ஆனந்தம் தரும் ஆடி மாதம்

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
659
Location
chennai
#11
ஆடி மாத சிறப்புகள்

1531824894791.png


ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

* ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

* ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

* ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

* ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

* அம்மனை வழிபடும் போது மறக்காமல் ‘லலிதாசகஸ்ர நாமம்’ சொல்ல வேண்டும்.

* ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

* ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

* ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

* ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

* பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

* ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

* பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

* ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#12
`செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய ஆடி மாதம்!’ - கோயில்களில் குவிந்த பக்தைகள்

இந்தாண்டு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையில், பஞ்சமி திதியில் அதுவும் அம்பாள் அவதரித்த பூர நட்சத்திரத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதுபோல் அமைவது பல ஆண்டுகளுக்குப் பின்புதான் என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.

இதுபற்றி ஆன்மிக அன்பர்களிடம் பேசியபோது, ``ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக உள்ளதால், இம்மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கடல் அல்லது நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பெரும் புண்ணியம் தரும். ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் காவிரியிலும் அதன் கிளை நதிகளிலும் மக்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்துவார்கள்.

ஆடி மாதத்தின் மகிமையை அறியாமல் அதை பீடை மாதம் என்று அழைப்பதே தவறு. உண்மையில், மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் ஆடி என்பதே சரியானது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலெட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்று வரலெட்சுமி விரதமிருந்தால் கூடுதல் பலன் கிடைக்கும். ஆடி மாத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் சூட்சம கதிர்களில் பிராணவாயு அதிகமாக இருக்கும். இவை உயிர்களுக்கு ஆதார சக்தியைத் தரும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு மாதங்களில் ஆடி மாதமே சிறந்தது.

அம்மனுக்கு இந்த மாத்தில்தான் சிறப்பு வழிபாடு நடக்கும். காரணம் ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட பார்வதி சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோயில்களில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால், இதை ஒருபோதும் வீட்டில் ஏற்றக்கூடாது. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஆடித் தபசு, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதனால் நாகை மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பெண் பக்தர்கள் இன்று காலை முதலே வழிபட்டு வருகிறார்கள்’’ என்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#13
சுந்தரர்- பரவை நாச்சியார் திருக்கல்யாண வைபவம்

பரவை நாச்சியாருக்கு அணிவிக்கப்படும் மங்கல நாண்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடி சுவாதியையொட்டி, சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சைவ சமயத்தின் பீடமாகவும், பஞ்ச பூதத் தலங்களில் முதன்மையாகவும், பிறக்க முக்தியளிப்பது போன்ற பிரசித்தி பெற்றது என பல்வேறு பெருமைக்குரியது திருவாரூர் தியாகராஜர் கோயில்.
இங்கு நம்பிஆரூரர் (சுந்தரர்) குருபூஜையையொட்டி, ஆடி சுவாதி விழாவில் நம்பிஆரூரருக்கும் பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் வியாழக்கிழமை காலை புதுத்தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்திலிருந்து, நம்பி ஆரூரர் நிறைகுடம் கொடுத்து அழைத்து வரப்பட்டார்.

அதேபோல், திருமஞ்சன வீதி திருமாளிகையிலிருந்து, பெண் அழைப்பில் பரவை நாச்சியார் அழைத்து வரப்பட்டார்.
தியாகராஜர் கோயிலில் உள்ள தட்டஞ்சுற்றி மண்டபத்தில் இருவரும் அமர்த்தப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. பின்னர் வேத விற்பன்னர்கள் காலை 10.48 மணிக்கு பரவை நாச்சியார் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினர்.

