ஆனந்தம் தரும் ஆடி மாதம்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#1
1531366862250.png
17-7-2018 ஆடி தொடக்கம்

தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான். இந்த சமயத்தில் ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால் தான், விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி வந்தது.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதன்படி பார்த்தால் ஆடி மாதத்தில் தேவர்களின் மாலை நேரம் தொடங்குகிறது. அதனாலும் பூஜைகள் ஆராதனைகள் மிகுந்திருப்பது இயல்புதானே?

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை ‘கற்கடக’ மாதம் என்றும் சொல்வதுண்டு. கடக ராசி சந்திரனுக்குரியது. சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் (ஒன்று சேருவதால்), ஆளுமை பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். எனவே சிவனை விட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது.

ஒரு கல்ப காலத்தில் ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி, மலையரசன் மகளாக பிறந்தாள் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோவில்கள், குறிப்பாக மாரியம்மன் கோவில்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்று காணப்படும். கூழ் வார்த்தலும், பூக்குழி இறங்குதலுமாக ஆலயமே களை கட்டி விடும். விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதம் இது. இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு.

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திப்பூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது? ஆடி மாதம் மழைக் காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும் வாய்ப்புண்டு. வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ‘ஆடிக்கூழ் அமிர்தமாகும்’ என்று சொல்லப்படுகிறது. ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்க லாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#2
மகாலட்சுமி வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் ஆலயங்களில் குத்துவிளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு, ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த ‘வரலட்சுமி விரதம்’ மேற்கொள்ளப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#3
ஆடிப் பவுர்ணமி

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள் ஆடித்தபசு. ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.

வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீ வராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#4
ஆடி செவ்வாய்

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி.. அரைத்த மஞ்சளை பூசிக்குளி’ என்பது பழஞ்சொல். இதில் இருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேய்த்து நீராடுதலின் முக்கியத்துவம் விளங்கும். அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு. தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று ‘அவ்வை நோன்பு’ கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடி செவ்வாயில், ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை தொடங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும், அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார். பின்னர் பூஜை நடக்கும். அன்று உப்பில்லாமல் அரிசி மாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறுநாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம். இந்த பூஜை பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்கக்கூடாது என்கிறார்கள். இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பது ஐதீகம். மணமாகாத பெண்களுக்கும், குழந்தையில்லா பெண்களுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#5
ஆடி வெள்ளி

இந்த நாளன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் வெகு சிறப்பான பலனைப் பெறலாம். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு, தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது. அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும், ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே ‘நவசக்தி பூஜை’ எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#6
ஆடி மாத விழாக்கள்

1531367542932.png

ஆடி மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமை (27.7.2018) ஆடிப் பவுர்ணமி. அன்றைய தினம் மலைவலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும்.

ஆடி மாதம் 18-ந் தேதி வெள்ளிக்கிழமை (3.8.2018) ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் புது முயற்சிகள் செய்ய பொன்னான நாள்.

ஆடி மாதம் 20-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (5.8.2018) ஆடிக் கார்த்திகை தினம். அன்றைய தினம் கந்தப்பெருமானை வழிபட்டால் கவலைகளை தீரும்.

ஆடி மாதம் 26-ந் தேதி சனிக்கிழமை (11.8.2018) ஆடி அமாவாசை. அன்றைய தினம் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

ஆடி மாதம் 28-ந் தேதி திங்கட்கிழமை (13.8.2018) ஆடிப்பூரம். அன்றைய தினம் அம்பிகை வழிபாடு இன்பங்களை வழங்கும்.

