானின் சுபாவமும் வெவ்வேறு. புலிகளும் அப்படியே. காரணம், ஒவ்வொரு உயிருக்கும், பாலினத்திற்கும் வேறு வேறு விதிகள்- இது தான் இயற்க்கையின் ஏற்பாடு என்பதால், இதை போய், ஹிம்சை-அஹிம்சை, சரி-தவறு, ஞாயம்-அநியாயம் என்றெல்லாம், மனித கண்ணோட்டத்தின் கோட்பாடுகளை இந்த சந்தர்பங்களுக்கு பொருத்தி பார்க்க முயல்வது வெட்டு வேலை மட்டுமல்ல, முட்டாள் தனமும் கூட. அதனால் இந்த சரி-தவறு என்கிற குறுகிய அணுகுமுறையை விட்டு வெளியேறி, அந்த அந்த உயிரை அதன் அதன் இயல்போடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் ரொம்ப முக்கியம்.

அடுத்த தகுதி:

பாலியல் மறதி! நீங்கள் ஒரு பெண் என்பதை நீங்கள் மறந்தாக வேண்டும். முடிந்தால் உங்களை ஒரு ஆணாகவோ, அல்லது பாலினமே இல்லாத ஒரு வேற்றுலக அமானுஷயராகவோ கற்பனை செய்துக்கொள்ளலாம். அப்போது தான் ஆண்-பெண் என்கின்ற எல்லைகளை மறந்து, உங்கள் பாலினத்தின் ஓரவஞ்சனைகளை விடுத்து, முழு அறிவியல் கண்ணோட்டத்துடன் மனித ஆணை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.
கடைசி தகுதி: விளயாட்டு தனமாய் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை. ஆண்-வாட்சிங் என்பது ரொம்பவே ஜாலியான, தமாஷான, அதே சமயம் ஸ்வாரசியமான சமாசாரம். அதனை முழுவதுமாக என்ஜாய் செய்ய உங்கள் கெடிபிடிகளை விட்டு தொலையுங்கள். புதிய ஊருக்கு போய் அங்குள்ள முன் பின் தெரியாத மனிதர்களோடு பழகி அவர்களது கலாசாரத்தி புரித்துக்கொள்ள போகிறீர்கள் என்று வையுங்களேன்.

உம் என்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு, ஒரு ஓரமாய் உட்கார்த்து, சீ சீ இதுங்க எல்லாம் மனித் பிறவிகள் தானா! இப்படி இருக்குதுங்களே என்று நீங்கள் ஆயிரம் முறை அலுத்துக்கொண்டாலும், பாதிப்பு, அந்த ஊர்காரர்களுக்கு இல்லை. அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள போனவர் நீங்கள் தானே, அதனால் இழப்பு உங்களுக்கு தானே! இதற்கு தான் participant observer என்ற டெக்னிக்கை கையாள சொல்கிறார்கள் மானுடவியல்காரர்கள்.

அவர்களோடு பழகி, அவர்கள் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொண்டே அவர்களை புரிந்துக்கொளவது தான் மிக சிறந்த யுத்தி! அதனால் ஆண்-வாட்சிங் என்கிற அரிய விஷயத்தை கற்றுக்கொள்ள போகும் அதிர்ஷடசாலிகளே, இறுக்கம் தளருங்கள். ஈஸியாக இருங்கள். விளையாட்டு தனமாய் இருங்கள். ஆண்களோடு உறவு, வேலை, வியாபாரம், கல்வி, கூட்டு முயற்சி என்று எல்லா துறைகளிலும் பங்கு பெறுங்கள். அப்படியே ஸைட் பை ஸைட் அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை உணர்ச்சிவசப்படாமல், விமர்சிக்காமல், குற்றங்கண்டுபிடிக்காமல், பெண்பாலின கண்ணோட்டமில்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டே இருங்கள்.

The eyes cannot see what the mind does not know, என்பார்களே, உங்கள் மனதிற்கு ஏற்கனவே தெரியாதவற்றை உங்கள் கண்கள் பார்ப்பதே இல்லை. இத்தனை நாட்களாக, உங்கள் மனதுக்கு புரியாததால் நீங்கள் கவனிக்கத்தவறிய பல விஷயங்கள் இனி உங்கள் ஞான திரிஷ்டியில் தெரிய வரும். இப்போது பாருங்களேன், மனித ஆணின் உலகம் மாயகண்ணாடி மாதிரி அப்படியே உங்கள் கண் முன் தெரியும். இத்தனை நாட்களாக கூடவே இருந்தும் இது வரை நீங்கள் கவனியாத எத்தனையோ புதிய புதிய விஷயங்கள் இப்போது உங்கள் கண்ணில் படும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.