இதையடுத்து, மாலையில் நடைபெற்ற விழாவில், தேரோடும் வீதிகளில் 63 நாயன்மார்களுடன், 63 நாகசுர இசையுடன் நம்பி ஆரூரர் வீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை (ஜூலை 20) மாலை வெள்ளை யானையில் கைலாய வாத்தியங்களுடன் நம்பி ஆரூரர் வீதி உலா மற்றும் கைலாயக் காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#14
அழகர்கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

1532061933837.png

அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று காலை தொடங்கியது. அங்குள்ள தங்க கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனையும் நடந்தது. அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) காலையில் வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந் தேதி இரவு தங்க கருட வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

23-ந் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.30-மணிக்குள் மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப்பெருமாள் புறப்பட்டு சென்று திரும்புகிறார். இரவு சேஷ வாகனத்திலும், 24-ந் தேதி இரவு யானை வாகனத்திலும் 25-ந் தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 26-ந் தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந் தேதி ஆடி பவுர்ணமியன்று நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்வார். பின்னர் காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படும். 28-ந் தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#15
ஆடியில் ஊஞ்சலாடும் காளிகாம்பாள்

1532062683803.png

சென்னையில் அம்பிகை வீற்றிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தலங்கள் உள்ளன. அவற்றுள் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் தலம் தனித்துவம் கொண்டது. சென்னை மாநகருக்கு பெயர் தந்த இந்த அம்மன், இத்தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.

கருணை தெய்வமான இவள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே ‘காளி’ என்று சொல்வார்கள். ஆனால், அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.

ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமே ஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். காளிகாம்பாள் வரப்ரதாயினி. வேத நாதமாய், சுக வாரிதியாய், ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.

என்னே அவளின் அழகு! என்னே அவளின் கருணை! என்னே அவளின் அன்பு! என்னே அவளின் பரிவு! என்னே அவளின் அரிய சாந்தம்! என்னே அவளின் பிரகாசம்! ஆகா! சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆம், காளிகாம்பாளை நேரில் தரிசித்து உள்ளம் உருகி நின்று அவளது கருணையை அனுபவித்தவர்களுக்கே அது விளங்கும். புரியும்!! ஆம்! உண்மையில் இவள் காளி இல்லை! கருணை உள்ளம் கொண்ட தாய்.

உண்மையில் கொடுமைகளை அழித்து நல்லவர்களை காக்கும் பொருட்டு அன்னை எடுத்து அவதாரமே காளிகாம்பாள் திருஅவதாரம். காலனையே விரட்டுவதனால் அவள் ‘காளி’ என பெயர் பெற்றாள். அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞான ஒளியை ஏற்றும் பரிபூரண ஞானமாகிய ஆனந்த ரூபிணியே ஸ்ரீகாளிகாம்பாள்.

அன்னை போகங்களை அருளும் காலத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியாகவும், புவனேஸ்வரியாகவும் காட்சி தந்து இகபர சவுபாக்கியங்களை நல்குகின்றாள். அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலைநாட்ட வேண்டும் பொழுது அவளே தர்ம சம்வர்த்தினியாக, ஸ்ரீதுர்க்கையாக மாறுகின்றாள். சும்பன், நிசும்பன், மகிஷன் போன்றவர்களை அழித்து தர்மங்களை நிலைநிறுத்தி நல்லவர்களைக் காக்கின்றாள். உலக வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை-காளிகாம்பாள் ஆவாள்.

அன்னை காளிகாம்பாளினாலேயே நம் மாநகருக்கு சென்னை என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி நாளில் அன்னை காளிகாம்பாளைச் சென்னம்மன் என்ற பெயரால் போற்றி அழைத்து வந்தனர். அன்னைக்குச் சென்னம்மன் என்ற பெயர் ஏற்பட்டது போன்றே கமடேசுவரருக்கும் சென்னப்பன் என்ற பெயர் வழங்கியுள்ளது. சென்னம்மன் என்ற அன்னையின் பெயரே மாநகருக்கும் சென்னை என்று அமைந்துள்ளது.