ஆடி மாதம் 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை. (14.8.2018) நாகசதுர்த்தி நாக தெய்வ வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

ஆடி மாதம் 30-ந் தேதி புதன்கிழமை (15.8.2018) கருட பஞ்சமி. அன்றைய தினம் கருடன், லட்சுமி, விஷ்ணு ஆகியோரை வழிபட்டால் கனிந்த வாழ்க்கை அமையும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#7
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக் கொட்டு விழா கொடியேற்றம்





மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சியம்மன்.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்ற பூஜைகள் காலை 10 மணிக்குத் தொடங்கின. அம்மன் பல்லக்கில் எழுந்தருளிய நிலையில், காலை 10.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து அம்மன், விழா நடைபெறும் 10 நாள்களும், தினமும் காலையிலும், மாலையிலும் பஞ்சமூர்த்திகளுடன் கோயில் வளாகத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். அப்போது சிறப்பு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் வரவேற்பு நடைபெறும். கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டி அம்மன் இருப்பிடம் சேர்த்தியாவார்.

விழாவின் ஏழாம் நாளன்று இரவு அம்மன் வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் நடைபெறும். ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் மூலம் விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்புவதால், அதனடிப்படையில் பூஜைகள் அனைத்தும் நடைபெறும். அம்மனுக்கு என ஆடி முளைக்கொட்டு விழா தவிர, ஐப்பசி கோலாட்டம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடிமுளைக்கொட்டு உற்சவத்தை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வரை கோயிலில் உபய, திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
659
Location
chennai
#8
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை தொடக்கம்

1531735433342.png

தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா, திருவாதிரை திருவிழா, நவராத்திரி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு கோமதியம்மனுக்கு சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி அளிக்கும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும்.

இந்த நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது உண்டு. ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெறும். கோவில் நிர்வாகம் சார்பிலும் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பிலும் கலைநிகழ்ச்சிகள், கூட்ட அரங்குகள் பொது இடங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 8.15க்கு மேல் 8.35க்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சிவபெருமாள் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிவபெருமாள் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

ஆண்டு தோறும் ஆடித்தவசு திருநாளில் முதல் காட்சி 6 மணிக்கும், இரண்டாவது காட்சி நள்ளிரவு 12 மணிக்கும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூலை 27 அன்று இரவு சந்திரகிரகணம் 11.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணி வரை உள்ளதால் இரவு 12 மணிக்கு நடைபெறும் இரவு காட்சி இந்த ஆண்டு இரவு 9 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
659
Location
chennai
#9
ஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்

1531736217647.png

ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும் வரும் ‘பதினெட்டாம் பெருக்கு’ மட்டும் அதற்கு விதி விலக்கு. அந்த நாளில் மட்டும் நல்லநேரம் பார்த்து புது வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். இனிய தொழிலுக்கும் ஆதாய வரவு வைக்கலாம்.

எந்தப் புதிய வாய்ப்புகளையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதிய முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு மாற்றம் செய்தாலும், நாடு மாற்றம் செய்தாலும் வியக்கும் விதத்தில் தொழில் தொடங்க நினைத்தாலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வைக்கும் நல்ல நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#10
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்! ஆடி பிறந்தது இன்று

ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. ஆடி மாத விசேஷம் சொல்லும் கட்டுரை.




இன்று ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி. 'கற்கடக மாதம்' என்று ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. `ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகளில் ஓளவையார் விரதமிருப்பது பெண்களின் வழக்கம். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்ரீவர் ஜயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்து காணப்படும். அது மட்டுமா? தெருவெங்கும் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் களைகட்டும். கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், கங்கா - காளி வேடமிட்டு ஆடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், பம்பை உடுக்கை ஒலிக்க சாமியாடுதல் எனத் தமிழகம் எங்குமே பக்திப் பெருக்கெடுக்கும் மாதமும் ஆடிதான். விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான்.



பித்ரு லோகத்தில் வசிக்கும் பித்ருக்கள் அந்த லோகத்தைவிட்டு பூலோகத்துக்கு வரும் புண்ணிய காலம் ஆடி. ஆவலோடு தங்கள் சந்ததியைக் காண வரும் பித்ருக்களை வணங்கி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி, திதி கொடுப்பது இந்த மாதத்தில் விசேஷமானது. அதுவும் ஆடி அமாவாசை அன்று செய்வது நலம் பயக்கும். இறந்துபோன முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலிட்டு, ஏழை எளியோருக்கு அன்னதானம் அளிப்பது நல்லது.

