ஆண் என்ன? , பெண் என்ன? - Gender Equality

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,454
Location
France
#1
அன்புள்ள நண்பர்களே,

வணக்கம். நலம்தானே? என்னை பாதித்த இரண்டு விஷயங்களுக்காக நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் என்னை சுற்றி நடந்த, நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள்.
சமீபத்தில் பெண்மை வாசகி ஒருவர் தான் கருவுற்றிருப்பதாகவும், தன் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பது, இது என் கையில் இல்லை என்று?

இதைப் படித்ததும் ஒரு புறம் இவரைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரிகளை எண்ணி அழுவதா? அல்லது இன்னும் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் இந்த கோமாளிகளை எண்ணிச் சிரிப்பதா? என்று தெரிய வில்லை. இதை நான் சாதாரணமாக பார்க்க வில்லை. ஒரு முறை நான் என்னுடய ஊர் செல்வதற்க்காக பேருந்திற்க்காக காத்துக் கொண்டிருந்தபோது, எங்களுடய ஊரைச் சேர்ந்த பெண்ணைப் பார்த்தேன். என்னை விடச் சின்னப்பெண் மூன்று பெண் குழந்தைகளை வைத்திருந்தாள். வயிற்றிலும் சுமை.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னம்மா இது? என்னக்க பன்றது. மூனும் பொண்ணா போயிடிச்சி. அடுத்ததாவது பையனா இருக்காதா என்றாள். எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. அடுத்ததும் பெண்ணாக போய் விட்டால் என்றேன். வெட்கச் சிரிப்புடன், திருப்பி முயற்ச்சி பண்ண வேண்டியதுதான் என்றாளே பார்க்கலாம். அப்புறம் ரகசியக் குரலில் பையன பெக்கலனா யாரும் மதிக்கவே மாட்டென்றாங்க என்றாள். எங்கே போய் முட்டிக் கொள்வது? எங்கே ஆரம்பிக்கிறது தவறு? ஒரு சமூதாயம் மதிப்பதற்க்காகவா ஒரு ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்கிறார்கள்? மதிப்பது என்றால் எந்த விதத்தில்?, இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்.

இதற்க்கு அடிப்படை காரணமாக நான் பார்ப்பது அறியாமையைத்தான். கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு முழுமையாக கல்வி அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும், சுற்றி இருப்பவர்களுக்கும், கணவனுக்கும் கட்டுப்பட்டு கிடக்கிறாள்.

இப்படி இவர்கள் பெற்றெடுக்கும் ஆண் பிள்ளைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் அவன் ஆம்பிள அவன் வழிக்கு நீ ஏன் போற என்று பெண்ணை தாழ்த்தியும், ஆணை உயர்த்தியும் பேச ஆரம்பிக்கிறார்கள். இங்கே இருந்து ஆரம்பிக்கிறது ஆண் என்ற தலைக்கணம். நாம என்ன செய்தாலும் தப்பில்லை என்ற எண்ணம் பெற்றோர்களால் அவரகளுக்கே தெரியாமல் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவ பொம்பளதானே என்ற ஒரு தாழ்வான எண்ணம் இயற்கையில் ஏற்படுகிறது. பெண்கள் தனக்கு கீழ் படிந்தவர்கள் என்ற ஆழமான எண்ணம் சிறு வயது முதல் உண்டாகிறது.

ஆனால் இதற்க்கு விதிவிலக்கான குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதை எல்லாம் தாண்டி, நிறய திரைப்படங்களில் நான் பார்த்திருக்கிறேன் பொம்பளன்ன ஒழுங்க அடக்கமா இருக்கணும். எந்த தப்பையும் தட்டிக் கேட்க கூடாது. அப்புறம் ஒருவன் பயந்து விட்டால், உடனே பொம்பள மாதிரி போய் சேலையும், வளையலும் போட்டுக்கோ என்று சொல்வது. பெண்கள் என்றால் ஆணுக்கு அடங்கியவள், கட்டுப்பட்டவள் என்ற எண்ணம் கொண்ட ஆணாதிக்க சமுதாயம். என் குலம் புலியை முறத்தால் அடித்து விரட்டிய மங்கையர் குலம். இந்த கைகள் சமைத்து போட மட்டுமல்ல, சமயத்தில் சரித்திரம் படைக்கவும் செய்யும் ஆண்குலம் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகம் ஆளும் கை என்பதை மறக்க வேண்டாம். தாய்மார்கள் இதை முதலில் புரிந்து கொண்டு பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் முன்பு மட்டம் தட்டி பேசுவதை நிறுத்துங்கள்.


சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர்
செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள்
போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

--- பாட்டுச்சித்தன்பாரதி


எந்த விதத்தில் இவர்கள் உயர்ந்தவர்கள். நீயும் பத்து மாதம், நானும் பத்து மாதம். ஒரு விஷயத்தைத் தவிர உடல் அமைப்பு மட்டும் வலிமையைத்தவிர மற்றவை எல்லாவற்றிலும். நீயும் நானும் சமம். இதை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு புரிய வையுங்கள்.
பெண்ணை கவர்ச்சி பொருளாக, கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவளும் உன்னைப் போல் சதையும், இரத்தமும், உணர்ச்சிகளும் கொண்ட மனுஷி என்பதை உணர்த்துங்கள். உணராத ஆண்கள் இனிமேலாவது உணருங்கள்.

இதைப் போலவே சில குடும்பங்களில் ஆண் குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள். பெண் குழந்தை எதை கேட்டாலும் தள்ளிப் போடுவார்கள். அதேப் போல் பள்ளிகளில் கூட வித்தியாசம் இருக்கும். அவன் ஆம்பிள புள்ள நாள பின்ன குடும்பத்த காப்பாத்துவான். நீங்க அடுத்த வீட்டுக்கு போய் ஆக்கி கொட்ட போறவ, எதுக்கு உசந்த பள்ளிக்கூடம் என்பார்கள். தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் காப்பாற்றும் தன்மை கொண்டவள் பெண். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு வீடு சிறக்கும். ஒரு வீடு சிறந்தால் ஊர் சிறக்கும். ஒரு ஊர் சிறந்தால் ஒரு மானிலம் சிறக்கும். ஒரு மானிலம் சிறந்தால் என் நாடு சிறக்கும். தயவு செய்து கல்வியில் பாரபட்சம் பார்க்காதீர்கள். என் தோழிகள் அனைவரும் சிறந்த கல்வியாளர்களாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் விளங்க வேண்டும். இனிமேல் வரும் சந்ததிகள் நிச்சயம் சமமான சகோதர, சகோதரி பாசத்தோடு இருக்க இப்பொழுதிருந்து பாடுபடுவோம். இது நம் கையில் தான் இருக்கிறது. நாம் நினைத்தால் நிச்சயம் ஏற்றத்தாழ்வுகளை களையலாம்.


எந்த குழந்தையாக இருந்தால் என்ன? நாம் அந்த குழந்தயை தாய்ப்பற்று, நாற்றுப்பற்று, உயிர்கள் அனைத்தின் மீதும் பற்று வைத்து அன்பே சிவம், அன்பே யேசு, அன்பே அல்லா என்று அதற்க்கு உணர்த்துவோம். வயதான காலத்தில் நம் வலியும் , வேதனையும் புரிந்து கொண்டு நம்மை குழந்தையாக பாவித்து நம்மிடம் அன்பு காட்டும் பண்பை நம்மிடம் இருந்து ஊட்டுவோம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அதை ரசியுங்கள். முன்பிருந்த நிலை தற்பொழுது மாறி இருக்கிறது. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் விகிதம் மிகக் குறைவு. சில இடங்களில் பெண் குழந்தையை கொன்று விடுகிறார்களாம். எழுதும் பொழுதே கண் கலங்குகின்றது. அவ்வளவு வேண்டாதவர்களா பெண்கள். தாய்மார்களே பெண்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. நாளை நீங்கள் உங்கள் பிள்ளைக்கே பெண் தேடும் போது சிரமப்படலாம்.

கிராமப்புறங்களில் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்ச்சி எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகள் குடும்பக்கட்டுப்பாடு, சிசுக்கொலை, விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி போன்றவை தீர்க்க முடியும். பார்க்கலாம்.

என்ன தோழிகளே நான் சொல்வது சரிதானே?உங்கள் கருத்துக்களை தயவு செய்து பதியுங்கள்.

மீண்டும் சந்திப்போமா? நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jan 2013. You Can download & Read the magazines
HERE.

 
Last edited by a moderator:

deepa bala

Guru's of Penmai
Joined
Aug 7, 2011
Messages
6,960
Likes
15,777
Location
***
#2
Anu sis, urukkama sollirikinga unga karuthakalai...:thumbsup romba correct aana vishayam... innum namba endha ulagathula irukom nu sila samayam yosikara alavukku irukku indha vishayangal....

enga veetla nanga 3 sisters.. I suppose amma kum payyan irukum nu thonirukum... But engala avlo free-a burden madhiri paarkama valarthanga... Infact, ippa solvanga I'm lucky to have 3 daughters nu...