அன்னை காளிகாம்பாளுக்கு அட்சாசொரூபிணி என்ற பெயரும், கோட்டையம்மன் என்ற பெயரும் உண்டு. ஒரு காலத்தில் அன்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோவில் கொண்டு விளங்கிய காரணத்தால் கோட்டையம்மன் என்ற பெயர் பூண்டாள் என்று கூறுவர். கோட்டைக் கடைக்காரர்களின் உபயம் இன்றும் அன்னை கோவிலில் ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வருகின்றது.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் இன்றும் அன்பர்கள் தரிசிக்கக்கூடிய நிலையில் காளிகாம்பாள் கோவிலில் உள்ளது ஒரு தனிச்சிறப்பு.
இத்தலத்தில் அன்னை காளிகாம்பாள் மேற்கு நோக்கித் திருக்கோவில் கொண்டு விளங்குகின்றாள். பொதுவாக மேற்கு முகமாக எழுந்தருளிக் காட்சி தரும் அன்னையருக்கு அருளும், சிறப்பும் மிக அதிகம். அன்னை காளிகாம்பாளின் அருட் சிறப்பு சொல்லில் அடங்காதது.

இத்திருக்கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தகைய சிறப்புகள் நிறைந்த காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை தொடங்கி 9 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
அதுபோல வருகிற 22-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 10 வாரங்களுக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகை அபிகேஷம் நடைபெறும். அந்த அபிஷேகங்களை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எனவே ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் எந்த கிழமை காளிகாம்பாள் ஆலயத்துக்கு செல்ல முடிகிறதோ அன்று சென்று வழிபடுங்கள். அம்மன் ஆலயத்துக்குள் செல்லும் போது சும்மா கையை வீசிக் கொண்டு செல்லக்கூடாது. உங்களால் முடிந்த அளவுக்கு மலர்கள் வாங்கிக்கொடுங்கள்.

தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி செல்லுங்கள். பூஜைக்கு தேவையானதை வாங்கிக் கொடுங்கள். இவையெல்லாம் உங்கள் தோஷங்களை நீக்கி புண்ணியத்தைப் பெற்றுத்தரும். நீங்கள் காளிகாம்பாளுக்கு என்னென்ன வாங்கிக் கொடுக்கலாம் என்ற விவரம் கீழே ஞாயிற்றுக்கிழமை அபிஷேக பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் :

காளிகாம்பாள் கோவிலில் ஆடிப்பெரு விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22.7.18அன்று தொடங்கி 23.9.18 வரை மொத்தம் 10 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காளிகாம்பாளுக்கு நடத்தப்படும் அபிஷேகங்களை பக்தர்கள் நேரில் கண்டுகளித்து பலன் பெறலாம்.

ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு விதமான பொருட்கள் 108 குடங்களில் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
எந்தெந்த வாரங்களில் என்னென்ன பொருட்களில் அபிஷேகம் நடைபெற உள்ளது என்ற விவரம் வருமாறு:-

22-7-18 (முதல் வாரம் 108 குடங்களில் பால் அபிஷேகம் நடைபெறும்).
29-7-18 (2-வது வாரம் 108 குடங்களில் இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறும்)
5-8-18 (3-வது வாரம் 108 குடங்களில் தயிர் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும்)

12-8-18 (4-ம் வாரம் அன்று 108 குடங்களில் மஞ்சள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)
19-8-18 (5-ம் வாரம் அன்று 108 குடங்களில் சந்தனம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
26-8-18 (6-ம் வாரம் அன்று 108 குடங்களில் விபூதி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)

2-9-18 (7--ம் வாரம் - அன்று 108 குடங்களில் பன்னீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படும்)
9-9-18 (8-ம் வாரம் - அன்று 108 குடங்களில் பஞ்சாமிர்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்)
16-9-18 (9-ம் வாரம் - அன்று 108 குடங்களில் புஷ்பங்கள் எடுத்து வந்து அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும்)
23-9-18 (10-ம் வாரம் - அன்று 108 குடங்கள் நிறைய புஷ்பங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்)

ஞாயிறு தோறும் இந்த சிறப்பு அபிஷேகத்தை பகல் 11 மணிக்கு செய்வார்கள். காளிகாம்பாளுக்கு நடக்கும் இந்த அபிஷேக, ஆராதனையை ஒரு தடவை நேரில் தரிசனம் செய்தாலே போதும், ஆடி மாத அம்மன் தரிசனத்துக்கான முழு திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.மூர்த்திஆச்சாரி, அறங்காவலர்கள் டி.ஜெகதீசன் ஆச்சாரி, கே.யுவராஜ் ஆச்சாரி, இரா.ராஜேந்திரகுமார் ஆச்சாரி, பி.பஞ்சாட்சரம் ஆச்சாரி ஆகியோர் செய்துள்ளனர்.