ஆடிப்பட்டம் தேடி விதை' என்பார்கள். ஆடிக் காற்று மண்ணைக் கிளறி லகுவாக மாற்றி விளைச்சலுக்கு உதவும். ஆடியில் பொங்கி வரும் புது வெள்ளம் வேளாண்மைக்கு மிகவும் உதவும். இதனால்தான் ஆடியில் விதைப்பது நமது வழக்கமானது. வேளாண்மைக்கு ஏற்ற காலம் ஆடி. ஆடி மாதம் வரும் ஆடிப் பெருக்கு அத்தனைச் செல்வங்களையும் பெருக்கித் தரும். அந்த நாளில் பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றை மாற்றி புதுப்பித்துக்கொள்வார்கள். அன்று புதுக்கணக்கு எழுதி வணிகம் தொடங்குபவர்களும் உண்டு. காவிரி அன்னைக்கு கருகமணி, காதோலை, குங்குமம், மஞ்சள் என சீர் பொருள்களை ஆற்றில்விட்டு அருளைப் பெறுவதும் இந்த நாளில் வழக்கம்.





ஆடி மாதம் முழுக்க அம்பிகைக்கு என்றால், ஆடி கிருத்திகை ஆறுமுகப்பெருமானுக்கு எனலாம். வேலவனை வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களின் மாண்பை உணர்த்தக் கொண்டாடப்படும் இந்த விழாவில் முருகப்பெருமான் குடிகொண்ட எல்லா ஆலயங்களும் விழாக்கோலம் பூணும். காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அன்றைய நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை பக்திப் பரவசத்துடன் வழிபடுவார்கள். `பூச்சொரிதல்’ என்ற பெயரில் ஆடி கிருத்திகை நாளில் அம்பிகைக்கு விழா கொண்டாடப்படும்.
மகாபாரதம் எழுதிய வியாச மகரிஷியைச் சிறப்பிக்கும் குரு பௌர்ணமி இந்த மாதத்தில்தான் வருகிறது. அந்த நாளில் குருமார்களை நினைவுகூரும் தினமாக அனுஷ்டித்துக் கொண்டாட வேண்டும்.









`அரங்கனுக்கே ஆளாவேன்’ என்ற உறுதியுடன் வாழ்ந்த கோதை நாச்சியார் திரு அவதாரம் செய்த ஆடிப்பூரம் திருநாளில்தான், பார்வதி தேவி ருதுவான நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினமே அம்பிகைக்கு வளைகாப்பும் செய்வார்கள்.
மாங்கல்ய பலமருளும் வரலட்சுமி நோன்பு மங்கையர்களின் விருப்பமான விழா. நாக தோஷங்களை விலக்கும் நாகசதுர்த்தி நாக தேவதைகளோடு, விநாயகரையும் வணங்கவேண்டிய நாளாகும். மொத்தத்தில் பக்தி விழாக்களின் தொடக்க மாதமாக ஆடி விளங்குகிறது. அதனால்தான் பெரியவர்கள் இந்த மாதத்தில் வேறு மங்களகரமான நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் விலக்கிவைத்தார்கள்.


பக்திக்கும் பண்டிகைக்கும் உரிய இந்த மாதத்தில் வீடு மாறுவதோ, சுப காரியங்கள் செய்வதோ பூஜைக்கு இடையூறாக இருந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம். மேலும் தேவர்களின் இரவு நேரம், பித்ருக்கள் நம்மை நாடிவரும் காலம், இந்த மாதத்தில் செய்யப்படும் ஜப தபங்கள் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பது போன்ற பல காரணங்களாலும் ஆடி மாதம் சுப காரியங்களைச் செய்ய விலக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், சகல தெய்வங்களின் பண்டிகைகளும் ஒருசேர வரப்போகும் இந்த ஆடி மாதத்தில் முடிந்தவரை எல்லா விழாக்களையும் கொண்டாடி வளமும் நலமும் பெறுவோம்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.