But first baby ke payyan venum venum nu ninaikiravanga, innum niraya per irukanga... Kuzhandhai illadha vangala kettu paartha dhan therium adhu aanaga irundhalum pennaga irundhalum evlo periya varam nu..

gramathila mattum illa, I've seen some of my friends in city also praying that they should have a boy child... evlo padichu enna payan?

aasai irukalam but adhuve arajagama aakaranga namba society la... sisu kolai varaikum poguthu indha kodumai..
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,510
Likes
35,502
Location
mysore
#3
Dear Geetha (Anu), revolution in thinking process and social change will only be the answer for this problem. For so many centuries the male dominated society has imposed these beliefs in to the minds of people like caste discrimination. It is not only Government but also the people whom our general public mostly admiring will be the media for propagating this change. Not only in the village side even in so called modern city living people also insist their daughter-in-laws to get them male child. Hence the people are easily accepting the words of priests in temples, the socalled makkal thalaivargal (politics nethas), and the well -to-do cinema personalities. These three section of people mind this social and cultural change can happen. But still some more centuries to go. then only total change will happen. Until that time we have to write in Penmai like forums. Let us continue our efforts. The positive result will happen one day. thanks
 

Tharangss

Commander's of Penmai
Joined
Dec 31, 2012
Messages
1,274
Likes
4,146
Location
Bahrain
#4
Hai anu sia

neega sonnathu fulla unmai than

ana oru kullanthai kidaika kutta ippo evalavu kastama iruku thriyuma

antha nellamail irukavanga kitta keta than thriyum

yenaku thrincha oru incident when iam pregnant[mine was highly risk]

ennka vetu pakathula oru bariyal ground iruku

oru nall early mor appa walking ponna appo oru lady kaila etho oru thuni bundle mathri vachutu iraka appavum bariyal groundla enna vela ivaluku
keka nenachu appurm kekama vitutaru

antha lady anga iruntha tree gapela etho clothe bundle vaikarathan appa parthathu.. konja neram kalichu antha pakam appa vanditla ponna pothu than thrinchu iruku ava vaika try pannitu iruthathu clothe illa athu oru kullanthai

appuram police vanthu antha babya home kondu poitanga
ithula kodumai ennana antha bariyal grd eppavum neraya nai suttitu irrukum

ava cover panni kondu vantha clothe oru famous hospital bedspread

police can able to find it out ana onnum nadakala. appa antha ladya kekama vitta reason thaniya iruka lady kitta poi enna pesarathunuthan sonnaru

athuvum crt than ippo nalathu seiya pona atha prob aki vitaranga.
appa sonnaru oru kullathai kedaika nama veetla evalavu kasta padarom

ana kidaicha kullanthaiya eppadi vesuranga anniku fulla enga vetla yaruma

seriya illa romba kastama irunthuchu.

IPPO TREND KULLANTHAI BOY OR GIRL VENDAM VACHUKARATHU KASTAMNA

THOOKI POTARANGA. ATHUKU IVANGKA PETHUKAMAYA IRUKALAM.
 

Priyakash

Minister's of Penmai
Joined
May 23, 2012
Messages
4,707
Likes
10,591
Location
Coimbatore
#5
Indha so called modern ulagathulayum, nadakura vedhanayana visayatha pathi sollirukeenga.....Ungaladhu mana kumuralgalai yengalal purindhu kolla mudigiradhu............

Deepa solvadhu pol, indha kodumai gramathula mattum illai, nagarathulayum dhan nadakudhu....Yenna gramathula konjam adhigama nadakudhu...avalave:(

Idharkku pen kuzhandhaigalai baramaga ninaikkum manapaanmai mudhalil maara vendum....Ippadi yerpadum thani manidha, manamaatram, oru nalla samudhaya maatrathirkku vazhi vagukkum....Indha mana maatrathirkku pengalagiya naam uruthunaiyaga irukka vendum....Siru pori dhane peru nerupaga maarum....So namakenna enra ninaivai viduthu, nammal indha muyarchikku paadu pada vendum....