அபிஷேக ஆராதனைகள் தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 044- 25229624 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#16
அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா

திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் ஆடிவெள்ளியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பவானி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன்.

திருவள்ளூரில், பவானி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

திருவள்ளூரில் ராஜாஜிபுரம் பகுதியில் பவானி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 12-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதில், 3-ஆவது நாள் திருவிழாவான ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையில் கரகம் புறப்பாடு, நகர் வலம் வருதல், அதையடுத்து புஷ்ப அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றன. முன்னதாக, அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில்....
குடியாத்தம் தாழையாத்தம் பஜார், ஆற்றங்கரையில் உள்ள பச்சையம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 6-ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கி நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு செருவங்கி சாமுண்டியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பச்சைக் கரகம், மேல்பட்டி சாலை, சந்தப்பேட்டை பஜார், தாழையாத்தம் பஜார் வீதியாக கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதியம் கூழ் வார்த்தலும், அன்னதானமும், மாலையில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என். ஹரி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என். ஜெயப்பிரகாஷ், வி. சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

வடசேரி துர்கையம்மன் கோயிலில்..
ஆம்பூர் அருகே வடசேரி துர்கையம்மன் மற்றும் பெரிய நாச்சியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#17
ஆடி வெள்ளியில் அம்பாளுக்குப் படைக்க வேண்டிய நிவேதனம்!


அம்மன் வழிபாட்டுக்குச் சிறந்த மாதம் ஆடி மாதம். அன்னைக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆடி வெள்ளியன்று அன்னைக்கு நைவேத்யமாக என்ன படைக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு தவிட்டு அப்பம் செய்து நைவேத்யம் செய்வது வழக்கம். தவிட்டை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதைச் சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்.

ஆடிவெள்ளியன்று காலையில் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, அன்னைக்குப் படைத்த இந்தப் பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர்.

தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்தச் சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யமாகப் படைத்து, அம்பாளின் அருள் கடாட்சத்தை பூரணமாகப் பெறலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#18
ஆடியில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆகலாம்

1532248965565.png

ஒரு குழந்தை ஆடி மாதம் பிறந்துவிட்டால், அது ஏதோ ஆகாத மாதம் போல அங்கலாய்க்கும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாகவும், குவலயம் போற்றுபவர்களாகவும் வாழ்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நவக் கிரகங்கள்தான் காரணமாக அமைகின்றது. ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் மற்ற கிரகங்களின் அமைப்பையும் பொறுத்தே வாழ்க்கை அமைகின்றது. கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் வளர்ச்சி என்பதால், ஆடிமாதம் என்பதெல்லாம் ஒரு கணக்கே அல்ல.

‘நாள் செய்வதை நல்லவன் செய்ய மாட்டான்’, ‘கோள் செய்வதை கொடுப்பவன் செய்ய மாட்டான்’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட கோள்களில் ராஜகிரகம் என்று வர்ணிக்கப்படுவது சூரியன். அவர் ஆடி மாதத்தில் கடக ராசியில் பயணிப்பார். இந்த மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் பெற்றோர்களை ஆட்டிவைக்கும் என்று சொல்மொழியாக இருக்கிறது.