Andha valiyil, ungaladhu indha muyarchi migavum parattukku uriyadhu....I hope sincerely someone, somewhere will get some awareness or rather change in mentality, after reading this page!!
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,822
Location
US
#6
Hi geetha,
Unga katturai arumai
தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் காப்பாற்றும் தன்மை கொண்டவள் பெண்

Read more: http://www.penmai.com/forums/india/44730-a.html#ixzz2IoJK3OH5
I just love this line...

kiramangalo, nagarangalo, pare nts are parents.. pen pillai sumai, itharku moola karanam enna..vera onnum illa dowry. eppo irundhu namakku pen pillai paramaga pochu.. sumar 100 yrs ago nu sollalaama...
yena.. Indian revolution appo pengalum samamaaga vidudhalai porla paneduthurukaanga...

So when the dowry system started.. pengal baramaaga aakapattargal. pengal kudumbathin perumaiyaaga koorapattargal. kudumbathin gouravamaaga thallapattargal.. Pallu irukiravan pakkoda saapidalaam.. aana uzhaikindra vargam(kiramapurangalil vivasaayigal) engu selvathu avvalavu seethanathukku.. makkalin aasai alavu era era.. pen sisu kolai jastiyaaga irukirathu...Pennai padikka vaikirathuku inga prichanai illai.. padicha pennai kalyaanam seithu kodirathukku pennai petravargalidam athigamaaga panam irukka vendum.. yendha padikaatha maapilaiyum padicha pennai katti kolla maatan and vice versa.. so padikka vaithaal, selvirkku enge povathu.. athu thaan prichaniye.. pennai petravargal pen kuzhandhaigal pirantha vudane eppai valarkka pogirom endru kavalai pada maatargal... eppai karai serka pogirom endru thaan kavalai paduvaargal..

En indha samuthayam ellavatrikkum oru peyar vaithu irukirathu.. odane samuthaayathin mel kurai solla vendam.. en endral neengalum naanum, avargalum thaan samuthaayam.. namma ennam maarinaal samuthayin ennamum maarum.

oru veetil aanum pennum irundhaal, pennuku dowry kodukkum parents, aanuku athe dowryyai vasulithu vidukirargal..
Eppozhudhu..
  • pen veetirkku varum pennai oru saga pennaga mathithu, "than thirumanathirukku thangal petror patta kastathai innoru pen petra petror pada koodathu endra ennam varukiratho,
  • Eppozhuthu oru aan, dowry suthamaaga vendam endru sabaiyil koorukiraano(unga pennuku neenga poda poringa-ithu ippozhuthulla polished status word for getting dowry)
  • Eppozhuthu oru aan, pengal athavathu petravargal pinnal ozhindhu kondu-avunga keata naan enna seiya mudiyum endrum saaku pokku sollaamal irukiraano
  • Oru pennai andha pennirkaaga yetrukolla padukiraalo,
  • eppozhuthu mappillaiyin kudumbam, naangal oru kaasu pen veetil vaangamal pennai thirumanam mudithu vandhom endru thangal uravinargalidam athai sirumaiyaaga illamal, perumaiyaaga solli kollukiraargalo..(en endral, uravinarlin peer pressure naala thaan dowry system innum ver oondri poikondu irukirathu)
appozhuthu thaanga pen sisu kolai kuraindhu pogum...
 

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,454
Location
France
#7
அன்பு தோழிகளே!!!

நன்றிகள் பல. நான் சொல்ல வருவது இதுதான் கிராமங்களிலாவது அறியாமையால் நடக்கிறது. ஆனால் நகரங்களில் படித்த முட்டாள்களின் மத்தியிலும் தலை விரித்து ஆடும் ஆண் குழந்தை மோகம் வியப்பை ஏற்படுத்துகிறது.
1. பெண் சிசுகொலை
2. ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தை பெறுவது
3. வரதட்சனை வாங்குவது
4. வரதட்சனை கொடுப்பது
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்தையும் நம் பெண் குலம் நினைத்தால் நிச்சயம் தடுக்கலாம்.

லக்ஷ்மி நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு ஆணையும் சொல்ல வைக்க தாயால் மட்டும் தான் முடியும். அவளும், ஆசிரியர்களும் சேர்ந்து செய்தால் அடுத்த தலைமுறை நிச்சயம் வெற்றி பெறும்.

ப்ரியா நீங்க சொல்வது போல் எங்காவது ஒரு பெண் அல்லது ஒரு தாய் இதை படித்தால் அல்லது புரிந்து கொண்டு சபதம் எடுத்தால் கூட போதும் எனக்கு. அதுவே எனது வெற்றி.

தரணி சொல்வது போல் குழந்தை இல்லாமல் அவதிபடும் தம்பதிகளுக்கு மட்டுமே தெரியும், குழந்தை என்ற கடவுள் இல்லாதது எவ்வளவு வலி நிறைந்தது என்று.