அதாவது பெற்றோர் செல்வ வளத்தோடும், செல்வாக்கு விருத்தியோடும் இருக்கும் நேரத்தில், ஆடி மாதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களுக்குத் தொழிலில் இழப்புகள் ஏற்பட்டால், அதற்கு பிறந்த குழந்தை தான் காரணம் என்று அதன் மீது குற்றம் சுமத்துவார்கள். ஆனால் உண்மையில் அந்த தொழில் இழப்புக்கு, அவர்களின் சுய ஜாதகத்தின் தெசாபுத்திப் பலன்தான் காரணம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பலர், மேதைகளாகவும், தலை சிறந்த அறிஞர்களாகவும் விளங்குகிறார்கள். பிடிவாத குணத்தை மட்டும் இவர்கள் தளர்த்திக் கொண்டால் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அமையும். ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக பெற்றோர் களின் சொற்களைக் கேட்டு நடக்காமல் ஆடி ஓடிக் கொண்டு திரிபவர்களாகவும், ‘சுட்டிப்பிள்ளை’ என்று இளம் பருவத்திலேயே பட்டம் பெற்றவர்களாகவும் விளங்குவர். எதையும் ஒரு முறை பார்த்தால் அதை மனதில் பதித்து வைத்துக் கொள்வார்கள். மூளை பலமே இவர் களுக்கு மூல பலமாகும். சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகம் உண்டு. வழக்குகள் எத்தனை வந்தாலும் கடைசியில் வெற்றி இவர்களுக்குத் தான். இவர்களது சுறுசுறுப்பு மக்களைக் கவர்ந்திழுக்கும். அவசரக்காரர்களைப் போல தோற்றமளித்தாலும் எதையும் ஆலோசித்து முடிவெடுப்பர். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் ஆடியில் பிறந்தவர்களுக்கு உண்டு.

வாழ்வில் சுகத்தை மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் துக்கத்தையும், தூக்கத்தையும் ஒதுக்கி விடும் சுபாவம் பெற்றவர்கள். பக்கத்தில் இருப்பவர்களுடன் பளிச்சென்று பேசி, காரியங்களை முடித்துக் கொள்வார்கள். இவர்களிடம் வாக்குக் கொடுத்தவர்கள் அதை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது. பணம் சம்பாதிக்கும் திறமை இவர்களிடம் இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, பெற்றோரின் ஒப்புதலைக் கேட்டு முடிவெடுத்தால் அற்புத வாழ்க்கை அமையும்.

கட்டிடத் தொழில், பல்பொருள் விற்பனை நிலையம், மளிகை மற்றும் பதப்படுத்தப்படாத உணவுப் பொருள் வணிகம், தண்ணீர் வஸ்துகள், பால், குளிர்பானம் வியாபாரம் நூல், துணி விற்பனை நிலையங்கள் ஆயத்த ஆடையகம், மின்சாரத்துறை மற்றும் திரைத் துறைகளைத் தேர்ந்தெடுத்து தொழில் செய்தவர்கள் வளர்ச்சியும் வருமானமும் காண்பர்.

பொதுவாகவே இம்மாதம் பிறந்தவர்கள் உஷ்ணத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய உடல்வாகு பெற்றவர்களாக இருப்பர். அம்மை நோயின் தாக்குதலுக்கு ஆட்பட நேரிடலாம். உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. மனதை செம்மையாக வைத்துக்கொள்வதில் அதிகப் பிரயாசை காட்டும் நீங்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் மட்டும் அலட்சியம் காட்டுவீர்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற முன்னோர் வாக்கைக் கடைப்பிடித்தால் எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். ஆவணி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் எதிர்காலம் இனிமையானதாக அமையும்.

இம்மாதம் பிறந்தவர்களுக்கு வரம் கொடுக்கும் தெய்வமாக வடக்கு நோக்கிய அம்பிகை துணையாக அமையும். செவ்வாய் தோறும் அம்பிகை, மாரியம்மன், காளியம்மன், துர்க்கை மற்றும் வடக்குப் பார்த்த அம்பிகை, கொற்றவை போன்ற தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தடைக்கற்கள் கூட படிக்கற்களாக மாறும்.