சுமித்ரா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
1. அரசியல்வாதிகள்
2. கதாநாயகன்கள் மற்றும் திரைப்படம்
3. ஆன்மீகம்
இந்த மூன்றும் மாற வேண்டும். அது உண்மை சினிமாவிற்க்கு பின்னால் செல்லும் கூட்டம்தான் இங்கே அதிகம்.

தீபா
சொல்வது போல் படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது? நிறய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொலைக் காட்சியில் வேண்டும். ஆசை இருக்கலாம் , ஆனால் வெறியாக மாறக் கூடாது. முற்றிலும் உண்மை தோழி.
நன்றிகள் அனைவருக்கும்.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,350
Likes
13,504
Location
Chennai
#8
சுயநலம்.. பேராசை..தற்புகழ்ச்சி
தான் என்ற அகங்காரம்.
அறிந்தே தவற்றை துணிந்து செய்யும் போக்கு
மனிதநேயம் அற்ற மனித வாழ்க்கைதான்
இது போன்ற
நிகழ்வுகளுக்கு காரணம்.
இந்த சூழலை சூன்யம் ஆக்க
ஒவ்வொரு தனிமனிதனும்
(ஆண் ,பெண் )
பொறுபேற்று
இன்றைய சமூகத்தின்
அனைத்து தட்டுகளிலும் உள்ளவர்கள்
உணர்ந்து..புரிந்து..அறிந்து
செயல்படவேண்டும்.
மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்க வேண்டும்.
பெண்மையின் தளத்திலிருந்து
பெண்களின் வாயிலாகவே
புறப்படும் இதுபோன்ற
விழிப்புணர்வுகள் வரவேற்கதக்கது.
இதன் வீரியமும் தாக்கமும்
நிச்சயம் வெற்றிக்கு வித்தாகும்
என்பதில் ஐயமில்லை...!
 
Last edited:

GayathriArun

Friends's of Penmai
Joined
Dec 6, 2012
Messages
459
Likes
1,128
Location
Dubai, UAE
#9
Dear Anu,

Your article is awesome. You are an inspirational writer, keep writing more! You have fire and zeal within you, I became your fan, expecting to read more!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,403
Location
Hosur
#10
நல்ல ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. எனக்குமே ஏன் எல்லோரும் ஆண் பிள்ளைகளையே விரும்புகிறார்கள் என்று புரியாத புதிராகவே இருக்கிறது. எங்கள் வீட்டில் நான் உள்பட மொத்தம் ஆறு பேர் பெண்கள் மட்டும் தான். என் தாயோ அல்லது தந்தையோ இதுவரை ஒரு வார்த்தை கூட நாங்கள் அனைவரும் பெண்ணாக பிறந்து விட்டோமே என்று வருத்தப்பட்டது கிடையாது. இத்தனைக்கும் என் தந்தைக்கு பூர்வீக சொத்துக்கள் கிடையாது. முழுக்க முழுக்க அவருடைய உழைப்பின் மூலமே (இந்திய விமானப் படை) எங்களையெல்லாம் உருவாக்கி, அனைவருக்கும் திருமணமும் செய்து கொடுத்தார். நாங்கள் சகோதரிகள் அனைவரும் புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுத்து எல்லா வகைகளிலும் திறமையாகவே குடும்பத்தை நிர்வகித்து வருகிறோம்.

பெண்கள் தான் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வித் துறையில் சாதனைப் படைத்து வருகிறார்கள். நான் நேற்று கூட பெண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன். பிரேமா என்ற டெல்லிவாசியான தமிழ் பெண் (இத்தனைக்கும் அவளின் அப்பா ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர்) அகில இந்திய அளவில் CA-வில் முதல் இடத்தை பெற்றிருக்கிறாள். இவ்வளவு ஏன், 10th, 12th தேர்வு முடிவுகளைப் பார்த்தாலே தெரியுமே. வெற்றிச் சதவிகிதம் எந்த பாலருக்கு என்று. கல்விக் கண் திறக்கப் பட்டாலே போதும்... பெண்கள் தைரியத்தோடு வெளிவந்து பல துறைகளில் சாதனைப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்... மேலும் படைப்பார்கள் என்பது உறுதி. கருத்தம்மா போன்ற திரைப்படங்களும் பெண்களின் உயர்வைச் சொல்கிறது. அது போன்ற சமுதாய விழிப்புணர்வு படங்கள் மேலும் வந்தால் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. என் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த கீதாவுக்கு நன்றி!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.