ஆகவே ஆடி மாதம் பிறந்துவிட்டோமே, அதனால் அலைச்சல் வருகின்றதே, ஆட்டிப்படைக்கின்றதே என்றெல்லாம் கற்பனை செய்து பார்க்க வேண்டாம். ஆடியில் பிறந்தவர்கள் அவர்கள் பாக்கிய ஸ்தான பலமறிந்து, அதற்குரிய ஆலயங்களைத் தேடிச்சென்று வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். கோடீஸ்வரர் பட்டியலிலும் இடம்பெறலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#19
ஆடி மாதத்தில் தம்பதியர் அறிந்து கொள்ள வேண்டியது

1532249069634.pngபிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை மேலோங்குகிறது. வரன்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் வாழ்க்கையில் எவ்வளவோ அலைச்சலைச் சந்திக்கிறார்கள். பிறகு நல்ல நாள் பார்த்து தம்பதியரை ஜோடி சேர்த்து வைக்கிறார்கள். ஆனி மாதம் ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, அடுத்து வரும் ஆடி மாதத்தில் அந்த தம்பதியரைப் பிரித்து வைப்பார்கள்.

காரணம் ஆடியில் தாம்பத்ய வாழ்க்கைக்கூடாது என்றும், ஆடியில் தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பதால் பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#20
அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா

மணிமங்கலம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் 18ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 22ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவும், 18ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தீமிதித் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்திக்கடனை செலுத்தினர். இதில் மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சேத்துப்பட்டு, மலைப்பட்டு, படப்பை, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேவி கருமாரியம்மனை வழிபட்டனர்.

முத்துமாரியம்மன் கோயிலில்...
செங்கல்பட்டு ராமபாளையம் காட்டுநாயக்கன் தெருவில் உள்ள முத்துமாரிம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் கூழ்வார்த்தல் விழாவையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடத்தப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.

இரவு உற்வசர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின்விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை காட்டுநாயக்கன் தெரு பொதுமக்கள், விழாக் குழுவினர், செம்மலை முருகன் கோயில் பூசாரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

காவாங்கரை இளங்காளியம்மன் கோயிலில்...
திருவள்ளூர் அருகே, காவாங்கரை இளங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த காவாங்கரை இளங்காளியம்மன் கோயிலில் 10-ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்தது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் இளங்காளியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் மூலம் வளர்க்கப்பட்ட தீயில் பக்தர்கள் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

விழாவையொட்டி இரவு வாண வேடிக்கையும், கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை திருவள்ளூர் காவாங்கரை இளங்காளியம்மன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஈகுவார்பாளையம் வெக்காளி அம்மன் கோயிலில்..
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் 13-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈகுவார்பாளையம்-குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி வெள்ளிக்கிழமை காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து குமரன்நாயக்கன்
பேட்டை பகுதி இளைஞர்களின் பிருந்தாவன கோலாட்டம் நடைபெற்றது.
சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூர்வாங்க பூஜை, தெருக்கூத்து, நாடகம் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நவசண்டியாக ஹோமம் தொடங்கியது. பின்னர் கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, மஹாபூர்ணஹுதி நிகழ்வு நடைபெற்றது.

இதையடுத்து, காப்பு கட்டி விரதம் இருந்த சுமார் 1000 பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பின்னர் இன்னிசை நிகழ்ச்சியும், சிம்ம வாகனத்தில் வெக்காளியம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

இந்த தீமிதி விழாவைக் காண திருவள்ளூர் எம்.பி.வேணு கோபால், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், எம்எல்ஏ-க்கள் கும்மிடிப்பூண்டி கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி சிறுணியம் பலராமன், ஒன்றியக் குழுத் தலைவர் குணம்மா கோபால்நாயுடு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீதர், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், அதிமுக நிர்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, டி.சி.மகேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் பூவலம்பேடு லோகாம்பாள் கருணாகரன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வெக்காளியம்மன் கோவில் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், பாபு மற்றும் நிர்வாக அதிகாரி சுதாகர்
உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்வில், கும்முடிப்பூண்டி துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.